என் மலர்tooltip icon

    சீனா

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த மாற்றம் லியுவின் கணவருக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது, இறுதியில் அவர் லியுவை விவாகரத்து செய்தார்.
    • ஜோவின் அசைக்க முடியாத காதல் இறுதியில் லியுவை வென்றது.

    சீனாவைச் சேர்ந்த 59 வயதான பெண், இரண்டு இனப்பெருக்க அமைப்புகளைக் கொண்டுள்ளார் . ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க அமைப்புகளை கொண்ட அவர் அரசு ஆவணங்களின்படி பெண் எனவே அறியப்படுகிறார்.

    தென்மேற்கு சீனாவின் பிஷன் கவுண்டியில் உள்ள ஒரு கிராமத்தில் வளர்ந்த பெண் லியு , 18 வயதில் டாங் என்ற நபரை மணந்தார். ஒரு வருடத்திற்கு பின் லியு ஆண் குழந்தையை பிரசவித்தார்.

    இருப்பினும், லியுவின் உடல் விரைவில் விவரிக்க முடியாத மாற்றங்களுக்கு உள்ளாகத் தொடங்கியது. ஆண்ட்ரோஜெனிக் ஹார்மோன்களின் திடீர் எழுச்சி தாடியின் வளர்ச்சிக்கும், மார்பக அளவு குறைவதற்கும், ஆண் இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சிக்கும் வழிவகுத்தது.  இந்த மாற்றம் லியுவின் கணவருக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது, இறுதியில் அவர் லியுவை விவாகரத்து செய்தார்.

     

    விவாகரத்துக்குப் பிறகு, லியு தனது மகனை தனது தந்தையுடன் விட்டுவிட்டு புதிதாகத் ஒரு வாழ்க்கையைத் தொடங்க முடிவு செய்தார். வேறொரு மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்த லியு , அங்கு ஒரு காலணி தொழிற்சாலையில் வேலை பார்த்து ஆணாக வாழ ஆரம்பித்தார்.

    இந்தச் சமயத்தில்தான் லியு, ஜோ [zhou] என்ற பெண் சக ஊழியரைச் சந்தித்தார். இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. ஆரம்பத்தில், லியு தனது தனிப்பட்ட உடல் நிலை காரணமாக ஜோவை காதலிக்க தயங்கினார். இருப்பினும், ஜோவின் அசைக்க முடியாத காதல் இறுதியில் லியுவை வென்றது.

    லியுவின் நிலைமையால் சவால்கள் இருந்தபோதிலும், ஜோ அவரை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தார். இருப்பினும், லியுவின் அடையாள அட்டையில் அவர் பெண் என அடையாளப்படுத்தியதால் அவர்கள் திருமணம் தடைப்பட்டது. சீனாவில் ஓரினச்சேர்க்கை திருமணம் அங்கீகரிக்கப்படாததால், சட்டப்படி இருவரும் திருமணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

     

    பின்னர் அவர் உதவிக்காக தனது முன்னாள் கணவர் டாங்கி -இடம் சென்றார். டாங் ஜோவை திருமணம் செய்து கொள்வார். அவர்களுடன் லியு வாழ்வார் என்ற முடிவு எட்டப்பட்டது.  

     இதன் விளைவாக, டாங் மற்றும் ஜோ அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர். அதே நேரத்தில் லியுவும் ஜோவும் தொடர்ந்து ஜோடியாக வாழ்ந்தனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு லியு மூலம் ஜோ கர்ப்பமாகி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தற்போது 59 வயதான லியு தாயாகவும், தந்தையாகவும் ஒரு அசாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். லியுவின் கதை சீன ஊடகங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் பேசுபொருளாகி வருகிறது. 

    • ஒரு மேடையில் வைக்கப்பட்ட தண்ணீர் கேனில் அவர் இசையை உருவாக்கும் காட்சிகள் உள்ளது.
    • வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இதுபோன்ற ஒரு இசையை தற்போது தான் பார்க்கிறோம் என பதிவிட்டனர்.

    இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப புதிய படிப்புகள் வந்து விட்டன. செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு போன்ற படிப்புகளில் மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதே போல இசை தொடர்பாகவும் புதிய படிப்புகள் அறிமுகமாகி உள்ளன.

    அந்த வகையில் சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தண்ணீர் இசையமைப்பு படிப்பில் பட்டம் பெற்றுள்ளார். அவர் தனது திறமையை மேடையில் செய்து காட்டிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

    அதில், ஒரு மேடையில் வைக்கப்பட்ட தண்ணீர் கேனில் அவர் இசையை உருவாக்கும் காட்சிகள் உள்ளது. ஒவ்வொரு பொருளை வைத்தும், அந்த பொருளை தண்ணீரில் பயன்படுத்தியும் இளம்பெண் இசையை வெவ்வேறு விதமாக உருவாக்குவதை பார்த்த பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர்.

    இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இதுபோன்ற ஒரு இசையை தற்போது தான் பார்க்கிறோம் என பதிவிட்டனர். 



    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • வைரஸ் பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது.

    எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை போன்றே இந்த வைரசால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. சீனாவின் வடக்கு மாகாணங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதில் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வைரஸ் பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பலருக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில் புதிய வைரஸ் குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் குளிர்காலத்தில் ஏற்படும் தொற்று என்றும் சீன அரசு தெரிவித்துள்ளது. சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறும்போது, குளிர்காலத்தில் சுவாச நோய்த்தொற்றுகள் உச்சத்தில் இருக்கும்.

    நோய்களின் தீவிரம் குறைவாக உள்ளது. முந்தைய ஆண்டை விட சிறிய அளவில் பரவுகிறது. சீன குடிமக்கள் மற்றும் சீனாவுக்கு வரும் வெளிநாட்டினரின் ஆரோக்கியத்தில் சீன அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். சீனாவில் பயணம் செய்வது பாதுகாப்பானது. தேசிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிர்வாகத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை கடைபிடிக்குமாறு குடிமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

    எச்.எம்.பி.வி வைரஸ் என்பது ஒரு தொற்று நோயாகும். இது காற்றின் மூலமாகவும் தொடுவதன் மூலமாகவும் பரவுகிறது. இந்த நோய் 2001-ம் ஆண்டு கண்டறியப்பட்டது. இதன் பாதிப்பு 3 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முதன்மையாக குழந்தைகள் மற்றும் வயதானவர்களை இந்த தொற்றுகள் பாதிக்கிறது.
    • வடக்கு மாகாணங்களில் அதிக பாதிப்புகள் பதிவாகி உள்ளது

    உலகையே உலுக்கிய கோவிட்-19 தொற்று சீனாவில் பரவிய 5 வருடங்களுக்கு பின்னர் தற்போது மனித மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) தொற்று அங்கு பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அதிக அளவில் பரவத் தொடங்கியுள்ள இந்த வைரஸால் மருத்துவமனைகளும், மயானங்களும் நிரம்பி வழிவதாக கூறப்படுகிறது.

    குறிப்பாக குழந்தைகள் மருத்துவமனையில் நிமோனியா மற்றும் நுரையீரல் வெண்மை [white lung] பாதிப்பு கொண்ட குழந்தைகள் அதிகம் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த மனித மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV), இன்புளுயென்சா A, மைக்கோபிளாஸ்மா நிமோனியா மற்றும் கொரோனா தொற்று உள்ளிட்ட பல வைரஸ்கள் ஒரே நேரத்தில் பரவி வருவதாக அறிக்கைகள் மற்றும் சமூக ஊடக பதிவுகள் தெரிவிக்கின்றன. மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழியும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.

    சுவாச நோய்கள் அதிகரித்து வரும் போதிலும், சீன அரசாங்கமோ அல்லது உலக சுகாதார அமைப்போ (WHO) அதிகாரபூர்வமாக இன்னும் எந்த எச்சரிக்கையையும் வெளியிடவில்லை. இருப்பினும் சீன அரசு கண்காணிப்பு குழுவை அமைத்து பாதிப்புகளை கண்காணித்து வருகிறது.

    முதன்மையாக குழந்தைகள் மற்றும் வயதானவர்களை இந்த தொற்றுகள் பாதிக்கிறது. ஆஸ்துமா அல்லது சிஓபிடி போன்ற பிரச்னைங்களை கொண்டவர்கள் கடுமையான அபாயங்களை எதிர்கொள்கின்றனர்.

    காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. சில நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இவை மூச்சுக்குழாய் அழற்சி அல்லது நிமோனியாவுக்கு வழிவகுக்கலாம்.

    குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தில் இந்த சுவாச நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கணித்துள்ளனர். சீனாவில், HMPV, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இடையேயும், குறிப்பாக வடக்கு மாகாணங்களில் அதிக பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. 

     

    • தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா உரிமை கொண்டாடி வருகிறது.
    • தைவானுக்கு ஆதரவளிக்கும் பல்வேறு நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

    பீஜிங்:

    சீனாவில் இருந்து 1949-ல் உள்நாட்டுப் போருக்கு மத்தியில் தைவான் பிரிந்தது. ஆனாலும் சீனா தனது ராணுவ பலத்தின் மூலம் தைவானை அடைய தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.

    இதற்கிடையே, தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதனால் தைவானுடன் பல்வேறு நாடுகள் தங்களது தொடர்பை வலுப்படுத்தி வருவது சீனாவுக்கு கடும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

    அதன்படி, தைவானுடன் இணக்கமாக செயல்பட்டு வரும் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், சீன தொலைக்காட்சியில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் புத்தாண்டு செய்தி வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், தைவான் ஜலசந்தியின் இருபுறமும் உள்ள சீனர்களான நாங்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தைவானை சீனாவுடன் இணைப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

    தைவானை தனது பிரதான நிலப்பகுதியின் ஒரு பகுதியாக சீனா உரிமை கோருகிறது. மாற்றம் மற்றும் கொந்தளிப்பு ஆகிய இரண்டும் உள்ள உலகில் சீனா ஒரு பொறுப்பான பெரிய நாடாக, உலகளாவிய நிர்வாக சீர்திருத்தத்தை தீவிரமாக ஊக்குவித்து, உலகளாவிய தெற்கிடையே ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை ஆழமாக்குகிறது என தெரிவித்தார்.

    • இன்டீரியர் நாய்ஸ் மற்றும் பிரேக்கிங் டிஸ்டன்ஸ் ஆகியவற்றில் சர்வதேச அளவில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.
    • சீனாவில் அதிவேக ரெயில் தடம் [HSR] சுமார் 47,000 கி.மீ. தூரத்துக்கு அந்நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கிறது.

    சீனாவின் அதிவேக புல்லட் ரெயிலின் மேம்படுத்தப்பட்ட மாதிரி நேற்று [ஞாயிற்றுக்கிழமை] வெளியிடப்பட்டது. இந்த அதிவேக மாதிரி, சோதனை ஓட்டங்களின் போது 450 கிமீ வேகத்தை எட்டியதாகக் அதை உருவாக்கியவர்கள் தெரிவித்துள்ளனர். இதுவே உலகின் அதிவேக ரெயில் ஆகும்.

    சீன ரெயில்வே துறையான சைனா ஸ்டேட் ரயில்வே குரூப் கோ கூற்றுப்படி, CR450 ப்ரோட்டோடைப் என அழைக்கப்படும் இந்த புதிய மாடல், பயண நேரத்தை மேலும் குறைத்து ரெயில் இணைப்பை இணைப்பை மேம்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

     

    இந்த CR450 மாதிரி மணிக்கு 450 கிலோமீட்டர் [450 kmph] சோதனை வேகத்தை எட்டி, முக்கிய செயல்திறன் இண்டிகேட்டர்களிலும்- செயல்பாட்டு வேகம், எனர்ஜி கன்சம்ஸசன், இன்டீரியர் நாய்ஸ் மற்றும் பிரேக்கிங் டிஸ்டன்ஸ் ஆகியவற்றில் சர்வதேச அளவில் ரெயில்வேயின் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது என்று அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

    தற்போது சீனாவில் பயன்பாட்டில் உள்ள CR400 Fuxing அதிவேக ரெயில் மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் சீன அதிவேக ரெயில் தடத்தில் [HSR] இயங்குகிறது.

     

    இந்நிலையில் அதை விடதற்போது அறிமுகப்டுதொட்டுள்ள CR450 மாதிரி விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர மேலும் சோதனைகளை துரிதப்படுத்தி அதை மேம்படுத்தி வருகிறது. சீனாவில் அதிவேக ரெயில் தடம் [HSR] சுமார் 47,000 கி.மீ. தூரத்துக்கு அந்நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கிறது.

    • சீனாவில் கிங் கோப்பைக்கான சர்வதேச பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் லக்ஷயா சென் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.

    பீஜிங்:

    சீனாவில் கிங் கோப்பைக்கான சர்வதேச பேட்மிண்டன் ஓபன் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில் இன்று நடைபெற்ற அரையிறுதியில் உலக தர வரிசையில் 12-வது இடம் வகிக்கும் இந்தியாவின் லக்ஷயா சென், சீன வீரரான ஹூ ஜே ஆன் உடன் மோதினார்.

    இதில் சென் 19-21, 19-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேரினார்.

    • சீனாவில் கிங் கோப்பைக்கான சர்வதேச பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் லக்ஷயா சென் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    பீஜிங்:

    சீனாவில் கிங் கோப்பைக்கான சர்வதேச பேட்மிண்டன் ஓபன் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில், உலக தர வரிசையில் 12-ம் இடம் வகிக்கும் இந்தியாவின் லக்ஷயா சென், உலக தர வரிசையில் 17-ம் இடம் வகிக்கும் ஹாங்காங்கின் ஆங்கஸ் இங் கா லாங் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை சென் இழந்தார். இதனால் சுதாரித்த சென் அடுத்த இரு செட்களைக் கைப்பற்றினார்.

    இறுதியில் லக்ஷயா சென் 10-21, 21-13, 21-13 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    அரையிறுதியில் சீன வீரரான ஹூ ஜே ஆன் (18) என்பவருடன் சென் மோதுகிறார்.

    • இமயமலையின் மிகப்பெரிய பள்ளத்தாக்கில் அணை கட்ட சீனா முடிவு.
    • 137 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் அணை கட்ட சீனா ஒப்புதல் வழங்கியுள்ளது.

    இமயமலையின் பெரிய பள்ளத்தாக்கில் பிரம்மபுத்திரா நதி இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருசாணச்சல பிரதேசத்திற்கும், வங்கதேசத்தின் வளைந்து செல்லும் பாதையில் அணை கட்ட சீனா திட்டமிட்டுள்ளது.

    இந்திய எல்லை திபெத்தில் சீனா 137 பில்லியன் டாலர் அளவில் உலகில் மிகப்பெரிய அணை கட்ட இருக்கிறது. இதனால் பிரம்மபுத்திராவின் அடிப்பகுதியில் உள்ள மாநிலங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என இந்திய மாநிலங்கள் மற்றும் வங்கதேச மாநிலங்கள் கவலை தெரிவித்துள்ளன.

    மேலும், டெக்டோனிக் தட்டு எல்லையில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் ரீதியாக பலவீனமான இமயமலைப் பகுதியாக அணை கட்டப்படும் பகுதி பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் பிரம்மபுத்திரா அணை திட்டம் கரையோர மாநிலங்களை பாதிக்காது. பாதுகாப்பு கவலை குறித்து 10 வருடங்களுக்கும் மேலாக ஆய்வு செய்துள்ளோம் என சீனாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மயோ நிங் தெரிவித்துள்ளார்.

    உலகின் மிகப்பெரிய அணையால் அடிவாரம் மற்றும் கரையோர பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்பாடு எனத் தெரிவித்துள்ளார்.

    எல்லை தாண்டிய நதிகளின் வளர்ச்சிக்கு சீனா எப்போதும் பொறுப்பாக இருந்து வருகிறது, மேலும் திபெத்தில் நீர்மின்சார மேம்பாடு பல தசாப்தங்களாக ஆழமாக ஆய்வு செய்யப்பட்டு, திட்டத்தின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    உலகின் மிகப்பெரிய திட்டமான இதன் கட்டுமானத்திற்கு கடந்த புதன்கிழமை சீனா அனுமதி வழங்கியுள்ளது.

    இந்த அணையை கட்ட சுமார் 10 வருடத்திற்கு மேல் ஆகும் என கூறப்படுகிறது.

    • சீனாவில் யோகா மற்றும் நடனப் பள்ளி நடத்தி வருகிறார்.
    • பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்கள் கின்னஸ் உலக சாதனைகளை அர்ப்பணிக்க விரும்புகிறோம்.

    ஆந்திர மாநிலம் அனகாபல்லியைச் சேர்ந்தவர் கொனத்தலா விஜய், 2012-ம் ஆண்டு முதல் சீனாவில் வசித்து வருகிறார். இவர் யோகா ஆசிரியராகவும் நடன அமைப்பாளராகவும் உள்ளார்.

    சீனாவில் யோகா மற்றும் நடனப் பள்ளி நடத்தி வருகிறார். 2021-ம் ஆண்டில், யோகா பிரிவின் கீழ் கின்னஸ் உலக சாதனைகளில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றார்.

    அஷ்டவக்ராசனம், மயூராசனம் மற்றும் பகாசனம் போன்ற மேம்பட்ட ஆசனங்களை உள்ளடக்கிய மிக நீண்ட யோகா அமர்வுக்கான சாதனையை அவர் பெற்றுள்ளார்.

    தி ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் நோபல் உலக சாதனைகளிலும் சாதனை படைத்துள்ளார்.

    அவரது மனைவி, கொனத்தலா ஜோதி, கர்ப்பத்தின்போது 9-வது மாதத்தில் (குழந்தை பிறப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பு) மேம்பட்ட யோகாசனங்களைச் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

    விஜய் மற்றும் ஜோதி தம்பதியரின் 14 வயது மகள் கொனத்தலா ஜஸ்மிதா, ஒரு நிமிடத்தில் ஒரே காலில் கயிற்றை வேகமாக இழுத்து சாதனை படைத்துள்ளார்.

    இவர்களது 5 வயது மகனான கொனதலா ஷங்கரும் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஒரு நிமிடத்தில் டிராம்போலைனில் அதிக எண்ணிக்கையிலான கயிறு ஸ்கிப் செய்ததற்காக கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்தார். இந்த குடும்பத்துக்கு நடிகர் சிரஞ்சீவி வாழ்த்து தெரிவித்தார்.

    பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்கள் கின்னஸ் உலக சாதனைகளை அர்ப்பணிக்க விரும்புகிறோம்.

    "இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை மேம்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளுக்காக நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்.

    எங்கள் பயணம் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள பிரதமரை சந்திக்க விரும்புகிறோம். இது எங்கள் குடும்பத்திற்கு ஒரு கனவு என்றனர்.

    • 5 ஆண்டுக்கு பின் இரு நாட்டு சிறப்பு பிரதிநிதிகளின் 23-வது சுற்று பேச்சு சீனாவின் பீஜிங்கில் நடைபெற்றது.
    • சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீயை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்துப் பேசினார்.

    பீஜிங்:

    இந்தியா, சீனா இடையே உள்ள 3,488 கி.மீ. எல்லைப்பகுதியில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் பராமரிப்பது குறித்து விரிவாக விவாதிக்க, சிறப்பு பிரதிநிதிகள் பேச்சு நடத்தும் நடைமுறை கடந்த 2003-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

    கடந்த காலங்களில் இந்த சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை 22 முறை நடத்தப்பட்டுள்ளது. கடைசி கூட்டம் கடந்த 2019-ம் ஆண்டில் தலைநகர் டெல்லியில் நடந்தது.

    அதைத்தொடர்ந்து 5 ஆண்டுக்கு பின், சிறப்பு பிரதிநிதிகளின் 23-வது சுற்று பேச்சு சீனாவின் பீஜிங்கில் நடைபெற்றது.

    தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான பிரதிநிதிகள் குழு, சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீயைச் சந்தித்துப் பேசியது.

    அப்போது, எல்லையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிப்பது, கிழக்கு லடாக்கில் 2020-ல் நடந்த மோதலுக்கு பின் உறவில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்வது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    ரஷியாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் மோடி ஆகியோர் சந்தித்தபோது எட்டப்பட்ட பொதுவான புரிதல்களைச் செயல்படுத்த இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம் என சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்தார்.

    • அதிக ஆபத்தான சூழல்களிலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ போலீசாருடன் சேர்ந்து ரோந்து செல்கிறது.
    • மணிக்கு 35 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ரோபோவில் மேம்பட்ட சென்சார்களும் உள்ளது.

    ரோபோக்கள் பயன்பாடு மருத்துவத்துறை, போக்குவரத்து, கல்வி, வாடிக்கையாளர் சேவை என பல துறைகளிலும் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்நிலையில் சீனாவில் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய கோள வடிவிலான போலீஸ் 'ரோபோ' தெருக்களில் ரோந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இந்த 'ரோபோ' வழக்கமான ரோபோக்கள் போல் அல்லாது கண்காணிப்பு வசதிக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை துரத்தவும், அவர்களை பிடிக்கவும் இந்த 'ரோபோ' உபயோகமாக இருக்கும். நீரிலும், நிலத்திலும் தடையின்றி செயல்படும் வகையில் உருண்டை வடிவில் வடிவமைக்கப்பட்ட இந்த ரோபோ சுற்றுப்புறங்களை விழிப்புடன் கண்காணிக்கிறது.

    அதிக ஆபத்தான சூழல்களிலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ போலீசாருடன் சேர்ந்து ரோந்து செல்கிறது. மணிக்கு 35 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ரோபோவில் மேம்பட்ட சென்சார்களும் உள்ளது. இதன்மூலம் குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடிக்கவும் முடியும்.




    ×