மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் பலி

தாரமங்கலம் மேல் சின்னா கவுண்டம்பட்டி, கொர வங்காட்டைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது (23), தறிப்பட்டறை உரிமையாளர். சாலையின் குறுக்கே நாய் சென்றதால் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி அங்கிருந்த பாலத்திற்கு நடுவே இருந்த சென்டர் மீடியனில் மோதியது.
மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் பலி
Published on

சங்ககிரி:

–சேலம் மாவட்டம், தார மங்கலம் மேல் சின்னா கவுண்டம்பட்டி, கொர வங்காட்டைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது (23), தறிப்பட்டறை உரிமையாளர். இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் தாய் செல்வியுடன் (47), தார மங்கலத்தில் இருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

சங்ககிரி அருகே ஐவேலி கிராமம், ஐயங்காட்டூர் என்ற இடத்தில் சென்று கொண்டி ருந்தபோது, சாலையின் குறுக்கே நாய் சென்றதால் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி அங்கிருந்த பாலத்திற்கு நடுவே இருந்த சென்டர் மீடியனில் மோதியது. இதில் பின்னால் அமர்ந்தி ருந்த செல்வி தூக்கி வீசப்பட்டு பலத்த காய மடைந்தார். ஆபத்தான நிலையில் இருந்த செல்வியை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சங்ககிரி அரசு ஆஸ் பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோ தித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே செல்வி இறந்து விட்டதாக தெரி வித்தனர். மணிகண்டன் சிறிய காயங்க ளுடன் உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து சங்க கிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்ற னர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com