என் மலர்
உலகம்
- யாஹ்ஸா சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
- யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது குறித்து நேதன்யாகு கருத்து தெரிவித்துள்ளார்.
காசா எல்லையில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது, போர் முடிவதற்கான துவக்கப் புள்ளி என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்தார். நீண்ட கால தேடலுக்கு பிறகு தெற்கு காசா எல்லையில் வைத்து ஹமாஸ் தலைவர் யாஹ்ஸா சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
இது குறித்து ஹமாஸ் தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. போரின் துவக்கத்தின் போது ஹமாஸ் அழித்து விடுவதாக கூறிய யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது குறித்து நேதன்யாகு கருத்து தெரிவித்துள்ளார்.
"காசாவில் நடைபெறும் போரின் இறுதி இதுவல்ல என்ற போதிலும், முடிவுக்கான ஆரம்ப புள்ளி இதுதான். சின்வார் கொலை ஹமாஸ் வீழ்ச்சியில் மிக முக்கிய மைல்கல்," என்று பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்தார்.
தற்போது கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய மிகக் கொடூர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டார் என்று கூறப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் ஹமாஸ் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட பிறகு, யாஹ்யா சின்வார் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
- ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டார் என்றது இஸ்ரேல்.
- யாஹ்யா சின்வார் உயிரிழந்தது இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் உலகத்துக்கு நல்ல நாள் என்றார்.
வாஷிங்டன்:
ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரான் சென்றிருந்தபோது கொல்லப்பட்டார். அவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து ஹமாசின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் பொறுப்பேற்றார். இதற்கிடையே, காசாவில் கடந்த மாதம் 21-ம் தேதி இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சின்வார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
இதற்கிடையே, ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் உறுதிப்படுத்தி உள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் மரணமடைந்தார். இது இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும், உலகத்துக்கும் நல்ல நாள் என பதிவிட்டுள்ளார்.
- ஹமாஸ் தலைவர் சின்வார் உயிருடன் இருப்பதாகவும், அவர் கத்தாருடன் ரகசியமாக பேசியதாவும் இஸ்ரேலிய ஊடகம் தகவல் வெளியானது.
- ராணுவ நடவடிக்கையில் காசாவில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரானுக்கு சென்றிருந்தபோது கொல்லப்பட்டார். அவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஹமாசின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் பொறுப்பேற்றார். இதற்கிடையே கடந்த மாதம் 21-ந்தேதி இஸ்ரேல் தாக்குதலில் சின்வார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இதை உறுதி செய்யும் முயற்சியில் இஸ்ரேல் ஈடுபட்டு வந்தது.
இதைதொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு யாஹ்யா சின்வார் உயிருடன் இருப்பதாக கூறப்பட்டது. ஹமாஸ் தலைவர் சின்வார் உயிருடன் இருப்பதாகவும், அவர் கத்தாருடன் ரகசியமாக பேசியதாவும் இஸ்ரேலிய ஊடகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டிருக்க வாய்ப்பு அதிகம் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் உளவுத்துறையும், ராணுவமும் தொடர்ச்சியாக காசாவில் சின்வாரை தேடியது. இந்த நிலையில், சின்வார் கொல்லப்பட்டு கிடப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், ராணுவ நடவடிக்கையில் காசாவில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்றும் கொல்லப்பட்டவர்களில் யாஹ்யா சின்வாரும் ஒருவராக இருக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சின்வார் கொல்லப்பட்டதை பெயர் சொல்ல விரும்பாத இஸ்ரேல் ராணுவ அதிகாரி இந்த தகவலை உறுதி செய்திருப்பதாக உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
- தனியார் நிறுவனங்களுக்கு குறைவான அரசு கட்டுப்பாடுகள் இருப்பதுதான் சுதந்திரமான பொருளாதாரம் ஆகும்.
- பொருளாதார சுதந்திரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் வெனிசுலா கடைசி இடத்தில் உள்ளது.
சுதந்திரமான பொருளாதாரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூரை முந்தி ஹாங்காங் முதலிடம் பிடித்துள்ளது.
தனியார் நிறுவனங்களுக்கு குறைவான அரசு கட்டுப்பாடுகள் இருப்பதும், சுதந்திரமான பொருளாதாரம் கொண்ட சந்தையின் விலைகள் தேவை மற்றும் வழங்கல் அடிப்படையில் நிர்ணயிப்பதும், குறிப்பாக இதற்குள் அரசின் தலையீடு எதுவும் இல்லாமல் இருப்பது தான் சுதந்திரமான பொருளாதாரம் ஆகும்.
ஃப்ரேசர் நிறுவனம் நடத்திய உலகின் பொருளாதார சுதந்திரம் பற்றிய அறிக்கையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
இந்த அறிக்கையில் சிங்கப்பூர் 8.55 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில் ஹாங்காங் 8.58 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்த அறிக்கையின் மூலம் ஆசியாவின் சிறந்த நிதி நிலையமாக ஹாங்காங் உருவெடுத்துள்ளது.
பொருளாதார சுதந்திரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் 3 ஆவது இடத்தில் சுவிட்சர்லாந்தும் 4 ஆம் இடத்தில் நியூசிலாந்தும் 5 ஆம் இடத்தில் அமெரிக்காவும் உள்ளது. 3.02 புள்ளிகள் பெற்று வெனிசுலா கடைசி இடத்தில் உள்ளது.
- நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இல்லை என்று நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வருவது உறுதியாகி இருக்கிறது.
- இந்தியா-கனடா உறவுகளில் ஏற்படுத்தப்பட்ட சேதத்திற்கு கனடா பிரதமர் மட்டுமே பொறுப்பு என்று தெரிவித்துள்ளது.
நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என்று கனடா பிரதமர் கூறியது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ள கருத்து வருமாறு:-
நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இல்லை என்று நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வருவது உறுதியாகி இருக்கிறது. இந்தியா மற்றும் இந்திய தூதர்களுக்கு எதிராக கூறிய கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு கனடா எங்களிடம் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை.
இந்தியா-கனடா உறவுகளில் ஏற்படுத்தப்பட்ட சேதத்திற்கு கனடா பிரதமர் மட்டுமே பொறுப்பு என்று தெரிவித்துள்ளது.
- மெட்டா நிறுவனத்தில் 2022 ஆம் ஆண்டு 11,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
- மெட்டா நிறுவனத்தில் கடந்த ஆண்டு 10,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
உலகின் முன்னணி நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக தங்களது ஊழியர்களை தொடர்ச்சியாக பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள துவங்கிவிட்டன. இதன் காரணமாக உலகளவில் பெரும்பாலானோர் தங்களது வேலையை இழந்தனர்.
அவ்வகையில் தொடர்ந்து 3 ஆவது ஆண்டாக மெட்டா பிரிவில் வேலை செய்யும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செலவுகளை குறைக்கும் நோக்கில் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றும் சில ஊழியர்களை மெட்டா நிறுவனம் பணிநீக்கம் செய்யவுள்ளது.
மெட்டா நிறுவனத்தில் 2022 ஆம் ஆண்டு 11,000 பேரும் கடந்த ஆண்டு 10,000 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டில் பணிநீக்கம் செய்யப்படவுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.
- கனடாவுக்கான இந்திய தூதரை திரும்ப பெற மத்திய அரசு முடிவு செய்தது.
- கனடா மண்ணில் கனட நாட்டவர் ஒருவர் கொல்லப்பட்டதில் இந்திய அரசின் ஏஜெண்டுகள் ஈடுபட்டுள்ளனர்.
ஒட்டாவா:
கனடாவில் வசித்து வந்த சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார்.
இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியதால் இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த இந்தியா, ஆதாரங்களை அளிக்கும்படி கேட்டது. ஆனால் எந்த ஆதாரத்தையும் கனடா அளிக்கவில்லை.
இதற்கிடையே இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த போவதாக கனடா தெரிவித்தது. இதனால் கனடாவுக்கான இந்திய தூதரை திரும்ப பெற மத்திய அரசு முடிவு செய்தது. மேலும் இந்தியாவில் கனடா அதிகாரிகள் 6 பேரை வெளியேற உத்தரவிட்டது.
இந்த நிலையில் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒப்புக் கொண்டு உள்ளார்.
இதுகுறித்து அவர் ஜனநாயகத்தில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த பொது விசாரணை ஆணையத்தில் கூறியதாவது:-
நிஜ்ஜாா் கொலையில் இந்திய உளவாளிகளின் தொடா்பு குறித்து உளவுத் தகவலின் அடிப்படையில் குற்றச்சாட்டை முன் வைத்தேன். இதன் விசாரணையில் இந்தியாவின் ஒத்துழைப்பை எதிா்பாா்த்தோம். ஆனால், அவா்கள் தொடா்ந்து ஆதாரம் கோரி வந்தனா்.
ஆனால் நிஜ்ஜாா் கொலையில் இந்திய உளவாளிகளின் பங்கை நிரூபிக்க எங்களிடம் வலுவான ஆதாரமில்லை. முதன்மையாக உளவுத்துறையின் தகவல் மட்டுமே இருந்தது.
எனவே இணைந்து பணியாற்றி ஆதாரத்தைக் கண்டறியலாம் என்று தெரிவித்தோம். அதற்கு இந்தியா சம்மதிக்கவில்லை. இந்தியாவில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற 'ஜி20' உச்சி மாநாட்டின்போது இப்பிரச்சனையை கனடா எழுப்பியிருக்க முடியும்.
ஆனால், அதை நாங்கள் தவிா்த்தோம். விசாரணைக்கு சிறிதும் ஒத்துழைக்காத இந்தியா, கனடா மீதான தாக்குதல்களைத் தொடா்ந்து வந்தது.
பிரதமா் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்துடன் கருத்து வேறுபாடு கொண்ட கனடா நாட்டவர்கள் பற்றிய தகவல்களை இந்திய தூதர்கள் சேகரித்து இந்திய அரசு மற்றும் லாரன்ஸ் பிஷ்னாய் கும்பல் போன்ற கிரிமினல் அமைப்புகளுக்கு அனுப்பினர். இதில் இந்தியா ஈடுபட்டு உள்ளது என்பதை மிகவும் தெளிவாகவும், நம்ப முடியாத அளவிற்கு தெளி வாகவும் "கனடா உளவுத் துறை தெரிவித்தது. கனடா இறையான்மையை இந்தியா மீறியுள்ளது.
கனடா மண்ணில் கனட நாட்டவர் ஒருவர் கொல்லப்பட்டதில் இந்திய அரசின் ஏஜெண்டுகள் ஈடுபட்டுள்ளனர். இது தனது அரசாங்கம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று.
இவ்வாறு அவர் கூறினார்.
- பலூனில் பாராகிளைடிங் செய்த அலெக்ஸ் லாங்கால் என்பவர், திடீரென இந்த காட்சியை கண்டார்.
- செல்பி எடுத்தபடி பயணித்தபோது, இந்த காட்சியையும் வீடியோவாக பதிவு செய்து எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டார்.
பிரமிடுகளில் ஏற மனிதர்களுக்கு அனுமதியில்லை. மனிதனால் சுற்றிப் பார்க்க முடியாத பிரமிடின் உச்சியில் ஏறி நாய் சுற்றி வரும் வீடியோ காட்சி வைரலாகி உள்ளது.
பிரமிப்பு தரக்கூடியது பிரமீடுகள். கிஸா பிரமிடு 450 அடி உயரம் கொண்டது. சிறிய குன்று போல இருக்கும். எகிப்தில் உள்ள 118 பிரமிடுகளில் இதுதான் பெரியது. பழமையான பாரம்பரிய சின்னமான பிரமிடுகளில் ஏறுவது தடை செய்யப்பட்டு உள்ளது. அதனால் மனிதர்கள் பிரமிடின் உச்சியை பார்ப்பது அரிது. ஆனால் அதன் உச்சியில் ஒரு நாய் ஏறிச் சென்று சுற்றிக் கொண்டிருந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
பலூனில் பாராகிளைடிங் செய்த அலெக்ஸ் லாங்கால் என்பவர், திடீரென இந்த காட்சியை கண்டார். அவர் செல்பி எடுத்தபடி பயணித்தபோது, இந்த காட்சியையும் வீடியோவாக பதிவு செய்து எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டார். நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்ட வீடியோ பிற்பகலுக்குள் சுமார் 5 லட்சம் பேரால் ரசிக்கப்பட்டு உள்ளது. பறவைகளை துரத்திக்கொண்டு சென்ற நாய், பிரமிடின் உச்சியை அடைந்திருக்கும் என்று கருதப்படுகிறது.
- அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளின் ஆதரவுடன் இஸ்ரேல் ராணுவம் போர் நடத்தி வருகிறது.
- இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இத்தாலி இருந்து வருகிறது.
ரோம்:
பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் அண்டை நாடான இஸ்ரேலுக்கு புகுந்து திடீர் தாக்குதல் மேற்கொண்டனர். இதில் பலர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கணக்கானவர்கள் பிணை கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினர் மீது போரை தொடங்கியது. இதில் 40 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இதுவரை உயிரிழந்தநிலையில் ஒரு ஆண்டை கடந்து போர் நீடித்து வருகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளின் ஆதரவுடன் இஸ்ரேல் ராணுவம் போர் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இத்தாலி இருந்து வருகிறது. இந்தநிலையில் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வது உடனடியாக நிறுத்தப்படும் என அந்த நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "காசா பகுதியில் போர் நீட்டிப்பை தொடர்ந்து, இத்தாலியில் இருந்து இஸ்ரேலுக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்வதற்கான அனைத்து புதிய உரிமங்களுக்கும் உடனடியாக நிறுத்தப்படுகிறது" என்றுள்ளார்.
- தங்கும் விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்ததில் உயிரிழந்தார்.
- அருகில் இருந்தவர்கள் சோதித்ததில் அவர் உயிரற்று கிடந்தது உறுதியானது.
உலகளவில் பிரபலமான பாப்-இசை குழு ஒன் டைரக்ஷன். 1டி என்றும் அழைக்கப்படும் இந்த குழுவில் பாடகராக இருந்தவர் லியாம் பெய்ன். 31 வயதான லியாம் பெய்ன் அர்ஜென்டினா நாட்டின் பலெர்மோவை அடுத்த கோஸ்டா ரிக்கா தெருவில் உள்ள தங்கும் விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்ததில் உயிரிழந்தார்.
பியூநியோஸ் ஏரிஸ் எனும் ஓட்டலில் தங்கியிருந்த லியாம் பெய்ன் பால்கனியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இது குறித்து அர்ஜென்டினா காவல் துறை வெளியிட்ட தகவல்களில், "ஓட்டல் மேலாளர் ஏதோ சத்தம் கேட்டு பின்புறம் சென்றிருக்கிறார். அங்கு சென்ற போது, பெய்ன் சுயநினைவின்றி தரையில் விழுந்து கிடந்துள்ளார். கீழே விழுந்த லியாம் பெய்னை அருகில் இருந்தவர்கள் சோதித்ததில் அவர் உயிரற்று கிடந்தது உறுதியானது," என்று தெரிவித்தார்.
மது பழக்கம் மற்றும் தற்கொலை எண்ணங்களால் தவித்து வந்த லியாம் பெய்ன், கடந்த ஆண்டு தனது பிரச்சினையை சரி செய்து கொள்ள பயிற்சி எடுத்து வருவதாக தெரிவித்தார். இது குறித்த பதிவில் அவர், "100 நாட்கள் ஆகிவிட்டது. தற்போது நான் அருமையாக உணர்கிறேன், உண்மையில், இது நன்றாக இருக்கிறது. ரசிகர்கள் கொடுத்த ஆதரவு சிறப்பாக இருந்தது. நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன்," என்ற குறிப்பிட்டுள்ளார்.
- அதிக விஷமுள்ள பாம்புகளை கண்டால் மாநகராட்சியிடம் தகவல் அளிக்க வேண்டும்.
- தேள்களில் தடிமனான வாலுடைய வகை கொடிய விஷமுடையதாகும்.
துபாய்:
அமீரக பாலைவனத்தில் முகாமிடும்போது விஷமுள்ள பாம்புகள் மற்றும் தேள் போன்ற பூச்சி வகைகளை கண்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அமீரகத்தில் உள்ள நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
அதன் தொகுப்பு பின்வருமாறு:-
அமீரக பாலைவன பகுதிகளில் முகாமிடுவது ஒரு புதுமையான அனுபவத்தை தருகிறது. பாலைவன பகுதி வெப்பம், குளிர் கலந்த அழகிய தரிசு நிலப்பரப்பாகும். இங்கு உலாவும் தனித்துவமான வன உயிரினங்கள் மற்றும் இரவு நேரத்தில் மின்னும் நட்சத்திரங்கள் ஆகியவை பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை. இருந்தாலும் பாலைவன பகுதிகளில் முகாமிடுபவர்களுக்கு ஆபத்துகளும் காத்திருக்கிறது. குறிப்பாக அமீரக பாலைவனங்களில் ஆபத்தை வரவழைக்கும் விஷமுள்ள பாம்புகள் மற்றும் தேள்கள் இருக்கும் என்பதை அங்கு முகாமிடுபவர்கள் மனதிற்கொள்ள வேண்டும். பெரும்பாலும் இதுபோன்ற உயிரினங்கள் இலை குவியல்கள் மற்றும் அடர்ந்த தாவரங்களுடைய நிழலில் ஒளிந்திருக்கும்.
சரி அவ்வாறு முகாமிடும் பார்வையாளர்கள் விஷமுள்ள பாம்பு அல்லது பூச்சியினங்களை கண்டால் பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். முதலில் அவற்றை கண்டதும் பயப்பட கூடாது. பெரும்பாலான பாம்புகள் மனிதர்களை தவிர்க்கும். தேவையில்லாமல் மனிதர்களை அவை தாக்குவதில்லை. எனவே பாம்புகளை கண்டால் மெதுவாக அங்கிருந்து விலகி சென்று விட வேண்டும். அவை அங்கிருந்து செல்லும் வரை அமைதியாக இருக்க வேண்டும். அவைகளை கைகளால் பிடிப்பதோ அல்லது தொட முயற்சிப்பதோ கூடாது. அதிக விஷமுள்ள பாம்புகளை கண்டால் மாநகராட்சியிடம் தகவல் அளிக்க வேண்டும்.
வளர்ப்பு பிராணிகளை பாதுகாப்பான தொலைவில் விட வேண்டும். உணவு பொருட்களை முகாம் அருகில் வீசக்கூடாது. ஒருவேளை பாம்பு அல்லது தேள் கடித்து விட்டால் வேகமாக செயல்படுவதை அல்லது அசைவதை நிறுத்த வேண்டும். ஐஸ் கட்டிகள், காயத்தை வெட்டி ரத்தத்தை உறிஞ்சி எடுப்பது போன்றவைகளை தவிர்க்க வேண்டும். இது மேலும் தீங்கு விளைவிக்கும். உடனடியாக கடித்த பாம்பு அல்லது தேளை பாதுகாப்பான தொலைவில் இருந்து படம் பிடித்துக்கொண்டு சிகிச்சைக்கு மருத்துவ குழுவின் உதவியை நாட வேண்டும்.
அவர்களிடம் அந்த பாம்பு புகைப்படத்தை காட்டினால் அதற்கு ஏற்றவாறு விஷ முறிவு சிகிச்சை அளிப்பர். அமீரக பாலைவன பகுதிகளில் அரேபியன் சேன்ட் வைப்பர், அரேபியன் ஹார்ன்டு வைப்பர், சா ஸ்கேல்டு வைப்பர், பிளாக் டெசர்ட் கோப்ரா (பாலைவன கருநாகம்) ஆகிய விஷமுள்ள பாம்புகள் உள்ளன. தேள்களில் தடிமனான வாலுடைய வகை கொடிய விஷமுடையதாகும்.
எனவே நடக்கும்போது கணுக்கால் வரை மறைக்கும் வகையிலான ஷூ அணிந்து செல்வது கட்டாயமாகும். உறங்கி விட்டு மீண்டும் அணியும் போது உள்ளே பூச்சிகள் உள்ளனவா? என்பதை சோதனை செய்து விட்டு அணிய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இம்ரான்கானை அவரது குடும்பத்தினர் மற்றும் வக்கீல்கள் சந்திப்பதற்கு பஞ்சாப் மாகாண அரசு தடைவிதித்துள்ளது.
- இம்ரான்கான் அடைக்கப்பட்டிருக்கும் அறையில் மின்சாரத்தை துண்டித்துவிட்டனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் தண்டனைப் பெற்று பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஓர் ஆண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இம்ரான்கானுக்கு சிறை அதிகாரிகள் பல்வேறு நெருக்கடிகளை அளித்து வருவதாக அவரது கட்சி தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் சிறையில் இம்ரான்கானை இருட்டு அறையில் அடைத்து சித்ரவதை செய்வதாக அவரது முன்னாள் மனைவி ஜெமிமா கோல்ட்ஸ்மித் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் அவர் கூறியுள்ளதாவது:-
இம்ரான்கானை அவரது குடும்பத்தினர் மற்றும் வக்கீல்கள் சந்திப்பதற்கு பஞ்சாப் மாகாண அரசு தடைவிதித்துள்ளது. மேலும் அவர் வாரத்துக்கு ஒரு முறை லண்டனில் உள்ள தனது மகன்களுடன் தொலைபேசியில் பேசி வந்த நிலையில் தற்போது அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இம்ரான்கான் அடைக்கப்பட்டிருக்கும் அறையில் மின்சாரத்தை துண்டித்துவிட்டனர். அவர் சிறை அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை. இருட்டு அறையில் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு சித்ரவதைக்கு ஆளாகி உள்ளார். இதனால் அவரது உடல்நிலை குறித்து மிகுந்த கவலை எழுந்துள்ளது. எனவே அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்த பத்திரிகையாளரான ஜெமிமா கோல்ட்ஸ்மித்துக்கும், இம்ரான்கானுக்கும் 1995-ல் திருமணமான நிலையில் 2004-ல் அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்ததும், இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளதும் குறிப்படத்தக்கது.






