வானூர் அருகே கலவை எந்திரத்தில் சிக்கி பெண் பலி

கடந்த 5 நாட்களாக சிமெ ண்ட் சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது.கண்ணிமைக்கும் நேரத்தில் எந்திரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
வானூர் அருகே கலவை எந்திரத்தில் சிக்கி பெண் பலி
Published on

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே வில்வநத்தம் பகுதியில் கடந்த 5 நாட்களாக சிமெ ண்ட் சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பணியாளர்கள் காலை முதல் மாலை வரை சாலை போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கம்போல் நேற்று காலை இந்த பணி தொடங்கியது. இதில் கிளியனூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மனைவி சரளா (வயது39) ஈடுபட்டு வந்தார். மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது அங்கு நிறுத்தியிருந்த கலவை எந்திரத்தில் சரளாவின் புடவை எதிர்பாராத விதமாக மாட்டிக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் எந்திரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். உடனே அங்கு இருந்த சக பணியாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரளா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com