search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழில்நுட்ப கோளாறு"

    • மெட்டா நிறுவனத்தின் கீழ் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இயங்குகின்றன
    • இன்று அமெரிக்க பங்கு சந்தையில் மெட்டா பங்குகளின் சந்தை மதிப்பு 1.6 சதவீதம் குறைந்தது

    2004ல் அமெரிக்காவை மையமாக கொண்டு மார்க் ஜூக்கர்பர்க் (Mark Zuckerberg) என்பவர் தனது நண்பர்களுடன் தொடங்கிய நிறுவனம், பேஸ்புக் (Facebook).

    உலகெங்கிலும் உள்ள இணையதள பயனர்களுக்கு கருத்து மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைதளமாக பேஸ்புக் முன்னணியில் உள்ளது.

    தற்போது மெட்டா (Meta) எனும் நிறுவனத்தின் கீழ் பேஸ்புக், மற்றும் மற்றொரு பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் (Instagram) ஆகியவை இயங்கி வருகின்றன. இவற்றை மார்க் ஜூக்கர்பர்க் நிர்வகித்து வருகிறார்.

    நேற்று, உலகெங்கும் ஒரு மணி நேரத்திற்கும் மேல் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டு சமூக வலைதளங்களும் முடங்கின.

    இதனால், அவற்றை பயன்படுத்தும் பயனர்கள், கருத்து பரிமாற்றம் மற்றும் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவேற்றம் உள்ளிட்ட அதன் அனைத்து சேவைகளையும் பெற முடியாமல் தவித்தனர்.

    சில மணி நேரங்கள் கடந்ததும் தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு 2 தளங்களும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன.

    இந்நிலையில், இன்று அமெரிக்க பங்கு சந்தையில், மெட்டா பங்குகளின் சந்தை மதிப்பு 1.6 சதவீதம் குறைந்தது.

    இதனால் மெட்டா நிறுவன அதிபர் மார்க் ஜூக்கர்பர்க், ரூ.25 ஆயிரம் கோடி ($3 பில்லியன்) சந்தை மதிப்பை இழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

    • புறப்பட்ட 30 நிமிடங்களில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது
    • விமானத்தில் ராஷ்மிகாவுடன் ஷ்ரத்தா தாசும் உடன் பயணித்தார்

    இந்தியாவின் முன்னணி தொழில்துறை குழுமமான பிரபல டாடா குழுமம் இயக்கி வரும் விமான போக்குவரத்து சேவை நிறுவனம், விஸ்டாரா (Vistara).

    விஸ்டாராவிற்கு சொந்தமான விமானம் ஒன்று பயணிகளுடன் மும்பையிலிருந்து ஐதராபாத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.

    ஆனால், புறப்பட்ட 30 நிமிடங்களில் அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.

    விமானி உடனடியாக அந்த விமானத்தை மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி வந்து தரையிறக்கினார்.

    இந்த விமானத்தில் பிரபல திரைப்பட நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) பயணம் செய்தார்.

    தனக்கு நேர்ந்த அனுபவத்தை ராஷ்மிகா மந்தனா, சமூக வலைதள கணக்கில் "மரணத்தில் இருந்து இப்படித்தான் தப்பினோம்" என தலைப்பிட்டு பகிர்ந்து கொண்டார். 

    கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ராஷ்மிகா, கன்னடம், தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் என பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

    விபத்து நேரிடாமல் அதிர்ஷ்டவசமாக ராஷ்மிகா உயிர் தப்பியதால், அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.

    இதே விமானத்தில் ராஷ்மிகாவுடன், நடிகை ஷ்ரத்தா தாசும் (Shraddha Das) பயணித்தது குறிப்பிடத்தக்கது.

    விமான நிலையத்தில் கோளாறு உடனடியாக சரி செய்யப்படாததால், மாற்று விமானத்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • மானாமதுரை தியேட்டரில் விஜய் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
    • தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் படம் திரையிடப்படும் என தியேட்டர் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பஸ் நிலையம் அருகே உள்ள தியேட்டரில் இன்று விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் திரையிடப்பட்டது. 9 மணிக்கு முதல் காட்சி திரை யிடப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது. இந்த நிலையில் காலை 7 மணி முதலே ரசிகர்கள் அந்த பகுதியில் திரண்டனர். 8.30 மணி அளவில் தியேட்டருக்குள் ரசிகர்கள் சென்றனர். 9 மணிக்கு படம் திரையிடப்பட்டது. அப்போது சவுண்ட் சிஸ்டம் சரியாக வேலை செய்ய வில்லை என கூறப்படுகிறது. இதனால் சிறிது நேரத்திற்கு ரசிகர்கள் கூச்ச லிட்டப்படி இருந்தனர். சவுண்ட் இல்லாமல் படம் ஒடியதால் ரசிகர்கள் வெறுப்படைந்தனர். வெகு நேரமாகியும் தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து ரசிகர்கள் ரகளையில் ஈடுபட தொடங்கினர். நிலைமை கைமீறி செல்வதை உணர்ந்த தியேட்டர் நிர்வாகத்தினர் உடனடியாக காட்சி ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர். இதையடுத்து ரசிகர்களிடம் வேண்டு கோள் விடுத்து அவர்களை சமாதானப்படுத்தினர். இருப்பினும் ரசிகர்கள் வெளியே வந்த பின்னரும் கூச்சலிட்டப்படி நின்று கொண்டிருந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் படம் திரையிடப்படும் என தியேட்டர் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    • ஓம்ஸ்க் நகர் அருகே சென்ற நிலையில் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
    • விமானத்தில் பயணித்தவர்களுக்கு நிவாரணமாக சுமார் ரூ.87 ஆயிரம் வழங்கப்படும் என யூரல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி அறிவித்தார்.

    மாஸ்கோ:

    ரஷியாவின் சோச்சி நகரில் இருந்து யூரல் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320 விமானம் புறப்பட்டது. சைபீரியா நாட்டின் ஓம்ஸ்க் நோக்கி சென்ற இந்த விமானத்தில் 6 விமான பணியாளர்கள் உள்பட 167 பேர் பயணம் செய்தனர். ஓம்ஸ்க் நகர் அருகே சென்ற நிலையில் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அடுத்து வரவுள்ள நோவோசிபிர்ஸ்க் விமான நிலையத்தில் தரையிறங்க விமானி முயற்சி செய்தார்.

    ஆனால் போதுமான அளவுக்கு எரிபொருள் இல்லாததால் நோவோசிபிர்ஸ்க் நகரில் உள்ள ஒரு வயலில் விமானத்தை தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் அச்சத்துக்குள்ளாகினர். எனினும் விமானியின் சாமர்த்தியத்தால் அந்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் காயம் அடைந்த 5 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து விமானத்தில் பயணித்தவர்களுக்கு நிவாரணமாக சுமார் ரூ.87 ஆயிரம் வழங்கப்படும் என யூரல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி செர்ஜி ஸ்குராடோவ் அறிவித்தார்.

    • தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவை முழுமையாக முடங்கவில்லை.
    • கட்டுப்பாட்டு மைய தொழில்நுட்ப கோளாறு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    பிரிட்டன் நாட்டின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான திட்டங்களை வழக்கம் போல் தானியங்கி முறையில் இயக்க முடியாமல் போனது. இதன் காரணமாக விமானிகள் விமானத்தை இயக்கும் வழித்தடம் பற்றிய தகவல்களை தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கு தெரிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவை முழுமையாக முடங்கவில்லை என்ற போதிலும், பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டும், பல விமானங்கள் தாமதமாகவும் கிளம்பி செல்ல நேர்ந்தது.

    இதன் காரணமாக பயணிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். திங்கள் கிழமை தினத்தில் வான் போக்குவரத்து அதிக பரபரப்பாக இருக்கும் என்பதால், கட்டுப்பாட்டு மைய தொழில்நுட்ப கோளாறு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இது ஒருபுறம் இருந்த போதிலும், தொழில்நுட்ப கோளாறை விரைந்து சரி செய்யும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    • விமானத்தில் பயணம்செய்ய வந்த பயணிகள் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
    • பயணிகள் விமானநிறுவன ஊழியர்களுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் இருந்து குவைத்துக்கு செல்லும் பயணிகள் விமானம் இன்று அதிகாலை 2 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய சுமார் 150 பயணிகள் தயார் நிலையில் இருந்தனர்.

    இதற்கிடையே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை ஊழியர்கள் கண்டு பிடித்தனர். இதனால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்படும் என்று விமான நிறுவனம் அறிவித்தது. இதனால் அந்த விமானத்தில் பயணம்செய்ய வந்த பயணிகள் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

    இன்று மதியம் 12 மணி வரை விமானத்தில் தொழில் நுட்பகோளாறு சரி செய்யப்படாததால் விமானம் புறப்படுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. மேலும் பயணிகளுக்கு முறையான அறிவிப்பு மற்றும் உணவு ஏற்பாடுகள் செய்யப்படாததால் கடும் அவதி அடைந்தனர்.

    12 மணிநேரத்துக்கும் மேல் காத்திருந்ததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் விமானநிறுவன ஊழியர்களுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஊழியர்கள் சமாதானம் செய்தனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
    • விமானத்தில் இருந்த 137 பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர் என்று விமான போக்குவரத்து இயக்ககம் தெரிவித்துள்ளது.

    ஐதராபாத்:

    கர்நாடகாவின் பெங்களூருவில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் வாரணாசிக்கு இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் 137 பயணிகள் இருந்தனர்.

    இந்த நிலையில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து காலை 6.15 மணியளவில் விமானம் தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    விமானத்தில் இருந்த 137 பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர் என்று விமான போக்குவரத்து இயக்ககம் தெரிவித்துள்ளது.

    • தூக்குப்பாலத்தில் தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய கடந்த 2 நாட்களாக ரெயில்வே என்ஜினீயர்கள் குழுவினர் ஆய்வு செய்து வந்தனர்.
    • திருச்சியில் இருந்து ராமேசுவரம் வரும் பயணிகள் ரெயில்கள் வருகின்ற 31-ந்தேதி வரை ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே உள்ள ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த 4 நாட்களாகவே பயணிகள் ரெயில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தூக்குப்பாலத்தில் தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய கடந்த 2 நாட்களாக ரெயில்வே என்ஜினீயர்கள் குழுவினர் ஆய்வு செய்து வந்தனர்.

    இந்த நிலையில் தூக்குப்பாலத்தில் இன்னும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் வருகிற 31-ந்தேதி வரையிலும் மண்டபம்-ராமேசுவரம் இடையே பயணிகள் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. ராமேசுவரத்தில் இருந்து தினமும் சென்னை புறப்படும் ரெயில்கள் மண்டபம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்றும் மதுரை மற்றும் திருச்சியில் இருந்து ராமேசுவரம் வரும் பயணிகள் ரெயில்கள் வருகின்ற 31-ந்தேதி வரை ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில் போக்குவரத்துக்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டது.
    • 2-வது நாளாக இன்றும் பழுதை சரிசெய்யும் பணி நடப்பதால் மண்டபம், ராமநாதபுரம் ரெயில் நிலையங்களில் இருந்து இன்று ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பன் ரெயில் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. பழமையான இந்த பாலத்தில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருவதால் இதன் அருகிலேயே பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய ரெயில் பாலம் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பாம்பன் ரெயில் பாலத்தில் அதிர்வுகளை கண்டறிய 84 இடங்களில் சென்சார் கருவி பொருத்தப்பட்டு உள்ளது. இவை ரெயில்கள் ஒவ்வொரு முறையும் பாலத்தை கடக்கும்போது அதிர்வுகளை பதிவு செய்யும். அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு ரெயில் பாம்பன் பாலத்தை கடந்தபோது தூக்குப்பாலத்தில் உள்ள சென்சார் கருவியில் இருந்து எச்சரிக்கை ஒலி எழுப்பியது.

    இதுதொடர்பாக தகவலறிந்த அதிகாரிகள் அங்கு வந்து ஆய்வு செய்தபோது பாலத்தில் வழக்கத்தை விட அதிர்வுகள் இருப்பதாக சென்சாரில் பதிவாகி உள்ளது தெரிய வந்தது. இதனை எச்சரிக்கும் வகையில் ஒலி எழுப்பியுள்ளது.

    இதையடுத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில் போக்குவரத்துக்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. சென்னை, மதுரை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ரெயில்கள் மண்டபம் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. அங்கிருந்து பயணிகள் அரசு பஸ், ஆட்டோ மூலம் ராமேசுவரம் சென்றனர். மேலும் ராமேசுவரத்தில் இருந்து இயக்கப்படவிருந்த ரெயில்களும் ரத்து செய்யப்பட்டன.

    ரெயில் பாலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய மதுரையில் இருந்து அதிகாரிகள் குழுவினர் பாம்பனுக்கு சென்றனர். அவர்கள் ரெயில் பாலத்தில் உள்ள தூக்குபாலத்தில் ஆய்வு நடத்தினர். ஆனால் பழுதை உடனடியாக சரிசெய்ய இயலவில்லை.

    இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து இன்று ஐ.ஐ.டி. குழுவினர் வருகின்றனர். அவர்கள் பாலத்தின் உறுதித்தன்மையை ஆராய்ந்து தொழில்நுட்ப கோளாறை சரிசெய்தபின் பாம்பன் ரெயில் பாலத்தில் போக்குவரத்து தொடங்கும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ரெயில் பாலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று முதல் அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்பட்டன. மேலும் சென்னை மற்றும் வட மாநிலங்களில் இருந்து வந்த ரெயில்களும் மண்டபத்தில் நிறுத்தப்பட்டன.

    ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட காலி பெட்டிகளுடன் நிறுத்தப்பட்டிருந்த ரெயில் பாம்பன் ரெயில் பாலத்தை மெதுவாக கடந்து மண்டபம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து அந்த ரெயில் பயணிகளுடன் செகந்திராபாத்துக்கு புறப்பட்டு சென்றது.

    2-வது நாளாக இன்றும் பழுதை சரிசெய்யும் பணி நடப்பதால் மண்டபம், ராமநாதபுரம் ரெயில் நிலையங்களில் இருந்து இன்று ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபால் வெளியூர்களில் இருந்து வரும் ரெயில்களும் மண்டபத்திலேயே நிறுத்தப்படுகின்றன.

    • பாம்பன் ரெயில் பாலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக மதுரையில் உள்ள ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • ரெயில்கள் கடக்கும்போது பாம்பன் ரெயில் பாலத்தில் அதிர்வுகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவை இணைக்கும் வகையில் கடலில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

    1914-ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ள இந்த பாலம் நூற்றாண்டை கடந்து சேவை செய்து வருகிறது. தென்னக ரெயில்வேயின் முக்கிய அடையாளமாக உள்ள பாம்பன் ரெயில் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள கர்டர்கள் கடல் காற்று காரணமாக அடிக்கடி துருப்பிடிக்கும்.

    இதனை ரெயில்வே ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபடுவார்கள். இதற்காக பிரத்யேக கலவைகளும் பாலத்தில் பூசப்பட்டு வருகிறது. புயல் மற்றும் கடல்காற்று அதிகமாக வீசப்படும் காலங்களில் பாம்பன் ரெயில் பாலத்தில் மிக குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.

    கடல் காற்று, அலையின் தன்மைகளை கண்டறிய தண்டவாளத்தில் நவீன கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கருவி கடல் காற்றின் வேகம், சீற்றம் குறித்து பதிவு செய்யும். அதனை பொருத்து பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில்கள் இயக்குவது தொடர்பாக அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.

    கடந்த ஒரு வாரமாக வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பாம்பன் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியது. கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் மிக குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டன.

    இந்த நிலையில் தூக்குப்பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த நவீன கருவி திடீரென பழுதானதால் நேற்று மாலை முதல் ரெயில்களை இயக்க சிக்னல்கள் கிடைக்கவில்லை. இதனால் கடலில் காற்று வீசும் தன்மை, அலையின் தன்மை குறித்த விவரங்கள் தெரியவில்லை.

    இந்த தொழில்நுட்ப கோளாறால் ராமேசுவரம்-மதுரை ரெயில் நேற்று ரத்து செய்யப்பட்டது. மதுரையில் இருந்து ராமேசுவரம் புறப்பட்ட ரெயில், மண்டபம் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. ராமேசுவரம்-கன்னியாகுமரி ரெயில் மண்டபம் வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே போல் சென்னையில் இருந்து நேற்று இரவு ராமேசுவரத்திற்கு வந்த ரெயில் இன்று அதிகாலை 4 மணிக்கு மண்டபம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அங்கிருந்து பயணிகள் பஸ், ஷேர் ஆட்டோக்கள் மூலம் ராமேசுவரம் சென்றனர்.

    பாம்பன் ரெயில் பாலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக மதுரையில் உள்ள ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இன்று காலை பாம்பன் வந்து அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ரெயில்கள் கடக்கும்போது பாம்பன் ரெயில் பாலத்தில் அதிர்வுகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இன்று மாலைக்குள் தொழில்நுட்ப கோளாறு சரி செய்ய முடியாதபட்சத்தில் சென்னை, பெங்களூருவில் இருந்து அதிகாரிகள் வரவழைக்கப்படுவார்கள் என தெரிகிறது.

    மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறால் செக்-இன்கள் பணியாளர்களால் கைமுறையாக செய்து வருகின்றனர். இதனால், விமானங்களின் புறப்பாடு தாமதமாகியுள்ளது. #MumbaiAirport
    மும்பை:

    நாட்டின் இரண்டாவது பிஸியான மும்பை சத்திரபதி சிவாஜி விமான நிலையத்தில் புறப்பாடு பகுதிகளில் உள்ள கணினிகளில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, பயணிகளை செக்-இன் செய்வது பணியாளர்களால் கைமுறையாக செய்யப்படுகிறது.

    இதன் காரணமாக பயணிகள் அவதியடைந்துள்ளனர். சில விமானங்களின் புறப்பாடு ஒரு மணிநேரம் தாமதமாகியுள்ளது. கோளாறை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
    ×