என் மலர்tooltip icon

    உலகம்

    • பெஞ்சமின் நேதன்யாகுவின் குடியிருப்பு அமைந்துள்ள செசாரியா [Caesarea] நகரின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
    • அடுத்த கட்ட போருக்கு தாங்கள் தயாராக உள்ளதாக ஹிஸ்புல்லா அறிவித்தது

    பாலஸ்தீனம் மீதும் லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இரு நாடுகளில் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளின் தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டுள்ளனர். தற்போது இஸ்ரேல் படைகளுடன் லெபனான் எல்லையில் சண்டை இட்டு வரும் ஹிஸ்புல்லா இஸ்ரேலின் உட்புற பகுதிகள் மீதும் டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.

    அந்த வகையில் இன்றைய தினம் லெபனானில் இருந்து ஏவப்பட்ட டிரோன்கள் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் குடியிருப்பு அமைந்துள்ள செசாரியா [Caesarea] நகரின் மீது தாக்குதல் நடத்தியுள்ளன.

    இதனால் செசாரியா பகுதியில் நெதன்யாகு இல்லம் அமைத்துள்ள இடத்தின் அருகே உள்ள கட்டிடத்தின் மீது லெபனான் டிரோன் தாக்கியதாகவும் இதில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது. தாக்குதல் நடத்த சமயத்தில் நேதன்யாகு அந்த இல்லத்தில் இருந்தாரா என்பது உறுதி செய்யப்படவில்லை

    மேலும் தலைநகர் டெல் அவிவ் நகருக்கு வடக்கே உலா கிலோட் பகுதியில் இரண்டு டிரோன்கள் பறந்ததாவும் அதை அழித்ததாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொலைக்கு பின்னர் புதிய மற்றும் அடுத்த கட்ட போருக்கு தாங்கள் தயாராக உள்ளதாக ஹிஸ்புல்லா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • தலைவர்க்ளை கொல்வதால் தங்கள் அமைப்பை அழிக்க முடியாது என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.
    • சின்வார் பதுங்கி இருந்த கட்டடத்தின் மீது தங்களின் பீரங்கி குண்டு வீசும் வீடியோவை இஸ்ரேல்வெளியிட்டுள்ளது.

    ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரான் சென்றிருந்தபோது கொல்லப்பட்டார். அவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஹமாஸின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் பொறுப்பேற்றார்.

    இதற்கிடையே, காசாவில் கடந்த மாதம் 21-ம் தேதி இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சின்வார் கொல்லப்பட்டது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலுக்கு முக்கிய மூளையாக சின்வார் செயல்பட்டவர் ஆவார். இந்நிலையில் தலைவர்க்ளை கொல்வதால் தங்கள் அமைப்பை அழிக்க முடியாது என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.

     

    எனவே ஹமாஸின் அடுத்த தலைவராக யார் பொறுப்பேற்கப்போகிறார் என்பதை அனைவரும் கூர்ந்து கவனித்து வருகின்றன. அந்த வகையில் குறிப்பிட்ட சிலரின் பெயர்கள் ஹமாஸ் வட்டாரங்களில் அடிபடுகின்றன. அதன்படி, யாஹ்வா சின்வாரின் இளைய சகோதரர் முகமது சின்வார் தலைவர் பட்டியலில் முதலில் உள்ளார். இவர் ஹமாஸ் ஆயுதப்படைப் பிரிவின் மூத்த கமாண்டர்களுள் ஒருவராக தற்போது செய்யப்பட்டு வருபவர் ஆவார்.

    இவரைத் தவிர்த்து சின்வாரின் வலது கையாக ஹமாஸ் துணைத் தலைவர் செயல்பட்ட கலீல் அல் ஹய்யா பட்டியலில் உள்ளார். கத்தாரில் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் ஹமாஸ் சார்பில் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்தியவரும் இவரே.

    ஆனால் இவர் வெளியுலகுக்கு அதிகம் தெரிந்தவராகவும் வெளிநாட்டில் உள்ளதாலும் யுத்த களத்தில் இவர் செயல்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இவர்களை தவிர்த்து 2004 முதல் 2017 வரை ஹமாஸ் அமைப்பின் தலைவராக  இருந்த காலெத் மஸீல் தற்போது கத்தாரில் உள்ள நிலையில் அவரும் தேர்வு பட்டியலில் உள்ளார். மேலும் ஹுஸ்மான் பாத்ரான் என்ற உயர்மட்ட தலைவரும் பட்டியலில் உள்ளார்.

     

    யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து ஹமாஸ் தீவிரமாகஆலோசித்து வருகிறது. போர் முடிவுக்கு வரும் வரை இஸ்ரேல் பிணை கைதிகளை விடுவிக்க மாட்டோம் என்று ஹமாஸ் துணைத்தலைவர் கலீல் அல் ஹய்யா தெரிவித்துள்ளார். இதற்கிடையே யாஹ்யா சின்வார் பதுங்கி இருந்த கட்டடத்தின் மீது தங்களின் பீரங்கி குண்டு வீசும் வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.

    • ரஷிய ராணுவம் உலகின் மிகவும் போர்த்திறன் வாய்ந்த மற்றும் உயர் தொழில்நுட்பப் படைகளில் ஒன்றாக மாறியுள்ளது.
    • பிரிக்ஸ் ஒருபோதும் யாருக்கும் எதிரானது கிடையாது.

    ரஷியாவில் பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு வருகிற 22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

    இந்த நிலையில் ரஷிய அதிபர் புதின் தனது அதிகாரப்பூர்வ இல்லமான நோவோ-ஓகாரியோவோவில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்திய பிரதமர் மோடி எனது நண்பர். அவருடன் சமீபத்திய பேச்சுவார்த்தைகளின் போது ரஷியா-உக்ரைன் போர் குறித்து மிகுந்த கவலை தெரிவித்தார். மோடியின் இந்த அக்கறைக்கு ரஷியா நன்றியுடன் இருக்கிறது. மோடியை சந்திக்கும் போது இந்திய திரைப்படங்களுக்கு மேலும் ஊக்கம் அளிப்பது குறித்து விவாதிக்கலாம்.

    உக்ரைன் உடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான காலக்கெடுவை அமைப்பது கடினமாக இருக்கும். ரஷியாவை போரில் அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு தள்ளியது. ரஷிய ராணுவம் உலகின் மிகவும் போர்த்திறன் வாய்ந்த மற்றும் உயர் தொழில்நுட்பப் படைகளில் ஒன்றாக மாறியுள்ளது.

    எங்களுக்கு எதிராக இந்தப் போரை நடத்துவதில் நேட்டோ சோர்வடையும். போரில் எங்களது கை ஓங்கி இருக்கிறது. நாங்கள் வெற்றி பெறுவோம். உக்ரைன் ராணுவம், துல்லியமான ஆயுத விநியோக அமைப்புகளை சொந்தமாக கையாள முடியாது. சமாதான பேச்சுவார்த்தையை நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அந்த முயற்சிகளில் இருந்து உக்ரைன் பின் வாங்குகிறது.

    பிரிக்ஸ் ஒருபோதும் யாருக்கும் எதிரானது கிடையாது. இதை பிரதமர் மோடி சரியாக தெரிவித்து உள்ளார். பிரிக்ஸ் அமைப்பு மேற்கத்திய நாடுகளுக்கு எதிரானது அல்ல. ரஷியா, அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதற்கு காரணம் அமெரிக்கா தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காசா மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும்.
    • ஹமாஸ் அமைப்புக்கு புதிய தலைவராக காசாவுக்கு வெளியே வெளிநாட்டில் இருக்கும் ஒருவரை தேர்ந்தெடுக்க அந்த அமைப்பு பரிசீலித்து வருகிறது.

    டெல்அவிவ்:

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 44 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இதற்கிடையே ஹமாஸ் தலைவர் யாஹியாசின் வாரை இஸ்ரேல் ராணுவம் கொன்றது. சில மாதங்களுக்கு முன்பு ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட பிறகு புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட யாஹியா சின்வாரும் கொல்லப்பட்டது ஹமாஸ் அமைப்புக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. யாஹியா சின்வார் உயிரிழந்ததை ஹமாஸ் அமைப்பும் உறுதி செய்தது.

    இதையடுத்து இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வலியுறுத்தி உள்ளன.

    இந்த நிலையில் காசாவில் இருந்து இஸ்ரேல் ராணுவத்தினர் வெளியேறாதவரை பிணைக்கைதிகளை விடுவிக்க மாட்டோம் என்று ஹமாஸ் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக ஹமாஸ் துணைத்தலைவர் கலீல் அல் ஹய்யா கூறும்போது, காசா மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும். இஸ்ரேல் படைகள் முற்றிலும் திரும்பப்பெற வேண்டும். சிறையில் உள்ள எங்கள் அமைப்பினர் விடுதலை செய்யப்பட வேண்டும்.

    காசாவில் எங்கள் மக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பு நிறுத்தப்படும் வரை எந்த பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றார்.

    இதற்கிடையே ஹமாஸ் அமைப்புக்கு புதிய தலைவராக காசாவுக்கு வெளியே வெளிநாட்டில் இருக்கும் ஒருவரை தேர்ந்தெடுக்க அந்த அமைப்பு பரிசீலித்து வருகிறது.

    இந்த நிலையில் வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேலின் தாக்குதலில் 33 பேர் பலியானார்கள். 80-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    • யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது போருக்கான முடிவுக்கு வழிவகுக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்
    • இந்த தாக்குதலில் 85 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர்.

    ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது போருக்கான முடிவுக்கு வழிவகுக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு நேற்றைய தினம் பேசியிருந்தார்.

    இந்நிலையில் நேற்று [வெள்ளிக்கிழமை] மாலை வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் முகாமில் தஞ்சமடைந்திருந்த 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 21 பேர் பெண்கள்  என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இடிபாடுகளுக்கிடையில் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை 50 வரை உயரும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் இந்த தாக்குதலில் குழந்தைகள் 85 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர்.

     

    ஜபாலியா முகாமில் உள்ள பல்வேறு தற்காலிக குடியிருப்புகள் மீதும் வான்வழியாக வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன. கடந்த ஒரு வருடமாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 42,500 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 99,௦௦௦ பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர். காசாவில் மொத்தம் 8 பெரிய அகதி முகாம்கள் உள்ளன.  அவற்றுள் மிகப்பெரியது ஜபாலியா அகதிகள் முகாம் ஆகும்.

    • தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா உரிமை கொண்டாடி வருகிறது
    • லடாக் எல்லையில் சீனா தங்களின் ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது

    இந்தியவனுடன் தைவான் நெருக்கம் காட்டுவதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லி, சென்னையை தொடர்ந்து தற்போது மும்பையிலும் தைவான் தூதரக அலுவலகத்தை திறந்துள்ளது.

    தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில் இந்தியாவுடனான தொடர்பைத் தைவான் வலுப்படுத்தி வருவது சீனாவுக்கு புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நியாங், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியான தைவானுடன் எந்தவொரு அதிகாரப்பூர்வ தொடர்புகளையும் இந்தியா தவிர்க்க வேண்டும். பீஜிங் உடன் தூதரக உறவு வைத்துள்ள நாடுகள், தைவானுடன் அலுவலக உறவை ஏற்படுத்துவது கூடாது.

    சீன-இந்திய உறவுகளை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளில், இவ்விவகாரம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். லடாக் எல்லையில் சீனா தங்களின் ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
    • நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக ஷேக் ஹசீனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அளிக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடுக்கு எதிராக மாணவர்களின் போராட்டத்தில் வன்முறை வெடித்து ஏராளமானோர் பலியானார்கள். இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலக கோரி மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். இதனால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

    இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே மாணவர்கள் போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக ஷேக் ஹசீனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் 4 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருந்தது. ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்று இந்தியாவிடம் வங்காள அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறது.

    இந்த நிலையில், ஷேக் ஹசீனா உள்ளிட்ட 45 பேருக்கு பிடிவாரண்ட்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ஷேக் ஹசீனாவை வரும் நவம்பர் 18-ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்தவும் வங்கதேச குற்றவியல் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு தொடர்ந்த வழக்கில் வங்கதேச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனிடையே இந்தியாவில் உள்ள ஹசீனாவை நாடு கடத்த வங்கதேச இந்தியாவுக்கு அதிக அழுத்தம் தரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • வட கொரிய நாடாளுமன்றம் கூட்டப்பட்டு அரசியலமைப்பில் திருத்தும் கொண்டுவரப்பட்டுள்ளது.
    • இரு கொரியாவையும் இணைக்கும் முயற்சியைக் கைவிட சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    ரஷியா சீனா வரிசையில் மற்ற நாடுகளை விட்டு தனித்து இயங்கும் நாடு வட கொரியா. முன்கூறிய நாடுகளை விட வட கொரியா தன்னை மேலதிகமாகவே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளது. கொரிய தீபகற்பத்தில் ஒரே நாடாக இருந்த கொரிய சாம்ராஜ்யம் 1910 முதல் 1945 வரை ஜப்பானின் காலனியாக இருந்தது.

    இரண்டாம் உலகப் போரில் தோல்வியை ஒப்புக்கொண்டு ஜப்பான் சரணடைந்த பின்னர் அதே வருடத்தில் சுதந்திரம் பெற்ற கொரியா இரண்டாகப் பிரிந்தது. வரலாற்றின் போக்கில் 2 நாடுகளும் பகையாளிகளாக மாறின. அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டுவதாலும் தென் கொரியாவுடன் தொடர்ந்து பகைமை பாராட்டும் வட கொரியா தொடர்ந்து அந்நாட்டுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

     

    குப்பை பலூன்களை அனுப்புவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட வட கொரியா கடந்த சில தினங்களுக்கு முன்னர் தென் கொரியாவுடன் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தாமல் இருந்த சாலை மற்றும் ரெயில் இணைப்புகளை முற்றிலுமாக அழித்தது. இந்நிலையில் தென் கொரியாவை தனி நாடாக அங்கீகரித்தும் எதிரி நாடு என்றும் வட கொரியா அதிரடியாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கடந்த வாரம் வட கொரிய நாடாளுமன்றம் கூட்டப்பட்டு அரசியலமைப்பில் திருத்தும் கொண்டுவரப்பட்டுள்ளது.

    இரு கொரியாவையும் இணைக்கும் முயற்சியைக் கைவிட தனது அரசியலைப்பில் வடகொரியா திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது. சமீபத்தில் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு அணு ஆயுத எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    தற்போது தென் கொரியாவை எதிரி நாடாக வரையறுத்துள்ளது தனது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்காகவா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த சட்டத்திருத்தத்துக்குத் தென் கொரியா கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. இரு கொரியாவையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று தென் கொரியா தெரிவித்துள்ளது.

    • ஹமாஸுக்கு ஆதரவாக அண்டை நாடான லெபனானில் இயங்கிவரும் ஹிஸ்புல்லா மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
    • லெபனானில் சுமார் 12 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

    ஹமாஸ் 

    ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரான் சென்றிருந்தபோது கொல்லப்பட்டார். அவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து ஹமாசின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் பொறுப்பேற்றார். இதற்கிடையே, காசாவில் கடந்த மாதம் 21-ம் தேதி இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சின்வார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

    இஸ்ரேல் 

    தற்போது அதை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது. சின்வார் கட்டிடம் ஒன்றில் உயிரிழந்த நிலையில் கிடக்கும் டிரோன் வீடியோவை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் தங்களின் முக்கிய நோக்கம் நிறவெறி உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1200 பேர் வரை கொல்லப்பட்டனர். 200 பேர் வரை பணய கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இதில் பெருமபலானோர் மீட்கப்பட்டனர். இதற்கு பதிலடியாக காசா உள்ளிட்ட பாலஸ்தீனியர்களை நகரங்களின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 41,500 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

    லெபனான்

    இதற்கிடையே ஹமாஸுக்கு ஆதரவாக அண்டை நாடான லெபனானில் இயங்கிவரும் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். தொடர்ந்து லெபனானில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.

    இதன் காரணமாக லெபனானில் சுமார் 12 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து க்கும் மேல் உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன. இந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் 180 ஏவுகணைகளை ஏவி ஈரான் திடீர் தாக்குதலை நடத்தியது. இதனால் எந்த நேரமும் ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தலாம் என்ற நிலை உள்ளது.

    ஹிஸ்புல்லா 

    இதற்கிடையே தலைவரின் மறைவால் சற்று தொய்வடைந்த ஹிஸ்புல்லா மீண்டும் தீவிரமாக இஸ்ரேல் படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானில் இதுவரை நடந்த தாக்குதலில் 55 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

    புதிய போர்

    மேலும் தற்போது ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது குறித்தும் ஹிஸ்புல்லா அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இஸ்ரேலுக்கு எதிரான புதிய மற்றும் அடுத்த கட்ட போரை நோக்கி தாங்கள் முன்னேறி வருவதாகத் தெரிவித்துள்ளது. மேலும் ஹமாஸ் தலைவர் மறைவு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஈரான், ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொலை இஸ்ரேலை எதிர்க்கும் உறுதியை மேலும் வலுப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது. இதனால் ஈரானும் ஹிஸ்புல்லாவும் அடுத்து என்ன செய்யப்போகிறது என்ற பதற்றம் உலக அரங்கில் ஏற்பட்டுள்ளது. சிவார் கொல்லப்பட்டதை உறுதி செய்யாத ஹமாஸ், தங்கள் அமைப்பை அழைக்க முடியாது என்று மட்டும் கூறியுள்ளதும் கவனிக்கத்தக்கது.

    • யாஹ்ஸா சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
    • யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது குறித்து நேதன்யாகு கருத்து தெரிவித்துள்ளார்.

    காசா எல்லையில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது, போர் முடிவதற்கான துவக்கப் புள்ளி என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்தார். நீண்ட கால தேடலுக்கு பிறகு தெற்கு காசா எல்லையில் வைத்து ஹமாஸ் தலைவர் யாஹ்ஸா சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

    "காசாவில் நடைபெறும் போரின் இறுதி இதுவல்ல என்ற போதிலும், முடிவுக்கான ஆரம்ப புள்ளி இதுதான். சின்வார் கொலை ஹமாஸ் வீழ்ச்சியில் மிக முக்கிய மைல்கல்," என்று பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்தார்.

    இந்த நிலையில், ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்படும் முன் எடுக்கப்பட்ட அவரின் கடைசி நொடிகள் குறித்த வீடியோவை இஸ்ரேல் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் பாதுகாப்பு துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ள வீடியோ காண்பிக்கும் யாஹ்யா சின்வாரின் கடைசி நொடிகள் டிரோன் கேமராவில் பதிவு செய்யப்பட்டவை ஆகும்.

    தற்போது கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய மிகக் கொடூர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டார் என்று கூறப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் ஹமாஸ் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட பிறகு, யாஹ்யா சின்வார் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். 


    • குழந்தை ஒன்று மூன்று ஆணுறுப்புகளுடன் பிறந்தது.
    • வாழ்நாள் முழுக்க தன் நிலையை அறியாமலேயே வாழ்ந்திருக்கலாம்.

    பிரிட்டனை சேர்ந்த நபர் ஒருவருக்கு மூன்று ஆண்குறிகள் இருப்பது மருத்துவ உலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மிகவும் அரிய பிறவி குறைபாடு என்ற வகையிலும் இது உலகில் இரண்டாவது நிகழ்வு ஆகும். மருத்துவ உலகில் இது 'டிரிஃபாலியா' என்று அழைக்கப்படுகிறது.

    2020 ஆம் ஆண்டு ஈராக் நாட்டின் டுஹோக்கில் டிரிஃபாலியா குறைபாட்டை மருத்துவர்கள் முதன் முதலில் பதிவு செய்தனர். அப்போது குழந்தை ஒன்று, 3 ஆணுறுப்புகளுடன் பிறந்தது.

    பர்மிங்காம் மருத்துவப் பள்ளியின் மாணவர் ஆராய்ச்சியாளர்கள் 78 வயது முதியவரின் சடலத்தை ஆய்வு செய்தனர். முதியவர் தனது உடலை ஆய்வுக்கு பயன்படுத்த அனுமதி அளித்த நிலையில், அவரது உடல் தானமாக வழங்கப்பட்டது. அந்த முதியவர் தன் வாழ்நாள் முழுக்க தன் நிலையை அறியாமலேயே வாழ்ந்திருக்கலாம் என்று தெரிகிறது.

    டிஃபாலியா, அல்லது இரண்டு ஆண்குறிகள் கொண்ட நிலை, டிரிபாலியாவுடன் ஒப்பிடுகையில் மிகவும் பொதுவான நிகழ்வு ஆகும். உலகில் ஐந்து முதல் ஆறு மில்லியன் மக்களில் ஒருவரை மட்டுமே இது பாதிக்கிறது. இன்றுவரை சுமார் 100 பேருக்கு மட்டுமே  டிஃபாலியா ஏற்பட்டுள்ளது.

    ஜர்னல் ஆஃப் மெடிக்கல் கேஸ் ரிப்போர்ட்ஸில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, டிரிஃபாலியாவின் ஒரே ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மூன்று தனித்தனி ஆண்குறி தண்டுகள் இருப்பதால் வகைப்படுத்தப்படும் ஒரு அரிய பிறவி நிலை என வரையறுக்கப்படுகிறது.

    • வாலிபர் ஒருவர் செல்போனை மும்முரமாக பார்த்தப்படி ரெயில்வே கேட்டை கடந்து செல்ல முயன்றார்.
    • நெஞ்சை பதற வைக்கும் இந்த வீடியோ பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.

    வளர்ந்து வரும் நவீன உலகில் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பலர் செல்போனுக்கு அடிமையாகி வருகிறார்கள். செல்போன் அதிகமாக பயன்படுத்தினால் மனித உடலுக்கு பாதிப்புகள் ஏற்படும் என அறிவுறுத்தப்படுகிறது.

    தற்போது இணையத்தில் உலா வரும் வீடியோ, செல்போன் பயன்பாடு உயிருக்கே ஆபத்தாகவும் முடியும் என நிரூபித்துள்ளது. அந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் செல்போனை மும்முரமாக பார்த்தப்படி ரெயில்வே கேட்டை கடந்து செல்ல முயன்றார். அப்போது சில அடிகள் தூரத்தில் ரெயில் நெருங்கி வந்துவிட்டது.

    உடனே சுதாரித்து கொண்ட அவர் ரெயில் மோதுவதை தவிர்க்க ஓடமுயன்று தடுமாறி கீழே விழுந்தார். கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அந்த வாலிபர் உயிர் தப்பினார். நெஞ்சை பதற வைக்கும் இந்த வீடியோ பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.

    ×