என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
ட்விட்டரின் இந்த அம்சம் இந்திய பயனர்களுக்காகவே கொண்டுவரப்படுகிறது.
உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றாக ட்விட்டர் இருக்கிறது. இதில் ஸ்பேஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் தற்போது ட்விட்டர் கிரிக்கெட் டேப் அம்சம் ஒன்றை கொண்டு வர பரிசோதனை செய்து வருவதாக தெரிவித்துள்ளது.
இந்த கிரிக்கெட் டேபில் நடைபெற இருக்கும் கிரிக்கெட் போட்டிகள், அந்த போட்டிகள் குறித்த சமீபத்திய ட்வீட்டுகள், லைவ் ஸ்கோர்போர்டுகள் ஆகியவை இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டி குறித்த அப்டேட்டுகளும் இந்த கிரிக்கெட் டேபில் சோதனை முறையில் சில பயனர்களுக்கு மட்டும் காட்டப்பட்டு வருகிறது.
இத்துடன் அந்த போட்டிகளில் உள்ள டாப் பிளேயர்ஸ், டீம் ரேங்கிங்ஸ் குறித்த விட்ஜெட்டுகள், கிரிக்கெட்டில் உள்ள நிகழ்வுகள், ஹைலைட்டுகள், ஆஃப் ஃபீல்டில் நடைபெறும் சம்பவங்கள் ஆகியவற்றின் வீடியோக்கள் ஆகியவை கிரிக்கெட் டேபில் இடம்பெறும். இதற்காக ட்விட்டர் ஒளிபரப்பு நிறுவனத்துடன் இணைந்து செயல்படவுள்ளது.
ஸ்டாஸ்போர்ட்ஸ், கிரிக்பஸ், போடியா மஜும்தார் ஆகியவற்றுடன் டிவிட்டர் இணையவுள்ளது.
இத்துடன் கிரிக்கெட்டின் முக்கிய நிகழ்வுகள் நோட்டிஃபிகேசனாகவும் அனுப்பப்படவுள்ளது. ட்விட்டரின் இந்த அம்சம் இந்தியாவில் மட்டுமே கொண்டுவரப்படுகிறது.
இந்த அம்சத்தின் மூலம் ஒவ்வொருமுறையும் நாம் கூகுள் பேயில் கேமராவை ஓபன் செய்து ஸ்கேன் செய்ய தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் யூபிஐ சேவைகளில் ஒன்றாக ஜிபே இருக்கிறது. தற்போது இந்த ஜிபேயில் விரைவாக பணம் அனுப்பும் புதிய அம்சம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி பின் லேப்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து கூகுள் நிறுவனம் ‘Tap to Pay’ என்ற அம்சத்தை ஜிபேயில் அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி கடையில் பொருட்கள் வாங்குபவர்கள் ஸ்கேன் செய்வதற்கு பதில் அவர்களது போனை டேப் செய்தால் போதும். கூகுள் பேவிற்கு தானாகவே சென்று யூபிஐ பின் கேட்கப்படும். அதன்பின் யூபிஐ பின்-ஐ டைப் செய்தால் பணம் விரைவாக சென்று விடும்.
இந்த அம்சத்தின் மூலம் ஒவ்வொருமுறையும் நாம் கூகுள் பேயில் கேமராவை ஓபன் செய்து ஸ்கேன் செய்ய தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 7 முதல் இந்த உலகில் இந்த விளம்பர நிகழ்ச்சி மெட்டாவெர்ஸ் உலகில் நடைபெறவுள்ளது.
மெய்நிகர் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் மெட்டாவெர்ஸ் இன்று உலகம் முழுவதும் பிரபலம் அடைந்து வருகிறது. திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை பயனர்கள் மெட்டாவெர்ஸிலேயே நடத்தும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
கே.ஜி.எஃப் படத்தின் 2-வது பாகம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்த விளம்பர நிகழ்ச்சி மெட்டாவெர்ஸில் நடைபெறவுள்ளதாக அப்படக்குழு தெரிவித்துள்ளது.
கேஜிஎஃப் வெர்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த தோற்றங்களை உருவாக்கிக்கொள்ளலாம். மேலும் கேஜிஎஃப் உலகையும் சுற்றிப்பார்க்கலாம்.
ஏப்ரல் 7 முதல் இந்த உலகில் இந்த விளம்பர நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
பிஎஸ் பிளஸ் எசன்ஷியல், எக்ஸ்ட்ரா மற்றும் பிரிமியம் ஆகிய 3 திட்டங்கள் இந்த சேவையில் இடம்பெற்றுள்ளன.
உலகம் முழுவதும் வீடியோ கேம் பிரியர்கள் பயன்படுத்தும் முன்னணி சாதனமாக சோனி பிளே ஸ்டேஷன் இருக்கிறது. இந்த பிளே ஸ்டேஷன் வைத்திருப்பவர்கள் கேம்களை வாங்கி விளையாட வேண்டும்.
இதற்கு பதில் சந்தா மூலம் கேம்களை விளையாட சோனி நிறுவனம் புதிய பிளே ஸ்டேஷன் பிளஸ் சேவையை வரும் ஜூன் முதல் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த சேவை மூன்று திட்டங்களை வழங்குகிறது. பிளே எஸ்டேஷன் பிளஸ் எசன்ஷியல்ஸ் சேவையில் மாதத்திற்கு 2 கேம்களை டவுன்லோட் செய்துகொள்ளலாம், சிறப்பு தள்ளுபடிகள், சேவ் செய்யப்பட்ட கேம்களுக்கு கிளவுட் ஸ்டோரேஜ், ஆன்லைன் மல்டிபிளேயர் ஆக்சஸ் ஆகியவை வழங்கப்படும்.
பிளேஸ்டேஷன் பிளஸ் எக்ஸ்டிராவில் 400க்கும் மேற்பட்ட பிஎஸ் 4 மற்றும் பிஎஸ் 5 கேம்கள், பிளேஸ்டேஷன் ஸ்டூடியோஸ் கேட்லாக்கில் உள்ள பிளாக்பஸ்டர் ஹிட்ஸ் ஆன கேம்கள், டவுன்லோட் செய்து விளையாடி கொள்ளலாம். இத்துடன் சிறப்பு தள்ளுபடிகள், கிளவுட் ஸ்டோரேஜ், ஆன்லைன் மல்டிபிளேயர் ஆகிய அம்சங்களும் உண்டு.
பிளே ஸ்டேஷன் பிளஸ் பிரீமியம் சேவையில் அனைத்து வகையான பிளே ஸ்டேஷன், பிஎஸ்2, பிஎஸ்பி ஜெனரெஷன் கேம்களுடன் மல்டிபிளேயர் ஆப்ஷன், கிளவுட் ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.
இந்தியாவில் பிளே ஸ்டேஷன் பிளஸ் எக்ஸ்ட்ரா மாதம் ரூ.800, 4 மாதங்களுக்கு ரூ.2000, வருடத்திற்கு ரூ.5000 என்ற கட்டணத்திலும், பிஎஸ் பிளஸ் பிரீமியம் மாதம் ரூ.1000, வருடத்திற்கு ரூ.6000 என்ற கட்டணத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலான பயனர்கள் ஸ்மார்ட்போனுக்கு மாறி வருவதால், இந்த யூபிஐ123 பே சேவைக்கு வரவேற்பு இருக்காது எனவும் கருதப்படுகிறது.
ஸ்மார்ட்போன், இணையவசதி இல்லாமல் யூ.பி.ஐ மூலம் பணம் அனுப்பும் யூ.பி.ஐ123பே வசதியை இந்த மாதம் தொடக்கத்தில் இந்திய அரசு அறிமுகம் செய்தது.
இன்று வரை 37,000 பயனர்கள் இந்த யூ.பி.ஐ123 பே சேவையில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 21,833 வெற்றிகரமான பரிவர்த்தனைகளும் அச்சேவையின் மூலம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த யூபிஐ சேவையை இந்தியாவிற்கு வெளியேயும் கொண்டு செல்ல NPCI திட்டமிட்டு வருகிறது. தற்போது BHIP UPI-ஐ சிங்கப்பூர், பூடான், ஐக்கிய அரபு அமீரகம், நேபால் ஆகிய நாடுகள் அங்கீகரித்துள்ளன. இதை தொடர்ந்து யூபிஐ123 பேவையும் கொண்டு சேர்க்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
அதேசமயம் பெரும்பாலான பயனர்கள் ஸ்மார்ட்போனுக்கு மாறி வருவதால், இந்த யூபிஐ123 பே சேவைக்கு வரவேற்பு இருக்காது எனவும் கருதப்படுகிறது.
ஆப்பிள் பயனர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.எம்.ஏ என அழைக்கப்படும் அமைப்பு ஸ்மார்ட்போன்களில் சீரியல் நம்பர்களை சேகரித்து வைக்கும் தளமாக இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போன்களின் தற்போதைய நிலையும் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதாவது குறிப்பிட்ட பதிவு எண்ணை உடைய ஒரு ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டதா, திருடப்பட்டுவிட்டதா அல்லது முழுதும் பணம் செலுத்தப்படாமல் இருக்கிறதா என்பதை பார்க்கலாம்.
குறிப்பிட்ட ஒரு ஸ்மார்ட்போன் திருடப்பட்டு விட்டது என ஜி.எஸ்.எம்.ஏவிடம் புகார் அளித்தால் அதன் பதிவு எண்ணை கொண்டு அந்த ஸ்மார்ட்போனுக்கு நெட்வொர்க் இணைப்பு எதுவும் கிடைக்காமல் தடுக்க முடியும். திருடப்பட்ட போனை பிறர் ஏமாந்து வாங்காமல் தடுக்கவும் முடியும். இத்தகைய பயன்களுக்காகவே இந்த ஜி.எஸ்.எம்.ஏ உதவுகிறது.
இந்நிலையில் ஜி.எஸ்.எம்.ஏவில் தொலைந்ததாக அல்லது திருடப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட ஆப்பிள் போன்களை ஆப்பிள் ஸ்டோர்ஸ் அல்லது ஆப்பிளின் அங்கீகாரம் பெற்ற ஆப்பிள் சர்வீஸ் செண்டர்களில், சர்வீஸ் செய்ய முடியாது என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மொபைல் ஜீனியஸ், ஜிஎஸ்.எக்ஸ் சிஸ்டம்ஸ் ஆகியவற்றில் தொலைந்ததாக, திருடப்பட்டுவிட்டதாக பதிவு செய்யப்பட்ட ஆப்பிள் போன்களுக்கும் சர்வீஸ் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை திருட்டு மற்றும் மோசடியில் இருந்து ஆப்பிள் பயனர்களை காப்பாற்றும் என நம்பப்படுகிறது.
கருத்து சுதந்திரத்தை பாதிக்காத வகையில் சமூக வலைதளங்கள் இயங்குகிறதா என எலான் மஸ்க் கேள்வி எழுப்பினார்.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களில் நிறுவனர் எலான்மஸ்க் புதிய சமூக வலைதளம் ஒன்றை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய சமூக வலைதளத்தை தொடங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளார்.
சுதந்திரமான பேச்சு என்பது ஜனநாயகம் இயங்குவதற்கு அடிப்படையான ஒன்று. ட்விட்டர் அத்தகைய சுதந்திரமான பேச்சுகளுக்கு அனுமதி அளிக்கிறதா என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பலர் இல்லை என பதிவிட்டிருந்தனர். அதை தொடர்ந்து புதிய சமூக வலைதளத்தை எதிர்பார்க்கிறீர்களா என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு ஒருவர் ஓபன் சோர்ஸ் தளத்தை உருவாக்கினால் நன்றாக இருக்கும், அது வெளிப்படை தன்மையுடன் இயங்க வேண்டும் எனவும் கூறினார்.
உடனே அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், இதுகுறித்து தீவிரமாக யோசித்து வருகிறேன் என கூறியுள்ளார்.
தற்போது சோதனை முறையில் இருக்கும் இந்த அம்சம் விரைவில் அனைத்து வீடியோக்களுக்கும் வரவுள்ளது.
உலகம் முழுவதும் பெரிதும் பார்க்கப்படும் சமூக வலைதளங்களில் ஒன்றாக யூடியூப் இருக்கிறது. தினம் பல கோடிக்கணக்கான வீடியோக்கள் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. பார்க்கப்படுகின்றன.
இந்நிலையில் பயனர்களின் ஈடுபாட்டை அதிகரிக்க யூடியூப் புதிய அம்சம் ஒன்றை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இருப்பது போல ரியாக்ஷன்ஸ் அம்சம் யூடியூப்பில் வெளியாகவுள்ளது. தற்போது வாட்ஸ்ஆப்பில் சோதனையில் இருக்கும் ரியாக்ஷன்ஸ் யூடியூப்பிலும் சோதனை நிலையில் இருக்கிறது.
இதுவரை பேஸ்புக்கில் லைக், டிஸ்லைக், கமெண்ட் என்ற மூன்று ஆப்ஷன்கள் மட்டுமே பயனர்கள் வீடியோ குறித்து கருத்து பரிமாறும் வண்ணம் இருந்தது. இதில் சமீபத்தில் டிஸ்லைக் அம்சம் நீக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது யூடியூப் ரியாக்ஷன் அம்சத்தை கொண்டுவரவுள்ளது.

இதன்மூலம் பயனர்கள் தங்களுக்கு பிடித்த யூடியூப் வீடியோக்களுக்கு எமோஜ்ஜிகள் மூலம் ரியாக்ட் செய்ய முடியும். குறிப்பாக வீடியோ ஓடிக்கொண்டிருக்கும்போதே தங்களுக்கு பிடித்த இடங்களில் ரியாக்ட் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூடியோப் 8 ரியாக்ஷன் கொண்ட எமோஜிக்களை தற்போது வழங்கவுள்ளது. விரைவில் கூடுதல் எமோஜ்ஜிக்களும் இதில் சேர்க்கப்படவுள்ளன.
தற்போது சோதனைக்காக ஒருசில வீடியோக்களில் மட்டுமே நாம் எமோஜ்ஜிக்களை பயன்படுத்த முடியும்.
ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ தமிழக பள்ளி மாணவர்களை பாராட்டி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான புகைப்படங்களை ஆப்பிள் ஐபோன் 13 மினியில் எடுத்து வெளியிட்ட 40 மேல்நிலைப்பள்ளி மாணவர்களை ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ பாராட்டியுள்ளார்.
அந்த புகைப்படங்கள் ஏப்ரல் 17-ம் தேதி வரை எக்மோர் அருங்காட்சியகத்தில் நடைபெறும் சென்னை போட்டோ பினாலே நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் வி.ஆர் மாலில் உள்ள ஆப்ட்ரானிஸ் ஸ்டோரிலும் இந்த புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த புகைப்பட போட்டியில் 12 வயது மாணவர்களும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகைப்பட கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், தமிழ்நாடு முடிவே இல்லாத கதைகளை கொண்டுள்ளது. அங்கே பலதரப்பட்ட உணவு, கட்டிடக்கலை, நிலப்பரப்பு, கலச்சாரங்கள் நிறைந்துள்ளன. தமிழகத்தை புகைப்படங்கள் மூலம் கண்டறிவது புதிவித அனுபவத்தை தரும் என தெரிவித்துள்ளனர்.
Forty high school students from Tamil Nadu, India captured the vibrance of their communities on iPhone 13 mini. Now their work is featured in the student showcase at the historic Egmore Museum for the Chennai Photo Biennale. #ShotOniPhonehttps://t.co/t0DhNYWGvmpic.twitter.com/I30DTwZkbT
— Tim Cook (@tim_cook) March 25, 2022
ஒருமாத வேலிடிட்டி என்பது 28 நாட்களாகவே இருந்து வந்த நிலையில் ஜியோ நிறுவனம் காலண்டர் மாத வேலிடிட்டி என 30 நாட்கள் வேலிடிட்டி தரும் ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முன்பு 30 நாட்கள் வேலிடிட்டி திட்டங்களை வழங்கி வந்தன. பின் திடீரென வேலிடிட்டி நாட்கள் 28-ஆக குறைக்கப்பட்டன.
இதனால் ஒருமாத வேலிடிட்டி என்பது 28 நாட்களாகவே இந்தியாவில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஜியோ நிறுவனம் காலண்டர் மாத வேலிடிட்டி என 30 நாட்கள் வேலிடிட்டி தரும் ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது.
இதன்படி ரூ.259 நாட்களுக்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிட்டட் அழைப்புகள், தினம் 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்கள் 30 நாட்களுக்கு வழங்கப்படும்.
வழக்கமாக 28 நாட்களில் இருந்து முழுதாக ஒரு மாத வேலிடிட்டி திட்டத்தை ஜியோ அறிவித்துள்ளது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்தில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை லைக், ரியாக் செய்யும் அம்சத்தை கொண்டு வந்தது. அதை தொடர்ந்து தற்போது இந்த புதிய அம்சத்தையும் இன்ஸ்டாகிராம் கொண்டு வரவுள்ளது.
உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் இருக்கிறது.
புகைப்படங்களை பதிவேற்றும் செயலியாக இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்யப்பட்டாலும் தொடர்ந்து வீடியோ, ஸ்டோரிஸ், வாய்ஸ் மெசேஜ், ரீல்ஸ் ஆகிய அம்சங்களை இன்ஸ்டாகிராம் கொண்டு வந்தது.
இதில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் அம்சத்திற்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. வழக்கமாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸுக்கு பயனர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் ’Send Message' என்ற ஆப்ஷன் தற்போது பயனில் உள்ளது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸுக்கு வாய்ஸ் மெசேஜ் மற்றும் புகைப்படங்கள் மூலம் ரிப்ளை செய்யும் புதிய அம்சத்தை கொண்டு வர அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை லைக், ரியாக் செய்யும் அம்சத்தை அந்நிறுவனம் கொண்டு வந்தது. அதை தொடர்ந்து தற்போது வாய்ஸ் ரிப்ளை, இமேஜ் ரிப்ளை அம்சங்களும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் வரவுள்ளன.
தற்போது ஸ்மார்ட்போன் கேமராக்களின் தரம் உயர உயர மீடியா ஃபைல்களின் அளவும் கூடுவதை கருத்தில் கொண்டு இந்த அம்சம் கொண்டு வரப்படவுள்ளது.
இன்று உலகம் முழுவதும் அதிக நபர்களால் பயன்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ்ஆப் இருக்கிறது.
வாட்ஸ்ஆப்பில் வீடியோ, ஆடியோ அழைப்புகள், வாய்ஸ் மெசேஜ்கள், ஸ்டிக்கர்கள் என ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கின்றன. இவற்றுடன் புகைப்படங்கள், வீடியோக்கள், டாக்குமெண்டுகள் ஆகியவற்றையும் வாட்ஸ்ஆப் மூலம் அனுப்ப முடியும். ஆனால் 100 எம்.பி அளவிலான ஃபைல்களை மட்டுமே வாட்ஸ்ஆப்பில் தற்போதுஅனுப்பும் வகையில் இருக்கிறது.
இந்நிலையில் இனி 2 ஜிபி வரையிலான ஆவணங்களை அனுப்பும் அம்சத்தை வாட்ஸ்ஆப் சோதனை செய்து வருகிறது. தற்போது ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் பீட்டா பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டில் வாட்ஸ்ஆப் பீட்டா வெர்ஷன் 2.22.8.5, 2.22.8.6 மற்றும் 2.22.8.7 ஆகியவற்றுக்கும், ஆண்ட்ராய்டில் பீட்டா வெர்ஷன் 22.7.0.76-க்கும் இந்த அம்சம் தரப்பட்டுள்ளது.
தற்போது ஸ்மார்ட்போன் கேமராக்களின் தரம் உயர உயர மீடியா ஃபைல்களின் அளவும் கூடுவதை கருத்தில் கொண்டு இந்த 2ஜிபி அம்சம் கொண்டுவரப்படவுள்ளது.






