search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A.D.M.K. Booth Committee"

    • சிவகங்கை சட்டமன்ற தொகுதி கல்லல் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • தி.மு.க.வில் இருந்து 15-க்கும் மேற்பட்டவர்கள் விலகி அ.தி.மு.க.வில் மாவட்ட செயலாளர் முன்னிலையில் இணைந்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை சட்டமன்றத் தொகுதி கல்லல் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆய்வுக் கூட்டம் பனங்குடியில் ஒன்றிய செயலாளர் சேவியர் தாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., சிவகங்கை மாவட்ட பொறுப்பாளரும், அமைப்பு செயலாளருமான ஏ.கே.சீனிவாசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், நகர செயலாளர் ராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

    அப்போது அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சீனிவாசன் பேசுகையில், அ.தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகத்தில் 80 சதவீத மருத்துவ கல்லூரி, 90 சதவீத சட்டக் கல்லூரிகள் அமைக்கப்பட் டது. மேலும் 20 ஆயிரத்திற் கும் மேற்பட்ட ரேசன் கடைகள் திறக்கப்பட்டது. 12 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களை நியமனம் செய்துள்ளது.

    இதை நமது கட்சி நிர்வா கிகள் பொதுமக்களிடம் எடுத்து கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார். மேலும் கல்லல் ஒன்றியத்தில் தி.மு.க.வில் இருந்து 15-க்கும் மேற்பட்டவர்கள் விலகி அ.தி.மு.க.வில் மாவட்ட செயலாளர் செந் தில் நாதன் முன்னிலையில் இணைந்தனர்.

    • சிவகங்கை அருகே அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பங்கேற்று பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே உள்ள சக்கந்தி கிராமத்தில் அ.தி.மு.க. பூத் கமிட்டி மற்றும் பாசறை மகளிரணி கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் செல்வமணி, ஊராட்சி தலைவர் கோமதி மணி முத்து ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசன் பூத் கமிட்டி பட்டியலை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தவறிய, வாக்குறுதிகளை நிறை வேற்றாத தி.மு.க. அரசு குறித்து பொதுமக்களிடம் பூத் கமிட்டி பொறுப்பா ளர்கள், நிர்வாகிகள் பிரசாரம் செய்ய வேண்டும் என்றார்.கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பெண்மணி பாஸ்கரன், பேரவை செயலாளர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர் கருணாகரன், கலைப்பிரிவு செயலாளர் செந்தில்குமார், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை தலைவர் வெண்ணிலா, மாவட்ட பாசறை செயலாளர் பிரபு, மண்டல துணை செயலாளர் தமிழ்செல்வன், எம்.ஜி.ஆர். அணி துணை செயலாளர் துளாவூர் பார்த்திபன், தகவல் தொழில்நுட்ப துணை செயலாளர் சங்கர் ராமநாதன், சக்கந்தி ஊராட்சி மன்ற துணை தலைவர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை வாடிப்பட்டி அருகே அ.தி.மு.க.பூத்கமிட்டி ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:-

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வடக்குஒன்றிய அ.தி.மு.க.பூத்கமிட்டி ஆலோசனைக்கூட்டம் திருவாலவாயநல்லூர், சி.புதூர், சித்தாலங்குடி, கட்டக்குளம், குட்லாடம்பட்டி, செம்மினிப்பட்டி ஊராட்சிகளில் நடந்தது.

    இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பையா, மாணிக்கம், யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ கண்ணா, பேரூர் செயலாளர் டாக்டர் அசோக்குமார், எம்.ஜி.ஆர்.மன்ற, மாநில நிர்வாகி ராம கிருஷ்ணன், பகுதி பொறுப்பாளர் தண்டரை மனோ கரன், மாநில பேர வை இணை செயலாளர் வெற்றிவேல், மாநில பேரவை துணை செயலாளர் துரை.தன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாசறை மாவட்டதுணைச் செயலாளர் எம்.கே. மணிமாறன் வரவேற்றார்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:-

    தி.மு.க.ஆட்சியின் மீது மக்கள் வெறுப்படைந்து உள்ளனர்.

    மக்களின் நலனில் அக்கறை கொண்டது அ.தி.மு.க.தான். முதல்- அமைச்சர் எல்லா குடும்ப தலைவிக்கும் மகளிர் உரிமைதொகை ஆயிரம் ரூபாய் கொடுக்கி றோம் என்று சொல்லிவிட்டு ஏமாற்றி வருகின்றனர். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டம், மடிக்கணினி திட்டம் என்று ஏராளமான திட்டங்களை இன்றைக்கு தி.மு.க. ஆட்சியில் முடக்கி வைத்து விட்டார்கள்.

    இனிவரும் தேர்தல் காலங்களில் கழக செய லாளர்கள் சிப்பாய்களா கவும் பாசறையினர் துணை ராணுவமாக நின்று எதிரி களுக்கு சிம்ம சொப்பனமாக இருப் பார்கள். ஒவ்வொரு பூத்கமிட்டியில் 19 பேர்களும், மகளிர்குழுவில் 25 பேரும், பாசறையினர் 25 பேரும் என்று 69 பேர்கள் ராணுவ சிப்பாய்களாக களம் இறங்கும்போது எந்த கொம்பாதி கொம்பனாலும் அ.தி.மு.க. வெற்றியை யாராலும் தடுக்கமுடியாது

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் ஊரட்சி மன்ற தலைவர்கள் ஆலய மணி, பாண்டுரங்கன், தெய்வ தர்மர், துணைத்தலைவர் மாலிக், வி.எஸ்.பாண்டியன், பிரசன்னா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பரந்தாமன், ராமகிருஷ்ணன், ஜெயராமன், பாலாஜி, சந்திரபோஸ், நாகமணி, மூர்த்தி, முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோட்டை மேடுபாலன் நன்றிகூறினார்.

    • நீலகிரி மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர், மாவட்ட செயலாளர் ஆகியோர் தலைமை தாங்கினர்.
    • நகர செயலாளர் சரவணகுமார் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    ஊட்டி,

    குன்னூரில் நகர அ.தி.மு.க சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை நகர செயலாளர் சரவணகுமார் செய்திருந்தார்.

    நீலகிரி மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் பொன்னுராஜ், மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி செயலாளர் சஜீவன், இளைஞரணி மாநில துணை செயலாளர் பாலாநந்தகுமார், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சாந்தி ராமு, இளைஞரணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் சிவகுமார், மாவட்ட மகளிரணி செயலாளர் சாந்தா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 

    • அகஸ்தியர்புரம், ராமலிங்கபுரம் உள்ளிட்ட இடங்களில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் அ.தி.மு.க. நகர செயலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    விக்கிரமசிங்கபுரத்தில் தெற்கு அகஸ்தியர்புரம், பசுக்கிடைவிளை வடக்கு தெரு, ராமலிங்கபுரம் ஆகிய இடங்களில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு அ.தி.மு.க.வினர் நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. நகர செயலாளர் கண்ணன், பேச்சாளர் மீனாட்சி சுந்தரம், அம்பை ஒன்றிய துணைச் செயலாளர் பிராங்கிளின், கவுன்சிலர்கள் கிறாஸ் இமாக்குலேட், அம்பை மாரிமுத்து, மணிமுத்தாறு நகரச் செயலாளர் ராமையா, நகர இணைச் செயலாளர் மரிய சாந்தா ரோஸ், சிங்கை அருண், அரிச்சந்திரன், அருண் தபசு, வக்கீல்கள் செல்வ ஆண்டணி, ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. பூத் கமிட்டி அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆலோசனை வழங்கும் கூட்டம் தூத்துக்குடி 18-வது வார்டு ராஜகோபால்நகரில் நடைபெற்றது.
    • முன்னாள் அமைச்சர் சண்முகநாதன், பூத் கமிட்டி நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும் பார்வையிட்டு பணிகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர மேற்கு பகுதியில் தூத்துக் குடி மற்றும் ஓட்டப்பி டாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் அ.தி.மு.க. இளைஞர்- இளம்பெண்கள் பாசறை, மகளிர் அணி மற்றும் அ.தி.மு.க. பூத் கமிட்டி அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆலோசனை வழங்கும் கூட்டம் தூத்துக்குடி 18-வது வார்டு ராஜகோபால்நகரில் நடைபெற்றது.

    மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலளரும், வட்டச்செயலாளருமான முருகன், மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ் ஏற்பாட்டில் நடந்த கூட்டத்திற்கு வட்டச் செயலாளர் ஏ.முருகன் தலைமை தாங்கினார்.

    தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்ச ருமான சண்முகநாதன், மேற்கு பகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் அ.தி.மு.க. சார்பில் அமைக்கப் பட்டுள்ள பூத் கமிட்டி நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும் பார்வையிட்டு பணிகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் என். சின்னத்துரை, முன்னாள் நகர்மன்ற தலைவர் ஹென்றி, தமிழ்நாடு- புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் வக்கீல் பிரபு, மாவட்ட துணை செயலாளர் சந்தனம், மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட இளைஞர்- இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜெ. தனராஜ், கிழக்கு பகுதி செயலாளர் சேவியர், முன்னாள் தொகுதி இணை செயலாளர் பெருமாள், பகுதி துணை செயலாளர்கள் செண்பக செல்வன், கணேசன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் முருகன், திருச்சிற்றம்பலம், வக்கீல்கள் சரவணபெருமாள், முனியசாமி, ரமேஷ், வட்டச் செயலாளர்கள் மனுவேல் ராஜ், வெங்கடேஷ், கொம்பையா, தூத்துக்குடி மணிகண்டன், முருகன், சுப்பிரமணி பாண்டி, மணி கணேஷ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைத் தலைவர் கே.டி.சி. ஆறுமுகம், மண்டல அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க இணைச் செயலாளர் கே.டி.சி. லெட்சுமணன், முன்னாள் கவுன்சிலர் பொன்ராஜ், வட்டச் செயலாளர்கள் மணோகர், ஜெயக்குமார், சேவியர்ராஜ், பூக்கடை வேலு, ஆறுமுகநயினார், ஜெபமணி, பாலகிருஷ்ணன், பாலஜெயம், சாம்ராஜ், ஐ.டி. விங் சகாயராஜா, யுவன் பாலா, ஆனந்த், சிதம்பரராஜா, மைதீன், முகமத் காலிப், உதயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அவினாசிலிங்கம்பாளையம் எ.வி.தனபால், செந்தில்குமார், சுப்பிரமணியம், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
    • வக்கீல் பிரிவு மாவட்ட துணை செயலாளர் சுதர்சன் , பொருளாளர் செல்வம் உள்ளிட்ட திரளான அதிமுக.வினர் கலந்து கொண்டனர்.

    அவினாசி:

    கோவை புறநகர் வடக்கு மாவட்டம் அவினாசி தெற்கு ஒன்றிய அதிமுக., பூத் கமிட்டி செயல் வீரர் கூட்டம் நடந்தது.அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் விஜய் ஆனந்த் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் நாசர், ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் தம்பி ராஜேந்திரன், அவினாசிலிங்கம்பாளையம் எ.வி.தனபால், செந்தில்குமார், சுப்பிரமணியம், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக பூத் கமிட்டி அமைத்தல், தேர்தல் பணி மேற்பார்வை ஆகியவை குறித்துவிளக்கம் அளிக்கப்பட்டது மேலும் தெற்கு ஒன்றியத்தில் 15000 வாக்குகள் அதிகம் பெற அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதேபோல் அவினாசி நகர அதிமுக., சார்பில் பூத்கமிட்டி பொறுப்பாளர் கூட்டம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் நாசர் தலைமையில் நடந்தது நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் கணேசமூர்த்தி, இளைஞரணி செயலாளர் ஜெயபால், அதிமுக., நகர துணை செயலாளர் எம். எஸ். மூர்த்தி, மாணவரணி செயலாளர் மோகன், வக்கீல் பிரிவு மாவட்ட துணை செயலாளர் சுதர்சன் , பொருளாளர் செல்வம் உள்ளிட்ட திரளான அதிமுக.வினர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை தம்பி ராஜேந்திரன் செய்திருந்தார்.

    • அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • பேரூர் துணைச் செயலாளர் தியாகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சார்பில் சோழவந்தானில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பையா, மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலா ளர் முருகேசன், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் மகா லட்சுமி ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், பொதுக்குழு நாகராஜ், முன்னாள் சேர்மன் முருகேசன், மாவட்ட நிர்வாகிகள் திருப்பதி, ஆர்யா, சிங்கராஜ பாண்டியன், மகேந்திர பாண்டிலட்சுமி ஆகியோர் வரவேற்று பேசினர்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், புறநகர்மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் பேசியதா வது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று வெற்றிக்கனியை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காலடியில் சமர்ப்பிக்க வேண்டும். அதனை தொடர்ந்து தி.மு.க.வின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். மீண்டும் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்

    கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் தென்கரை ராமலிங்கம், கருப்பட்டி தங்கபாண்டி, நாச்சிகுளம் தங்கப்பாண்டி, சோழ வந்தான் பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன், ரேகா ராமச்சந்திரன், சண்முக பாண்டியராஜா, சரண்யா கண்ணன், கச்சிராயிருப்பு முனியாண்டி, சோழவந்தான் நகர இளைஞரணி கேபிள் மணி, மருத்துவரணி கருப்பட்டி தங்கப்பாண்டி, பேரூர் துணைச் செயலாளர் தியாகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×