என் மலர்
உலகம்
- முக்கிய பகுதிகளை ஹமாஸ் மறுத்ததாக இஸ்ரேல் குற்றச்சாட்டு.
- போர் நிறுத்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கும்.
ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது கொடூர தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழித்து ஒழிப்பதாக கூறி இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடுமையான மோதல் தொடர்ந்தது.
போர் காரணமாக இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஒருபக்கம் ஏற்பட்ட நிலையில், மறுப்பக்கம் அப்பாவி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவதாக சர்வதேச அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உலக நாடுகள் தொடர்ந்து வருத்தம் தெரிவித்து வந்தன. இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் பணிகளில் அமெரிக்கா மற்றும் கத்தார் ஈடுபட்டன.
அமெரிக்கா மற்றும் கத்தார் மத்தியஸ்தம் செய்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நீண்ட காலமாக நடைபெற்றது. இந்த நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வருவதாக அமெரிக்கா மற்றும் கத்தார் கடந்த புதன் கிழமை அறிவித்தது.
அந்த வகையில் போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அமலுக்கு வருகிறது. இஸ்ரேல் நேரப்படி இன்னும் சில மணி நேரங்களில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வர இருந்தது. இந்த நிலையில், பண்யக்கைதிகளின் பட்டியலை வழங்கும் வரை போர் நிறுத்தம் அமலுக்கு வராது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
மேலும் விடுவிக்கப்படும் பயணக்கைதிகளின் பட்டியலை ஹமாஸ் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பயணக்கைதிகளின் பட்டியலை தரும் வரை போர் நிறுத்தம் அமலுக்கு வராது என்றும் காசா மீதான தாக்குதல் தொடரும் என்றும் இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. ஹமாஸ் தனது உறுதிமொழிகளை நிறைவேற்றும் வரை போர் நிறுத்தம் அமலுக்கு வராது என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணக்கைதிகளின் பட்டியல் தயாராவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. காசா சுகாதார அமைச்சகத்தின் படி, காசா மக்கள் தொகையில் சுமார் 90 சதவீதம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் சுகாதாரம், சாலை மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புகள் மோசமாக சேதமடைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, முதல் கட்டத்தில் 1,890 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க உள்ளது என எகிப்து தெரிவித்து உள்ளது. காசா போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்த முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் 42 நாட்கள் நீடிக்கும். அது இந்திய நேரப்படி இன்று மதியத்தில் இருந்து தொடங்கும் என்று கூறப்பட்டது.
- டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் கிட்டத்தட்ட 17 கோடி கணக்குகள் உள்ளன
- ஆப்பிள் ஐ ஸ்டோர், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டிக்டாக் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலியை 270 நாட்களுக்குள் விற்பனை செய்வதற்கு அவகாசம் வழங்கும் சட்டத்தை கடந்த ஏப்ரல் மாதம் இயற்றினார்.
அவ்வாறு விற்பனை செய்யாவிட்டால் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்டாக் செயலியை அகற்ற உத்தரவிடப்படும் என அந்தச் சட்டத்தில் கூறப்பட்டிருந்தது.
இந்தச் சட்டத்திற்கு தடை கோரி பைட்டான்ஸ் நிறுவனம் கடந்த மே மாதம் வாஷிங்டன் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து பைட்டான்ஸ் நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில், ஜனவரி 19-ம் தேதிக்குள் டிக்டாக் செயலியை விற்க வேண்டும் என்ற சட்டத்தால் அமெரிக்க மக்களிடம் மிகவும் பிரபலமாகியுள்ள டிக்டாக் செயலி தடை செய்யப்படுமானால், அந்தச் செயலியை பயன்படுத்தி வரும் மக்களின் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை கடந்த மாதம் 18-ம் தேதி சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்நிலையில், டிக்டாக்கை அதன் சீன தாய் நிறுவனமான பைட் டான்ஸ் லிமிடெட் ஜனவரி 19-ம் தேதிக்குள் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்க வேண்டும். இல்லையெனில் டிக்டாக்கைத் தடை செய்யப்படும் என அமெரிக்க உச்சநீதிமன்றம் உறுதிபட தெரிவித்தது.
அதன்படி டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் கிட்டத்தட்ட 17 கோடி கணக்குகள் உள்ள நிலையில் இன்று [ஜனவரி 19] முதல் தடை அமலுக்கு வந்துள்ளது.
இதன்படி தற்காலிகமாக டிக்டாக் செயலியின் சேவையை தாற்காலிகமாக நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனிடையே ஆப்பிள் ஐ ஸ்டோர், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டிக்டாக் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் நாளை அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப் டிக் டாக் தடையை விரும்பவில்லை என்று தெரிகிறது.
அதிபர் டிரம்ப் பதவியேற்றவுடன் டிக் டாக்கை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை செய்வோம். டிரம்ப் எங்களுடன் இணைந்து பணியாற்றுவார் என்று நம்பிக்கை உள்ளது என்று டிக் டாக் உரிமையாளரான பைட்டான்ஸ் நிறுவனமும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பதவியேற்றதும் டிரம்ப், பைட்டான்ஸ் நிறுவனம் டிக் டாக்கை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க மேலும் 90 நாட்கள் அவகாசம் வழங்குவார் என்று கூறப்படுகிறது. அல்லது வேறு வழிகளில் டிக் டாக்கை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர ஆவண செய்வார் என்று டிரம்ப் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- வாஷிங்டனில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- வாஷிங்டனில் டிரம்பின் ஆதரவாளர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் குவிந்து வருகிறார்கள்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் நாளை பதவியேற்கிறார். தலைநகர் வாஷிங்டனில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. வழக்கமாக அதிபர் பதவியேற்பு விழா பாராளுமன்றம் முன்பு நடைபெறும்.
ஆனால் கடுமையான குளிர் நிலவுவதால் பாராளுமன்ற கட்டிடத்திற்கு உள்ளே ரோடுண்டா என்ற பகுதியில் விழா நடைபெறுகிறது. இதற்கிடையே டிரம்ப், புளோரிடாவின் பாம் பீச்சிலிருந்து வாஷிங்டனுக்கு தனி விமானத்தில் தனது மனைவி, மகனுடன் புறப்பட்டு நேற்று நள்ளிரவு சென்றடைந்தார்.
அவர் அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்க உள்ளதை குறிக்கும் வகையில், விமானத்தில் ஸ்பெஷல் மிஷன் 47 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பதவியேற்பு விழாவின் கருப்பொருள் "நமது நீடித்த ஜனநாயகம்: ஒரு அரசியலமைப்பு வாக்குறுதி" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக பதவியில் இருந்து வெளியேறும் அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் வெள்ளை மாளிகையில் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் ஆகியோருடன் தேநீர் அருந்துவார்கள்.
அதைத் தொடர்ந்து, பதவியேற்பு விழாவிற்காக டிரம்ப் பாராளுமன்ற கட்டிடத்திற்குச் செல்வார்.
டிரம்ப் பதவியேற்பு விழாவையொட்டி அமெரிக்கா முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக வாஷிங்டனில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் சிறப்பு பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். வாஷிங்டனில் டிரம்பின் ஆதரவாளர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் குவிந்து வருகிறார்கள்.
டிரம்ப் பதவியேற்றதும் தனது முதல் நாளில் எந்த உத்தரவுகளில் கையெழுத்திடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. குறிப்பாக குடியேற்றம் தொடர்பாக புதிய உத்தரவு வெளியாகலாம்.
- 47வது அமெரிக்க அதிபராக டிரம்ப் நாளை பதவியேற்கிறார்.
- சீன இறக்குமதிகள் மீது அதிக வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் நாளை [ஜனவரி 20] பதவியேற்கிறார். குடியேற்றங்கள், மற்ற நாடுகளுடனான வரிக் கொள்கைகள் உள்ளிட்டவற்றில் டிரம்ப் கடுமை காட்டி வருகிறார்.
47வது அமெரிக்க அதிபராகும் டிரம்ப்பின் அடுத்த 5 ஆண்டு பதவிக்காலம் பலருக்கு சோதனைக் காலமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில் பதவியேற்று 100 நாட்களுக்குள் டிரம்ப் சீனா மற்றும் இந்தியாவுக்கு வருகை தருவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2016-20 பதவிக்காலத்தில் எந்த அமெரிக்க அதிபரும் நுழையாத வட கொரியாவுக்கே டிரம்ப் விஜயம் செய்திருந்தார். ரஷியாவுடன் இணக்கமான போக்கை கையாண்டார். அந்த வகையில் இந்த 2025-29 பதவிக்காலத்திலும் டிரம்ப் உலக அரசியலில் தாக்கம் செலுத்துவார் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

அந்த வகையில் டொனால்டு டிரம்ப், தான் பதவியேற்ற பிறகு, சீனாவுக்குச் செல்ல விரும்புவதாக ஆலோசகர்களிடம் தெரிவித்திருக்கிறார் என்று தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சீன இறக்குமதிகள் மீது அதிக வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் கூறி வரும் சூழலில் அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங்குடனான உறவை வலுப்படுத்த டிரம்ப் திட்டமிட்டுள்ளார் என்றும் அவருடன் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க உள்ளார் என்றும் வால் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. ஒரு நாள் முன்னதாக டிரம்ப் ஜி ஜின்பிங்குடன் டெலிபோனில் உரையாடியதை அடுத்து இந்த தகவல் வந்துள்ளது.
தொடர்ந்து டிரம்ப் இந்தியாவுக்குச் செல்லக்கூடிய சாத்தியம் குறித்து ஆலோசகர்களுடன் பேசியதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர் என்று வால் ஸ்ட்ரீட் குறிப்பிடுகிறது
தகவலின்படி, கடந்த மாதம் கிறிஸ்துமஸை ஒட்டி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் வாஷிங்டன் டிசிக்கு வருகை தந்தபோது பேச்சுவார்த்தைகள் நடித்துள்ளன.
டிரம்பின் இந்தியா வருகை இந்த வருடம் ஏப்ரல் தொடக்கத்தில் அல்லது ஆண்டின் பிற்பகுதியில் இருக்கலாம் என்று வால் ஸ்ட்ரீட் அறிக்கை கூறுகிறது. இந்த வசந்த காலத்தில் வெள்ளை மாளிகை கூட்டத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடியை டிரம்ப் அழைக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
- முக்கிய பகுதிகளை ஹமாஸ் மறுத்ததாக இஸ்ரேல் குற்றச்சாட்டு.
- போர் நிறுத்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கும்.
ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது கொடூர தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழித்து ஒழிப்பதாக கூறி இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடுமையான மோதல் தொடர்ந்தது.
போர் காரணமாக இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஒருபக்கம் ஏற்பட்ட நிலையில், மறுப்பக்கம் அப்பாவி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவதாக சர்வதேச அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உலக நாடுகள் தொடர்ந்து வருத்தம் தெரிவித்து வந்தன. இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் பணிகளில் அமெரிக்கா மற்றும் கத்தார் ஈடுபட்டன.
அமெரிக்கா மற்றும் கத்தார் மத்தியஸ்தம் செய்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நீண்ட காலமாக நடைபெற்றது. இந்த நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வருவதாக அமெரிக்கா மற்றும் கத்தார் கடந்த புதன் கிழமை அறிவித்தது.
அந்த வகையில் போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அமலுக்கு வருகிறது. இஸ்ரேல் நேரப்படி இன்னும் சில மணி நேரங்களில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தில் விதிமீறல் இருந்தால், அதை இஸ்ரேல் சகித்துக் கொள்ளாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "ஒப்புக்கொண்டபடி விடுவிக்கப்படும் பணயக்கைதிகளின் பட்டியலை பெறும் வரை நாங்கள் கட்டமைப்பை நோக்கி முன்னேற முடியாது. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் விதிமீறல்களை இஸ்ரேல் பொறுத்துக்கொள்ளாது. ஹமாஸ் மட்டுமே பொறுப்பு. தேவைப்பட்டால் அமெரிக்காவின் ஆதரவோடு போரை மீண்டும் துவங்க எங்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார்.
- கைத்துப்பாக்கியுடன் உச்சநீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்த அந்த நபர் நீதிபதிகள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளான்.
- கொல்லப்பட்ட நீதிபதிகள் இருவரும் தேசிய பாதுகாப்பு, பயங்கரவாதம், உளவு பார்த்தல் போன்ற முக்கிய வழக்குகளில் விசாரணை நடத்தியவர்கள்.
ஈரான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைநகர் தெஹ்ரானில் உள்ள உச்சநீதிமன்ற வளாகத்திற்குள் இன்று [சனிக்கிழமை] காலை மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு நீதிபதிகள் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கைத்துப்பாக்கியுடன் உச்சநீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்த அந்த நபர் நீதிபதிகள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

பலியானவர்கள் அல் ரஜினி மற்றும் அல் மொகிஸ்சே என அடையாளம் காணப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் தன்னைதானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்ட நீதிபதிகள் இருவரும் தேசிய பாதுகாப்பு, பயங்கரவாதம், உளவு பார்த்தல் போன்ற முக்கிய வழக்குகளில் விசாரணை நடத்தி வந்தவர்கள் என ஈரானின் நீதித்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடத்தியவர்களின் நோக்கம் தெரியாத நிலையில் அவர் மீது இதற்குமுன் எந்த வழக்கும் இல்லை என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
- டிரம்ப் அதிபராக பதவியேற்கும் விழாவிலும் ஒபாமாவுடன் மிச்செல் கலந்துகொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டது.
- நேற்று [ஜனவரி 17] மிச்செல் பிறந்தநாள் கொண்டாடினார்
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமா விவாகரத்து செய்ய உள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன.
முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டரின் அரசு இறுதிச் சடங்கில் ஒபாமாவுடன் மிச்செல் வரவில்லை. மேலும் வரும் ஜனவரி 20 ஆம் தேதி நடக்கும் டிரம்ப் அதிபராக பதவியேற்கும் விழாவிலும் ஒபாமாவுடன் மிச்செல் கலந்துகொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டது.

இதன் விளைவாகவே விவாகரத்து வதந்திகள் வலுப்பெற்றன. இந்நிலையில் மிச்செல்லின் பிறந்தநாளுக்கு தனது எக்ஸ் பதிவில் உருக்கமாக வாழ்த்து தெரிவித்து வதந்திகளுக்கு ஒபாமா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நேற்று [ஜனவரி 17] மிச்செல் பிறந்தநாளை முன்னிட்டு ஒபாமா வெளியிட்டுள்ள பதிவில்,
"என் வாழ்க்கையின் அன்பான @MichelleObama. உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நீ வீட்டின் ஒவ்வொரு அறையையும் அரவணைப்பு, அறிவு, சந்தோஷம் மற்றும் கருணையால் நிரப்புகிறாய். உன்னுடன் வாழ்க்கையின் சாகசங்களைச் சேர்ந்து செய்ய முடிந்ததால் நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். உன்னை நேசிக்கிறேன்!" என்று பதிவிட்டுள்ளார். இருவரும் சேர்ந்து உணவருந்தும் புகைப்படத்தையும் ஒபாமா பகிர்ந்துள்ளார்.
- மருந்துச் சீட்டுகளில் மூலம் மருந்தகத்திலிருந்து மருந்துகளை வாங்கி அந்த பெண் பெண் குழந்தைக்கு வழங்கியுள்ளார்
- GofundMe என்ற நன்கொடை வசூல் தளத்தை பயன்படுத்தி 37,000 ஆஸ்திரேலிய டாலர்களை நன்கொடை பெற்றுள்ளார்
சமூக ஊடகங்களில் கவனம் ஈர்க்கவும் நன்கொடை பெறவும் ஆஸ்திரேலிய பெண் ஒருவர் குழந்தைக்கு விஷம் கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு உதவுகிறோம் என்ற பெயரில் பாதிக்கப்பட்ட குழந்தையின் வீடியோக்களை ஆன்லைனில் வெளியிட்டு சமூக ஊடகங்களில் பார்வைகள் மற்றும் நன்கொடைகளை குவிப்பதற்காக தனது ஒரு வயது பெண் குழந்தைக்கு ஆஸ்திரேலிய பெண் சிறுக சிறுக விஷம் கொடுத்துள்ளார்.
குயின்ஸ்லாந்தில் உள்ள சன்ஷைன் கோஸ்ட்டைச் சேர்ந்த 34 வயதான பெண், எந்த மருத்துவ அனுமதியும் இல்லாமல், அங்கீகரிக்கப்படாத மருந்துச் சீட்டுகளில் மூலம் மருந்தகத்திலிருந்து மருந்துகளை வாங்கி அந்த பெண், குழந்தைக்கு வழங்கியதாக காவல்துறை அறிக்கை கூறுகிறது.
மேலும் 2024, ஆகஸ்ட் 6 முதல் அக்டோபர் 15 வரை அந்தப் பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பிரிஸ்பேனில் உள்ள மருத்துவமனை ஒன்று குழந்தையின் நிலை குறித்து சந்தேகமடைந்து போலீசில் புகார் அளித்ததை அடுத்து உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மாத்திரைகள் மற்றும் சிறுக சிறுக அளித்த விசஷத்தின்மூலம் நோய்வாய்ப்பட்டு பரிதாபமான நிலையில் இருந்த குழந்தையின் வீடியோக்களை எடுத்து GofundMe என்ற நன்கொடை வசூல் தளத்தை பயன்படுத்தி 37,000 ஆஸ்திரேலிய டாலர்களை அந்த பெண் நன்கொடை பெற்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது. அந்த பெண் கைது செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட குழந்தை மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

- அவர் இருக்கும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
- இல்லையென்றால் நான் இப்போது உயிரோடு இருந்திருக்க மாட்டேன்.
வங்கதேசத்தில் கடந்த வருடம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் வெடித்தது. அந்நாட்டு சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வந்த 30 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்தும் ஷேக் ஹசீனாவை பதவி விலகக் கோரியும் மாணவர்கள் பல வாரங்களாக நடத்திய போராட்டங்கள் மற்றும் மோதல்களில் 600 பேர் கொல்லப்பட்டனர்.
இட ஒதுக்கீட்டை ரத்து செய்தபோதிலும் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று உறுதியாக இருந்த மாணவர்களை சமாதானப்படுத்தமுடியவில்லை. இறுதியில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவுக்குத் தப்பி வந்தார். பிரதமர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் அனைத்தையும் சூறையாடினர்.
தப்பிவந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்தார் ஷேக் ஹசீனா. அவர் இருக்கும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அவரை திரும்ப அனுப்ப வங்கதேசத்தில் உருவாகியுள்ள முகமது யூனுஸ் தலைமையான இடைக்கால அரசு இந்தியாவை வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட தருணத்தில், தன்னையும், தனது தங்கையான ஷேக் ரெஹானாவையும் கொல்ல எதிர்கட்சியினரால் சதி நடந்ததாக 76 வயதாகும் ஷேக் ஹசீனா குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது மேற்கு வங்க அவாமி லீக் கட்சியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் தளத்தில் ஷேக் ஹசீனா பேசும் ஆடியோ உரை ஒன்று நேற்று [வெள்ளிக்கிழமை] வெளியிடப்பட்டுள்ளது.
அந்த ஆடியோவில், "ரெஹானாவும் நானும் உயிர் பிழைத்தோம் - 20-25 நிமிட இடைவெளியில் நாங்கள் மரணத்திலிருந்து தப்பித்தோம்" என்று ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நடந்த கொலை முயற்சிகளில் இருந்து தப்பிப்பிழைத்தது கடவுளின் செயல் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

2004, ஆகஸ்ட் 21 நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல், கோட்டலிபாராவில் நடந்த வெடிகுண்டு தாக்குதல், இறுதியில் நடந்த கொலை முயற்சியில் தப்பித்தது கடவுளின் விருப்பம். இல்லையென்றால் நான் இப்போது உயிரோடு இருந்திருக்க மாட்டேன்.
அவர்கள் என்னை எப்படி கொல்ல திட்டமிட்டனர் என்பதை நீங்கள் பின்னர் பார்த்தீர்கள். நான் எனது நாடு இல்லாமல் இருக்கிறேன், எனது வீடு எரிக்கப்பட்டது, நான் கஷ்டப்பட்டாலும், என்னை கடவுள் உயிருடன் வைத்திருக்க ஒரு காரணம் இருக்கும் என்று நம்புகிறேன் என கண்ணீர் குரலில் ஷேக் ஹசீனா அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.
ஆகஸ்ட் 21, 2004 அன்று டாக்கா பங்கபந்து அவென்யூவில் அவாமி லீக் ஏற்பாடு செய்த பயங்கரவாத எதிர்ப்பு பேரணியில் கையெறி குண்டுத் தாக்குதல் நடந்தது.
அப்போது எதிர்க்கட்சித் தலைவராக ஷேக் ஹசீனா, 20,000 பேர் கொண்ட கூட்டத்தில் டிரக்கின் பின்புறத்தில் இருந்து உரையாற்றி முடித்த பிறகு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் ஹசீனாவுக்கும் சில காயங்கள் ஏற்பட்டன.
முன்னதாக கோட்டலிபாராவில் உள்ள கல்லூரியில் கடந்த 2000 ஆம் ஆண்டு ஜூலையில், ஷேக் ஹசீனா உரையாற்ற இருந்த பகுதியில் 40 கிலோ வெடிகுண்டு மீட்கப்பட்டது.
இறுதியாக ஷேக் ஹசீனா 2024 ஆகஸ்ட் 5 ஆம் தேதி புறப்படும் சமயத்தில் 20- 25 நிமிட இடைவெளியில் உயிர்தப்பியதாக கூறியுள்ளார். முந்தைய கொலை முயற்சிகளையும், கடைசியாக உயிர்தப்பிய நிகழ்வையும் ஷேக் ஹசீனா உருக்கமான முறையில் விவரித்த ஆடியோ அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
- பேரழிவுகள் மற்றும் அவற்றின் விளைவுகளை காலநிலை மாற்றம் தீவிரப்படுத்தி வருவதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
- உலகளாவிய சராசரியாக, கூடுதலாக 41 நாட்கள், 'ஆபத்தான வெப்பம்' பதிவாகி உள்ளது.
2024 ஆம் ஆண்டில் வயநாடு நிலச்சரிவு உட்பட 26 உலகளாவிய பேரிடர்கள் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டவை என ஐநா சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஜூலை 2024 இல், கேரளாவின் வயநாட்டில் உள்ள சூரல்மலை மற்றும் முண்டகை பகுதிகளில் கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்ததோடு ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்தனர்.
ஐக்கிய நாடுகளின் பேரிடர் அபாயக் குறைப்பு அலுவலகம் (UNDRR), சர்வதேச காலநிலை மையத்துடன் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பேரழிவுகள் மற்றும் அவற்றின் விளைவுகளை காலநிலை மாற்றம் தீவிரப்படுத்தி வருவதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அதில் கடந்த 2024 ஆம் ஆண்டில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட நிகழ்வுகளில் 3,700 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அதிலும் வயநாடு நிலச்சரிவு உள்ளிட்ட 26 குறிப்பிடத்தக்க வானிலை நிகழ்வுகளில் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் காலநிலை மாற்றத்தின் காரணமாக 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய சராசரியாக, கூடுதலாக 41 நாட்கள், 'ஆபத்தான வெப்பம்' பதிவாகி உள்ளது.
எல் நினோ போன்ற இயற்கை நிகழ்வுகளை விஞ்சி, கடந்த ஆண்டின் பல தீவிர வானிலை நிகழ்வுகளில் காலநிலை மாற்றம் மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக அறிக்கை கூறுகிறது.

வரலாறு காணாத வகையில் அமேசானில் ஏற்பட்ட வறட்சி இதை பிரதிபலிக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும். மனித பயன்பாட்டால் ஏற்படும் புவி வெப்பமயமாதல் காலநிலை மாற்றத்திற்கான முக்கிய காரணமாக அறிக்கை குறிப்பிடுகிறது.
- 37 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து கடந்த மாதம் ஜோ பைடன் உத்தரவிட்டிருந்தார்.
- 2016 இல் பதவியேற்ற டொனால்டு டிரம்ப் மீண்டும் அதை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில் வரும் திங்கள்கிழமை [ஜனவரி 20] பதவியேற்க உள்ளார்.
எனவே தற்போதைய அதிபர் ஜோ பைடன் [82 வயது] தனது அதிகாரத்தை முடிந்தவரை பயன்படுத்தி முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.
குற்ற வழக்கில் சிக்கிய தனது மகன் ஹண்டர் பைடனுக்கு பொது மன்னிப்பு வழங்கியது, ரஷியா மீது கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி கொடுத்தது உள்ளிட்டவை அதில் அடங்கும். இந்நிலையில் பதவிக்காலத்தின் இறுதி நாட்களில் இருக்கும் ஜோ பைடன் நேற்று [வெள்ளிக்கிழமை] ஒரே நாளில் 2500 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.

வன்முறையற்ற சாதாரண போதைப் பொருள் குற்றங்களுக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சுமாா் 2,500 பேருக்கு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜோ பைடன் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். அமெரிக்க வரலாற்றிலேயே ஒரே நாளில் இத்தனை பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது இதுவே முதல் முறை.
வன்முறையில் ஈடுபடாதபோதிலும் மிகக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக பைடன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
முன்னதாக அமெரிக்காவின் மத்திய நீதிமன்றங்களால் 37 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து கடந்த மாதம் ஜோ பைடன் உத்தரவிட்டிருந்தார்.
அவர்கள் செய்த கொலை கண்டிக்கத்தக்கதாக இருப்பினும் மத்திய அளவில் மரண தண்டனை விதிக்கப்படுவது தவறு என்பதால் அவா்களுக்கான தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைப்பதாக பைடன் கூறினாா்.
கடந்த 2003 முதல் மத்திய நீதிமன்றதனால் விதிக்கப்படும் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படாமல் இருந்த நிலையில் 2016 இல் பதவியேற்ற டொனால்டு டிரம்ப் மீண்டும் அதை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

வரும் ஜனவரி 20 முதல் டொனால்டு டிரம்ப் அதிபராக உள்ளார் என்பதால் அவரிடம் இருந்து மரண தண்டனை கைதிகளை பாதுகாக்க ஜோ பைடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டாா்.
- 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
- ஒப்பந்தம் 3 கட்டங்களாக அமல்படுத்தப்படுகிறது.
காசா:
இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடந்து வருகிறது. இதில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இதற்கிடையே இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதை கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்தன. முதலில் ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொண்டது. இதுதொடர்பாக இஸ்ரேல் ஆலோசனை நடத்தி வந்தது.
பின்னர் ஒப்பந்தத்தை இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரிசபை ஏற்றுக்கொண்டது. அந்த ஒப்பந்தம் இஸ்ரேல் முழு மந்திரிசபைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இதற்கிடையே ஹமாசுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் முழு மந்திரிசபை இன்று அதிகாலை ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்த ஒப்பந்தம் 3 கட்டங்களாக அமல்படுத்தப்படுகிறது.
6 வார கால போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தில், காசா மீதான தாக்குதல் நிறுத்தப்படும். இஸ்ரேலிய படைகள் காசாவின் பல பகுதிகளில்இருந்தும் பின்வாங்கும்.
ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள 33 இஸ்ரேல் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர். அதேபோல் 735 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க உள்ளது. அதேபோல் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் படிப்படியாக அமல்படுத்தப்படும். இதன்மூலம் காசா மீதான போர் 15 மாதங்களுக்கு பிறகு முடிவுக்கு வர உள்ளது.






