என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • என்னை நானே திருமணம் செய்து கொண்ட நாள்.
    • நான் செய்த மிகச் சிறந்த காரியம் என்று பதிவிட்டுள்ளார்.

    அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ். இவர் கடந்த 2004-ம் ஆண்டு தனது நண்பர் ஜேசன் அலெக்சாண்டரை திருமணம் செய்தார். ஆனால் 2 நாட்களில் அந்த திருமணத்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.

    அதே ஆண்டு நடிகர் கெவின் பெடர்லைனை திருமணம் செய்தார். அவர்கள் 2007-ம் ஆண்டு விவாகரத்து செய்தனர். அதன்பின் பிரிட்னி ஸ்பியர்ஸ் 2022-ம் ஆண்டு நடிகர் சாம் அஸ்காரியை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணமும் விவாகரத்தில் முடிந்தது.

    இந்த நிலையில் பிரிட்னி ஸ்பியர்ஸ் தன்னை தானே திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணக் கோலத்தில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

    அதில், இது என்னை நானே திருமணம் செய்து கொண்ட நாள். என் வாழ்வில் நான் செய்த மிகச் சிறந்த காரியம் இது. அதை மீண்டும் கொண்டு வருவது சங்கடமாகவோ அல்லது முட்டாள்தனமாகவோ தோன்றலாம். ஆனால் இது நான் செய்த மிகச் சிறந்த காரியம் என்று பதிவிட்டுள்ளார்.

    • நவம்பர் 5 ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
    • 81 பில்லியனர்கள் இதுவரை கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    அமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும் (வயது 60), குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர்.

    தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ளதால் இருவரும் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை ஆதரிக்கும் Future Forward என்ற லாபநோக்கமற்ற நிறுவனத்திற்கு உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் 50 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.420 கோடி) நன்கொடையாக கொடுத்துள்ளார் என்று நியூ யார்க் டைம்ஸ் செய்து வெளியிட்டுள்ளது.

    சுகாதாரத்தை மேம்படுத்துதல், வறுமையைக் குறைத்தல் மற்றும் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதிலும் அர்ப்பணிப்போடு இருக்கும் அதிபர் வேட்பாளரை நான் ஆதரிக்கிறேன் என்று பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

    போர்ப்ஸ் அறிக்கையின்படி, 81 பில்லியனர்கள் இதுவரை கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே சமயம் உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் டிரம்பிற்கு ஆதரவு அளித்து வருகிறார்.

    • அமெரிக்காவில் கடந்த மே மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
    • அமெரிக்க அரசாங்கம் செலவினங்களை தீவிரமாக குறைக்க வேண்டும்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும் (வயது 60), குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ளதால் இருவரும் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே அமெரிக்காவில் கடந்த மே மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஜனாதிபதி ஜோ பைடன் அரசாங்கத்தில் நாட்டின் கடன் சுமார் ரூ.3 ஆயிரம் லட்சம் கோடியை தாண்டியதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து உலக பணக்காரரும், எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது அமெரிக்க அரசாங்கம் செலவினங்களை தீவிரமாக குறைக்க வேண்டும். இல்லையெனில் நாடு விரைவில் திவாலாகும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவர் ஏற்கனவே டிரம்புக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். மேலும் டிரம்பின் பிரசார குழுவினருக்கு நிதி உதவியையும் வாரி வழங்குகிறார். இந்தநிலையில் ஜோ பைடன் அரசாங்கம் குறித்து அவர் விமர்சித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • உயிரிழந்தவர்கள் மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியவர் பற்றிய விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.
    • அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் சியாட்டிலின் தென்கிழக்கில் உள்ள பால்சிட்டி பகுதியில் ஒரு வீட்டில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அந்த வீட்டுக்கு வந்தனர். அப்போது அங்கு 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பிணமாக கிடந்தனர்.

    அவர்கள் அனைவரும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டு இருந்தனர். இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். மேலும் ஒரு சிறுமி காயம் அடைந்திருந்தார். அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உயிரிழந்தவர்கள் மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியவர் பற்றிய விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.

    மேலும் தாக்குதலுக்கான காரணம் குறித்தும் போலீசார் தெரிவிக்கவில்லை. கைதான நபருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையில் என்ன தொடர்பு இருந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாடு முழுவதும் இந்த வகையில் 10 லட்சம் கையொப்பங்களை வாங்க வேண்டும் என்ற திட்டத்தில் அவர் உள்ளார்.
    • முதல் அதிஷ்டசாலியாக ஜான் டிரெஹர் என்பவருக்கு 1 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது.

    உலக பணக்காரருக்கும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் உள்ளிட்டவற்றின் உரிமையாளருமானஎலான் மஸ்க் அமெரிக்க அதிபர் தேர்தல் முடியும் வரை தினமும் ஒருவருக்கு 1 மில்லியன் டாலர் பரிசு வழங்க உள்ளதாக அறிவித்து உள்ளார். அமெரிக்காவில் வரும் நவமபர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸும், குடியரசு வேட்பாளராக டிரம்ப்பும் களம் காண்கின்றனர்.

    இதில் டிரம்பை ஜெயிக்க வைக்க எலான் மஸ்க் படாதபாடு படுகிறார். டிரம்பின் பிரச்சாரத்துக்கு 75 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியதோடு மட்டும் நில்லாமல் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் அனைவரையும் வாயடைக்கச் செய்யும் மேற்கூறிய அறிவிப்பை மஸ்க் தற்போது வெளியிட்டுள்ளார்.

     

    டிரம்புக்கு குறைந்த வாக்கு வங்கி இருக்கும் மாகாணங்களில் வாக்காளர்களை ஒருங்கிணைத்து, பதிவு செய்வது, அவர்கள் வாக்களிப்பதை உறுதி செய்ய அரசியல் நடவடிக்கை அமைப்பு [பிஏசி] என்ற ஒன்றை ஆன்லைன் மூலம் செயல்படுத்தி வருகிறார் எலான் மஸ்க் . இதன்படி துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை உள்ளிட்ட அமெரிக்க அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ள சில சட்டங்களுக்கு ஆதரவு திரட்டி படிவங்களில் கையொப்பம் வாங்கும் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.

     

    நாடு முழுவதும் இந்த வகையில் 10 லட்சம் கையொப்பங்களை வாங்க வேண்டும் என்ற திட்டத்தில் அவர் உள்ளார். முக்கியமாக பென்சில்வேனியாவில் இந்த திட்டம் தீவிரத்துடன் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த படிவத்தில் கையெழுத்திடும் நபர்களில் தேர்தல் நடக்கும் நவம்பர் 5 வரை தினமும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு 1 மில்லியன் டாலர்கள் [சுமார் 8 கோடி ரூபாய்] பரிசாக வழங்கப்படும் என்று மஸ்க் அறிவித்துள்ளார்.

    அதன்படி முதல் அதிஷ்டசாலியாக பென்சில்வேனியாவை சேர்ந்த ஜான் டிரெஹர் என்பவருக்கு 1 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த திட்டத்துக்கு ஜனநாயகவாதிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

    • உணவகத்தில் பிரென்ச் பிரைஸ் பொரித்து வாக்கு அறுவடையில் ஈடுபட்டுள்ளார்.
    • கமலா ஹாரிசை விட தான் 15 நிமிடம் அதிகமாக மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் உழைத்துள்ளேன் என்று தெரிவித்திருக்கிறார்.

    அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகின்றனர்.

    இருவரும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறனர். அந்த வகையில் இந்தியாவில் தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் கையாளும் பார்முலாவை டிரம்ப் கையில் எடுத்துள்ளார். அதாவது, அமெரிக்க மக்களின் விருப்பத்துக்குரிய மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் பிரென்ச் பிரைஸ் பொரித்து வாக்கு அறுவடையில் ஈடுபட்டுள்ளார்.

     

    பென்சில்வேனியாவில் உள்ள மெக்டொனால்ட்ஸ் கிளை ஒன்றில் நேற்றைய தினம் அவர் செஃப் உடை அணிந்து பிரென்ச் பிரைஸ் பொரிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. கமலா ஹாரிசை விட தான் 15 நிமிடம் அதிகமாக மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் உழைத்துள்ளேன் என்று டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

    கமலா ஹாரிஸ் தனது இளமைக்கால நடுதர வாழ்க்கை குறித்தும் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் பணியாற்றியது குறித்தும் பிரகாரங்களில் சிலாகித்து வருவதால் அதை கிண்டலடிக்கும் வகையில் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி நடைபெற்றது.
    • இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது

    அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரத்தால் உயிர்பலி அதிகரித்த வண்ணம் உள்ளன. தற்போது மிசிசிபி மாகாணம் ஹொல்மெஸ் நகரில் பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி வெற்றி விழாவில் ஏற்பட்ட மோதல் துப்பாக்கிசூட்டில் முடிந்துள்ளது.

    இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர்.

    தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரான் மீது இஸ்ரேல் சைபர் தாக்குதல் நடத்தி ரகசியங்களை திருடியது.
    • ஈரான் அணு உலைகள் மற்றும் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிடுகிறது

    பாலஸ்தீனம் மீது கடந்த 1 வருடமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் 42 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள்  உயிரிழந்துள்ளனர். அண்டை நாடான லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது. ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா தலைநகர் பெய்ரூட்டில் வைத்து கொல்லப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து இஸ்ரேல் மீது 180 ஏவுகணைகளை சரமாரியாக ஏவி ஈரான் திடீர் தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரான் அணு உலைகள் மற்றும் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் துடித்து வருகிறது. ஆனால் ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று அமெரிக்கா உறுதி அளித்துள்ளது. இதற்கிடையே ஈரான் மீது சைபர் தாக்குதல் ஒன்றையும் இஸ்ரேல் நடத்தியது. இதில் தங்கள் அரசின் ரகசிய ஆவணகள் திருடப்பட்டகாக ஈரான் குற்றம்சாட்டியது.

    இந்நிலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக இஸ்ரேலின் முயற்சிகள் குறித்த அமெரிக்க உளவுத்துறையில் 2 ரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளன. அமெரிக்காவின் நேஷனல் ஜியோஸ்பாஷியல் இன்டலிஜென்ஸ் ஏஜென்சியில் [NGA] இருந்த இந்த ஆவணங்களானது டெலிகிராமில் கசிந்துள்ளது.

     

    இந்த ஆவணங்களில் ஈரான் தாக்குதலுக்கு இஸ்ரேலிய படைகள் பிரத்யேக பயிற்சி எடுத்துவரும் மற்றும் தாக்குதளுக்கு ஒத்திகை பார்க்கும் சாட்டிலைட் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

     

    முதல் ஆவணத்தில் இஸ்ரேல் விமானப் படை ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த எப்படியெல்லாம் தயாராகி வருகிறது என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன. மற்றொரு வானத்தில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தங்கள் ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை தயார்ப்படுத்தி வருவது குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

    • இதற்கு முன்பு 4 முறை ஏவப்பட்ட நிலையில், இந்த முறை மிகப்பெரிய முயற்சியை ஸ்பேஸ் எக்ஸ் நிகழ்த்தியது.
    • 5 மைல் தொலைவில் இருந்து துல்லியமாக அந்த நிகழ்வு படம்பிடிக்கப்பட்டுள்ளது

    எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், ஸ்டார்ஷிப் மற்றும் பொதுவான விண்வெளி ஃபிளைட்களுக்கான புதிய தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

    அதன்படி, புதிய அட்வான்ஸ் தொழில்நுட்பத்துடன் சிறந்த ஏவுதல் மற்றும் வெற்றிகரமாக திரும்புதலை நோக்கமாக கொண்ட ஸ்பேஸ்எக்ஸ் சமீபத்தில் தனது 5வது விமான சோதனையை நிகழ்த்தியது. இதில், ஸ்டார்ஷிப்பின் சூப்பர் ஹெவி என்று அழைக்கப்படும் மிகப்பெரிய முதல் நிலை பூஸ்டர் விண்ணில் ஏவப்பட்டது.

    இதற்கு முன்பு 4 முறை ஏவப்பட்ட நிலையில், இந்த முறை மிகப்பெரிய முயற்சியை ஸ்பேஸ் எக்ஸ் நிகழ்த்தியது. அதன்படி, 5000 மெட்ரிக் டன் எடை கொண்ட ராக்கெட், ஏவுகணை கோபுரத்தில் இருந்து புறப்பட்ட அதே இடத்தில் வந்து லேண்ட் ஆனது. ஸ்டார்ஷிப் ஆனது "சாப்ஸ்டிக்" என்ற அதன் கைகளால் பூஸ்டரை லாவகமாக பிடித்தது.  விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் மீண்டும் ஏவுதளத்தில் லேண்ட் ஆனது   சாதனையாக பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் 17 ஆயிரம் டாலர் [சுமார் 14.29 லட்சம் ருபாய்] மதிப்புள்ள லென்ஸ் மூலம் ஏவுதளத்திற்கு 5 மைல் தொலைவில் இருந்து துல்லியமாக அந்த நிகழ்வு படம்பிடிக்கப்பட்ட வீடியோவை எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார். அந்த மொத்த நிகழ்வதையும் கச்சிதமாக படம்பிடித்த இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டார் என்றது இஸ்ரேல்.
    • யாஹ்யா சின்வார் உயிரிழந்தது இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் உலகத்துக்கு நல்ல நாள் என்றார்.

    வாஷிங்டன்:

    ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரான் சென்றிருந்தபோது கொல்லப்பட்டார். அவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இதையடுத்து ஹமாசின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் பொறுப்பேற்றார். இதற்கிடையே, காசாவில் கடந்த மாதம் 21-ம் தேதி இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சின்வார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

    இதற்கிடையே, ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் உறுதிப்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் மரணமடைந்தார். இது இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும், உலகத்துக்கும் நல்ல நாள் என பதிவிட்டுள்ளார்.

    • அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது.
    • குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

    அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்பை உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தீவிரமாக ஆதரித்து வருகிறார்.

    தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் வலுவான போட்டியைக் கொண்ட மாநிலங்களில் வாக்காளர்களைக் கவர வேட்பாளர்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், டொனால்ட் டிரம்பின் பிரசாரக் குழுவுக்கு எலான் மஸ்க் 70 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கியுள்ளார். இதன்மூலம் குடியரசு கட்சியின் பெரிய நன்கொடையாளராக எலான் மஸ்க் ஆகியுள்ளார்.

    பென்சில்வேனியாவில் இந்த மாதம் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் எலான் மஸ்க் டிரம்புடன் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எண்ணெய் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது.
    • கச்சா எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம்.

    லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஈரான், இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

    இதற்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் தயாராகி வருகிறது. இதில் ஈரானின் அணு நிலையங்கள் மற்றும் எண்ணெய் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது.


    இதற்கிடையே அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, `சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோபைடன்-இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இடையேயான பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் ஒரு உறுதியை அளித்துள்ளது.

    ஈரானின் அணு நிலையம் தாக்குதல் மற்றும் கச்சா எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று உறுதியளித்துள்ளது. ஈரானின் ராணுவ தளங்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது' என்றார்.

    ×