என் மலர்
உலகம்

VIDEO: தண்ணீரில் இருந்து இசை உருவாக்கி அசத்திய இளம்பெண்
- ஒரு மேடையில் வைக்கப்பட்ட தண்ணீர் கேனில் அவர் இசையை உருவாக்கும் காட்சிகள் உள்ளது.
- வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இதுபோன்ற ஒரு இசையை தற்போது தான் பார்க்கிறோம் என பதிவிட்டனர்.
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப புதிய படிப்புகள் வந்து விட்டன. செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு போன்ற படிப்புகளில் மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதே போல இசை தொடர்பாகவும் புதிய படிப்புகள் அறிமுகமாகி உள்ளன.
அந்த வகையில் சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தண்ணீர் இசையமைப்பு படிப்பில் பட்டம் பெற்றுள்ளார். அவர் தனது திறமையை மேடையில் செய்து காட்டிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
அதில், ஒரு மேடையில் வைக்கப்பட்ட தண்ணீர் கேனில் அவர் இசையை உருவாக்கும் காட்சிகள் உள்ளது. ஒவ்வொரு பொருளை வைத்தும், அந்த பொருளை தண்ணீரில் பயன்படுத்தியும் இளம்பெண் இசையை வெவ்வேறு விதமாக உருவாக்குவதை பார்த்த பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இதுபோன்ற ஒரு இசையை தற்போது தான் பார்க்கிறோம் என பதிவிட்டனர்.
Next Story






