என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wayanad disaster"

    • வயநாடு நிலச்சரிவு நிவாரண உதவித் தொகையாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ரூ.10 கோடி அறிவித்துள்ளார்.
    • கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ரூ.10 கோடி வழங்க உள்ளார்.

    கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆந்திர அரசு ரூ. 10 கோடி நன்கொடை அறிவித்துள்ளது.

    வயநாட்டில் கடந்த ஜூலை 30ம் தேதி அன்று வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 310 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.

    இந்த நிலையில், ஆந்திரா முதல்வர் நிவாரண நிதியில் இருந்து கேரள அரசுக்கு ரூ.10 கோடி வழங்குவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல்வேறு மாநில அரசுகள் நிதியுதவிகளை அளித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆந்திர அரசு ரூ. 10 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

    முன்னதாக, தெலுங்கு திரையுலகில் இருந்து பிரபாஸ் இரண்டு கோடியும், சிரஞ்சீவி மற்றும் சரண் ஒரு கோடி ரூபாயும், அல்லு அர்ஜுன் ரூ. 25 லட்சம், ராஷ்மிகா மந்தனா ரூ.10 லட்சம், தயாரிப்பாளர் நாகவம்ஷி ரூ. 5 லட்சம் என பிரபலங்கள் பலர் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு நிவாரண நிதி அளித்துள்ளனர்.

    இதேபோல், நடிகைகள் மீனா, குஷ்பு, சுஹாசினி மற்றும் சில சினிமா நட்சத்திரங்கள் நேரடியாகச் சென்று ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை கேரள முதல்வரிடம் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
    • பல ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.

    புதுடெல்லி:

    கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.

    நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல்வேறு மாநில அரசுகள் நிதியுதவிகளை அளித்து வருகின்றன. மேலும், பல்வேறு அரசியல் கட்சிகள், திரை நட்சத்திரங்கள் உள்பட பலர் வயநாடு நிலச்சரிவுக்காக நிதியுதவி அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி தனது ஒருமாத சம்பளத்தை கேரள காங்கிரசுக்கு நன்கொடையாக அளித்துள்ளார்.

    நிலச்சரிவில் தங்கள் அன்புக்குரி உரியவர்கள், வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்த வயநாட்டு மக்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் 100 வீடுகள் கட்டித் தரப்படும் என்ற ராகுல் காந்தியின் அறிவிப்பின் ஒரு பகுதியாக காங்கிரசின் மாநிலப் பிரிவு சேகரிக்கும் நிதிக்கு இந்த நன்கொடை வழங்கப்பட உள்ளது என அக்கட்சி தெரிவித்துள்ளது.

    • பேரழிவுகள் மற்றும் அவற்றின் விளைவுகளை காலநிலை மாற்றம் தீவிரப்படுத்தி வருவதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
    • உலகளாவிய சராசரியாக, கூடுதலாக 41 நாட்கள், 'ஆபத்தான வெப்பம்' பதிவாகி உள்ளது.

    2024 ஆம் ஆண்டில் வயநாடு நிலச்சரிவு உட்பட 26 உலகளாவிய பேரிடர்கள் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டவை என ஐநா சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    ஜூலை 2024 இல், கேரளாவின் வயநாட்டில் உள்ள சூரல்மலை மற்றும் முண்டகை பகுதிகளில் கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்ததோடு ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்தனர்.

    ஐக்கிய நாடுகளின் பேரிடர் அபாயக் குறைப்பு அலுவலகம் (UNDRR), சர்வதேச காலநிலை மையத்துடன் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பேரழிவுகள் மற்றும் அவற்றின் விளைவுகளை காலநிலை மாற்றம் தீவிரப்படுத்தி வருவதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

    அதில் கடந்த 2024 ஆம் ஆண்டில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட நிகழ்வுகளில் 3,700 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அதிலும் வயநாடு நிலச்சரிவு உள்ளிட்ட  26 குறிப்பிடத்தக்க வானிலை நிகழ்வுகளில் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் காலநிலை மாற்றத்தின் காரணமாக 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய சராசரியாக, கூடுதலாக 41 நாட்கள், 'ஆபத்தான வெப்பம்' பதிவாகி உள்ளது.

    எல் நினோ போன்ற இயற்கை நிகழ்வுகளை விஞ்சி, கடந்த ஆண்டின் பல தீவிர வானிலை நிகழ்வுகளில் காலநிலை மாற்றம் மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக அறிக்கை கூறுகிறது.

    வரலாறு காணாத வகையில் அமேசானில் ஏற்பட்ட வறட்சி இதை பிரதிபலிக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும். மனித பயன்பாட்டால் ஏற்படும் புவி வெப்பமயமாதல் காலநிலை மாற்றத்திற்கான முக்கிய காரணமாக அறிக்கை குறிப்பிடுகிறது.  

    ×