என் மலர்
நீங்கள் தேடியது "பெண் பலி"
- மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திய போது எதிர்பாராத விதமாக லதா ரோட்டில் தவறி விழுந்துள்ளார்.
- இந்த சம்பவம் குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு லட்சுமி நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (59). இவரது மனைவி லதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ராஜா திருப்பூரில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டெக்னிக் பிரிவில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் ராஜா சம்பவத்தன்று பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்காக தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு சென்றார். வண்டியை ராஜா ஓட்ட பின்னால் லதா அமர்ந்து வந்தார்.
சித்தோடு சமத்துவபுரம் மேடு அருகே கோவை- சேலம் பைபாஸ் ரோடு அருகே வந்த போது லதாவுக்கு திடீரென மயக்கம் வந்துள்ளது. அதையடுத்து ராஜா மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திய போது எதிர்பாராத விதமாக லதா ரோட்டில் தவறி விழுந்துள்ளார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மனைவியை சிகிச்சைக்காக நசியனூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ராஜா கொண்டு சேர்த்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலயின்றி லதா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மின் இணைப்பு வயர் செல்லும் இரும்பு தூணை எதிர்பாராத விதமாக பிடித்ததால் மின்சாரம் தாக்கியது.
- உடல் பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கன்னியாகுமரி:
தக்கலை அருகே உள்ள வெட்டிக்கோணம் நொண்டி மாமூட்டுவிளையை சேர்ந்த சரளாபாய். சம்பவத்தன்று வீட்டின் வெளியே மின் இணைப்பு வயர் செல்லும் இரும்பு தூணை எதிர்பாராத விதமாக பிடித்துள்ளார். இதனால் மின்சாரம் தாக்க தூக்கி வீசி எறியப்பட்டார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சரளாபாய் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
சம்பவம் குறித்து அவரது மகன் முருகன் தக்கலை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவின் அடிப்படையில் பயிற்சி எஸ்பி விவேகனந்த சுக்லா விசாரணை நடத்தினார். பின்னர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மூதாட்டியின் உடல் பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- கடலூர் அருகே பட்டாசு குடோன் வெடிவிபத்தில் மேலும் ஒரு பெண் பலியானார் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
- விபத்தில் எம்.புதூரை சேர்ந்த வைத்தியலிங்கம், பெரியகாரைக்காடு பகுதியை சேர்ந்த வசந்தா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
கடலூர்:
கடலூர் அருகே பெரியகாரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் அரிசி பெரியாங்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட எம்.புதூரில் தனது மாமனார் ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமான இடத்தில் நாட்டு பட்டாசு தயாரிக்கும் குடோன் வைத்துள்ளார். இந்த குடோனில் நாட்டு வெடி, வாண வெடிகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த பட்டாசு குடோனில் நேற்று மதியம் திடீரென வெடிபொருள் தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் அந்த குடோன் இடிந்து தரைமட்டமானது. இந்த வெடிசத்தம் குண்டு வெடித்தது போல் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு கேட்டது. இதனால் அந்த பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர். அப்போது பட்டாசு குடோனில் வேலை பார்த்த பெரியகாரைக்காடு பகுதியை சேர்ந்த அகோரமூர்த்தி என்பவரின் மனைவி சித்ரா (வயது 37), வான்பாக்கத்தை சேர்ந்த சார்லஸ் மனைவி அம்பிகா (,50), மூலக்குப்பம் பகுதியை சேர்ந்த சத்தியராஜ் (32) ஆகியோர் உடல்சிதறி பலியானார்கள்.
மேலும் இந்த விபத்தில் எம்.புதூரை சேர்ந்த வைத்தியலிங்கம், பெரியகாரைக்காடு பகுதியை சேர்ந்த வசந்தா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி வசந்தா இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது ஆஸ்பத்திரியில் வைத்தியலிங்கத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மோகன்ராஜ் மற்றும் அவரது மனைவி வனிதாவை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- பட்டாசு குடோனில் நேற்று மதியம் திடீரென வெடிபொருள் தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் அந்த குடோன் இடிந்து தரைமட்டமானது.
- இந்த வெடிசத்தம் குண்டு வெடித்தது போல் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு கேட்டது. இதனால் அந்த பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
கடலூர்:
கடலூர் அருகே பெரியகாரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் அரிசி பெரியாங்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட எம்.புதூரில் தனது மாமனார் ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமான இடத்தில் நாட்டு பட்டாசு தயாரிக்கும் குடோன் வைத்துள்ளார்.
இந்த குடோனில் நாட்டு வெடி, வாண வெடிகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த பட்டாசு குடோனில் நேற்று மதியம் திடீரென வெடிபொருள் தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் அந்த குடோன் இடிந்து தரைமட்டமானது. இந்த வெடிசத்தம் குண்டு வெடித்தது போல் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு கேட்டது. இதனால் அந்த பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர். அப்போது பட்டாசு குடோனில் வேலை பார்த்த பெரியகாரைக்காடு பகுதியை சேர்ந்த அகோரமூர்த்தி என்பவரின் மனைவி சித்ரா (வயது 37), வான்பாக்கத்தை சேர்ந்த சார்லஸ் மனைவி அம்பிகா (,50), மூலக்குப்பம் பகுதியை சேர்ந்த சத்தியராஜ் (32) ஆகியோர் உடல்சிதறி பலியானார்கள்.
மேலும் இந்த விபத்தில் எம்.புதூரை சேர்ந்த வைத்தியலிங்கம், பெரியகாரைக்காடு பகுதியை சேர்ந்த வசந்தா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி வசந்தா இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
ஆஸ்பத்திரியில் வைத்தியலிங்கத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மோகன்ராஜ் மற்றும் அவரது மனைவி வனிதாவை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- உடல் முழுவதும் பரவிய தீயால் தேவகி அலறி துடித்தார்.
- அலறல் சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடல் கருகிய தேவகியை மீட்டனர்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த திருவெங்கடபுரத்தை சேர்ந்தவர் தேவகி(60). இவர் கடந்த 12-ந்தேதி குளிப்பதற்காக விறகு அடுப்பில் வெந்நீர் வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தேவகியின் சேலையில் தீப்பிடித்தது.
இதில் உடல் முழுவதும் பரவிய தீயால் அவர் அலறி துடித்தார். அலறல் சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடல் கருகிய தேவகியை மீட்டனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை சிகிச்சைக்காக பொன்னேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தேவகி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 3 குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் கர்ப்பமாக இருப்பது தெரிந்தால் குடும்பத்தினர் ஏதாவது சொல்வார்கள் என நினைத்து அதனை யாருக்கும் தெரியாமல் கணவன்-மனைவி மறைத்தனர்.
- பார்வதிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவருக்கு பூபதி பிரசவம் பார்த்துள்ளார்.
சேலம்:
சேலம் சீலநாயக்கன்பட்டி குறிஞ்சி நகரை சேர்ந்தவர் பார்வதி (வயது 30). இவர் முதல் கணவரை பிரிந்து ராசிபுரம் புதுப்பட்டியை சேர்ந்த பூபதி (25) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். கணவன்-மனைவி 2 பேரும் கட்டிட வேலை செய்து வந்தனர்.
இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மேலும் பார்வதிக்கு முதல் கணவருக்கு பிறந்த குழந்தை என 3 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே பார்வதி மீண்டும் கர்ப்பமானார்.
ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் கர்ப்பமாக இருப்பது தெரிந்தால் குடும்பத்தினர் ஏதாவது சொல்வார்கள் என நினைத்து அதனை யாருக்கும் தெரியாமல் கணவன்-மனைவி மறைத்தனர். நேற்று முன்தினம் மதியம் அவர்கள் 2 பேரும் மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி கோட்டைகரடு பகுதிக்கு வந்தனர்.
அப்போது பார்வதிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவருக்கு பூபதி பிரசவம் பார்த்துள்ளார். அப்போது பெண் குழந்தை இறந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் அந்த பகுதியில் குழி தோண்டி குழந்தையின் உடலை புதைத்தனர். இதனிடையே சிறிது நேரத்தில் மயங்கிய பார்வதி, அங்கேயே பலியானார்.
அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து மல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். மேலும் குழந்தை மற்றும் பார்வதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து மனைவியை பிரசவத்திற்கு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாமல் பொதுவெளியில் மருத்துவ விதிமுறைகளை மீறி பிரசவம் பார்த்தது மற்றும் பிரசவத்தின்போது குழந்தை இறந்தது பற்றி போலீசுக்கு தெரிவிக்காமல் புதைத்தது போன்ற குற்றத்திற்காக பூபதியை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் போலீசார், அவரை பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
தாய் இறந்த நிலையில், தந்தையை போலீஸ் கைது செய்துள்ளதால் அவர்களது குழந்தைகள் ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.
- வீட்டு வாசலில் எலி வருவதை கண்ட லட்சுமி அதனை அடிப்பதற்காக துரத்தி சென்றார்.
- அப்போது நிலைதடுமாறி வீட்டின் வாசலில் இருந்த படிக்கட்டில் விழுந்தார். அப்போது அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தாம்பரம்:
சென்னை பம்மல் அடுத்த பொழிச்சலூர் பாபு தெருவை சேர்ந்தவர் லட்சுமி (35). இவரது கணவர் செந்தில். லோடு வேன் டிரைவராக உள்ளார்.
நேற்று இரவு செந்தில் வேலைக்கு சென்ற நிலையில் லட்சுமி வீட்டில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது வீட்டு வாசலில் எலி வருவதை கண்ட லட்சுமி அதனை அடிப்பதற்காக துரத்தி சென்றார்.
அப்போது நிலைதடுமாறி வீட்டின் வாசலில் இருந்த படிக்கட்டில் விழுந்தார். அப்போது அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை கண்ட உறவினர்கள் லட்சுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் அவரை மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் லட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சங்கர்நகர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரனை நடத்தி வருகின்றனர்.
- நகை திருட்டப்பட்ட சம்பவம் குறித்து விபத்து நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
- மனிதாபமின்றி விபத்தில் பலியான பெண்ணிடம் இருந்து நகைகளை மர்மநபர்கள் திருடிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் ஆத்துப்பாளையம் ஜே.சி.கே. கார்டன் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். கார் டயர்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவரது மனைவி சண்முகபிரியா (வயது 34). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
நேற்று மாலை சண்முக பிரியா வீட்டிற்கு தேவையான காய்கறிகள் வாங்குவதற்காக திரு முருகன்பூண்டிக்கு சென்றார்.அங்கு காய்கறிகள் வாங்கி விட்டு மொபட்டில் ஆத்துப்பாளையத்திற்கு புறப்பட்டார். செல்லும் வழியில் பின்னால் வந்த லாரி மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சண்முகபிரியா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் திரு முருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் சண்முகபிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவி மரணமடைந்த தகவலை அறிந்து அதிர்ச்சியடைந்த தியாகராஜன் உடனடியாக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றார். அங்கு அவரிடம் போலீசார் சண்முகபிரியா அணிந்திருந்த தங்க கம்மல் மற்றும் அவர் வைத்திருந்த பொருட்களை ஒப்படைத்தனர். அப்போது சண்முகபிரியா அணிந்திருந்த 3½ பவுன் மதிப்புள்ள தங்க தாலி செயின் மற்றும் மோதிரம் ஆகியவற்றை காணவில்லை. அவற்றின் மதிப்பு ரூ.1.50 லட்சம் இருக்கும்.
இது பற்றி தியாகராஜன் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் நகைகளை திருடிய மர்மநபர்கள் யாரென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து சண்முகபிரியாவின் நகைகளை மர்மநபர்கள் திருடினார்களா? அல்லது தனியார் ஆம்புலன்சில் உடலை கொண்டு செல்லும் போது திருடப்பட்டதா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விபத்து நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மனிதாபமின்றி விபத்தில் பலியான பெண்ணிடம் இருந்து நகைகளை மர்மநபர்கள் திருடிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடக் கோரி நடந்த முற்றுகைப் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, 25.5.2018 அன்று உடன்குடியிலிருந்து திருநெல்வேலி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து கருங்குளம் கிராமம் அருகே சில சமூக விரோதிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டதில், பேருந்தில் பயணம் செய்த, மெஞ்ஞானபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுடலை மனைவி வள்ளியம்மாள் தீக்காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 31.5.2018 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த வள்ளியம்மாள் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.