search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    கூகுள் மீட்
    X
    கூகுள் மீட்

    கூகுள் வெளியிட்டுள்ள வேற லெவல் அப்டேட்

    கூகுள் வெளியிட்டுள்ள இந்த அப்டேட்டில் ஏராளமான புது அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
    உலகம் முழுவதும் கொரோனா பரவல் தொடங்கியபின் பல நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’ வசதியை அறிமுகம் செய்தன. இதையடுத்து அலுவக ஊழியர்கள் சந்தித்துகொள்ள வீடியோ கான்ஃபரன்சிங் மென்பொருட்களின் பயன்பாடுகள் அதிகரிக்க தொடங்கின. அவற்றில் கூகுள் மீட், ஜூம் போன்றவை மிகவும் பிரபலமானவை.

    இதில் கூகுள் நிறுவனம் தனது கூகுள் மீட் வீடியோ கான்ஃபரன்சிங் தளத்தில் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

    In-Meeting Reactions

    கூகுள் மீட்டில் புதிய ரியாக்‌ஷன்ஸ் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் வீடியோவில் ஒருவர் உரையாடும்போது அவருக்கு எமோஜிக்கள் மூலம் நாம் ரியாக்ட் செய்ய முடியும். தம்ஸ் அப், தம்ஸ் டவுன், சிரிப்பு, ஆச்சரியம், கைத்தட்டுதல் ஆகிய எமோஜிக்கள் மூலம் நாம் நமது எண்ணத்தை பிரதிபலிக்க முடியும்.

    PiP Mode

    கூகுள் மீட்டில் பிக்சர் இன் பிக்சர் என்ற அம்சமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாம் வீடியோவில் பேசியபடியே பிரவுசரில் பிற வேலைகளையும் பார்க்க முடியும். நமது பேச்சுக்கு பார்வையாளர்கள் எத்தகைய உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்கள் என்பதையும் நாம் பார்த்துகொள்ள முடியும்.

    Meet in Docs, Sheets and Slides

    கூகுள் மீட் அம்சம் இனி நேரடியாக டாக்ஸ், ஷீட்ஸ் மற்றும் ஸ்லைட்ஸில் இடம்பெறும் என கூகுள் தெரிவித்துள்ளது. இதன்மூலம் நாம் டாக்குமெண்டுகளை பார்த்துகொண்டிருக்கும்போதே மீட்டிங்கை தொடங்க முடியும்.

    பிற அம்சங்கள்...

    இதேபோல கூகுள் மீட்டில் கேள்வி பதில், கருத்துக்கணிப்பு ஆகியவற்றையும் நடத்தமுடியும் என கூகுள் தெரிவித்துள்ளது. யூடியூப்பிலும் கூகுள் மீட்டை ஸ்ட்ரீம் செய்யும் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.
    Next Story
    ×