சினிமா

சம்பளத்தை உயர்த்திய சமந்தா

Published On 2019-04-01 12:16 GMT   |   Update On 2019-04-01 12:16 GMT
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் சமந்தா திருமணத்திற்கு பிறகும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நிலையில், தனது சம்பளத்தை உயர்த்தியிருக்கிறாராம். #Samantha
சென்னையில் பிறந்து வளர்ந்த சமந்தாவின் அம்மா மலையாளம், அப்பா தெலுங்கு. சென்னை பல்லாவரத்தில் வளர்ந்த சமந்தா, ஹோலி ஏஞ்செல்ஸ் பள்ளியில் படித்தவர். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.காம் படித்த சமந்தா, அப்போதே தனது செலவுகளுக்காக மாடலிங் துறையைத் தேர்வுசெய்து சில விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

1940-களில் ஹாலிவுட்டில் பெரும் புகழுடன் இருந்த நடிகை ஆட்ரே ஹெப்பர்ன் தான் சமந்தாவின் ரோல் மாடல். தமிழில் ரேவதி நடித்த படங்கள் இவரது பேவரிட். கண்ணாடி முன்பாக நின்று நடித்துப் பழகும்போது பேசுகிற வசனங்கள், இவர்கள் இருவரது வசனங்களாகத்தான் இருக்கும் என்று கூறி இருக்கிறார், சமந்தா. இரண்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சமந்தா, ‘யூ டர்ன்’ படத்துக்குப் பிறகு தனது சம்பளத்தை இரண்டரைக் கோடி ரூபாயாக உயர்த்தியிருக்கிறார்.



மலையாளத்தில் ‘அம்மா’ அமைப்பைப் போல், தமிழ் சினிமா நடிகைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு ஓர் அமைப்பை நிறுவ இருக்கின்றனர், தமிழ் நடிகைகள். அதில், சமந்தாவுக்கு முக்கியப் பொறுப்புத் தரப்பட இருக்கிறது. #Samantha

Tags:    

Similar News