என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
ஆண்ட்ராய்டு 13 குறித்து கூகுள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சிம்கார்டுகள் குறித்த தகவலை கூகுள் பகிர்ந்துள்ளது.
சிம்கார்டுகள் இல்லாமல் இ.சிம் எனப்படும் டிஜிட்டல் சிம்களை பயன்படுத்தும் வகையில் போன்கள் சந்தையில் உள்ளது. இருப்பினும் இந்த இ.சிம் தொழில்நுட்பத்தில் 2 இ.சிம்களை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது.
இந்நிலையில் கூகுள் வெளியிடவுள்ள ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டில், இ.சிம் வசதியை மேம்படுத்தவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு MEP (Multiple Enabled Profiles) என்ற புதிய தொழில்நுட்பத்தை கூகுள் பயன்படுத்தவுள்ளது. இதற்கான காப்புரிமையை கூகுள் 2020-ம் ஆண்டிலேயே பெற்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பம் ஒரே நேரத்தில் 2 வெவ்வேறு இ.சிம்களை பயன்படுத்த உதவி செய்கிறது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விரைவில் சிம்கார்ட் ஸ்லாட்டுகளே இல்லாத பிக்ஸல் போன்களை கூகுள் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 மினி உள்ளிட்ட போன்களில் இரண்டு இ சிம்கள் அல்லது ஒரு நேனோ சிம் மற்றும் ஒரு இ.சிம் ஆகியவற்றை பயன்படுத்தும் வசதிகள் இடம்பெற்றுள்ளன. ஆண்ட்ராய்டு போன்களில் ஒற்றை இ.சிம் வசதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
தற்போது கூகுளின் ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டினால் இந்த நிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மால்வேர் பரவாமல் தடுக்க, பயனர்கள் அறியப்படாத செயலிகளை தரவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லேப்52 என்ற ஆய்வு நிறுவனம் ’பிராசஸ் மேனேஜர்’ என்ற புதிய ஸ்பைவேர் ஒன்று பிளே ஸ்டோர் செயலிகள் மூலம் பரவி வருவதாக எச்சரித்துள்ளது.
இந்த பிராசஸ் மேனேஜர் ஆண்ட்ராய்ட் ஓஎஸ் ஃபைல் போல தன்னை மாற்றிக்கொண்டு பயனர்களின் லொகேஷன், நெட்வோர்க், வைஃபை, கேமரா, ஆடியோ செட்டிங்ஸ், கால் லாக், கான்டெக்ட்ஸ், ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல அம்சங்களை பயனர்கள் அறியாமலேயே பயன்படுத்த தொடங்குகிறது.
இதன்மூலம் நாம் எப்போது இணையம் பயன்படுத்துகிறோம், யாரிடம் பேசுகிறோம், என்ன பேசுகிறோம், கேமராவில் என்ன ரெக்கார்ட் செய்கிறோம் உள்ளிட்டவற்றின் தகவல்களை இந்த ஸ்பைவேர் சேகரிக்க தொடங்குகிறது.
இதுத்தவிர நாம் வைஃபையுடன் நம் போனை இணைத்திருக்கும்போது அந்த வைஃபையின் பாஸ்வேர்ட் உள்ளிட்டவற்றின் தகவல்களை இந்த மால்வேர் சேகரிக்கிறது.

அதன்பின் நமது நோட்டிஃபிகேஷன் பாரில் ‘Process manager is running' என்று இந்த ஸ்பைவேரின் மெசேஜ் ஒன்று காட்டியபடியே இருக்கிறது. இவற்றை நீக்க முடியவில்லை என கூறப்படுகிறது.
தற்போது பிளே ஸ்டோரில் உள்ள RozDhan: Earn Wallet Cash என்ற செயலி மூலம் இந்த மால்வேர் பரவி வருவதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த மால்வேரால் பாதிக்கப்பட்டுள்ள பிற செயலிகள் என்னென்ன என்பது இன்னும் முழுதாக அறியப்படவில்லை.
இந்த மால்வேர் பரவாமல் தடுக்க, பயனர்கள் அறியப்படாத செயலிகளை தரவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியிலேயே டாடாவின் பிற டிஜிட்டல் சேவைகளும் இணைக்கப்பட்டு, அனைத்து டாடா டிஜிட்டல் சேவைகளையும் ஒரே இடத்தில் பெறுவது போல இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் யூபிஐ பண பரிவர்த்தனை சேவையை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த துறையில் பேடிஎம், போன்பே, கூகுள் பே, அமேசான் பே என பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் தற்போது டாடா குழுமமும் இந்த துறையில் இறங்கியுள்ளது. டாடா குழுமத்தின் யூ.பி.ஐ செயலிக்கு ‘டாடா நியு’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த சேவை வரும் ஏப்ரல் 7ம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.
இந்த சேவைக்காக டாடா நிறுவனத்தின் டிஜிட்டல் வணிக பிரிவான டாடா டிஜிட்டல், ஐசிஐசி வங்கியுடன் இணைந்து செயல்படவுள்ளது. டாடாவின் இந்த நியு சேவை, பிற யூபிஐ செயலிகளை விட அதிவேகமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு யூபிஐ செயலிகளும் கேஷ்பேக், கூப்பன்கள் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகின்றன. இதே வகையில் டாடா நியு செயலியிலும் பல வகையான சலுகைகள், கேஷ்பேக்குகள் வழங்கப்படவுள்ளன. இவற்றிருக்கு டாடா ‘நியுகாயின்ஸ்’ என பெயரிட்டுள்ளது.
ஒவ்வொரு முறை பணம் பரிவர்த்தனை நடைபெறும்போதும் பயனர்களுக்கு நியுகாயின்ஸ் வழங்கப்படும். இந்த நியுகாயின்ஸை டாடாவின் பிற சேவைகளான பிக்பாஸ்கெட், 1 எம்.ஜி, குரோமா, டாடா கிளிக், ஃபிளைட் புக்கிங் ஆகியவற்றில் பயன்படுத்தலாம்.
மேலும் இந்த செயலியிலேயே டாடாவின் பிற டிஜிட்டல் சேவைகளும் இணைக்கப்பட்டு, அனைத்து டாடா டிஜிட்டல் சேவைகளையும் ஒரே இடத்தில் பெறுவது போல இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐடி சட்டம் 2021, விதி எண் 4(1)(d)-ன் கீழ் தடை செய்யப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கையை வாட்ஸ்ஆப் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்ஆப் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் (பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 28-ம் தேதிக்குள்) 14.26 லட்சம் இந்திய வாட்ஸ்ஆப் கணக்குகளை தடை செய்துள்ளதாக அரிவித்துள்ளது.
வாட்ஸ்ஆப்க்கு வந்த புகார்கள் அடிப்படையிலும், வாட்ஸ்ஆப் மற்றும் இந்திய சட்டங்களுக்கு எதிராக செயல்பட்ட கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ஐடி சட்டம் 2021, விதி எண் 4(1)(d)-ன் கீழ் தடை செய்யப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் ஆப்பிற்கு வந்த 194 புகார்களின் அடிப்படையில் வெறும் 19 கணக்குகள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ளவை அனைத்தும் வாட்ஸ்ஆப் வைத்துள்ள தடுப்பு அம்சங்களுக்கு கீழ் விதிமீறல்களை செய்த கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, பின் தடை செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்ஆப்பில் வன்முறையை பரப்புவோர், தீய செயல்களில் ஈடுபடுவோர் ஆகியோரின் தரவுகள் பயனர்கள் அளிக்கும் ஃபீட்பேக் மற்றும் அதிகம் பிளாக் செய்யப்படும் கணக்குகள் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் சேகரிக்கப்பட்டு, அவை தடை செய்யப்படுகின்றன என வாட்ஸ்ஆப் விளக்கம் அளித்துள்ளது.
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் 30 நாட்கள் வேலிடிட்டி திட்டத்தை அறிவித்த நிலையில் தற்போது வோடஃபோனும் அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முன்பு 30 நாட்கள் வேலிடிட்டி திட்டங்களை வழங்கி வந்தன. பின் திடீரென வேலிடிட்டி நாட்கள் 28-ஆக குறைக்கப்பட்டன.
இதனால் ஒருமாத வேலிடிட்டி என்பது 28 நாட்களாகவே இந்தியாவில் இருந்து வருகிறது. இதை தொடர்ந்து ஜியோ நிறுவனம் காலண்டர் மாத வேலிடிட்டி என 30 நாட்கள் வேலிடிட்டி தரும் ரீசார்ஜ் திட்டத்தை கடந்த வாரம் அறிவித்தது. இந்த திட்டத்திற்கு மக்களிடையே வரவேற்பு இருந்ததை தொடர்ந்து ஏர்டெல்லும் 30 நாட்கள் வேலிட்டிட்டி திட்டத்தை அறிவித்தது.
இந்நிலையில் வோடஃபோனும் தற்போது 30 நாட்கள் வேலிட்டிடியை வழங்கும் இரண்டு திட்டங்களை அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின்படி ரூ.327 நாட்களுக்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிட்டெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ்கள், மொத்தமாக 25 ஜிபி டேட்டா 30 நாட்களுக்கு வழங்கப்படும்.
இதேபோல ரூ.337-க்கு ரீசார்ஜ் செய்தால் தினம் 100 எஸ்.எஸ்கள், அன்லிமிட்டெட் அழைப்புகள் மற்றும் 28 ஜிபி டேட்டா 31 நாட்களுக்கு வழங்கப்படும். இத்துடன் விஐ மூவிஸ் மற்றும் டிவி செயலிக்கான சந்தாவும் இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தவிர வாட்ஸ்ஆப் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டுள்ள ஒன் டைம் மெசேஜ் அம்சத்தை கணினியிலும் கொண்டுவருவதற்கு திட்டமிட்டு வருகிறது.
உலகின் முன்னணி சேட்டிங் செயலிகளில் ஒன்றான வாட்ஸ்ஆப் ஏகப்பட்ட அம்சங்களை வழங்கி வருகிறது. இதுமட்டுமின்றி புதிய அப்டேட்டுகளை வழங்கி வ்வருகிறது.
இந்நிலையில் தற்போது வாட்ஸ்ஆப் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்மூலம் நமக்கு சேட்டில் வரும் போன் நம்பரை டேப் செய்தவுடன் அந்த நம்பர் வாட்ஸ்ஆப்பில் இருக்கிறதா என ஆராயும். வாட்ஸ்ஆப்பில் இருந்தால் அவற்றிருக்கு வாட்ஸ்ஆப் மெசேஜ் அனுப்பலாமா அல்லது கால் செய்யலாமா என கேட்கும். இதற்கு முன் சேட்டில் வரும் போன் நம்பரை டேப் செய்யும்போது கால் செய்யும் அம்சம் மட்டுமே இடம்பெற்றிருந்தது.
தற்போது பீட்டா பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படவுள்ளது.
இதைத்தவிர வாட்ஸ்ஆப் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டுள்ள ஒன் டைம் மெசேஜ் அம்சத்தை கணினியிலும் கொண்டுவருவதற்கு திட்டமிட்டு வருகிறது.
உடனடி பயணங்களை மேற்கொள்ளும் நபர்கள், குடும்பத்துடன் சுற்றுலா திட்டமிடும் நபர்களுக்கு இந்த சேவை மிகவும் உதவியாக இருக்கும் என பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி மின்னணு வணிக நிறுவனமான பேடிஎம் போஸ்ட்பெய்ட் வகையில் ரெயில் டிக்கெட் புக் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இதன்மூலம் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலிக்கு சென்று ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, பேடிஎம் வேலெட் வழியாக பணம் செலுத்தாமல் ரயில் டிக்கெட் பெற முடியும். பின் பேடிஎம் நிர்ணயித்துள்ள காலவரையறைக்குள் இந்த பணத்தை நாம் செலுத்தி விட வேண்டும்.
உடனடி பயணங்களை மேற்கொள்ளும் நபர்கள், குடும்பத்துடன் சுற்றுலா திட்டமிடும் நபர்களுக்கு இந்த சேவை மிகவும் உதவியாக இருக்கும் என பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பேடிஎம்மின் போஸ்ட் பெய்ட் சேவை பயனர்களுக்கு கடன் வழங்குவதற்காக தொடங்கப்பட்டது. இந்த சேவையில் மூலம், 30 நாள்களுக்கு பயன்படுத்துவதற்கு ரூ .60,000 வரை கடன் பெற முடியும். இந்த பணத்தை, குறிப்பிட்ட பில்லிங் தேதிக்குள் திருப்பி செலுத்த வேண்டும்.
கேமரா, சார்ஜர், க்யூ.ஆர் ஸ்கேனர், வெப்ப கட்டுப்பாடு உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் இருப்பதாக கூறப்பட்டிருந்தது.
Ixigo நிறுவனம் புதிய ஸ்மார்ட் ஷூக்களை சந்தையில் அறிமுகம் செய்துள்ளதாக நேற்று இணையத்தில் விளம்பரம் செய்தது.
இந்த ஷூக்களில் வாட்டர்ப்ரூஃப் யூ.எஸ்.பி சார்ஜிங் போர்ட் தரப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் நாம் நமது ஸ்மார்ட்போனை இந்த ஷூவில் இணைத்து சார்ஜ் செய்துகொள்ள முடியும். இதற்கான பேட்டரில் ஷூவின் கீழ்பக்கத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறியது. அதேபோன்று இதில் தரப்பட்டுள்ள 12 மெகாபிக்சல் கேமராக்கள் மூலம் நாம் செல்ஃபியை எடுத்துகொள்ள முடியும் என்றும் தெரிவித்தது.
மேலும் இந்த ஷூவில் இருக்கும் அல்ட்ரா வைட் பேக் கேமரா மூலம் நமக்கு பின் யார் வருகிறார்கள் என்பதை ஸ்மார்ட்போனுடன் இணைத்து பார்க்க முடியும். யாராவது இந்த ஷூவை திருடுகிறார்களா என்பதையும் கண்டுபிடிக்க முடியும். நமது உடலை வெப்பத்திற்கு ஏற்றாற்போல இந்த ஷூ வெப்பம் அல்லது குளிர்ச்சியை தரும். க்யூ.ஆர் ஸ்கேனர் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த ஷூவில் இடம்பெற்றுள்ளதாக Ixigo நிறுவனம் விளம்பரம் செய்திருந்தது.
இந்த ஷூவை முன்பதிவு செய்வதற்கான இணைப்பும் அந்த விளம்பரத்தில் தரப்பட்டிருந்தது. அதை ஆவலுடன் வாங்குவதற்காக சென்ற பயனர்கள் லிங்கை கிளிக் செய்து பார்த்தபோது ‘ஏப்ரல் ஃபூல்’ என காட்டப்பட்டது.
ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் அன்று இணையவாசிகளை ஏமாற்றுவதற்காக இந்த விளம்பரம் செய்யப்பட்டதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்தது.
கூகுள் வெளியிட்டுள்ள இந்த அப்டேட்டில் ஏராளமான புது அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் தொடங்கியபின் பல நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’ வசதியை அறிமுகம் செய்தன. இதையடுத்து அலுவக ஊழியர்கள் சந்தித்துகொள்ள வீடியோ கான்ஃபரன்சிங் மென்பொருட்களின் பயன்பாடுகள் அதிகரிக்க தொடங்கின. அவற்றில் கூகுள் மீட், ஜூம் போன்றவை மிகவும் பிரபலமானவை.
இதில் கூகுள் நிறுவனம் தனது கூகுள் மீட் வீடியோ கான்ஃபரன்சிங் தளத்தில் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
In-Meeting Reactions
கூகுள் மீட்டில் புதிய ரியாக்ஷன்ஸ் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் வீடியோவில் ஒருவர் உரையாடும்போது அவருக்கு எமோஜிக்கள் மூலம் நாம் ரியாக்ட் செய்ய முடியும். தம்ஸ் அப், தம்ஸ் டவுன், சிரிப்பு, ஆச்சரியம், கைத்தட்டுதல் ஆகிய எமோஜிக்கள் மூலம் நாம் நமது எண்ணத்தை பிரதிபலிக்க முடியும்.
PiP Mode
கூகுள் மீட்டில் பிக்சர் இன் பிக்சர் என்ற அம்சமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாம் வீடியோவில் பேசியபடியே பிரவுசரில் பிற வேலைகளையும் பார்க்க முடியும். நமது பேச்சுக்கு பார்வையாளர்கள் எத்தகைய உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்கள் என்பதையும் நாம் பார்த்துகொள்ள முடியும்.
Meet in Docs, Sheets and Slides
கூகுள் மீட் அம்சம் இனி நேரடியாக டாக்ஸ், ஷீட்ஸ் மற்றும் ஸ்லைட்ஸில் இடம்பெறும் என கூகுள் தெரிவித்துள்ளது. இதன்மூலம் நாம் டாக்குமெண்டுகளை பார்த்துகொண்டிருக்கும்போதே மீட்டிங்கை தொடங்க முடியும்.
பிற அம்சங்கள்...
இதேபோல கூகுள் மீட்டில் கேள்வி பதில், கருத்துக்கணிப்பு ஆகியவற்றையும் நடத்தமுடியும் என கூகுள் தெரிவித்துள்ளது. யூடியூப்பிலும் கூகுள் மீட்டை ஸ்ட்ரீம் செய்யும் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு முதல் இந்த பிரச்சனை ஃபேஸ்புக்கில் நிலவி வந்ததாக கூறப்படுகிறது.
ஃபேஸ்புக் நிறுவனம் போலி செய்திகளை பரவுவதை தடுக்க தனது நியூஸ்ஃபீட் ரேங்கிங் அலாகரித்தத்தில் மாற்றத்தை செய்தது. ஆனால் அந்த அலாகரித்தம் போலி செய்திகளை தடுப்பதற்கு பதில் அதிகம் பரவுவதற்கு வழிவகுத்துவிட்டது. இதனால் ஃபேஸ்புகில் போலி செய்திகளின் பரவல் உலகம் முழுவதும் 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தவிர ஆபாச பதிவுகள், வன்முறையை தூண்டும் பதிவுகள் ஆகியவையும் அதிகம் பரபப்பட்டதாக கூறப்படுகிறது. 2019-ம் ஆண்டு உருவான இந்த ’பக்’ கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தீவிரமாக செயல்பட தொடங்கியது. பின் கடந்த மாதம் மார்ச் 11-ம் தேதி தான் இந்த பிரச்சனையை ஃபேஸ்புக் சரி செய்தது. ஃபேஸ்புக் விஞ்ஞானிகளே கண்டுபிடிக்க முடியாத வகையில் இதன் ஆலாகரித்தம் கடினமாக ப்ரோகிராம் செய்யப்பட்டதால் இந்த பிரச்சனை தீர்க்க முடியாதபடி இருந்துள்ளது.
இந்த பிரச்சனை காரணமாக ஏராளமான பயனர்கள் ஃபேஸ்புக் பயன்படுத்துவதையே குறைந்ததாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த ’பக்’ முடிவுக்கு வந்துவிட்டதால் இனி பேஸ்புக்கில் போலி செய்திகள், ஆபாச பதிவுகள் பரவுவது பெருமளவில் தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக iFixit எனப்படும் ஆன்லைன் ரிப்பேர் கம்யூனிட்டியுடன் இணைந்து சாம்சங் செயல்படவுள்ளது.
சாம்சங் நிறுவனம் புதிய ‘Self Repair' திட்டத்தை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின்படி சாம்சங் வாடிக்கையாளர்கள் பழுதடைந்த தங்கள் போனை தாங்களே ரிப்பேர் செய்துகொள்ள முடியும். இதற்கான வழிகாட்டலை சாம்சங்கே வழங்கும்.
இதுகுறித்து சாம்சங் கூறுகையில் இந்த திட்டம் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் சாதனங்களின் வாழ்நாளை அவர்களே நீட்டித்துகொள்ள முடியும் என கூறியுள்ளது. இந்த திட்டத்திற்காக iFixit எனப்படும் ஆன்லைன் ரிப்பேர் கம்யூனிட்டியுடன் இணைந்து சாம்சங் செயல்படவுள்ளது.
இந்த திட்டம் அமெரிக்காவில் மட்டும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சாம்சங் ஒருநாள் சர்வீஸ் திட்டத்தை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது. அதேபோன்று வீடு தேடி வந்து ரிப்பேர் செய்யும் சேவையையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் வாடிக்கையாளர்களே தங்கள் போனை ரிப்பேர் செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்த செல்ஃப் ரிப்பேட் திட்டம் கேலக்ஸி எஸ்20 மற்றும் எஸ் 21 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கும், கேலக்ஸி டேப் எஸ்7+க்கும் மட்டும் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் சாம்சங் நிறுவனத்தின் உண்மையான உதிரி பாகங்களுடன், ரிப்பேட் கருவிகள், படக்காட்சிகளுடன் வழிமுறைகள் ஆகியவற்றை பெறுவர்.
இந்த திட்டம் இன்னும் சில நாட்களில் அமெரிக்காவில் அமலுக்கு வரவுள்ளது.
இந்த திட்டங்களுடன் 30 நாட்களுக்கு அமேசான் பிரைம் மொபைல் எடிஷன், ஃபாஸ்ட்டேக்கில் ரூ.100 கேஷ்பேக் ஆகியவையும் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முன்பு 30 நாட்கள் வேலிடிட்டி திட்டங்களை வழங்கி வந்தன. பின் திடீரென வேலிடிட்டி நாட்கள் 28-ஆக குறைக்கப்பட்டன.
இதனால் ஒருமாத வேலிடிட்டி என்பது 28 நாட்களாகவே இந்தியாவில் இருந்து வருகிறது. இதை தொடர்ந்து ஜியோ நிறுவனம் காலண்டர் மாத வேலிடிட்டி என 30 நாட்கள் வேலிடிட்டி தரும் ரீசார்ஜ் திட்டத்தை கடந்த வாரம் அறிவித்தது. இந்த திட்டத்திற்கு மக்களிடையே வரவேற்பு இருந்ததை தொடர்ந்து தற்போது ஏர்டெல்லும் இரண்டு 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதன் படி ரூ.296-க்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிட்டெட் அழைப்புகள், தினம் 100 எஸ்எம்எஸ்கள், 25ஜிபி டேட்டா 30 நாட்களுக்கு வழங்கப்படும்.
மற்றொரு திட்டத்தில் ரூ.319க்கு ரீசார்ஜ் செய்தால் தினம் 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிட்டெட் அழைப்புகள், தினமும் 2 ஜிபி டேட்டா 30 நாட்களுக்கு வழங்கப்படும்.
இந்த திட்டங்களுடன் 30 நாட்களுக்கு அமேசான் பிரைம் மொபைல் எடிஷன், ஃபாஸ்ட்டேக்கில் ரூ.100 கேஷ்பேக் ஆகியவையும் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.






