என் மலர்
நீங்கள் தேடியது "Voice Message"
இன்ஸ்டாகிராம் டைரக்ட் அம்சம் மேம்படுத்தப்பட்டு தற்சமயம் வாக்கி டாக்கி போன்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. #Instagram
இன்ஸ்டாகிராம் செயலியில் இன்ஸ்டாகிராம் டைரக்ட் அம்சம் மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த அம்சத்தில் இருந்தபடி வாய்ஸ் மெசேஜ் அனுப்ப முடியும். இன்ஸ்டாகிராமில் வாய்ஸ் மெசேஜ் வசதி வாக்கி டாக்கி போன்று செயல்படுகிறது.
அதாவது மைக்ரோபோன் பட்டனை அழுத்திப்பிடித்துக் கொண்டு பேச வேண்டும், பேசி முடித்த பின் மைக்ரோபோன் பட்டனை விடுவித்தால் வாய்ஸ் மெசேஜ் அனுப்பப்பட்டு விடும். ஃபேஸ்புக்கின் மெசஞ்சர் மற்றும் வாட்ஸ்அப் போன்ற செயலிகளில் இருப்பதை போன்று இந்த அம்சம் இயங்குகிறது.
இன்ஸ்டாகிராம் செலியில் சேர்க்கப்பட்டு இருக்கும் புது வாய்ஸ் மெசேஜ் வசதி ஏற்கனவே ஆப்பிளின் ஐமெசேஜ் சேவையை நினைவூட்டுகிறது. இன்ஸ்டாகிராம் இந்த சேவையை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தது. இந்த அம்சம் கொண்டு புகைப்படங்கள், சிறிய வீடியோக்கள் அல்லது டெக்ஸ்ட் மட்டுமின்றி வாய்ஸ் மெசேஜ்களை பகிர்ந்து கொள்ள முடியும்.
Starting today, you can send voice messages in Direct. Talk the way you want to be heard, whether by whispering what you’re up to or shouting a compliment. pic.twitter.com/3rkdQneNXO
— Instagram (@instagram) December 10, 2018
வழக்கமான வாய்ஸ் மெசேஜிங் வசதியை போன்று இல்லாமல், இன்ஸ்டாகிராம் வாக்கி டாக்கி போன்று இயங்கும் படி புது வசதியை வழங்கி இருக்கிறது.
"இன்று துவங்கி, டைரக்ட் அம்சம் கொண்டு வாய்ஸ் மெசேஜ் அனுப்ப முடியும்," என இன்ஸ்டாகிராம் ட்விட் மூலம் தெரிவித்திருக்கிறது. "நீங்கள் விரும்பும் வகையில் பேசலாம், மெல்லிய குரலிலோ அல்லது சத்தமாகவோ பேசலாம்." என தெரிவித்திருக்கிறது.

இன்ஸ்டாகிராமில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் முறை:
இன்ஸ்டாகிராம் செயலியின் டைரக்ட் பகுதிக்கு சென்று நீங்கள் மெசேஜ் செய்ய வேண்டிய இன்ஸ்டா நண்பரை தேர்வு செய்ய வேண்டும். இங்கு ஒருவரையோ அல்லது பலரை தேர்வு செய்யலாம்.
இனி மெசேஜ் பாரில் கேமரா ரோல் பட்டனிற்கு அடுத்து காணப்படும் மைக்ரோபோன் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
அடுத்து மைக்ரோபோன் ஐகானை அழுத்திப்பிடித்துக் கொண்டு நீங்கள் பேச வேண்டியதை பதிவு செய்ய வேண்டும், பேசி முடித்ததும் மைக்ரோபோன் ஐகானை விடுவிக்க வேண்டும்.
பதிவு செய்த வாய்ஸ் மெசேஜை நிராகரிக்க மெசேஜை திரையின் இடதுபுறமாக ஸ்வைப் செய்ய வேண்டும். இத்துடன் வாய்ஸ் மெசேஜை பதிவு செய்ய புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கும் ஒரு நிமிடம் மட்டும் (one minute only) ஆப்ஷனையும் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யும் போது நீங்கள் அனுப்பும் குறுந்தகவல் நிரந்தரமாக இருக்க வேண்டுமா அல்லது ஒரு நிமிடத்திற்கு மட்டும் இருக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யலாம்.
ஆப்பிளின் ஐமெசேஜ் சேவையில் அனுப்பப்படும் வாய்ஸ் மெசேஜ்கள் இரண்டு நிமிடங்களில் தானாக அழிந்து விடும். இவ்வாறு அழியாமல் இருக்க பயனர்கள் மெசேஜை அனுப்பும் முன் "keep" எனும் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். சமீபத்தில் வாட்ச் ஓ.எஸ். 5 இயங்குதளத்தில் வாக்கி டாக்கி எனும் அம்சத்தை ஆப்பிள் அறிமுகம் செய்தது.
இன்ஸ்டாகிராமின் வாய்ஸ் மெசேஜ் அம்சம் ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் வழங்கப்படுகிறது. உங்களது ஸ்மார்ட்போனில் இன்ஸ்டாகிராம் செயலியை அப்டேட் செய்து, வாய்ஸ் மெசேஜ்களை அனுப்ப துவங்கலாம். #Instagram






