என் மலர்

  நீங்கள் தேடியது "Mahinda Rajapaksa"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே மீது விசாரணை நடந்து வருகிறது.
  • நாட்டைவிட்டு வெளியேற தடை வருகிற 11-ந்தேதி வரை நீட்டிப்பு.

  கொழும்பு :

  இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே மீது விசாரணை நடத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

  இந்த மனு விசாரணைக்கு வருவதற்கு முன்பே கோத்தபய ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அதை தொடர்ந்து கடந்த மாதம் 15-ந்தேதி வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே ஆகிய இருவரும் ஜூலை 28-ந்தேதி வரை நாட்டைவிட்டு வெளியேற தடை விதித்து உத்தரவிட்டது. பின்னர் இந்த தடை ஆகஸ்டு 4-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

  இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தடையை வருகிற 11-ந்தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிரான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது.
  • இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கே இன்று பொறுப்பேற்றார்.

  கொழும்பு:

  இலங்கையில் நிலவும் பொருளாதர நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மனைவியுடன் நாட்டைவிட்டு தப்பி சென்று விட்டார். ஆனால் அவரின் சகோதரர்களான முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவும், முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபக்சேவும் இன்னும் இலங்கையில் தான் உள்ளனர்.

  அவர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தங்களுக்கு எதிரான இந்த வழக்கு விசாரிக்கப்படும் வரை தாங்கள் நாட்டை விட்டு வெளியேறமாட்டோம் என ராஜபக்சே சகோதரர்கள் இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் உறுதியளித்தனர்.

  இந்நிலையில், ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிரான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மகிந்த ராஜபக்சேவும், பசில் ராஜபக்சேவும் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

  நாட்டைவிட்டுச் சென்ற அதிபர் கோத்தபய ராஜபக்சே முறைப்படி தனது பதவியை ராஜினாமா செய்தார். முன்னதாக இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை நியமித்தார். ரணில் இடைக்கால அதிபராக இன்று பொறுப்பேற்றார். ஜூலை 20ம் தேதி புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மனைவியுடன் நாட்டைவிட்டு தப்பி சென்று விட்டார்.
  • ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

  கொழும்பு :

  இலங்கையில் நிலவும் பொருளாதர நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் அந்த நாட்டு மக்கள் கடந்த 9-ந்தேதி அதிபர் மாளிகைக்குள் நுழைந்து சூறையாடினர். நிலைமை கைமீறி போனதை தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் நாட்டை விட்டு தப்பி செல்ல முடிவு செய்தனர். அதன்படி அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மனைவியுடன் நாட்டைவிட்டு தப்பி சென்று விட்டார்.

  ஆனால் அவரின் சகோதரர்களான முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவும், முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபக்சேவும் இன்னும் இலங்கையில் தான் உள்ளனர். அவர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

  இந்த நிலையில் தங்களுக்கு எதிரான இந்த வழக்கு விசாரிக்கப்படும் வரை தாங்கள் நாட்டை விட்டு வெளியேறமாட்டோம் என ராஜபக்சே சகோதரர்கள் இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் உறுதியளித்துள்ளனர்.

  இதனிடையே ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிரான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் 5 நீதிபதிகளை கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இலங்கை பிரதமர் ராஜபக்சே அரசுக்கு எதிராக இன்று நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான குரல் வாக்கெடுப்பு வெற்றி பெற்றதாக பாராளுமன்ற சபாநாயகர் கருஜெயசூர்யா தெரிவித்துள்ளார். #SriLankanparliament #noconfidencemotion #SriLankagovernment
  கொழும்பு:

  இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா பிரதமராக நியமித்தார்.

  ஆனால், அவருக்கு போதிய மெஜாரிட்டி எம்.பி.க்கள் இல்லை. எனவே பாராளுமன்றத்தையே அதிபர் சிறிசேனா  கலைப்பதாக அறிவித்தார். மேலும் பாராளுமன்ற தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டார். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பாராளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்று கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

  அதைத்தொடர்ந்து, பாராளுமன்ற கூட்டத்தை சபாநாயகர் கருஜெயசூரியா கூட்டினார். அதில் பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிராக ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த ஓட்டெடுப்பில் ராஜபக்சே தோல்வி அடைந்தார். இதனால் அவர் பிரதமர் பதவியை இழக்க வேண்டிய நிலை உருவானது.

  இந்த நம்பிக்கை ஓட்டெடுப்பை ஏற்க அதிபர் சிறிசேனா மறுத்து விட்டார். இதனால் அரசியல் குழப்பம் உருவானது. நான்தான் தொடர்ந்து பிரதமராக இருக்கிறேன் என்று ராஜபக்சே கூறினார். நேற்று மீண்டும் பாராளுமன்ற கூட்டம் நடந்த போது எம்.பி.க்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

  இந்நிலையில், சபாநாயகர் கரு ஜெயசூரியா மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் குழுவினர் அதிபர் சிறிசேனாவை  நேற்று மாலை சந்தித்து பேசினார்கள். ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி எம்.பி.க்களும் சென்றிருந்தனர்.

  மேலும், தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி தலைவர் அனுரகுமார திசநாயகே, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்ஹக்கீம், இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் ரிஷாத்பதியூதீன், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோகணேசன் உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.  அப்போது ஐக்கிய தேசிய கட்சி மெஜாரிட்டியை நிரூபித்து இருப்பதால் ஜனநாயக முறைப்படி ஆட்சியை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும், இலங்கையில் சுமூகமாக சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று அதிபரிடம் கேட்டுக் கொண்டனர்.

  ஏற்கனவே நடந்த ஓட்டெடுப்பு பாராளுமன்ற விதிகளின்படி நடத்தப்படவில்லை. அதை ஏற்றுக் கொள்ள முடியாது. நான் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கிறேன். எனவே புதிய ஓட்டெடுப்பை பாராளுமன்ற விதிகளை பின்பற்றி நடத்துங்கள் என்று அதிபர் சிறிசேனா கேட்டுக்கொண்டார்.

  ஏற்கனவே கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சபையில் கொண்டு வந்து விவாதிக்கலாம். அதில் உள்ள முதலாவது ஷரத்தை நீக்கிவிட வேண்டும். ஓட்டெடுப்பின் போது ஒவ்வொரு எம்.பி.யையும் பெயர் சொல்லி அழைத்து அவர் யாருக்கு ஆதரவு அளிக்கிறார் என்று கேட்டு பதிவு செய்து அதன்படி ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்றும் சிறிசேனா கூறினார்.

  இந்நிலையில், சபாநாயகர் கரு ஜெயசூரியா வரலாறு காணாத அளவில் நூற்றுக்கணக்கான போலீசாரின் பாதுகாப்புடன் இன்று பாராளுமன்றத்துக்கு வந்தார். இன்றும் ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் மற்றும் ரணில் விக்ரமசிங்கே ஆதரவு எம்.பி.க்களுக்கு இடையே கடும் வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்டது.

  நிலைமையை சமாளிக்க இயலாமல் அவை காவலர்களும், போலீசாரும் திணறினர். கடுமையான கூச்சல், குழப்பத்துக்கு இடையே பாராளுமன்றத்தை 19-ம் தேதி பிற்பகல் ஒருமணி வரை தள்ளிவைப்பதாக அறிவித்த சபாநாயகர் ஜெயசூரியா,  இன்று நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில் ராஜபக்சேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாகவும் அறிவித்தார். #SriLankanparliament #noconfidencemotion #SriLankagovernment
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ராஜபக்சே பதவி பறிப்பு தீர்மானம் செல்லாது என இன்று ரகளையில் ஈடுபட்ட அவரது ஆதரவு எம்.பி.க்கள் சபாநாயகர் கரு ஜெயசூர்யாவை தாக்கச் சென்றனர். #MahindaRajapaksa #Srilankaparliament
  கொழும்பு:

  இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று  ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.  இதை ஏற்க மறுப்பதாக அதிபர் சிறிசேனாவும், ராஜபக்சேவும் அறிவித்தனர்.

  இந்நிலையில், பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடியது.  பாராளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை இன்று மீண்டும் சமர்பிப்பதாகவும், அதன் மீது வாக்கெடுப்பு நடத்தும்படியும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

  இதனையடுத்து வாக்கெடுப்பு நடத்துவதாக சபாநாயகர் அறிவித்ததை தொடர்ந்து ராஜபக்சேவின் ஆதரவு உறுப்பினர்கள் குழப்பம் விளைவிக்க முயன்றனர்.

  அப்போது உரையாற்றிய ராஜபக்சே, நான் சிறு வயதிலிருந்தே பாராளுமன்றத்திற்கு வந்திருக்கின்றேன். மந்திரி பதவிக்காகவோ, பிரதமர் பதவிக்காகவோ நான் சபைக்கு வரவில்லை. இதனை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என ஆவேசமாக குறிப்பிட்டார்.  அவரது பேச்சை ஆதரவு எம்.பி.க்கள் ஆவேசத்துடன் சபாநாயகர் கரு ஜெயசூர்யா அமர்ந்திருக்கும் பகுதிக்கு ஓடிச்சென்று அவரை தாக்க முயன்றதால் பாராளுமன்றத்தில் கூச்சலும், குழப்புமும் நிலவி வருகிறது.

  இருதரப்பு எம்.பி.க்களும் ஒருவரையொருவர் திட்டியும், மிரட்டியும் கைகலப்புக்கு தயாராகி வருவதால் பாராளுமன்றம் போர்க்களம் போல் காட்சி அளித்தது. #MahindaRajapaksa #Srilankaparliament

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியா வந்துள்ள இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே இன்று டெல்லியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆனந்த் சர்மா ஆகியோரை நேரில் சந்தித்தார். #Rajapaksa #RajapaksainDelhi #ManmohanSingh #RahulGandhi
  புதுடெல்லி:

  பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்புரமணிய சுவாமி ஆரம்பித்த விராத் ஹிந்துஸ்தான் சங்கத்தின் சார்பாக நேற்று பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு சுப்புரமணிய சாமி அழைப்பு விடுத்து இருந்தார்.

  அவரது அழைப்பை ஏற்ற ராஜபக்சே டெல்லி வந்தடைந்தார். அதையடுத்து நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசிய ராஜபக்சே, பல்வேறு தலைவர்களை சந்திப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

  இந்நிலையில், இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஆனந்த் சர்மா ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார். #Rajapaksa #RajapaksainDelhi #ManmohanSingh #RahulGandhi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இலங்கை அதிபராக இரண்டு முறை பதவி பகித்த ராஜபக்சே, மூன்றாவது முறையாக அதிபராக முடியும் என தான் நம்புவதாக கூறியுள்ளார். #MahindaRajapaksa
  கொழும்பு:

  இலங்கையில் தொடர்ந்து இரண்டு முறை அதிபராக இருந்தவர் மகிந்த ராஜபக்சே. இவர் தன்னுடைய ஆட்சி காலத்தில் 2010-ஆம் ஆண்டு, இரண்டு முறை அதிபர் பதவி வகித்தவர், மூன்றாவது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட முடியாது என்கிற சட்டத்தை மாற்றியமைத்தார். அதன்படி 2015-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்சே மூன்றாவது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட்டார். ஆனால் அவர் தோல்வியை தழுவினார். இலங்கை அதிபராக மைத்ரிபால சிறிசேனா அதிபர் ஆனார்.

  அதன் பின்னர் 2010-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தை மாற்றி இரண்டு முறை அதிபர் பதவி வகித்தவர் மூன்றாவது முறை அதிபர் பதவிக்கு போட்டியிட முடியாது என்கிறபடி மீண்டும் சட்டம் திருத்தப்பட்டது. இந்த நிலையில் அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்டு மூன்றாவது முறையாக அதிபராக முடியும் என தான் நம்புவதாக முன்னாள் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.  பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது இதுபற்றி பேசிய அவர், 

  ‘‘அதிபர் தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட முடியும் என்கிற கருத்து இருக்கிறது. 3-வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிடும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளோம். இதில் எங்களுக்கு வெற்றி கிட்டும் என்கிற நம்பிக்கை உள்ளது’’ என கூறினார். #MahindaRajapaksa

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பா.ஜ.க. தலைவர் சுப்ரமணியசாமியின் அழைப்பை ஏற்று இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே செப்டம்பர் 12-ம் தேதி டெல்லி வருகிறார். #MahindaRajapaksa #RajapaksavisitsDelhi
  புதுடெல்லி:

  பா.ஜ.க. தலைவர் சுப்ரமணியசாமி கடந்த 2015-ம் ஆண்டு ‘விராத் ஹிந்துஸ்தான் சங்கம்’ என்ற அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, இந்துத்வா தத்துவத்தை விட்டு விலகாமல் இருக்க இந்து இளைஞர்களை ஒன்றிணைப்பது, பசுவதை தடுப்பு மற்றும் பா.ஜ.க. அரசுக்கு சில விவகாரங்களில் அழுத்தம் அளிப்பது உள்ளிட்டவை இந்த அமைப்பின் நோக்கம் என்று விராத் ஹிந்துஸ்தான் சங்கத்தின் அறிமுக விழாவின்போது சுப்ரமணியசாமி குறிப்பிட்டிருந்தார்.  இந்நிலையில், இந்த அமைப்பின் சார்பில் வரும் செப்டம்பர் மாதம் 12-ம் தேதி டெல்லியில் பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு  இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு சுப்ரமணியசாமி அழைப்பு விடுத்திருந்தார்.

  அவரது அழைப்பை ஏற்ற ராஜபக்சே செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தர சம்மதித்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் சுப்ரமணியசாமி இன்று பதிவிட்டுள்ளார். #MahindaRajapaksa #RajapaksavisitsDelhi 
  ×