திருவெண்ணைநல்லூர் அருகே கோவில் விழாவிற்கு சென்ற பெண் விபத்தில் பலி

கவுரி ஆனத்தூருக்கு வருவதாக கூறியதால், அவரையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றார். மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.
திருவெண்ணைநல்லூர் அருகே கோவில் விழாவிற்கு சென்ற பெண் விபத்தில் பலி
Published on

விழுப்புரம்: 

திருவெண்ணைநல்லூர் அருகே ஆனத்தூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. கோவிலுக்கு சென்று வழிபட காரப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 47) என்பவர் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த கவுரி (45) என்பவர் ஆனத்தூருக்கு வருவதாக கூறியதால், அவரையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றார்.

அரசூர் - பண்ருட்டி சாலையில் ஆனத்தூர் ஏரிக்கரை அருகே சென்ற போது, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் கவுரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தங்கதுரை லேசான காயங்களுடன் சாலையில் கிடந்தனர். அவ்வழியே சென்றவர்கள் இவர்களை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி கவுரி இறந்துபோனார். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com