சங்கராபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்த படி ஆஸ்பத்திரிக்கு சென்றார். நரசிம்ம ஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சங்கராபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த மூக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னபையன் மனைவி சாரதாம்பாள் (வயது 65). இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தனது மகன் அரவிந்தனுடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்த படி ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி சாரதாம்பாள் இறந்தார். இது குறித்து சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com