search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    டாடா நியு
    X
    டாடா நியு

    வரும் 7ம் தேதி முதல் டாடா நியு- அட்டகாசமான சலுகைகளுடன் அறிமுகம்

    இந்த செயலியிலேயே டாடாவின் பிற டிஜிட்டல் சேவைகளும் இணைக்கப்பட்டு, அனைத்து டாடா டிஜிட்டல் சேவைகளையும் ஒரே இடத்தில் பெறுவது போல இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
    இந்தியாவில் யூபிஐ பண பரிவர்த்தனை சேவையை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 
    இந்த துறையில் பேடிஎம், போன்பே, கூகுள் பே, அமேசான் பே என பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. 

    இந்நிலையில் தற்போது டாடா குழுமமும் இந்த துறையில் இறங்கியுள்ளது. டாடா குழுமத்தின் யூ.பி.ஐ செயலிக்கு ‘டாடா நியு’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த சேவை வரும் ஏப்ரல் 7ம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.

    இந்த சேவைக்காக டாடா நிறுவனத்தின் டிஜிட்டல் வணிக பிரிவான டாடா டிஜிட்டல், ஐசிஐசி வங்கியுடன் இணைந்து செயல்படவுள்ளது. டாடாவின் இந்த நியு சேவை, பிற யூபிஐ செயலிகளை விட அதிவேகமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு யூபிஐ செயலிகளும் கேஷ்பேக், கூப்பன்கள் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகின்றன. இதே வகையில் டாடா நியு செயலியிலும் பல வகையான சலுகைகள், கேஷ்பேக்குகள் வழங்கப்படவுள்ளன. இவற்றிருக்கு டாடா ‘நியுகாயின்ஸ்’ என பெயரிட்டுள்ளது.

    ஒவ்வொரு முறை பணம் பரிவர்த்தனை நடைபெறும்போதும் பயனர்களுக்கு நியுகாயின்ஸ் வழங்கப்படும். இந்த நியுகாயின்ஸை டாடாவின் பிற சேவைகளான பிக்பாஸ்கெட், 1 எம்.ஜி, குரோமா, டாடா கிளிக், ஃபிளைட் புக்கிங் ஆகியவற்றில் பயன்படுத்தலாம்.

    மேலும் இந்த செயலியிலேயே டாடாவின் பிற டிஜிட்டல் சேவைகளும் இணைக்கப்பட்டு, அனைத்து டாடா டிஜிட்டல் சேவைகளையும் ஒரே இடத்தில் பெறுவது போல இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×