என் மலர்
நீங்கள் தேடியது "இனப்பெருக்கம்"
- சிவகாசி அருகே இனப்பெருக்கத்திற்காக குவிந்துள்ள வெளிநாட்டு பறவைகளை கிராம மக்கள் கண்டு மகிழ்கின்றனர்.
- அவைகளை வேட்டையாடாமல் பாதுகாப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகாசி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கோட்டையூர் கண்மாய் பகுதியில் வெளிநாடுகளில் இருந்து செங்கால் நாரை, நீர் கோழிகள் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வந்துள்ளன.
அவைகள் இங்குள்ள புளியமரம், வேப்பமரம் உள்ளிட்ட மரங்களில் நூற்றுக்கணக்கில் கூடு கட்டி தங்கியுள்ளன. அவைகள் குஞ்சு பொறித்து வளரும் தருவாயில் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தாய் நாட்டிற்கு திரும்பி செல்ல தொடங்கும்.
அதுவரை இங்குள்ள கண்மாயில் மீன்களைப் பிடித்து உண்டு வாழும். பறவைகள் எழுப்பும் சத்தத்தையும், அவைகளின் அழகையும் காண்பதற்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் வந்து செல்வார்கள்.
ஆண்டுதோறும் இனப்பெருக்கத்திற்காக வரும் வெளிநாட்டு பறவைகளை இப்பகுதியை சேர்ந்தவர்கள் துன்புறுத்துவதில்லை. அவர்கள் பறவைகளை தங்களது அழையாத விருந்தாளிகளாகவே கருதுகின்றனர்.
பறவைகள் தங்கி இருக்கும் சமயத்தில் தீபாவளி பண்டிகை வந்தாலும் வேறு ஏதேனும் முக்கிய நிகழ்ச்சிகள் இருந்தாலும் மக்கள் மரங்களில் தங்கியிருக்கும் பறவைகளை கருத்தில் கொண்டு பட்டாசுகளை வெடிக்க மாட்டார்கள். அவைகளை வேட்டையாடாமல் பாதுகாப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த செயல்முறை ஏற்கனவே ராஜ நாகம், வேளா மீன் போன்ற சில உயிரினங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
- கன்னிப் பிறப்பு தன்மை கொண்ட விலங்குகள், அவற்றின் சொந்த மரபணுப் பொருளை இணைக்கும் திறன் பெற்றவை ஆகும்.
அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் பராமரிக்கப்பட்டு வந்த முதலை ஒன்று எவ்வித சேர்க்கையும் இன்றி முட்டைகளில் கரு உருவாகியுள்ளது.
16 ஆண்டுகளாக தனிமையில் பராமரிக்கப்பட்டு வந்த முதலை தானே இனப்பெருக்கம் செய்யும் இந்த செயல்முறை கன்னி பிறப்பு என்று கூறப்படுகிறது.
இந்த செயல்முறை ஏற்கனவே ராஜ நாகம், வேளா மீன் போன்ற சில உயிரினங்களில் பார்த்தீனோஜெனிசீஸ் என்று அழைக்கப்படும் கன்னி பிறப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், கன்னிப் பிறப்பு மூலஎஎம் முதலை ஒன்று தானே இனப்பெருக்கம் செய்து கருவுற்றுள்ளது.
இந்த கன்னிப் பிறப்பு தன்மை கொண்ட விலங்குகள், அவற்றின் சொந்த மரபணுப் பொருளை இணைக்கும் திறன் பெற்றவை என்றும், இதன் மூலம் கன்னிப் பிறப்பு நிகழ்வதாகவும் ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.
- இந்த மாற்றம் லியுவின் கணவருக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது, இறுதியில் அவர் லியுவை விவாகரத்து செய்தார்.
- ஜோவின் அசைக்க முடியாத காதல் இறுதியில் லியுவை வென்றது.
சீனாவைச் சேர்ந்த 59 வயதான பெண், இரண்டு இனப்பெருக்க அமைப்புகளைக் கொண்டுள்ளார் . ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க அமைப்புகளை கொண்ட அவர் அரசு ஆவணங்களின்படி பெண் எனவே அறியப்படுகிறார்.
தென்மேற்கு சீனாவின் பிஷன் கவுண்டியில் உள்ள ஒரு கிராமத்தில் வளர்ந்த பெண் லியு , 18 வயதில் டாங் என்ற நபரை மணந்தார். ஒரு வருடத்திற்கு பின் லியு ஆண் குழந்தையை பிரசவித்தார்.
இருப்பினும், லியுவின் உடல் விரைவில் விவரிக்க முடியாத மாற்றங்களுக்கு உள்ளாகத் தொடங்கியது. ஆண்ட்ரோஜெனிக் ஹார்மோன்களின் திடீர் எழுச்சி தாடியின் வளர்ச்சிக்கும், மார்பக அளவு குறைவதற்கும், ஆண் இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சிக்கும் வழிவகுத்தது. இந்த மாற்றம் லியுவின் கணவருக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது, இறுதியில் அவர் லியுவை விவாகரத்து செய்தார்.

விவாகரத்துக்குப் பிறகு, லியு தனது மகனை தனது தந்தையுடன் விட்டுவிட்டு புதிதாகத் ஒரு வாழ்க்கையைத் தொடங்க முடிவு செய்தார். வேறொரு மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்த லியு , அங்கு ஒரு காலணி தொழிற்சாலையில் வேலை பார்த்து ஆணாக வாழ ஆரம்பித்தார்.
இந்தச் சமயத்தில்தான் லியு, ஜோ [zhou] என்ற பெண் சக ஊழியரைச் சந்தித்தார். இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. ஆரம்பத்தில், லியு தனது தனிப்பட்ட உடல் நிலை காரணமாக ஜோவை காதலிக்க தயங்கினார். இருப்பினும், ஜோவின் அசைக்க முடியாத காதல் இறுதியில் லியுவை வென்றது.
லியுவின் நிலைமையால் சவால்கள் இருந்தபோதிலும், ஜோ அவரை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தார். இருப்பினும், லியுவின் அடையாள அட்டையில் அவர் பெண் என அடையாளப்படுத்தியதால் அவர்கள் திருமணம் தடைப்பட்டது. சீனாவில் ஓரினச்சேர்க்கை திருமணம் அங்கீகரிக்கப்படாததால், சட்டப்படி இருவரும் திருமணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

பின்னர் அவர் உதவிக்காக தனது முன்னாள் கணவர் டாங்கி -இடம் சென்றார். டாங் ஜோவை திருமணம் செய்து கொள்வார். அவர்களுடன் லியு வாழ்வார் என்ற முடிவு எட்டப்பட்டது.
இதன் விளைவாக, டாங் மற்றும் ஜோ அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர். அதே நேரத்தில் லியுவும் ஜோவும் தொடர்ந்து ஜோடியாக வாழ்ந்தனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு லியு மூலம் ஜோ கர்ப்பமாகி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தற்போது 59 வயதான லியு தாயாகவும், தந்தையாகவும் ஒரு அசாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். லியுவின் கதை சீன ஊடகங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் பேசுபொருளாகி வருகிறது.






