என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி மாணவர்கள் கடத்தல்"

    • நைஜீரியாவில் 12 ஆசிரியர்கள் உள்பட 315 பேர் கடத்தப்பட்டனர்.
    • பாதுகாப்பு கருதி விடுதியுடன் கூடிய பள்ளிகளை தற்காலிகமாக மூட அரசாங்கம் உத்தரவிட்டது.

    அபுஜா:

    ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    இந்தப் பள்ளிக்குள் துப்பாக்கியுடன் ஆயுத கும்பல் நுழைந்தது. பின்னர் துப்பாக்கிமுனையில் 100-க்கும் மேற்பட்டோரை கடத்திச் சென்றதாக தகவல் வெளியானது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் தற்போது 12 ஆசிரியர்கள் உள்பட 315 பேர் கடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.

    இதற்கிடையே கடந்த 17-ந்தேதி கெபி மாகாணத்தில் பள்ளிக்குள் நுழைந்து 25 மாணவிகள் கடத்தப்பட்டனர். இதனால் பாதுகாப்பு கருதி விடுதியுடன் கூடிய பள்ளிகளை தற்காலிகமாக மூட அரசாங்கம் உத்தரவிட்டு இருந்தது. அதனை மீறி பள்ளி செயல்பட்டதே இந்த கடத்தலுக்கு காரணம் என கூறப்படுகிறது.

    முன்னதாக மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கிறிஸ்தவர்களை குறிவைத்து தாக்குதல் நடைபெறுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டி இருந்தார். இந்த சூழலில் அடுத்தடுத்து மாணவர்கள் கடத்தப்படுவது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், கடத்தப்பட்ட 303 மாணவர்களில் சுமார் 50 மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் சேர்க்கப்பட்டனர் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • நைஜீரியாவில் 2-வது முறையாக பள்ளி மாணவர்கள் 100 பேர் கடத்தப்பட்டனர்.
    • ஒரே வாரத்தில் மாணவர்கள் கடத்தப்பட்டது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அபுஜா:

    நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர் உள்பட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இதையடுத்து கடத்தல்காரர்களிடம் இருந்து 2 மாணவிகள் தப்பி ஓடி போலீசில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் உதவியுடன் மற்ற மாணவிகளை மீட்கும் முயற்சியில் போலீஸ் தீவிரமாக இறங்கியது.

    இந்த மீட்பு பணிக்கு உதவுவதற்காக நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி அல்–ஹாஜ்ஜி பெல்லோவை கெபி மாகாணத்துக்குச் செல்ல அதிபர் போலா டினுபு உத்தரவிட்டுள்ளார். கடந்த 2021-ல் பள்ளியில் இருந்து கடத்தப்பட்ட 279 மாணவர்களை மீட்பதில் இவர் முக்கிய பங்காற்றினார்.

    இந்நிலையில், நைஜர் மாகாணம் பாபிரி நகரில் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளி செயல்படுகிறது. இதன் அருகே மாணவர்கள் தங்கும் விடுதியும் அமைந்துள்ளது.

    அந்த விடுதிக்குள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் சிலர் நுழைந்தனர். பின்னர் துப்பாக்கி முனையில் 100 மாணவர்களை அந்த கும்பல் கடத்திச் சென்றது.

    ஒரே வாரத்தில் 2-வது முறையாக பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே, அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தனது அனைத்து வெளிநாட்டுப் பயணங்களையும் ஒத்தி வைப்பதாக அதிபர் போலா டினுபு அறிவித்துள்ளார்.

    • டிஎஸ்பி திருநாவுக்கரசு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் வேலூர் மாநகரப் பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
    • சாலைகளில் வாகன சோதனை தீவிரபடுத்தப்பட்டது.

    வேலூர்:

    வேலூர் கொணவட்டம் பகுதியைச் சேர்ந்த மளிகை கடை அதிபர். இவரது மகன் கொணவட்டம் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று இரவு மாணவன் அதே பகுதியில் உள்ள 10-ம் வகுப்பு படிக்கும் மற்றொரு மாணவன் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றான்.

    அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடினர். ஆனாலும் மாணவன் கிடைக்கவில்லை.

    இரவு 11 மணிக்கு மாணவனின் தந்தைக்கு செல்போனில் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் உங்கள் மகனை கடத்தி வைத்துள்ளோம். ரூ.1 லட்சம் கொடுத்தால் அவனை விட்டு விடுகிறோம். நாங்கள் சொல்கின்ற இடத்தில் பணத்தை கொண்டு வந்து தர வேண்டும் என கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டனர். பதறிப்போன பெற்றோர்கள் இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தனர்.

    டிஎஸ்பி திருநாவுக்கரசு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் வேலூர் மாநகரப் பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    சாலைகளில் வாகன சோதனை தீவிரபடுத்தப்பட்டது. மீண்டும் மாணவனின் பெற்றோருக்கு போன் அழைப்பு வந்தது. அதில் கொணடவட்டம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் மூன்று ஆட்டோக்கள் நிற்கின்றன. அதில் நடுவில் உள்ள ஆட்டோ மீது பணத்தை வைத்து விட்டு செல்லுங்கள் நாங்கள் உங்கள் மகனை விட்டு விடுகிறோம் எனக் கூறினர்.

    இதனை தொடர்ந்து போலீசார் ஒரு பையில் பணம் போல செங்கற்களை அடுக்கி வைத்து அந்த பையை மாணவனின் தந்தையிடம் கொடுத்து அனுப்பினர். அவர் கொணவட்டத்தில் நின்ற ஆட்டோ மீது அந்த பையை வைத்துவிட்டு சென்றார்.

    இதனை மறைந்திருந்து போலீசார் நோட்டமிட்டனர். அப்போது மீண்டும் போனில் பேசிய நபர்கள் நாங்கள் காட்பாடியில் இருக்கிறோம் என்றனர். இதனால் போலீசார் சம்பந்தப்பட்ட செல்போன் குறித்து விசாரணையில் இறங்கினர்.

    அதற்குள் மாணவனின் தந்தைக்கு மீண்டும் போனில் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர்கள் நாங்கள் தற்போது கொணவட்டம் சதுப்பேரி ஏரி கால்வாய் பகுதியில் மறைந்திருப்பதாக கூறினர். அங்கு வந்து பணத்தை தருமாறு தெரிவித்தனர். இதனைதொடர்ந்து போலீசார் கொடுத்த பையுடன் அவரது பெற்றோர்கள் அங்கு சென்றனர்.

    பையை வைத்துவிட்டு சிறிது தூரம் சென்றனர். அப்போது 7-ம் வகுப்பு மாணவனும் அவரது நண்பர் 10-ம் வகுப்பு மாணவர் இருவரும் அங்கிருந்த ஒரு பள்ளத்தில் இருந்து வெளியே வந்தனர். அவர்கள் வந்து பையை எடுத்த போது பதுங்கி இருந்த போலீசார் அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்தனர்.

    அப்போதுதான் மாணவர்கள் கடத்தல் நாடகமாடி போலீசாரை அலைக்கழித்தது தெரியவந்தது.

    இது குறித்து மளிகை கடை அதிபரின் மகன் கூறுகையில்:-

    எனக்கு செல்போன் வாங்க வேண்டும் என ஆசை ஏற்பட்டது. எனது பெற்றோரிடம் கேட்டபோது அவர்கள் வாங்கித் தர மறுத்துவிட்டனர். என் வீட்டில் ஒரு லட்சம் பணம் இருப்பது எனக்கு தெரியும். அதனால் எனது நண்பர் மூலம் கடத்தல் நாடகமாடி பணத்தை பறிக்க திட்டமிட்டோம் என்றார்.

    போலீசார் மாணவர்கள் இருவரையும் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் நேற்று இரவு வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×