search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "female sacrifice"

    • வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டதாக கருதிய ஒற்றை யானை மீண்டும் ஊருக்குள் சுற்றி திரிந்து கொண்டிருந்தது.
    • இருவேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் காட்டிலிருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை நேற்று முன்தினம் ஊருக்குள் புகுந்து தேர்பேட்டை டி.ஜி தொட்டி பகுதியில் குடியிருப்பு தெருக்களில் வழியாக உலா வந்தது.

    இதை பார்த்த மக்கள் பதறியடித்துக்கொண்டு வீட்டுக்குள் ஒளிந்து கொண்டனர். இதுகுறித்து கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனே தேன்கனிக்கோட்டை வன ஊழியர்கள் விரைந்து வந்து ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த யானையை பட்டாசு வெடித்தும் தாரை தப்பட்டை அடித்தும் அதிக ஒலி எழுப்பியும் காட்டுப் பகுதிக்கு விரட்டியடித்தனர்.

    இதனால் ஒற்றை யானை வனப்பகுதிக்கு சென்றதாக நினைத்து கொண்ட தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்று வட்டார கிராமத்தில் பொதுமக்கள் வழக்கம் போல் காலையில் எழுந்து தோட்ட வேலையில் ஈடுபட்டு வந்தனர்.

    தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அன்னியாளம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் மனைவி வசந்தம்மா (வயது33) கூலித்தொழிலாளியான இவர் இன்று அதிகாலை தோட்ட வேலைக்கு செல்வதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்தார்.

    அப்போது அங்கு வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டதாக கருதிய ஒற்றை யானை மீண்டும் ஊருக்குள் சுற்றி திரிந்து கொண்டிருந்தது.

    இதனை கண்ட வசந்தம்மா அங்கிருந்து தப்பி ஒட முயன்றார். இதனை கண்ட அந்த ஒற்றை யானை வசந்தம்மா தூக்கி வீசி தாக்கியது. இதில் ரத்த வெள்ளத்தில் வசந்தம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அந்த யானையை விரட்டியடித்தனர்.

    இதைத்தொடர்ந்து அந்த ஒற்றை யானை அங்கிருந்து புறப்பட்டு தளி அருகே உள்ள தாசர்பள்ளி அருகே சென்றது. அங்கு அதே பகுதியைச் சேர்ந்த அஸ்வந்தம்மா என்ற கூலித் தொழிலாளி இன்று காலை வேலைக்கு செல்வதற்காக வீட்டை வெளியே வந்தார். அப்போது அவரை யானை தாக்கியது. இதில் அஸ்வந்தம்மாவும் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தேன்கனிக்கோட்டையில் ஒற்றை யானை அடுத்தடுத்து 2 பெண்களை தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீப் போல் பரவியது.

    வசந்தம்மாவின் உறவினர்கள் மற்றும் அன்னி யாளம் கிராம பொதுமக்கள் தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் சோதனை சாவடி முன்பும், தாசர்பள்ளி கிராம மக்கள் அதே பகுதியிலும் திடீரென்று திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இருவேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள், தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் வனத்துறையினர் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் ஒற்றை யானையை மயக்க ஊசி செலுத்தி அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விடவேண்டும் என்றும், யானை தாக்கி உயிரிழந்த பெண்களின் குடும்பத்திற்கு ஒருவருக்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு தொகையும் வழங்க வேண்டும் என்பன கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    இதுகுறித்து தகவலறிந்து அந்தந்த பகுதிகளில் வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று மறியலில் ஈடுபட்டு வருபவர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இதன்காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவியது.

    • தனது மொபட்டில் கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் சாலையை கடக்க முயன்றார்.
    • கரூரில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற கார் கலா சென்ற மொபட் மீது மோதியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள ராசாம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி கலா (வயது 55). இவர் கூலி வேலை செய்து வந்தார்.

    இவர் நேற்று மதியம் கீரம்பூரில் இருந்து குஞ்சாம்பாளையம் செல்வதற்காக தனது மொபட்டில் கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் சாலையை கடக்க முயன்றார். அப்போது கரூரில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற கார் கலா சென்ற மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய கலாவை அவ்வழியாக வந்தவர்கள் காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கலா வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த விபத்து பற்றி பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்ப வத்தன்று மதியம் ஜோதி துணி துவைத்து விட்டு துணியை அங்கு வழக்கம் போல் காய வைக்கும் கம்பியில் போட்டுள்ளார்.
    • அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசி மயக்கம் அடைந்து ள்ளார்.

    தாளவாடி:

    தாளவாடி அடுத்த பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (50) கூலித்தொழிலாளி. இவரது மகள் ஜோதி (26). இவருக்கும் கர்நாடக மாநிலம் சிக்கமங்களூர் மாவட்டம் எம்சள்ளி கிராமத்தை சேர்ந்த சிவராஜ் (33) என்பவருக்கும் கடந்த 6 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

    இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாளவாடி அடுத்த பாளையம் கிராமத்தில் தனது தந்தை வீட்டில் 8 மாதமாக குழந்தையுடன் ஜோதி வசித்து வந்தார்.

    இந்நிலையில் சம்ப வத்தன்று மதியம் ஜோதி துணி துவைத்து விட்டு துணியை அங்கு வழக்கம் போல் காய வைக்கும் கம்பியில் போட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசி மயக்கம் அடைந்து ள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமணையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே ஜோதி இறந்து விட்டதாக தெரி வித்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோத னைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

    • கடந்த 5 நாட்களாக சிமெ ண்ட் சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது.
    • கண்ணிமைக்கும் நேரத்தில் எந்திரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே வில்வநத்தம் பகுதியில் கடந்த 5 நாட்களாக சிமெ ண்ட் சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பணியாளர்கள் காலை முதல் மாலை வரை சாலை போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கம்போல் நேற்று காலை இந்த பணி தொடங்கியது. இதில் கிளியனூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மனைவி சரளா (வயது39) ஈடுபட்டு வந்தார். மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது அங்கு நிறுத்தியிருந்த கலவை எந்திரத்தில் சரளாவின் புடவை எதிர்பாராத விதமாக மாட்டிக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் எந்திரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். உடனே அங்கு இருந்த சக பணியாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரளா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கவுரி ஆனத்தூருக்கு வருவதாக கூறியதால், அவரையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றார்.
    • மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.

    விழுப்புரம்: 

    திருவெண்ணைநல்லூர் அருகே ஆனத்தூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. கோவிலுக்கு சென்று வழிபட காரப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 47) என்பவர் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த கவுரி (45) என்பவர் ஆனத்தூருக்கு வருவதாக கூறியதால், அவரையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றார்.

    அரசூர் - பண்ருட்டி சாலையில் ஆனத்தூர் ஏரிக்கரை அருகே சென்ற போது, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் கவுரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தங்கதுரை லேசான காயங்களுடன் சாலையில் கிடந்தனர். அவ்வழியே சென்றவர்கள் இவர்களை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி கவுரி இறந்துபோனார். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாரமங்கலம் மேல் சின்னா கவுண்டம்பட்டி, கொர வங்காட்டைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது (23), தறிப்பட்டறை உரிமையாளர்.
    • சாலையின் குறுக்கே நாய் சென்றதால் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி அங்கிருந்த பாலத்திற்கு நடுவே இருந்த சென்டர் மீடியனில் மோதியது.

    சங்ககிரி:

    –சேலம் மாவட்டம், தார மங்கலம் மேல் சின்னா கவுண்டம்பட்டி, கொர வங்காட்டைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது (23), தறிப்பட்டறை உரிமையாளர். இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் தாய் செல்வியுடன் (47), தார மங்கலத்தில் இருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    சங்ககிரி அருகே ஐவேலி கிராமம், ஐயங்காட்டூர் என்ற இடத்தில் சென்று கொண்டி ருந்தபோது, சாலையின் குறுக்கே நாய் சென்றதால் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி அங்கிருந்த பாலத்திற்கு நடுவே இருந்த சென்டர் மீடியனில் மோதியது. இதில் பின்னால் அமர்ந்தி ருந்த செல்வி தூக்கி வீசப்பட்டு பலத்த காய மடைந்தார். ஆபத்தான நிலையில் இருந்த செல்வியை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சங்ககிரி அரசு ஆஸ் பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோ தித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே செல்வி இறந்து விட்டதாக தெரி வித்தனர். மணிகண்டன் சிறிய காயங்க ளுடன் உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து சங்க கிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்ற னர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பண்ருட்டி அடுத்த மேல் அருங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்புராயன். இவரது நிலத்தில் மணிலா பயிரிட்டுள்ளார். இந்த நிலத்தில் மணிலா அறுவடை பணிக்காகதனலட்சுமி (வயது 65) இன்று காலை சென்றார்.
    • காட்டுப் பன்றிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல் அருங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்புராயன். இவரது நிலத்தில் மணிலா பயிரிட்டுள்ளார். மணிலா பயிரை காட்டு பன்றிகள்அழித்து சேதப்படுத்துவதால், அதனை தடுக்க மின்வேலி அமைத்திருந்தார் இந்த நிலத்தில் மணிலா அறுவடை பணிக்காக பக்கத்து கிராமமான மணம் தவழ்ந்தபுத்தூர் காலணி சேர்ந்த சேட்டு என்பவரது மனைவி தனலட்சுமி (வயது 65) இன்று காலை சென்றார் 

    அப்போது காட்டுப் பன்றிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.  இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மின்சாரம் தாக்கி உயிர் இழந்த தனலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், அரசிடம் அனுமதி பெறாமல் மின்வேலி அமைத்த விவசாயி சுப்புராயனை போலீசார் தேடி வருகின்றனர்.

    • காலை 9 மணி அளவில், வைகுந்தம் அருகே ஈரோட்டில் இருந்து சேலம் செல்லும் சென்னை மார்க்கம் ரெயில்வே தண்டவாளம் அருகே வசந்தி இறந்து கிடந்தார்.
    • இதுகுறித்து தகவல் அறிந்து ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், வைகுந்தம் செல்லப்பம்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி வசந்தி (வயது 43). இவர்களுக்கு திருமணமாகி 23 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.

    இந்த நிலையில், கடந்த நேற்று மாலை வசந்தி வீட்டை விட்டு வெளியேறினார். இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

    இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில், வைகுந்தம் அருகே ஈரோட்டில் இருந்து சேலம் செல்லும் சென்னை மார்க்கம் ரெயில்வே தண்டவாளம் அருகே வசந்தி இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் ரெயிலில் அடிப்பட்டு வசந்தி இறந்தது தெரியவந்தது. வசந்தி மனநலம் பாதித்தவர் என கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறுவாராம்.

    அவரை கணவன் மற்றும் உறவினர்கள் கண்டுபிடித்து அழைத்து வந்து வீட்டில் வைத்து பராமரித்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்த படி ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
    • நரசிம்ம ஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த மூக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னபையன் மனைவி சாரதாம்பாள் (வயது 65). இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தனது மகன் அரவிந்தனுடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்த படி ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி சாரதாம்பாள் இறந்தார். இது குறித்து சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • நேற்றிரவு சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா அருகே உள்ள ஏ.வி.எம். மருத்துவ மனை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
    • ஒரு மோட்டார் சைக்கிள் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    சேலம்:

    சேலம் கொண்டலாம் பட்டியை அடுத்த காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி அம்ஷா (வயது 40), இவர் நேற்றிரவு சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா அருகே உள்ள ஏ.வி.எம். மருத்துவ மனை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக கொண்டலாம்பட்டியில் இருந்து சீலநாயக்கன்பட்டி நோக்கி வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள் ளத்தில் இறந்தார். தகவல் அறிந்த சீலநாயக்கன்பட்டி போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோட்டார் சைக்கிளை ஒட்டி வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×