என் மலர்
உலகம்
- மீண்டும் அதிபராக தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார் டிரம்ப்
- பல கண்டங்களிலிருந்தும் அமெரிக்காவிற்கு உள்ளே அகதிகள் குவிகிறார்கள் என்றார் டிரம்ப்
அமெரிக்காவில் அடுத்த வருடம் அந்நாட்டு பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது.
இருகட்சி ஜனநாயகம் நடைமுறையில் உள்ள அமெரிக்காவில், தற்போது ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் பிரதமராக உள்ளார். அவர் மீண்டும் அடுத்த வருட தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களம் இறங்க உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட தயாராகி வரும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் நாடு முழுவதும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூ ஹேம்ப்ஷையர் (New Hampshire) மாநிலத்தின் டுர்ஹாம் (Durham) நகரில் ஒரு பேரணியில் டொனால்ட் டிரம்ப் உரையாற்றினார்.
அதில் அவர் தெரிவித்ததாவது:
ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா உள்ளிட்ட பல கண்டங்களிலும் உள்ள பல நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு உள்ளே அகதிகள் குவிந்து வருகின்றனர். அவர்களால் நம் நாட்டு "ரத்தம்" விஷமாகி வருகிறது. அவர்கள் உலகம் முழுவதும் உள்ள மனநல காப்பகங்கள், சிறைச்சாலைகள் உள்ளிட்ட இடங்களை "விஷம்" ஆக்கி வருகின்றனர். மீண்டும் அதிபராக நான் தேர்வானால் இவ்வாறு லட்சக்கணக்கில் மக்கள் சட்ட விரோதமாக நம் நாட்டிற்குள் நுழைவதை முற்றிலும் ஒழித்து விடுவேன்."
இவ்வாறு டிரம்ப் கூறினார்.
தனது பிரசாரம் முழுவதும் எல்லைகளை பலப்படுத்த சட்ட விரோதமாக வரும் அகதிகளை தடுக்க மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக தெரிவித்து வரும் டிரம்ப், ஏற்கெனவே கடந்த செப்டம்பரில் அகதிகளை "அமெரிக்க ரத்தத்தை விஷம் ஆக்குபவர்கள்" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- காசா முழுவதும் தொடர்ந்து குண்டுகள் வீசப்பட்டு வருகிறது.
- இஸ்ரேல் பிணைக் கைதிகள் 80-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காசா:
பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் தாக்குதல் திவிரமடைந்து வருகிறது. காசா முழுவதும் தொடர்ந்து குண்டுகள் வீசப்பட்டு வருகிறது.
இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கிவிட்டது.
காசாவில் ஏராளமான கட்டிடங்கள், குண்டுவீச்சில் தரைமட்டமாகின. மேலும் அங்குள்ள ஆஸ்பத்திரிகளை சுற்றி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காசாவில் உள்ள ஆஸ்பத்திரிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ஆஸ்பத்திரிகளை இஸ்ரேல் குறி வைத்து உள்ளதாக காசாவில் சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
வடக்கு காசாவில் உள்ள கமால் அத்வானி ஆஸ்பத்திரியை இஸ்ரேலின் டாங்கிகள் சுற்றி வளைத்துள்ளன. ஆஸ்பத்திரி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு தளங்கள் சேதமடைந்து உள்ளன. அங்கு நடத்தப்பட்ட சோதனையில் 90 பேரை இஸ்ரேல் ராணுவம் கைது செய்துள்ளது. அங்கு புல்டோசர்கள் மூலம் கட்டிடம் இடிக்கப்பட்டதாகவும் மக்கள் தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காசாவில் மிகப்பெரிய ஆஸ்பத்திரியான அல்-ஷிபாலில் அவசர சிகிச்சைப் பிரிவு முடங்கி உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

காயம் அடைந்தவர்களுக்கு தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவசர சிகிச்சைப் பிரிவில் நூற்றுக்கணக்கான நேபாளிகள் உள்ளனர்.
மேலும் புதிதாக காயம் அடைந்தவர்களும் வந்து கொண்டே இருக்கிறார்கள். காசாவில் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளும் இஸ்ரேல் தாக்குதல் வளையத்துக்குள் உள்ளது. இதனால் நோயாளிகள் தஞ்சமடைந்து பொது மக்கள் தவித்து வருகிறார்கள்.
ரஹிதா என்பவரும் அவரது மகள் சமரும் நடந்து சென்ற போது சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் தேவாலய வளாகத்துக்குள் மற்றவர்களை பாதுகாக்க முயன்றமேலும் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் எந்த எச்சரிக்கையும் கொடுக்காமல் தேவாலய வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஹமாஸ் அமைப்பிடம் இருந்த 3 இஸ்ரேல் பிணை கைதிகளை தவறுதலாக சுட்டுக் கொன்றதை இஸ்ரேல் ராணுவம் ஒப்புக் கொண்டது. இதையடுத்து இஸ்ரேல் பிணைக் கைதிகளை மீட்பதற்கான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்ச மின் நேதன்யாகு உறுதி அளித்துள்ளார். ஏற்கனவே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு ஹமாஸ் அமைப்பிடம் இருந்த இஸ்ரேல் பிணைக் கைதிகள் 80-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அர்ஜென்டினாவில் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
- புயல் பாதிப்பால் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அர்ஜென்டினாவின் துறைமுக நகரமான பஹியா பிளாங்காவில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த புயலால் அங்குள்ள விளையாட்டுக் கழகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நகரத்தில் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதன் எதிரொலியால், சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பாஹியா பிளாங்காவைத் தாக்கிய கனமழை மற்றும் காற்று, ஸ்கேட்டிங் போட்டி நடைபெறும் மைதானத்தின் மேற்கூரையை அடித்து தள்ளியது.
மேலும், இடிபாடுகளில் சிக்கிய மக்களை தீயணைப்பு வீரர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஷேக் சபா செப்டம்பர் 2020-ல் தனது 91 வயதில் இறந்தபோது மன்னராக பொறுப்பேற்றார்.
- 2020-ல் எண்ணெய் விலை வீழ்ச்சியால் ஏற்பட்ட நெருக்கடியின் மூலம் அவர் பொருளாதாரத்தை வழி நடத்த வேண்டியிருந்தது.
எண்ணெய் வளம் மிக்க குவைத்தின் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா, மூன்றாண்டுகள் ஆட்சியில் இருந்த நிலையில் அவர் தனது 86வது வயதில் காலமானார்.
குவைத் அரசின் மன்னர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-சபாவின் மறைவுக்கு மிகுந்த சோகத்துடனும், துக்கத்துடனும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குவைத் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
நவம்பரில், ஷேக் நவாஃப் " உடல்நலப் பிரச்சனை காரணமாக" மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவரது உடல் நலம் நிலையாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் இன்று காலமாகியுள்ளார்.
ஷேக் நவாஃப் 2006ம் ஆண்டில் அவரது சகோதரர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-சபாவால் கிரீட இளவரசராக நியமிக்கப்பட்டார். ஷேக் சபா செப்டம்பர் 2020-ல் தனது 91 வயதில் இறந்தபோது மன்னராக பொறுப்பேற்றார்.
2020-ல் எண்ணெய் விலை வீழ்ச்சியால் ஏற்பட்ட நெருக்கடியின் மூலம் அவர் பொருளாதாரத்தை வழி நடத்த வேண்டியிருந்தது. தற்போதைய பட்டத்து இளவரசர் ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-சபா, மற்றொரு சகோதரர், 83 மற்றும் மேலும் ஒரு இளைய தலைமுறை ஆட்சியாளரை அடுத்த மன்னராக கொண்டு வரப்படுகிறாரா என்பதில் இப்போது அதிக கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 33 நாடுகளின் சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு விசா தேவையில்லை.
- இதில் இந்தியாவும் அடங்கும் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
டெஹ்ரான்:
ஈரான் நாட்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஊக்கப்படுத்தவும் அந்நாட்டு அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு இனி விசா தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டின் சுற்றுலாத்துறை மந்திரி எஸதுல்லாஹ் சர்காமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஈரானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளின் வருகையை ஊக்கப்படுத்தவும் இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு இனி விசா தேவையில்லை என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
ஏற்கனவே மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, கென்யா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்திய பயணிகளுக்கு விசா தேவையில்லை என அறிவித்துள்ளது.
- உயர்நிலை பள்ளியில படித்து வரும் தன் மகனை ரக்பி பயிற்சிக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
- ரக்பி பயிற்சிக்கு செல்லாமல் ஆசிரியையுடன் பல இடங்களுக்கு சென்றுள்ளார்.
அமெரிக்காவின் தென் கரோலினாவில் ஆசிரியை ஒருவர் 18 வயது மாணவருடன் தகாத உறவில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது அந்த மாணவனின் தாய் கையும் களவுமாக பிடித்து ஆசிரியையை போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
தெற்கு கரோலினாவில் உள்ள தெற்கு மெக்லென்பர்க்கில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 18 வயது மாணவன் படித்து வருகிறான். இவனை அவனது பெற்றோர் ரக்பி பயிற்சிக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
ரக்பி பயிற்சிக்கு செல்லாமல் அடிக்கடி 26 வயதான ஆசிரியையுடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதுகுறித்து பெற்றோருக்கு தெரியவந்தது. மேலும், பள்ளியிலும் இதுகுறித்து வதந்தி பரவிய வண்ணம் இருந்துள்ளது.
இதனால் அந்த மாணவின் பெற்றோர் அவனை ரகசியமாக கண்காணிக்க முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் டிராக்கிங் செயலியை (Life360) பயன்படுத்தியுள்ளனர்.
லைஃப் 360 செயலி ஒரு குடும்ப சமூக நெட்வொர்க் செயலியாகும். நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை இந்த செயலி மூலம் ஷேர் செய்து கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்கள் எங்கு உள்ளனர் என்பது குறித்து தகவல் தெரிவிக்கும்.
அந்த மாணவனின் தாய் இந்த செயலியை பயன்படுத்தி தனது மகனை கண்காணித்து வந்துள்ளார். ஒரு நாள் அவரது மகன் இருக்கும் இடத்தை அந்த செயலி மூலம் தெரிந்து கொண்ட தாய், அதன்வழியாக பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
ஆப்போது ஒரு பூங்கா அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் அவரது மகன் இருப்பதாக காண்பித்துள்ளது. அந்த காருக்குள் எட்டிப்பார்த்த அந்த தாய்க்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
அவரது மகன் படித்து வரும் அதே பள்ளியில் வேலைபார்க்கும் ஆசிரியை, அநத மாணவனுடன் தகாத உறவில் இருப்பதை கண்டுள்ளார். இருவரும் ஒன்றாக இருப்பதை போட்டோ எடுத்து, உடனடியாக அதிகாரிக்கு தகவல் கொடுத்துள்ளார். அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆசிரியையை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை ஜாமினில் விடுவித்துள்ளனர்.
அமெரிக்காவில் நன்றி தெரிவிக்கும் நாடு தழுவிய விடுமுறை அக்டோபர் மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை பல்வேறு தேதிகளில் கொண்டாடப்படும். இந்த விடுமுறையின்போதுதான் ஆசிரியை மாணவருடன் தகாத உறவில் ஈடுபட்டு மாட்டிக் கொண்டார்.
- உக்ரைன் மீது போர் தொடங்கிய பிறகு முட்டை விலை கிடுகிடுவென உயர்வு.
- ஒரு டஜன் முட்டை 1.4 டாலருக்கும் அதிகமான விலைக்கு விற்பனை.
ரஷிய அதிபர் புதின் வருடத்தின் இறுதியில் மீடியாக்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம் நேரடியாக உரையாடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்.
அப்போது பென்சன் வாங்கும் முதியவர் ஒருவர் புதினிடம் முட்டை விலை, கோழி இறைச்சி விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளதாக தனது வேதனையை தெரிவித்தார்.
பென்சன் வாங்கும் முதியவர் இப்படி தெரிவித்தவும், இதற்காக "நான் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் இது அரசாங்க பணியின் தோல்வி. எதிர்காலத்தில் இந்த பிரச்சினை சரி செய்யப்பட்டு சூழ்நிலை சரியாகும் என நான் உறுதியளிக்கிறேன்" என்றார்.
ரஷியாவில் பணவீக்கம் மிகவும் மோசமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு 8 சதவீதமாக உயர்ந்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கிய பிறகு முட்டையின் விலை சுமார் 40 சதவீதம் உயர்ந்துள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் பல்வேறு தடைகள் விதித்துள்ளதால் முட்டை உற்பத்தியாளர்கள் கோழி தீவனம் போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் உள்நாட்டு உற்பத்தி மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளதாக தெரிகிறது. மேலும், இறக்குமதி வரியை உயர்த்தியதும் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இறக்குமதி வரியை 1.2 பில்லியன் முட்டைகளுக்கான வரியில் விலக்கு அளிக்க இருப்பதாக ரஷியா அரசு தெரிவித்துள்ளது.
- இலங்கை தலைநகர் கொழும்புவில் ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி தேசிய மாநாடு நடந்தது.
- அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலின் போது நாங்கள் மீண்டும் வலுவாக வருவோம்.
கொழும்பு:
இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நெருக்கடிக்கு அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே தான் காரணம். அவர்கள் இருவரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என போராட்டம் நடந்தது.
இந்த போரட்டம் வன்முறையாக மாறியது. இதையடுத்து கோத்தபய ராஜபக்சேவும், மகிந்த ராஜபக்சேவும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றார். பின்னர் இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவியுடன் இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக மீண்டது.
இலங்கையில் மீண்டும் இயல்பு நிலை திரும்பியதால் வெளிநாட்டில் இருந்த கோத்தபய ராஜபக்சே சொந்த நாடு திரும்பினார்.
ஆனாலும் சில காலம் அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்தார். இந்த சூழ்நிலையில் தற்போது மகிந்த ராஜபக்சே ஆளுங்கட்சி தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி தேசிய மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் 78 வயதான மகிந்த ராஜபக்சே கட்சியின் தலைவராக தேர்வு செய்யபப்பட்டார். அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மாநாட்டில் மகிந்த ராஜபக்சே பேசியதாவது:-
இலங்கையில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியதாக நியாயமற்ற முறையில் நாங்கள் குற்றம் சாட்டப்பட்டு உள்ளோம். விடுதலை புலிகளுடனான போரில் ஈடுபட்ட போது தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் செல்வதை உறுதிபடுத்தினோம். நம்மை அவதூறு செய்து கேலி செய்பவர்கள் அதை தொடரட்டும். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலின் போது நாங்கள் மீண்டும் வலுவாக வருவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஹமாஸின் வலுவான பகுதியாக அறியப்படும் ஷெஜையா பகுதியில் கடும் சண்டை.
- ஹமாஸ் அமைப்பினருக்கும்- இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே நேரடி சண்டை நடைபெற்று வருகிறது.
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. வடக்கு காசா மீது தாக்குதல் நடத்திய நிலையில் தெற்கு காசா பகுதிகளிலும் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஹமாஸின் முக்கிய இடமாக கருதப்படும் ஷெஜையா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளது. இந்த இடத்தில் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் ராணுவத்தினற்கும் இடையே நேரடி சண்டை நடைபெற்று வருகிறது. இதில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலியாகி வருகின்றனர்.
இந்த நிலையில் சண்டையின்போது, இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய நபர்கள் எனக் தவறுதலாக கருதி மூன்று பிணைக்கைதிகளை சுட்டுக்கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
"இஸ்ரேல் ராணுவம் நேற்று தவறுதலாக மூன்று பிணைக்கைதிகளை சுட்டுக்கொலை செய்துள்ளது. அவர்கள் ராணுவ வீரர்களுக்கு அச்சுறுத்தல் தரக்கூடியவர்கள் என தவறுதலாக எடுத்துக் கொள்ளப்பட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு, இந்த நிகழ்வில் இருந்து உடனடியாக பாடம் கற்றுக் கொள்ளப்பட்டு, போரிட்டு வரும் வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது" என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் சோகமான சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.
சுட்டுக்கொலை செய்யப்பட்ட மூன்ற பேர்களில் இருவரின் பெயரை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று ஒருவரின் பெயர் வெளியிடப்படவில்லை.
அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகள் 240-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். தாக்குதலை தீவிரப்படுத்தி அவர்கள் மீட்கும் பணியில் இஸ்ரேல் ராணுவம் சண்டையிட்டு வருகிறது.
- 500க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
- விபத்தில் உயிரிழப்புகள் இல்லை என்றாலும் ரெயிலில் பயணித்தவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
சீனாவின் பெய்ஜிங் மாகாணத்தில் சுரங்கப்பாதையில் நின்று கொண்டிருந்த மெட்ரோ ரெயில் மீது மற்றொரு ரெயில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 102 பயணிகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும், 500க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

ரெயில் விபத்து தொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், தண்டவாளத்தில் பனி படர்ந்திருந்ததால் ரெயில் பாதியில் நிறுத்தப்பட்டது. அப்போது, அதே வழியில் வந்த மற்றொரு ரெயில், பிரேக் பிடித்தும் நிற்காமல் சறுக்கிக் கொண்டே சென்று, நின்று கொண்டிருந்த ரெயில் மீது மோதியது தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழப்புகள் இல்லை என்றாலும் ரெயிலில் பயணித்தவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
- ஆசிப் அலி சர்தாரி 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர்.
- பிலாவல் பூட்டோ 2022-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2023-ம் ஆண்டு ஆகஸ்டு வரை வெளியுறவுத் துறை அமைச்சராக பணியாற்றினார்.
பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அக்கட்சி தலைவரும், முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனுமான பிலாவல் பூட்டோ அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதிபர் வேட்பாளராக அவரது தந்தை ஆசிப் அலி சர்தாரி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆட்சி கவிழ்ந்த பிறகு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்தன. இதில் பிலாவல் பூட்டோ 2022-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2023-ம் ஆண்டு ஆகஸ்டு வரை வெளியுறவுத் துறை அமைச்சராக பணியாற்றினார்.
தற்போது இந்த இரு கட்சிகளும் தேர்தலில் நேருக்கு நேர் மோதுகின்றன. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அறிவிக்கப்பட்டுள்ளார்.
- காசாவில் பொதுமக்கள் பலியாவது அதிகரித்து வரும் நிலையில் தாக்குதலை குறைக்குமாறு இஸ்ரேலை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
- உணவு, தண்ணீர், மருந்து தட்டுப்பட்டால் தவிக்கும் மக்கள் தற்போது உரிய மீட்பு நடவடிக்கையும் கிடைக்காத சூழலில் உள்ளனர்.
பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 3-வது மாதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இதில் குழந்தைகள், பெண்கள் என அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். காசாவில் பலி எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
காசா முனை முழுவதும் இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. வடக்கு, மத்திய, தெற்கு காசா என அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து தாக்குதல் நடக்கிறது.
நேற்று இரவு கான் யூனிஸ் நகரில் குண்டுகள் வீசப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 179 பேர் பலியாகி உள்ளதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கான் யூனிஸ் நகரில் ஹமாஸ் அமைப்பினர்- இஸ்ரேல் ராணுவம் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வடக்கு காசாவில் உள்ள கமல் அத்வான் ஆஸ்பத்திரியில் இஸ்ரேல் ராணுவம் சோதனை நடத்தி வருவதால் அங்குள்ள நோயாளிகள், பொதுமக்கள், டாக்டர்கள் தவித்து வருகிறார்கள் என்று ஐ.நா. தெரிவித்து உள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் காசாவில் மீண்டும் இணைய தள சேவை முடக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாலஸ்தீனிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கூறும்போது, காசாவில் இணைய சேவை மீண்டும் துண்டிக்கப்பட்டு உள்ளன. காசா முழுவதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், காசாவின் அரசாங்க ஊடக அலுவலக தகவல் தொடர்பு முடக்கப்பட்டதால் பலியானவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களை அடைவது கடினமாக இருக்கும் என்று தெரிவித்தது.
இணைய சேவை மற்றும் தகவல் தொடர்பு முடக்கம் காரணமாக காசாவில் மீட்புப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே உணவு, தண்ணீர், மருந்து தட்டுப்பட்டால் தவிக்கும் மக்கள் தற்போது உரிய மீட்பு நடவடிக்கையும் கிடைக்காத சூழலில் உள்ளனர்.
இந்த நிலையில் காசாவில் பொதுமக்கள் பலியாவது அதிகரித்து வரும் நிலையில் தாக்குதலை குறைக்குமாறு இஸ்ரேலை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க தேசிய பாது காப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், இஸ்ரேல் பிரத மர் பெஞ்சமின் தென்யாகு வுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது, வரும் நாட்களில் ஹமாஸ் மீதான போரை குறைக்குமாறு தெரிவித்தார். காசாவில் பொதுமக்களின் உயிர்களை காப்பாற்ற இஸ்ரேல் அதிக அக்கறை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறியுள்ளார்.






