என் மலர்tooltip icon

    உலகம்

    ஷேக் ஹசீனாவை நாடு கடத்த இந்திய அரசுக்கு வங்கதேசம் கடிதம்..!
    X

    ஷேக் ஹசீனாவை நாடு கடத்த இந்திய அரசுக்கு வங்கதேசம் கடிதம்..!

    • ஷேக் ஹசீனாவுக்கு கடந்த 17-ந்தேதி தீர்ப்பாயம் மரண தண்டனை வழங்கியது.
    • ஏற்கனவே இந்தியாவிடம் வலியுறுத்திய நிலையில் தற்போது கடிதம் எழுதியுள்ளது.

    டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்த நிலையில், வங்கதேச இடைக்கால அரசு, அவரை நாடு கடத்தும்படி இந்திய அரசுக்கு முறையாக கடிதம் எழுதியுள்ளது.

    இந்த கடிதம் நேற்று எழுதப்பட்டுள்ளது. ஆனால், கடிதத்தில் உள்ள தகவல் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

    மனிதகுலத்திற்கு எதிராக குற்றம் செய்ததாக ஷேக் ஹசீனாவுக்கு கடந்த 17-ந்தேதி தீர்ப்பாயம் மரண தண்டனை வழங்கியது.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆகஸ்ட் 5-ந்தேதி ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அவர் இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதனைத் தொடர்நது முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த அரசு ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.

    ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான வன்முறையின்போது சுமார் 1400 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. உரிமைகள் அலுவலகம் தெரிவித்திருந்தது.

    ஏற்கனவே, இரண்டு முறை ஷேக் ஹசீனாவை நாடுகடத்த வங்கதேசம் கேட்டுக்கொண்ட நிலையில், தற்போது முறையாக கடிதம் எழுதியுள்ளது.

    Next Story
    ×