என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்

ட்விட்டர்
கிரிக்கெட் ரசிகர்களுக்கு ட்விட்டர் கொண்டு வரும் புதிய சேவை... இனி கொண்டாட்டம் தான்!
ட்விட்டரின் இந்த அம்சம் இந்திய பயனர்களுக்காகவே கொண்டுவரப்படுகிறது.
உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றாக ட்விட்டர் இருக்கிறது. இதில் ஸ்பேஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் தற்போது ட்விட்டர் கிரிக்கெட் டேப் அம்சம் ஒன்றை கொண்டு வர பரிசோதனை செய்து வருவதாக தெரிவித்துள்ளது.
இந்த கிரிக்கெட் டேபில் நடைபெற இருக்கும் கிரிக்கெட் போட்டிகள், அந்த போட்டிகள் குறித்த சமீபத்திய ட்வீட்டுகள், லைவ் ஸ்கோர்போர்டுகள் ஆகியவை இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டி குறித்த அப்டேட்டுகளும் இந்த கிரிக்கெட் டேபில் சோதனை முறையில் சில பயனர்களுக்கு மட்டும் காட்டப்பட்டு வருகிறது.
இத்துடன் அந்த போட்டிகளில் உள்ள டாப் பிளேயர்ஸ், டீம் ரேங்கிங்ஸ் குறித்த விட்ஜெட்டுகள், கிரிக்கெட்டில் உள்ள நிகழ்வுகள், ஹைலைட்டுகள், ஆஃப் ஃபீல்டில் நடைபெறும் சம்பவங்கள் ஆகியவற்றின் வீடியோக்கள் ஆகியவை கிரிக்கெட் டேபில் இடம்பெறும். இதற்காக ட்விட்டர் ஒளிபரப்பு நிறுவனத்துடன் இணைந்து செயல்படவுள்ளது.
ஸ்டாஸ்போர்ட்ஸ், கிரிக்பஸ், போடியா மஜும்தார் ஆகியவற்றுடன் டிவிட்டர் இணையவுள்ளது.
இத்துடன் கிரிக்கெட்டின் முக்கிய நிகழ்வுகள் நோட்டிஃபிகேசனாகவும் அனுப்பப்படவுள்ளது. ட்விட்டரின் இந்த அம்சம் இந்தியாவில் மட்டுமே கொண்டுவரப்படுகிறது.
Next Story






