search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dindigul Leoni"

    • தி.மு.க. இந்து மதத்துக்கு எதிரானது அல்ல.
    • ராகுல்காந்தியை பார்த்துவிட்டு, பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நடைபயணம் செல்கிறார்.

    திருப்பூர்:

    திருப்பூரில் தி.மு.க. சார்பில் முத்தமிழறிஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டு பேசியதாவது:-

    சனாதன தர்மம் என்பது காலங்காலமாக மாறாமல் இருப்பதை அப்படியே பின்பற்றுவதாகும். தற்போதைய காலகட்டத்தில் அனைத்திலும் மாற்றங்கள் வந்துவிட்டது. மாறாமல் இருக்க முடியாது. ஏற்றதாழ்வுகளை முன்னிறுத்திய கோட்பாடுகளை கொண்டதே சனாதன தர்மம். பிறப்பில் ஏற்றதாழ்வுகளை பின்பற்ற சொல்கிறது.

    மனிதர்களிடம் ஏற்றத்தாழ்வுகளை அழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை, இந்து மதத்துக்கு எதிர்ப்பாளர் போல் திரித்து பரப்பிவிட்டனர். தி.மு.க. இந்து மதத்துக்கு எதிரானது அல்ல. தி.மு.க.வினரை இந்து விரோதிகள் போல் சித்தரிக்கிறார்கள்.

    மதசார்பற்ற இந்தியா கூட்டணியை கண்டு பிரதமர் மோடி அஞ்சுகிறார். இந்தியா என்ற சொல்லையே மாற்ற விரும்புகிறார். ஜி20 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி முன்பு பாரத் என்ற பெயர்பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்தியா என்ற பெயரை மாற்றிவிட்டனர். 2024-ம் ஆண்டு இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். அந்த கூட்டணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வடிவமைக்கிறார். ராகுல்காந்தியை பார்த்துவிட்டு, பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நடைபயணம் செல்கிறார். அதனால் ஒன்றும் ஆகப்போவது இல்லை. புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதையாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக 5 கோடியே 16 லட்சம் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.
    • மேடை நாகரிகத்தை கற்றுக்கொடுத்தவர் கலைஞர்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக 5 கோடியே 16 லட்சம் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இதில் 85 சதவீதம் புத்தகங்கள் பள்ளி தொடங்கிய நாளிலேயே வழங்கப்பட்டு விட்டன. சி.பி.எஸ்.இ., மெட்ரிக் பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளதால் 10 சதவீதம் கூடுதலாக தமிழ் பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

    மேடை நாகரிகத்தை கற்றுக்கொடுத்தவர் கலைஞர். கலைஞர் ஆட்சியில்தான் பெண்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தலைமை கழக பேச்சாளர்கள் மற்றும் அமைச்சர்கள் கண்ணியமாக மேடையில் பேசவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    பெண்களின் வாழ்க்கைத்தரத்தை பொருளாதாரத்தில் உயர்த்துவதே திராவிட மாடல் ஆட்சியின் லட்சியம் ஆகும். கல்விக்காக மிகப்பெரும் திட்டங்களை கலைஞர் கொடுத்துள்ளார். அடுத்த ஆண்டு பள்ளி பாட புத்தகத்தில் 'செம்மொழி நாயகன் கலைஞர்' அல்லது 'தமிழகத்தின் சிற்பி கலைஞர்' என்ற புதிய பாடம் கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் 11 மாநகராட்சியில் பெண்கள் மேயர்களாக உள்ளனர்.
    • ராதாபுரத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் ஸ்மார்ட் வகுப்பறை, வள்ளியூரில் மாவட்ட தலைமை மருத்துவமனை என பல்லாயிரம் கோடிக்கான திட்டங்களை 20 மாதங்களில் வழங்கியுள்ளார்.

    வள்ளியூர்:

    முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நெல்லை கிழக்கு மாவட்டம் ராதாபுரம் மேற்கு ஒன்றியம் ராதாபுரத்தில் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நெல்லை மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மாவட்ட அவைத் தலைவர் ம.கிரகாம்பெல், பேரூர் செயலாளர்கள் ஜான்கென்னடி, சேதுராம லிங்கம், தமிழ் வாணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜாண்ரூபா கிங்ஸ்டன், ராதாபுரம் ஊராட்சிமன்ற தலைவர்கள் கூட்டமைப்புத் தலைவர் அனிதாபிரின்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப்பெல்சி வரவேற்று பேசினார். தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளரும், தமிழ்நாடு பாட நூல் கழகதலைவருமான திண்டுக்கல் ஐ.லியோனி சிறப்புரையாற்றி 1500 பேருக்கு நலத்திட்ட உதவி களை வழங்கினார்.

    அவர் பேசியதாவது:- பெண்ணுரிமை காக்கின்ற முதல்- அமைச்சராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் திகழ்கிறார். பெண்ணுரிமை காக்கும் திராவிட மாடல் ஆட்சியை முதல்-அமைச்சர் நடத்து கிறார்.

    பெண்களுக்கு உள்ளாட்சியில் 50 சதவிகிதம் வழங்கி உள்ளார். இதனால் தமிழகத்தில் இன்று 11 மாநகராட்சியில் மேயர்களாக பெண்கள் உள்ளனர்.

    மேலும் நமது முதல்- அமைச்சர் ராதாபுரம் தொகுதியில் சர்வதேச தரத்தில் ஒரு விளையாட்ட ரங்கம், ரூ.3 கோடியில் ராதா புரத்தில் மினி ஸ்டேடியம், ரூ.605 கோடியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம், ராதா புரத்தில் அனைத்து பள்ளி களுக்கும் ஸ்மார்ட் வகுப்பறை, வள்ளியூரில் மாவட்ட தலைமை மருத்துவமனை என பல்லாயிரம் கோடிக்கான திட்டங்களை 20 மாதங்களில் வழங்கியுள்ளார்.

    இவற்றை எல்லாம் ராதா புரம் சட்டப் பேரவை உறுப்பி னரும், சபாநாய கருமான மு.அப்பாவு தனது முயற்சி யால் பெற்றுத் தந்து கொண்டி ருக்கிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் ஆவின் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் கே.எஸ். தங்க பாண்டியன், போர்வெல்கணேசன், ஆரோக்கிய எட்வின், பொதுக்குழு உறுப்பினர்கள் பரமசிவ அய்யப்பன், கனகராஜ், எட்வின் வளனரசு, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பாஸ்கர், சாந்திசுயம்புராஜ், சாலமோன் டேவிட், இளைஞரணி ஜாண் ரபீந்தர், திசையன்விளை பேரூராட்சி உறுப்பினர்கள் கண்ணன், நடேஷ் அரவிந்த், ஒன்றியகுழு உறுப்பினர்கள் பரிமளம், நடராஜன், மெர்லின், இசக்கிபாபு, அனிதா ஸ்டெல்லா, ஊராட்சி மன்ற தலைவர்கள் பொன் மீனாட்சி அரவிந்தன், அந்தோணி அருள், முருகேசன், கந்தசாமி, மணி கண்டன், வைகுண்டம் பொன் இசக்கி, கு.முருகன், சாகய பெபின்ராஜ், பஞ்சவர்ணம் ஜெயக்குமார், ஆ.முருகன், வி.எஸ்.முருகன், சூசைரத்தினம், சாந்தா மகேஷ்வரன், ஜேய்கர், ராதிகா சரவணகுமார் மற்றும் கிளை செயலாளர்கள், ஒன்றிய பிரதிநிதி கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்திற்கான ஏற்பாடு களை ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி செய்திருத்தார்.

    அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிப்பு

    பணகுடியில் தி.மு.க. சார்பில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் கிரகாம்பெல் தலைமையில் நடைபெற்றது. விழாவில் அலங்கரிக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    விழாவை முன்னிட்டு பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பணகுடி அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் பணகுடி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, துணைத்தலைவர் சகாய புஷ்பராஜ், வள்ளியூர் ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர் எஸ்.ஏ.வி பள்ளி தாளாளர் திவாகரன், மணி, அலீம், ஆனந்தி, ஆசா, ஹரிதாஸ், முத்துராமன், வெள்ளைச்சாமி, மாணிக்கம், அசோக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் பங்கு பெற்ற வர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    • அறிமுக இயக்குனர் லாரன்ஸ் ஜெயகுமார் இயக்கியுள்ள படம் 'அற்றைத்திங்கள் அந்நிலவில்'.
    • இப்படத்தின் விழாவில் திண்டுக்கல் லியோனி கலந்துகொண்டு பேசினார்.

    அறிமுக இயக்குனர் லாரன்ஸ் ஜெயகுமார் இயக்கியுள்ள 'அற்றைத்திங்கள் அந்நிலவில்' என்ற பட விழாவில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் லியோனி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- "என்னுடைய மாணவர் ஜெயக்குமார் லாரன்ஸ் தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இன்னொரு மாணவர் பாபு ஆண்டனி. இந்த படத்தை சாதாரணமாக இவர்கள் எடுக்கவில்லை. பலவித யோசனைக்கு பிறகே எடுத்திருக்கிறார்கள். படம் என்றாலே ரத்தமும், சதையுமாக இருப்பதோடு காதல் காட்சிகள் இல்லாமல் இருக்கமுடியாது. ஆனால் இவர்கள், அதை மிக நாகரிகமாக கையாண்டிருக்கிறார்கள்.

     

    அற்றைத்திங்கள் அந்நிலவில் படக்குழு

    அற்றைத்திங்கள் அந்நிலவில் படக்குழு

    ரத்தம், சண்டை காட்சிகள், பழைய பாணியிலான காதல் காட்சிகள் என்று பார்த்து பார்த்து புளித்துப்போய் வெறுத்துப்போன ரசிகர்களுக்கு இந்த 'அற்றைத்திங்கள் அந்நிலவில்' படம் புதிய அனுபவத்தை கொடுப்பதுடன், ஒரு விருந்தாகவும் அமையும் என்பது என் நம்பிக்கை. சினிமாவில் நடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். ஒரு படத்தில் நான் நடிக்கும்போது, ஒரே ஒரு உணர்ச்சியை காட்டுவதற்காக நான் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும். அப்போது தான் புரிந்தது, நடிப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல." இவ்வாறு அவர் பேசினார்.

    • ஒரு சிலர் பிறந்த நாள் விழாவில் ஐயர்களை வைத்து யாகம் நடத்துவார்கள். அந்த யாகத்தில் அரை மூட்டை விறகை எடுத்து போடுவார்கள்.
    • எனக்கு 60 வயது ஏன் வந்தது என்று அவர் நொந்து நூடுல்ஸ் ஆகி விடுவார்.

    சென்னை:

    பாரத் இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் பிரபு, செயலாளர் டில்லி பாபு ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், திண்டுக்கல் லியோனி மீது புகார் அளித்துள்ளனர். புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் 60-வது பிறந்த நாள் விழாவில் திண்டுக்கல் லியோனி இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் பேசி இருக்கிறார்.

    ஒரு சிலர் பிறந்த நாள் விழாவில் ஐயர்களை வைத்து யாகம் நடத்துவார்கள். அந்த யாகத்தில் அரை மூட்டை விறகை எடுத்து போடுவார்கள். எனக்கு 60 வயது ஏன் வந்தது என்று அவர் நொந்து நூடுல்ஸ் ஆகி விடுவார்.

    கோவிலில் பொங்கல் வாங்கி தின்றுவிட்டு கையை துடைக்க துணி எடுத்து வரவில்லை என்று சுவற்றில் துடைத்து விட்டு கையை முகர்ந்து பார்த்து உள்ளார். அதை 15க்கும் மேற்பட்டோர் வேடிக்கை பார்த்து அங்கே ஏதோ ஒரு சாமி இருக்குடா வணங்குகிறான்.

    நம்ம எல்லாரும் விட்டுட்டோமே என்று அனைவரும் வரிசையில் நின்று அந்த இடத்தை தொட்டுத் தொட்டு கும்பிடுவார்கள். இரண்டு மாதம் கழித்து ஆயிரம் பேர் தொட்டு கும்பிடுவார்கள்.

    ஒரு வருடம் கழித்து அந்த இடத்தில் கும்பாபிஷேகமே நடக்கும்.

    ஒருவன் பொங்கல் தின்றுவிட்டு கையை துடைத்த இடத்தையே சாமி ஆக்கிட்டார்களே என்று இந்துக்கள் மனது மிகவும் வேதனை அடையும் அளவிற்கு பேசியுள்ளார்.

    யாகம் வளர்க்கும் முறை மிகவும் நேர்த்தியானது. சக்தி வாய்ந்ததாக இந்துக்கள் கருதுகின்றனர்.

    கல்லையும் கடவுளாக வணங்கும் ஒரே மதம் இந்து மதம். இந்துக்களின் மனதை மிகவும் கேவலப்படுத்தி, கொச்சைப்படுத்தும் வகையில் லியோனி பேசியுள்ளார்.

    எனவே அவர் வகிக்கும் பாட நூல் கழக தலைவர் பதவியை சட்டப்படி நீக்க ஆவன செய்ய வேண்டும். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கோவை பிரசாரத்தில் பிரதமர் மோடி குறித்த லியோனி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதாவினர் மறியலில் ஈடுபட்டனர். #DindigulLeoni
    கோவை:

    தி.மு.க. பேச்சாளர் திண்டுக்கல் லியோனி கோவை மதுக்கரையில் நேற்று இரவு பிரசாரம் செய்தார்.

    பிரதமர் மோடி போலி வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றி விட்டார் என குற்றம் சாட்டி பேசினார். அப்போது அங்கு நின்ற பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் லியோனி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘பாரத் மாதா கீ ஜே’ என கோ‌ஷம் எழுப்பினார்.

    இதனால் ஆவேசமடைந்த தி.மு.க.வினர் அவரை விரட்டினர். அப்போது தி.மு.க.வினர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. எனவே அங்கு பதட்டமான சூழல் நிலவியது. பாலசுப்பிரமணியத்தை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாரதிய ஜனதாவினர் அங்கு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு மேலும் அதிகரித்தது.

    சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.இது தொடர்பாக தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் என்பவர் மதுக்கரை போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் முறையான அனுமதி பெற்று தேர்தல் பிரசாரம் நடந்த போது, மதுக்கரை 1-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் ராசு என்ற செல்வராஜ் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கூட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்தினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

    இதேபோல மதுக்கரை காந்திநகரை சேர்ந்த சத்திய பிரகாஷ் என்பவரும் போலீசாரிடம் ஒரு புகார் அளித்தார். அதில், திண்டுக்கல் லியோனி தனது பிரசாரத்தில் பாரத பிரதமரையும், இந்து கடவுள்களையும் அவதூறாக பேசினார். அப்போது அங்கு நின்ற பாலசுப்பிரமணியத்தை 3 பேர் மிரட்டி தாக்கினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார். இருதரப்பு புகார்களையும் பதிவு செய்து கொண்ட போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #DindigulLeoni
    அ.தி.மு.க.விடம் பாட்டாளி மக்கள் கட்சியை டாக்டர் ராமதாஸ் அடகு வைத்துவிட்டார் என்று திண்டுக்கல் லியோனி பேசியுள்ளார். #dindigulleoni #ramadoss #modi

    தர்மபுரி:

    பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி தர்மபுரி மாவட்டம் கடத்தூர், பொம்மிடி, அரூர், மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து வேனில் சென்று பிரசாரம் செய்தார்.

    அ.தி.மு.க.விடம் பாட்டாளி மக்கள் கட்சியை டாக்டர் ராமதாஸ் அடகு வைத்துவிட்டார். பா.ம.க.வை நம்பி இருக்கும் மக்களுக்கு அவர் துரோகம் செய்துவிட்டார். 8 வழிச்சாலை, நீட் தேர்வு உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த டாக்டர் அன்புமணி அ.தி.மு.க.விடம் கூட்டணி வைத்து உள்ளார். 200 மாணவர்களின் கேள்விக்கு விடை கொடுத்த டாக்டர் அன்புமணியால் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை.

    தமிழின போராளியாக போராடிய ராமதாஸ் இன்றைக்கு மோடியோடு கூட்டணி வைத்து ‘பாரத் மாதாஹி ஜே’ என்று கோ‌ஷம் போடுகிறார்.

    தமிழகத்தில் முனியாண்டி விலாஸ் கிளை இருக்கும் அளவிற்கு கூட பா.ஜனதாவின் கிளைகள் கிடையாது. நாட்டின் உள்ள ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்று தெரிவித்த மோடி ஒருவருக்கும் கூட அதை போடவில்லை. ஏமாற்றி விட்டார்.

    இவ்வாறு அவர் பேசினார். #dindigulleoni #ramadoss #modi

    தமிழக அமைச்சர்கள் பலர் இஸ்ரோவை மிஞ்சும் விஞ்ஞானிகளாக உள்ளனர் என திண்டுக்கல் லியோனி பேசியுள்ளார். #dindigulleoni #tnministers
    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூரில் நகர தி.மு.க. சார்பில், அ.தி.மு.க. அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு துறைமயூர் நகர செயளாளர் முரளி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் தர்மன் ராசேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய செயளாளர் அண்ணாதுரை வரவேற்றார். மாவட்ட செயளாளர் தியாகராஜன், முன்னாள் அமைச்சர் நேரு எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினர். அப்போது பேசிய கே.என். நேரு, தி.மு.க. ஆட்சி காலத்தில் துறையூருக்கு காவிரிகூட்டு குடிநீர் திட்டம், துறையூர் பைபாஸ் சாலை திட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் எந்த திட்டமும்  நிறைவேற்றப்பட வில்லை. மீண்டும்  தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் துறையூர் பகுதி விவசாயத்தில் தன் நிறைவு பெறும் வகையில் நீர்பாசன திட்டம் மேற்கொள்ளப்படும் என்றார். 

    பின்னர் பேசிய சிறப்பு பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி, தமிழகத்தில் தற்போது பபூன்களின் ஆட்சி நடைபெறுகிறது. எந்த அமைச்சர் என்ன பேசுகிறார் என்பது தெரிவில்லை. தமிழக அமைச்சர்கள்கள் பலபேர் இஸ்ரோவை மிஞ்சும் வகையில் விஞ்ஞானிகளாக உள்ளனர். 

    டெல்லியில் இருந்து பஸ்சில்தான் டெங்கு கொசு வருகிறது என கூறும் அமைச்சர், தெர்மாகூல் போட்டால் அணையின் நீர் வற்றாது என கூறும் அமைச்சர் பிரதமர் யார் என்றே தெரியாமல் பேசும் அமைச்சர் கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதினார் என கூறும் முதலமைச்சர் என இங்குதான் உள்ளனர். இவர்களை சகித்துக் கொண்டு வாழ்வது தமிழக மக்களின் பெருந்தன்மையை காட்டுகிறது என்றார். 

    கூட்டத்தில் கஸ்டம்ஸ் மகாலிங்கம், ஜெயக்குமார் சிறுநாவலூர் சுப்ரமணியன் மாவட்ட இளைஞரனி துணை அமைப்பாளர் கண்ணண், உப்புலியபுரம் பேரூர் கழக செயலாளர் ராஜசேகர், மதியழகன், முன்னாள் கவுன் சிலர் கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். #dindigulleoni #tnministers
    தமிழகத்தில் தற்போது உள்ள சூழ்நிலையில் ஆட்சி எப்போது கவிழுமோ என்ற பயத்தில் அமைச்சர்கள் உள்ளதாக திண்டுக்கல் லியோனி கூறியுள்ளார். #DMK #Dindigulleoni
    அய்யம்பேட்டை:

    தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளி மேல வாணியத்தெருவில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி கழகச் செயலாளர் என்.நாசர் தலைமை தாங் கினார்.

    கூட்டத்தில் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி பேசினார். அப்போது அவர் பேசியதாவது.

    ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வீடு யாருக்கும் சொந்தம் என்பதே இதுவரை தெரியவில்லை. ஆனால் தி.மு.க.தலைவர் கருணாநிதி திரைப்படத்தில் கதை- வசனம் எழுதி சம்பாதித்து கட்டிய தனது கோபாலபுரம் வீட்டை தனக்கு பிறகு மருத்துவமனை அமைக்க எழுதி கொடுத்துள்ளார்.

    சாதி மதங்களை கடந்து தமிழக மக்களிடையே ஒற்றுமையை உருவாக்கியவர் கருணாநிதி தான். அதற்கு எடுத்துக்காட்டாக தான் தமிழக முழுவதும் சமத்துவ புரங்களை உருவாக்கினார்.

    அழகான வார்த்தைகளைக் கொண்டு பிரதமர் மோடி இந்த நாட்டு மக்களை ஏமாற்றி வருகிறார். தாம் பிரதமராக பதவியேற்றவுடன் வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை கொண்டு வருவேன் என்றார். கொண்டு வந்தாரா? மோடி தமிழகத்தை சாதியாலும், மதத்தாலும் வேறுபடுத்த நினைக்கிறார். அது தமிழகத்தில் ஒருபோதும் நடக்காது.



    மு.க.ஸ்டாலின் நாடகம் போடுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆனால் உண்மையிலேயே நாடகமாடியவர்கள் தற்போதுள்ள முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் தான். ஜெயலலிதா உயிரோடு இருந்த போது வாய்விட்டு கதறி கண்ணீர் சிந்தியபடி பதவி ஏற்ற அவர்கள் ஜெயலலிதா இறந்தபிறகு ஒரு சொட்டுக் கூட கண்ணீர் விட வில்லையே.. ஏன்? இது நாடகம் இல்லையா?

    தற்போது தமிழக அமைச்சர்கள் ஆட்சி எப்போது கவிழுமோ என்ற பயத்தில் உள்ளனர். இதனால் தான் முன்னுக்குப் பின் முரணாக பேசி வருகின்றனர். இது தமிழ்நாட்டுக்கு நல்ல தல்ல.

    இவ்வாறு அவர் பேசினார். #DMK #Dindigulleoni
    ×