என் மலர்

  நீங்கள் தேடியது "விபத்து"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த மரத்தின் மீது பஸ் மோதியது.
  • விபத்தில் சிக்கிய பஸ்ஸை அப்புறப்படுத்தினர்.

  தருமபுரி,

  கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரிலிருந்து பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று தருமபுரி நோக்கி இன்று காலை சென்று கொண்டிருந்தது. வெள்ளி சந்தை பகுதியில் உள்ள சூடப்பட்டி என்ற இடத்தருகே பஸ் சென்ற போது முன்னால் ஒரு டிப்பர் லாரி சென்றது.

  அந்த லாரியை பஸ் முந்த முயன்றது. எதிரில் வேறு ஒரு லாரி வரவே மோதிக்கொள்வதை தவிர்க்க பஸ் டிரைவர் முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த மரத்தின் மீது பஸ் மோதியது.

  இதனால்பஸ் கண்ணாடிகள்,இருக்கைகள் உடைந்து நொறுங்கின. இதில் டிரைவர், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பயணிகள் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

  விபத்து பற்றிய தகவல் அறிந்த மஹேந்திரமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். விபத்தில் சிக்கிய பஸ்ஸை அப்புறப்படுத்தினர். இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பள்ளி மாணவர்களுக்கு டி.எஸ்.பி.தங்கராமன் அறிவுரை
  • மாணவர்கள் 18 வயது நிரம்பிய பிறகு ஓட்டுனர் உரிமம் பெற்றுக்கொண்டு தான் பைக்குகள் ஓட்ட வேண்டும்.

  கன்னியாகுமரி:

  குளச்சல் போக்குவரத்து காவல் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் குளச்சல் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

  இதில் குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் கலந்து கொண்டு மாணவர்களிடையே அறிவுரை வழங்கி பேசியதாவது,

  மாணவர்கள் 18 வயது நிரம்பிய பிறகு ஓட்டுனர் உரிமம் பெற்றுக்கொண்டு தான் பைக்குகள் ஓட்ட வேண்டும்.ஆர்வ மிகுதியில் வீட்டில் உள்ள உறவினர்களின் பைக்குகளை அவர்களுக்கு தெரியாமல் எடுத்து ஓட்டக்கூடாது. நண்பர் களை பைக்கில் ஏற்றிக் கொண்டு சாலைக்கு வரக்கூடாது.

  போக்குவரத்து விதி முறைகளை தெரிந்து கொண்டு சாலையில் வாகனம் ஓட்ட வேண்டும். கவனமாகவும், ஜாக்கிரதை யாகவும் வாகனம் ஓட்டி னால் விபத்துகள் ஏற்படாது.

  விபத்தில் ஒருவரை இழந்தால் அது அந்த குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.வாகனத்தில் வெளியே கிளம்பினால் வீடு திரும்பும்வரை பெற்றோர்கள் வீட்டில் காத்து கொண்டிருப்பார்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

  நோயால் இறப்பவரை விடவும் சாலை விபத்தில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.வளைவில் திரும்பும் முன் முதலில் வாகனத்தின் வேகத்தை குறைக்க வேண்டும்.10 மீட்டர் தூரத்தில் திரும்பும் பக்கம் சிக்னல் செய்ய வேண்டும்.

  ஹெல்மெட் அணிந்தால் மட்டும் போதாது.அதன் பெல்ட்டை சரியாக நாடியில் போட வேண்டும்.போலீசுக்கு பயந்து ஹெல்மெட் போடாதீர்கள்.உங்கள் உயிருக்கு பயந்து ஹெல்மெட் போடுங்கள். போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பி டித்தால் விபத்தில்லாமல் சென்றிடலாம்.

  இவ்வாறு அவர் பேசினார்.

  தொடர்ந்து இன்ஸ்பெக் டர் வில்லியம் பெஞ்சமின் போக்குவரத்து விதிகள் குறித்து பதாகை மூலம் விளக்கி பேசினார். சப் - இன்ஸ்பெக்டர்கள் குருநா தன், பாலகிருஷ்ணன், பள்ளி தலைமையாசிரியை ஆன்டி புஷ்ப ரெனிதா, என்.எஸ்.எஸ்.ஒருங்கிணைப்பாளர் ஜோஸ், பள்ளி உடற்கல்வி இயக்குனர் வளர்மதி, உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஜூடின், ஷோபா மற்றும் ஆசிரியர்கள் மது, ஜெகன் உள்பட மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சங்கராபுரம் அருகே ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் பலியானார்.
  • ஷ்பகிரி அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்தது.

  கள்ளக்குறிச்சி:

  கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் கீழ்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (45). இவர் அதே பகுதியில் மெடிக்கல் நடத்தி வருகிறார். இவர் இளைய னார் குப்பத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு இருக்கர வாகனத்தில் சென்றார். பின் அங்கிருந்து கீழ்பாடி கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டி ருந்தார். புஷ்பகிரி அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மேலும் ஒருவர் பலி
  • சாவு எண்ணிக்கை 2 ஆக உயர்வு

  நாகர்கோவில்:

  நாகர்கோவில் இடலாக்குடி பறக்கை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரஹீம். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் ஹிஷாம் அகமது (வயது 17).

  இவர் இடலாக்குடியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். ஹிஷாம் அகமது தினமும் காலையில் செட்டிக்குளம் பகுதியில் டியூசனுக்கு வருவது வழக்கம். நேற்று காலையில் மோட்டார் சைக்கிளில் டியூசனுக்கு வந்தார்.

  பின்னர் டியூசனில் இருந்து வீட்டுக்கு சென்ற போது கோட்டார் சிதம்பர நகரை சேர்ந்த அவரது நண்பர் ஆகாஷ் (17) என்பவரை அழைத்துக் கொண்டு புறப்பட்டார். செட்டிகுளம்-பீச் ரோடு சாலையில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டி ருந்தபோது ஹிஷாம் அகமது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் தாறுமாறாக ஓடியது.

  அப்போது சாலை ஓரமாக சென்று கொண்டிருந்த தம்மத்துகோணத்தை சேர்ந்த பால்சுதாகர் (50) என்பவர் மீது மோதியது. மோட்டார் சைக்கிள் வந்த வேகத்தில் அரசு பஸ் மீதும் மோதியதில்ஹிஷாம் அகமது, ஆகாஷ் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

  படுகாயம் அடைந்த ஹிஷாம் அகமது, ஆகாஷ், பால்சுதாகர் ஆகியோரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஹிஷாம் அகமது பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

  பின்னர் ஹிஷாம் அகமது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த ஆகாஷ் சிகிச்சைக்காக நாகர்கோவிலில்உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

  பால் சுதாகரை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர் த்து சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பால் சுதாகர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

  இன்று பலியான ஹிஷாம் அகமது, பால் சுதாகரின் உடல்கள் பிரேத பரிசோதனை நடக்கிறது. விபத்து குறித்து போக்குவரத்து பிரிவு போலீசார் பலியான ஹிஷாம் அகமது மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வந்ததாக அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு

  ள்ளது. இதற்கிடையில் விபத்து நடந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தற்பொழுது சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளங்களிலும் பரவத் தொடங்கியுள்ளது.

  பால் சுதாகர் மீது மோதிய வேகத்தில் அந்த வழியாக வந்தவர் பஸ் மீது மோதுவது போன்ற காட்சிகள் வைரலாக தொடங்கியுள்ளது. அந்த காட்சிகள் நெஞ்சை பதற வைக்கும் வகையில் உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அவிநாசி அருகே பைக்கில் சென்ற பொறியியல் கல்லூரி மாணவர் விபத்தில் பலியானார்.
  • நகருக்குள் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இடங்களில், வேகக்கட்டுப்பாடு அவசியமானது.

  திருப்பூர் :

  அதிவேகமாக வாகனங்களை இயக்குதல், மது குடித்துவிட்டு ஓட்டுதல், இருசக்கர வாகனங்களில் செல்வோர் ெஹல்மெட் அணியாமல் செல்லுதல், கார்களில் செல்வோர் சீட் பெல்ட் அணியாமல் இருப்பது போன்ற விதிமீறல்கள் விபத்துகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

  சமீபத்தில் அவிநாசி அருகே பைக்கில் சென்ற பொறியியல் கல்லூரி மாணவர் விபத்தில் பலியானார். அவர் ெஹல்மெட் அணிந்திருக்கவில்லை. பைக்கில் சக நண்பர்கள் 2பேர் உடன் வந்தனர். ெஹல்மெட் அணிந்திருந்தால்விதிமுறையைப் பின்பற்றியிருந்தாலும் குறைந்தபட்ச காயங்களுடன் மாணவர் தப்பியிருக்க வாய்ப்பு உள்ளது. இதேபோல், திருப்பூரில் நடைபெறும், பல விபத்துகளுக்கு விதிமீறல்களே காரணமாக அமைகின்றன.இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ெஹல்மெட் அணிவதை சுமையாக கருதத் தேவையில்லை. அது உயிர்க்கவசம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

  கார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது சுலபமான விஷயம்தான். ஆனால் பலர் இதைப் பொருட்படுத்துவதில்லை.

  நகருக்குள் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இடங்களில், வேகக்கட்டுப்பாடு அவசியமானது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக, திருப்பூரில் அதிகளவில் இருசக்கர வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பிரதான ரோடுகளில் கூட, பலர்வாகனங்களை விதிமுறைப்படி இயக்குவதில்லை.விபத்து நேரும்போதுதவறாக விதிமுறை பின்பற்றுபவர் மட்டும் பாதிக்கப்படவில்லை. விதிமுறையை முறையாக கடைபிடித்து செல்வோரும் பாதிக்கப்படுகின்றனர். அப்பாவிகள் உயிரிழக்க நேர்கிறது.

  திருப்பூரின் ரோடுகள் பரந்து விரிந்தவை அல்ல.பரபரப்புடன் இயங்கும் மாநகரில் வாகனங்களை நிதானமாக இயக்கியாக வேண்டிய கட்டாயம் அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் உள்ளது. ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனங்களில் பறப்பவர்கள் பலர். தற்போது பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் 18 வயது நிரம்பாத மாணவர்கள் பலர் பைக்குகளைப் பயன்படுத்துகின்றனர்.போலீசார் அறிவுறுத்தினாலும்ப ள்ளிகளுக்கே சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இது தொடர்கதையாக உ ள்ளது. பெற்றோர் நினைத்தால், வாகனங்களை மாணவர்கள் எடுத்துச்செல்லாமல் தடுக்க முடியும்.கவனமின்மையால் விபத்துகள் கண நேரத்தில் நிகழ்ந்துவிடுகின்றன. ஆனால்ஒவ்வொரு விபத்துகளும், விலை மதிக்க முடியாத இழப்பை ஏதேனும் ஒரு குடும்பத்திற்கோ, விபத்தால் பாதிக்கப்பட்டவரை சார்ந்திருப்பவர்களுக்கோ ஏற்படுத்தி விடுகின்றன.எனவே வாகன விதிமுறைகளை பின்பற்றி விபத்துக்களை தடுக்க வேண்டுமென போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பேட்டரிகளை ஏற்றி கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
  • விபத்தில் அதிர்ஷ்டவசமாக வேன் மற்றும் கண்டெய்னர் லாரி டிரைவர்கள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.

  பல்லடம் :

  பல்லடம் பொங்கலூர் சக்தி நகர் அருகே கோவையை நோக்கி பேட்டரிகளை ஏற்றி கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது காங்கேயம் நோக்கி சிமெண்ட் ஏற்றிக்கொண்டு சென்ற வேன் எதிர்பாராதவிதமாக லாரியின் மீது மோதியது.

  இதில் நிலை தடுமாறிய கண்டெய்னர் லாரி சாலையில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக வேன் மற்றும் கண்டெய்னர் லாரி டிரைவர்கள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். இந்த விபத்தால் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து தகவல் இருந்து உடனடியாக விரைந்து வந்த அவினாசிபாளையம் போலீசார் கன்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலியாரில் உள்ள இடத்தில் சிமென்ட் தூண் டிப்பர் வாகனம் மீது விழுந்தது.
  • காயமடைந்தவர் மேல்சிகிச்சைக்காக மண்டி மண்டல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

  இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் இன்று காலை கட்டுமான தளத்தில் சிமென்ட் தூண் ஒன்று டிப்பர் வாகனத்தின் மீது விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்ததாக மாநில பேரிடர் மேலாண்மை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

  இதுகுறித்து மண்டி மாவட்ட அவசர நடவடிக்கை பிரிவு வழங்கிய தகவலின்படி, டிப்பர் வாகனத்தில் 5 பேர் இருந்தனர். இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலியாரில் உள்ள இடத்தில் சிமென்ட் தூண் டிப்பர் வாகனம் மீது விழுந்தது.

  காயமடைந்தவர் மேல்சிகிச்சைக்காக மண்டி மண்டல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

  மேலும் விபத்து தொடர்பாகன விவரங்கள் காத்திருக்கின்றன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மோட்டார் சைக்கிளில் அன்னூரிலிருந்து அவினாசி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
  • அனந்தகிரி அருகே வந்தபோது எதிரே வேகமாக வந்த வேண் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

  அவினாசி :

  அவினாசி அம்மாபாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது42). இவரும் இவரது மகன் தரணி (15) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் அன்னூரிலிருந்து அவினாசி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

  அவினாசியை அடுத்து அனந்தகிரி அருகே வந்தபோது எதிரே வேகமாக வந்த வேண்மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இது குறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உடனே மின் தடை ஏற்பட்டது
  • பரசேரி மின் வாரிய அலுவலக ஊழியர்கள் மின் கம்பத்தை சீரமைத்தனர்.

  கன்னியாகுமரி:

  கன்னியாகுமாரி மாவட்டம் நித்திரவிளை பகுதியிலிருந்து நேற்று மாலை நாகர்கோவிலுக்கு ஒரு சொகுசு கார் சென்று கொண்டிருந்தது.

  கார் கண்டன்விளை மொட்டவிளையை கடந்து பேயன்குழி அருகே செல்லும்போது திடீரென கட்டுப்பாடு இழந்து நிலைதடுமாறி தாறுமாறாக ஓடியது. சிறிது நேரத்தில் சாலையோரம் நின்ற மின் கம்பத்தில் மோதி ஒரு வீட்டு காம்பவுண்டு சுவரில் மோதி நின்றது.

  அப்போது அருகில் இருந்த ஒரு கடையின் முன்பக்கம் சேதமடைந்தது.கார் மின் கம்பத்தில் மோதியதில் மின் கம்பம் முறிந்து விழுந்தது. உடனே மின் தடை ஏற்பட்டதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த நபருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

  தகவலறிந்த பரசேரி மின் வாரிய அலுவலக ஊழியர்கள் விரைந்து சென்று மின் கம்பத்தை சீரமைத்து மின் விநியோகம் செய்தனர். பேயன்குழியில் சாலையில் தாறுமாறாக ஓடிய காரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பொதுமக்கள் கணபதிபுரம் பஸ் நிறுத்தத்திற்கு வந்து அங்கிருந்து காரைக்கால், திருநள்ளார், பூந்தோட்டம், பேரளம், மயிலாடுதுறை, திருவாரூர், திருமருகல், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
  • மின்கம்பம் எந்நேரத்திலும் சாய்ந்து விழுந்து உயிர் இழப்புகளை ஏற்படுத்தும் அபாய நிலை உள்ளது.

  நாகப்பட்டினம்:

  நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடி ஊராட்சி கணபதிபுரத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்கு வசிக்கும் பொதுமக்கள் கணபதிபுரம் பஸ் நிறுத்த த்திற்கு வந்து அங்கிருந்து காரைக்கால், திருநள்ளார், பூந்தோட்டம், பேரளம், மயிலாடுதுறை, திருவாரூர், திருமருகல், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.கணபதிபுரம் மெயின் சாலை வழியே மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு கணபதி புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

  இந்த நிலையில் கணபதி புரம் பஸ் நிறுத்தத்தில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து காணப்படுகிறது.இந்த மின்கம்பம் எந்நேரத்திலும் சாய்ந்து விழுந்து உயிர் இழப்புகளை ஏற்படுத்தும் அபாய நிலை உள்ளது.அருகில் ஊராட்சி மன்ற அலுவலகம், அரசு மேல்நிலை ப்பள்ளி உள்ளி ட்டவைகள் இருப்பதால் பயணிகள், பள்ளி மாணவ - மாணவிகள் அதிகளவில் வந்து செல்வதாலும் காரைக்கால் பூந்தோட்டம் மெயின் சாலை என்பதாலும் மின்கம்பம் எந்நேரத்திலும் சாய்ந்து விபத்துக்களை ஏற்படுத்தும் என்ற அச்சம் உள்ளது.

  இதுகுறித்து மின்வாரிய துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார்அளி த்தும் இதுவரைஎந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.எனவே, ஆபத்தான மின்கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விபத்தில் குமரவேலு, சாய்சக்தி, நிதிஷ்குமார் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
  • பேருந்து ஓட்டுநர், நடத்துநர் தப்பிச்சென்ற நிலையில், விபத்து குறித்து மயிலாடுதுறை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  குத்தாலம்:

  மயிலாடுதுறையில் அரசுப்பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை-மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் உறவினர் மகன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  மயிலாடுதுறை ஐயாரப்பர் தெற்கு வீதியை சேர்ந்த குமரவேல் (வயது 38). அவரது மகள் சாய்சக்தி (3), உறவினர் மகன் நிதிஷ்குமார் ஆகியோர் மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த அரசு பஸ் இவர்கள் மீது மோதியது.

  இந்த விபத்தில் குமரவேலு, சாய்சக்தி, நிதிஷ்குமார் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குமரவேல், சாய்சக்தி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். குமரவேலுவின் உறவினர் மகனான நிதிஷ்குமார் என்ற சிறுவன் படுகாயத்துடன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார்.

  பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில், விபத்து குறித்து மயிலாடுதுறை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் தந்தை, மகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print