என் மலர்tooltip icon

    உலகம்

    • வோல்கெல் விமானப் படைதளம் மீது டிரோன்கள் பறந்தது தெரியவந்தது.
    • இதையடுத்து, அவற்றை சுட்டு வீழ்த்த வான் பாதுகாப்பு படையினர் முயன்றனர்.

    ஆம்ஸ்டர்டாம்:

    ஐரோப்பிய நாடுகளில் சமீப காலமாக விமான நிலையம், ராணுவ தளம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் டிரோன்கள் பறப்பது, பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

    இந்நிலையில், நெதர்லாந்தின் வோல்கெல் விமானப் படைதளம் மீது டிரோன்கள் பறந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை சுட்டு வீழ்த்த வான் பாதுகாப்பு படையினர் முயன்றனர். ஆனால் அந்த டிரோன்கள் தப்பிச் சென்றன.

    இதனையடுத்து, ஐன்ட்ஹோவன் விமான நிலைய வான் பகுதியிலும் சில டிரோன்கள் பறந்தன. எனவே பாதுகாப்பு கருதி விமான சேவை சில மணி நேரம் துண்டிக்கப்பட்டது. அடுத்தடுத்து பறந்த டிரோன்களால் அங்கு பரபரப்பு நிலவியது.

    இதுகுறித்து ராணுவ மந்திரி ரூபன் பிரெக்கல்மன்ஸ் கூறுகையில், இனி வரும் காலங்களில் டிரோன் அச்சுறுத்தலை சமாளிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

    • உலகையே உலுக்கிய இந்த விபத்தில் 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
    • கப்பலில் பயணித்தவர்களின் உடைமைகள் மீட்கப்பட்டு அவை ஏலத்துக்கு விடப்படுகின்றன.

    லண்டன்:

    இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவுக்கு 1912-ம் ஆண்டு டைட்டானிக் என்ற கப்பல் புறப்பட்டது. அட்லாண்டிக் பெருங்கடலில் சென்றபோது அந்தக் கப்பல் பனிப்பாறையில் மோதியது.

    உலகையே உலுக்கிய இந்த விபத்தில் 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விபத்து 1997-ம் ஆண்டு டைட்டானிக் என்ற பெயரில் திரைப்படமாக வந்து பலரது கவனத்தையும் ஈர்த்தது.

    இதற்கிடையே, அந்தக் கப்பலில் பயணித்தவர்களின் உடைமைகள் மீட்கப்பட்டு அவ்வப்போது ஏலத்துக்கு விடப்படுகின்றன.

    இந்நிலையில், அமெரிக்க தொழிலதிபரான இசிடோர் ஸ்ட்ராஸ் என்ற பயணியின் தங்க கடிகாரம் ஒன்று இங்கிலாந்தின் வில்ட்ஷயர் நகரில் ஏலத்துக்கு விடப்பட்டது. இந்தக் கடிகாரம் சுமார் ரூ.20 கோடிக்கு விற்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

    இது டைட்டானிக் கப்பல் தொடர்பான நினைவுப் பொருட்களின் அதிகபட்ச ஏலத்தொகை ஆகும். இதன்மூலம் டைட்டானிக் தொடர்பான மொத்த ஏலத்தொகை ரூ.35 கோடியை தாண்டியதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • இந்தப் பட்டியலின் முதலிடத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் உள்ளது.
    • ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் இதில் இரண்டாவது இடத்தை தக்கவைத்தது.

    வாஷிங்டன்:

    உலகின் டாப் 10 சொகுசு நகரங்கள்: வெளியான பட்டியல்/Worlds Top 10 Luxury Cities Of 2025: Best Places to Live, Dine and Shop Lavishly

    2025 ஆம் ஆண்டின் உலகின் முதல் 10 ஆடம்பர நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

    ஆடம்பரம் என்பது செல்வத்தை மட்டுமே குறிக்கவில்லை. நீங்கள் அதை எங்கு செலவிடுகிறீர்கள், எப்படி அனுபவிக்கிறீர்கள், அது உங்களுக்கு வழங்கும் வாழ்க்கை முறை ஆகியவற்றைக் குறிக்கிறது.

    இதனை அடிப்படையாகக் கொண்டே இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இந்தப் பட்டியலின் முதலிடத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் உள்ளது. கிட்டத்தட்ட 900 சிறந்த உணவு விடுதிகள் உள்பட சுமார் 150 விருந்தகங்கள் அந்த நகரை முதலிடத்தில் வைத்துள்ளன.

    ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை தக்கவைத்தது. இங்கு 279 உயர்தர உணவகங்கள், 125 சொகுசு விருந்தகங்கள் இரண்டாவது இடத்தில் வைத்துள்ளன. சுமார் 94,000 லட்சாதிபதிகள் மெல்போர்னை தங்கள் வீடாகக் கொண்டுள்ளனர்.

    இந்தப் பட்டியலில் சூரிச் 3வது இடமும், மியாமி 4வது இடத்தையும், நியூயார்க் 5வது இடத்தையும் பிடித்துள்ளன.

    லாஸ் ஏஞ்சல்ஸ், மிலன், சிங்கப்பூர், சியோல் மற்றும் லண்டன் ஆகிய நகரங்கள் 6 முதல் 10 வரையிலான இடத்தைப் பிடித்தன.

    • நைஜீரியாவில் 12 ஆசிரியர்கள் உள்பட 315 பேர் கடத்தப்பட்டனர்.
    • பாதுகாப்பு கருதி விடுதியுடன் கூடிய பள்ளிகளை தற்காலிகமாக மூட அரசாங்கம் உத்தரவிட்டது.

    அபுஜா:

    ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    இந்தப் பள்ளிக்குள் துப்பாக்கியுடன் ஆயுத கும்பல் நுழைந்தது. பின்னர் துப்பாக்கிமுனையில் 100-க்கும் மேற்பட்டோரை கடத்திச் சென்றதாக தகவல் வெளியானது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் தற்போது 12 ஆசிரியர்கள் உள்பட 315 பேர் கடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.

    இதற்கிடையே கடந்த 17-ந்தேதி கெபி மாகாணத்தில் பள்ளிக்குள் நுழைந்து 25 மாணவிகள் கடத்தப்பட்டனர். இதனால் பாதுகாப்பு கருதி விடுதியுடன் கூடிய பள்ளிகளை தற்காலிகமாக மூட அரசாங்கம் உத்தரவிட்டு இருந்தது. அதனை மீறி பள்ளி செயல்பட்டதே இந்த கடத்தலுக்கு காரணம் என கூறப்படுகிறது.

    முன்னதாக மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கிறிஸ்தவர்களை குறிவைத்து தாக்குதல் நடைபெறுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டி இருந்தார். இந்த சூழலில் அடுத்தடுத்து மாணவர்கள் கடத்தப்படுவது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், கடத்தப்பட்ட 303 மாணவர்களில் சுமார் 50 மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் சேர்க்கப்பட்டனர் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • கடந்த ஜூன் மாதத்திற்குப் பின் பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
    • துல்லியமான தாக்குதலை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    கடந்த ஜூன் மாதத்திற்குப் பிறகு இன்று லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் கடுமையான வகையில் வான்தாக்குதல் நடத்தியுள்ளது.

    துல்லியமான தாக்குதல் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேற்கொண்டு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஹிஸ்புல்லா இது தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

    ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை கீழே போடுமாறு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. லெபனான அரசு, ஹிஸ்புல்லா அமைப்பினரை ஆயுதமில்லா அமைப்பினராக்க ராணுவத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

    அதேவேளையில் ராணுவ திறனை மீண்டும் கட்டமைக்க ஹிஸ்புல்லா முயற்சி செய்து வருவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், லெபனான் அரசு அதை மறுத்துள்ளது.

    • ஷேக் ஹசீனாவுக்கு கடந்த 17-ந்தேதி தீர்ப்பாயம் மரண தண்டனை வழங்கியது.
    • ஏற்கனவே இந்தியாவிடம் வலியுறுத்திய நிலையில் தற்போது கடிதம் எழுதியுள்ளது.

    டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்த நிலையில், வங்கதேச இடைக்கால அரசு, அவரை நாடு கடத்தும்படி இந்திய அரசுக்கு முறையாக கடிதம் எழுதியுள்ளது.

    இந்த கடிதம் நேற்று எழுதப்பட்டுள்ளது. ஆனால், கடிதத்தில் உள்ள தகவல் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

    மனிதகுலத்திற்கு எதிராக குற்றம் செய்ததாக ஷேக் ஹசீனாவுக்கு கடந்த 17-ந்தேதி தீர்ப்பாயம் மரண தண்டனை வழங்கியது.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆகஸ்ட் 5-ந்தேதி ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அவர் இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதனைத் தொடர்நது முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த அரசு ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.

    ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான வன்முறையின்போது சுமார் 1400 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. உரிமைகள் அலுவலகம் தெரிவித்திருந்தது.

    ஏற்கனவே, இரண்டு முறை ஷேக் ஹசீனாவை நாடுகடத்த வங்கதேசம் கேட்டுக்கொண்ட நிலையில், தற்போது முறையாக கடிதம் எழுதியுள்ளது.

    • உலகத்திலேயே வெள்ளத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக வியட்நாம் திகழ்கிறது.
    • வியட்நாம் மக்கள் தொகையில பாதிபேர் மிகவும் பாதிப்பு அடையக்கூடிய இடத்தில் வசித்து வருகின்றனர்.

    வியட்நாமில் கடந்த ஒருவாரமாக பெய்த கனமழையால் 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக, அந்நாட்டின் பேரிடர் தடுப்பு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

    இந்த மாதம் தொடக்கத்தில் கல்மேகி சூறாவளி மற்றும் கனமழையால் வியட்நாம் வெள்ளம் கரைபுரண்டு ஓடி பெரிய அழிவை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த ஒருவாரமாக பெய்த கனமழை மேலும் புரட்டிப்போட்டுள்ளது.

    கனமழை காரணமாக பல வியட்நாமின் மத்திய மலைப் பகுதிகளில் அதிக அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ரெயில் தண்டவாளங்கள், சாலை வழிகள் மிகப்பெரிய அளவில் சேதம் அடைந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் போக்குவரத்து இன்றி சிரமப்பட்டனர்.

    உலகத்திலேயே வெள்ளத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக வியட்நாம் திகழ்கிறது. வியட்நாம் மக்கள் தொகையில பாதிபேர் மிகவும் பாதிப்பு அடையக்கூடிய இடத்தில் வசித்து வருகின்றனர்.

    தென்கிழக்கு ஆசியா முழுவதும் காலநிலை மாற்றத்தால் தீவிர புயல்கள் மற்றும் மழையால் அழிவுக்கான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் அடிக்கடி நிகழும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

    • பேரிடர் மீள்தன்மைக்கான நமது அணுகுமுறை வளர்ச்சி மையமாக இருக்க வேண்டும்.
    • இந்தியா உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்தையும் மிகப்பெரிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தையும் நடத்துகிறது.

    ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்கஸ்பர்க் நகரில் நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் மோடி உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

    மாநாட்டில் யாரையும் பின்தங்க வைக்காத வகையில் உள்ளடக்கிய மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் நடந்த முதல் அமர்வில் பிரதமர் மோடி பேசினார்.

    பின்னர் நடந்த 2-வது அமர்வில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    இயற்கை பேரழிவுகள் மனிதகுலத்திற்கு தொடர்ந்து குறிப்பிடத்தக்க சவாலாக உள்ளன. இந்த ஆண்டும், இயற்கை பேரழிவுகள் உலகம் முழுவதும் பெரும் மக்களை பாதித்துள்ளன. இது இயற்கை பேரழிவுகளை நிவர்த்தி செய்ய உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை தெளிவாக காட்டுகிறது.

    பேரிடர் மீள்தன்மைக்கான நமது அணுகுமுறை வளர்ச்சி மையமாக இருக்க வேண்டும். எனவே பேரிடர் மீள்தன்மை உள்கட்டமைப்புக்கான கூட்டணியை நிறுவ வேண்டும். இதனுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் ஜி-20 நாடுகள் நிதி, தொழில்நுட்பம் மற்றும் திறன்களைத் திரட்டி, மீள் தன்மை கொண்ட எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும்.

    விண்வெளி தொழில்நுட்பம் அனைத்து மனிதகுலத்திற்கும் பயனளிக்க வேண்டும் என்று இந்தியாவும் நம்புகிறது. எனவே இந்தியா ஜி-20 திறந்த செயற்கைக்கோள் தரவு கூட்டாண்மையை முன்மொழிகிறது.

    காலநிலை மாற்றம் மற்றும் பிற சவால்கள் காரணமாக, நமது விவசாயத்துறை, உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மிகவும் கடுமையாகி வருகிறது. எனவே இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல நாடுகளில் விவசாயிகள் உரங்கள், தொழில்நுட்பம், கடன், காப்பீடு மற்றும் சந்தை அணுகல் ஆகியவற்றில் அதிகரித்து வரும் சவால்களை எதிர்கொள்கின்றனர்.

    இந்த சவால்களை எதிர்கொள்ள இந்தியா தனது சொந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் உலகின் மிகப்பெரிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து ஆதரவு திட்டத்தை நாங்கள் நடத்துகிறோம்.

    இந்தியா உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்தையும் மிகப்பெரிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தையும் நடத்துகிறது.

    வலுவான உலகளாவிய பாதுகாப்பு அமைப்பை உருவாக்க ஜி20 நாடுகள் ஊட்டச்சத்து, பொது சுகாதாரம், நிலையான விவசாயம் மற்றும் பேரிடர் தயார்நிலையை ஒருங்கிணைக்கும் விரிவான உத்திகளை ஊக்குவிக்க வேண்டும்.

    இவ்வாறு மோடி பேசினார்.

    • இந்த அமைதி திட்டம் ரஷியாவுக்கு சாதகமாக இருப்பதாக உக்ரைன் கருதுகிறது.
    • நாங்கள் சமாதானத்திற்கு செல்ல விரும்புகிறோம்.

    ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

    இதற்காக அவர் ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இதற்கிடையே ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் 28 அம்ச அமைதி திட்ட முன்மொழிவு ஒன்றை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

    இதில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷியாவுக்கு விட்டுகொடுக்க வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. டிரம்ப்பின் இந்த அமைதி திட்டம் ரஷியாவுக்கு சாதகமாக இருப்பதாக உக்ரைன் கருதுகிறது.

    இதனால் இத்திட்டத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுத்து வருகிறார். இதற்கிடையே அமைதி திட்டத்தை உக்ரைன் ஏற்க வேண்டும் என்று ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தார்.

    இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அமைதிதிட்டத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நிராகரித்தால் அவர் தனது சிறிய இதயத்துடன்தான் போராட வேண்டியதிருக்கும். ஆனால் இந்த திட்டம் பேச்சுவார்த்தைக்கு திறந்தே உள்ளது. இந்த அமைதிதிட்ட வரைவு இறுதி சலுகை அல்ல. நாங்கள் சமாதானத்திற்கு செல்ல விரும்புகிறோம்.

    2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் நான் அதிபராக இருந்திருந்தால் இந்த போர் ஒருபோதும் நடந்திருக்காது என்றார். முன்னதாக போர் நிறுத்த வரைவு திட்டத்தை வருகிற 27-ந் தேதிக்குள் உக்ரைன் ஏற்க வேண்டும்.

    இல்லையென்றால் அமெரிக்கா அளித்துவரும் ஆதரவு நிறுத்தப்படும் என்று டிரம்ப் கூறினார். ஆனால் அமைதி திட்டத்தை உக்ரைன் ஏற்குமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

    இதற்கிடையே இந்த அமைதி வரைவு திட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தி உள்ளன. இந்த நிலையில் இன்று இத்திட்டம் தொடர்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, உக்ரைன் ஆகிய நாடுகளின் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் ஜெனீவாவில் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.

    • பிரேசிலில் முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சனரோ ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டார்.
    • ஆட்சி கவிழ்ப்பு சதியில் தண்டனை பெறும் முதல் பிரேசில் அதிபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரேசிலியா:

    பிரேசிலில் 2019 முதல் 2022-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் ஜெயிர் போல்சனரோ (70). லிபரல் கட்சியைச் சேர்ந்த இவர் 2022-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினார்.

    இதில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் தேர்தலில் தான் தோல்வி அடைந்ததை போல்சனரோ ஒப்புக் கொள்ளவில்லை.

    எனவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மீது சந்தேகம் இருப்பதாக கூறி ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டார். இதனால் அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது அரசு கட்டிடங்களைக் குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்தினர்.

    ஆனால் ராணுவத்தின் முயற்சியால் இந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. இதனையடுத்து ஆட்சி கவிழ்ப்பு சதிக்கு தலைமை தாங்கியதாக ஜெயிர் போல்சனரோவை கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு விசாரணை பிரேசில் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் போல்சனரோவுக்கு 27¼ ஆண்டுகள் தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

    ஆட்சி கவிழ்ப்பு சதியில் தண்டனை பெறும் முதல் பிரேசில் அதிபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த தண்டனையை எதிர்த்து அவர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. எனவே அடுத்த வாரம் அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், போல்சனரோவை முன்னதாகவே கைதுசெய்த போலீசார் பிரேசிலியாவில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கையாக அங்குபோலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு நடந்தது.
    • அமெரிக்க அதிபர் டிரம்ப்​, ரஷிய அதிபர் புதின்​ ஆகியோர் இதில் பங்​கேற்​க​வில்​லை.

    ஜோகன்னஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி 20 அமைப்பின் உச்சி மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகள் என 42 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். அவர்களில் பலருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

    இத்தாலி அதிபர் ஜார்ஜியா மெலோனியுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். உக்ரைன் போர் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

    பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, மாநாட்டின்போது பிரதமர் மோடியை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார். இருவரும் சிறிது நேரம் கலந்துரையாடினர். இரு நாடுகள் இடையிலான பொருளாதார உறவை வலுப்படுத்த இரு தலைவர்களும் உறுதியேற்றனர்.

    ஐ.நா.சபையின் பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி தனித்தனியாக பேசினார்.

    பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்போன்ஸ், கனடா பிரதமர் மார்க் கார்னி, தென்கொரிய அதிபர் லீ ஜே மியூங் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங்ஜி ஆகியோர் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கவில்லை.

    • ஜி20 உறுப்பு நாடுகள் உட்பட 42 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
    • ஆப்பிரிக்க இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு உள்ளிட்ட புதிய முன்னெடுப்புகளை பிரதமர் மோடி முன்மொழிந்தார்.

    ஆப்பிரிக்க கண்டத்தில் முதல்முறையாக நடைபெறும் G20 உச்சி மாநாட்டில், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கான கடன் நிவாரணம், காலநிலை மாற்றம், எரிசக்தி உள்ளிட்ட விவகாரங்கள் பிரதானம் பெறுகின்றன.

    ஜி20 உறுப்பு நாடுகள் உட்பட 42 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் G20 மாநாட்டில் போதைப்பொருள்-பயங்கரவாத தொடர்பை தடுத்தல், சுகாதாரப் பாதுகாப்பு, ஆப்பிரிக்க இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு உள்ளிட்ட புதிய முன்னெடுப்புகளை பிரதமர் மோடி முன்மொழிந்தார்.

    மேலும், அனைவரையும் உள்ளடக்கிய, நிலையான வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், இந்தியா எப்போதும் ஆப்பிரிக்காவுடன் ஒற்றுமையாக துணை நிற்கும் என்றும் பிரதமர் மோடி உறுதி தெரிவித்தார்.

    ×