என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Students missing"

    • நைஜீரியாவில் 12 ஆசிரியர்கள் உள்பட 315 பேர் கடத்தப்பட்டனர்.
    • பாதுகாப்பு கருதி விடுதியுடன் கூடிய பள்ளிகளை தற்காலிகமாக மூட அரசாங்கம் உத்தரவிட்டது.

    அபுஜா:

    ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    இந்தப் பள்ளிக்குள் துப்பாக்கியுடன் ஆயுத கும்பல் நுழைந்தது. பின்னர் துப்பாக்கிமுனையில் 100-க்கும் மேற்பட்டோரை கடத்திச் சென்றதாக தகவல் வெளியானது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் தற்போது 12 ஆசிரியர்கள் உள்பட 315 பேர் கடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.

    இதற்கிடையே கடந்த 17-ந்தேதி கெபி மாகாணத்தில் பள்ளிக்குள் நுழைந்து 25 மாணவிகள் கடத்தப்பட்டனர். இதனால் பாதுகாப்பு கருதி விடுதியுடன் கூடிய பள்ளிகளை தற்காலிகமாக மூட அரசாங்கம் உத்தரவிட்டு இருந்தது. அதனை மீறி பள்ளி செயல்பட்டதே இந்த கடத்தலுக்கு காரணம் என கூறப்படுகிறது.

    முன்னதாக மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கிறிஸ்தவர்களை குறிவைத்து தாக்குதல் நடைபெறுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டி இருந்தார். இந்த சூழலில் அடுத்தடுத்து மாணவர்கள் கடத்தப்படுவது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், கடத்தப்பட்ட 303 மாணவர்களில் சுமார் 50 மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் சேர்க்கப்பட்டனர் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • நைஜீரியாவில் 2-வது முறையாக பள்ளி மாணவர்கள் 100 பேர் கடத்தப்பட்டனர்.
    • ஒரே வாரத்தில் மாணவர்கள் கடத்தப்பட்டது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அபுஜா:

    நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர் உள்பட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இதையடுத்து கடத்தல்காரர்களிடம் இருந்து 2 மாணவிகள் தப்பி ஓடி போலீசில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் உதவியுடன் மற்ற மாணவிகளை மீட்கும் முயற்சியில் போலீஸ் தீவிரமாக இறங்கியது.

    இந்த மீட்பு பணிக்கு உதவுவதற்காக நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி அல்–ஹாஜ்ஜி பெல்லோவை கெபி மாகாணத்துக்குச் செல்ல அதிபர் போலா டினுபு உத்தரவிட்டுள்ளார். கடந்த 2021-ல் பள்ளியில் இருந்து கடத்தப்பட்ட 279 மாணவர்களை மீட்பதில் இவர் முக்கிய பங்காற்றினார்.

    இந்நிலையில், நைஜர் மாகாணம் பாபிரி நகரில் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளி செயல்படுகிறது. இதன் அருகே மாணவர்கள் தங்கும் விடுதியும் அமைந்துள்ளது.

    அந்த விடுதிக்குள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் சிலர் நுழைந்தனர். பின்னர் துப்பாக்கி முனையில் 100 மாணவர்களை அந்த கும்பல் கடத்திச் சென்றது.

    ஒரே வாரத்தில் 2-வது முறையாக பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே, அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தனது அனைத்து வெளிநாட்டுப் பயணங்களையும் ஒத்தி வைப்பதாக அதிபர் போலா டினுபு அறிவித்துள்ளார்.

    • பாளை பகுதியில் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் டியூசனுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றனர்
    • சென்னை சென்ற போலீசார் 24 மணி நேரத்திற்குள் மாணவர்களை மீட்டு வந்து பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை, பாளை பகுதியில் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்றனர்.

    மாணவர்கள் மாயம்

    பின்னர் அவர்கள் டியூசனுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றனர். அவர்கள் இரவில் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்ைல. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பாளை போலீசில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் நெல்லை மாநகர துணை கமிஷனர் சீனிவாசன் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் பிரதீப் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் வாசிவம், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகமூர்த்தி மற்றும் தலைமை காவலர் நவராஜ் ஆகியோர் காணாமல் போன மாணவர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

    24 மணிநேரத்தில்

    அப்போது மாணவர்கள் சென்னையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னை சென்ற போலீசார் 24 மணி நேரத்திற்குள் மாணவர்களை மீட்டு வந்து பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

    போலீசாரின் இந்த விரைவான செயலுக்கு நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் பாராட்டு தெரிவித்தார்.

    • 5 மாணவர்கள் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.
    • மாயமான இருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியின் கடற்கரை பகுதியான காரைக்கால் கடலில் குளித்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் அலையில் சிக்கி மாயமாகினர்.

    மாணவர்கள் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார். 2 மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மாயமான இருவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் கடற்கரைக்கு சுற்றுலா வந்த நிலையில் இந்த சோக நிகழ்வு நிகழ்ந்துள்ளது.

    ×