என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்

மால்வேர்
பிளே ஸ்டோரில் இருந்து பரவும் ஆபத்து- இந்த செயலியை டவுன்லோட் செய்யாதீங்க
இந்த மால்வேர் பரவாமல் தடுக்க, பயனர்கள் அறியப்படாத செயலிகளை தரவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லேப்52 என்ற ஆய்வு நிறுவனம் ’பிராசஸ் மேனேஜர்’ என்ற புதிய ஸ்பைவேர் ஒன்று பிளே ஸ்டோர் செயலிகள் மூலம் பரவி வருவதாக எச்சரித்துள்ளது.
இந்த பிராசஸ் மேனேஜர் ஆண்ட்ராய்ட் ஓஎஸ் ஃபைல் போல தன்னை மாற்றிக்கொண்டு பயனர்களின் லொகேஷன், நெட்வோர்க், வைஃபை, கேமரா, ஆடியோ செட்டிங்ஸ், கால் லாக், கான்டெக்ட்ஸ், ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல அம்சங்களை பயனர்கள் அறியாமலேயே பயன்படுத்த தொடங்குகிறது.
இதன்மூலம் நாம் எப்போது இணையம் பயன்படுத்துகிறோம், யாரிடம் பேசுகிறோம், என்ன பேசுகிறோம், கேமராவில் என்ன ரெக்கார்ட் செய்கிறோம் உள்ளிட்டவற்றின் தகவல்களை இந்த ஸ்பைவேர் சேகரிக்க தொடங்குகிறது.
இதுத்தவிர நாம் வைஃபையுடன் நம் போனை இணைத்திருக்கும்போது அந்த வைஃபையின் பாஸ்வேர்ட் உள்ளிட்டவற்றின் தகவல்களை இந்த மால்வேர் சேகரிக்கிறது.

அதன்பின் நமது நோட்டிஃபிகேஷன் பாரில் ‘Process manager is running' என்று இந்த ஸ்பைவேரின் மெசேஜ் ஒன்று காட்டியபடியே இருக்கிறது. இவற்றை நீக்க முடியவில்லை என கூறப்படுகிறது.
தற்போது பிளே ஸ்டோரில் உள்ள RozDhan: Earn Wallet Cash என்ற செயலி மூலம் இந்த மால்வேர் பரவி வருவதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த மால்வேரால் பாதிக்கப்பட்டுள்ள பிற செயலிகள் என்னென்ன என்பது இன்னும் முழுதாக அறியப்படவில்லை.
இந்த மால்வேர் பரவாமல் தடுக்க, பயனர்கள் அறியப்படாத செயலிகளை தரவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story






