என் மலர்tooltip icon

    உலகம்

    • ஸ்பெயின் தலைநகர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகள் மின்சாரம் இல்லாமல் பாதிப்பு.
    • போர்ச்சுக்கலின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகள் பாதிப்பு.

    ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கலில் இன்று (திங்கட்கிழமை) காலை திடீரென மிகப்பெரிய அளவில் மின்தடை ஏற்பட்டது. இதனால் சுரங்கப்பாதை நெட்வொர்க்ஸ், போன் லைன்கள், ஏடிஎம் மெஷின்கள், போக்குவரத்து டிராபிக் சிக்னல்கள் சேவை பாதிக்கப்பட்டன.

    பிரான்ஸ் தலைநகர் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் மொத்த மக்கள் தொகை 5 கோடியாகும். இவர்களின் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டனர் என்ற தகவல் வெளியாகவில்லை.

    போர்ச்சுக்கலில் சுமார் 1.06 கோடி மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கேயும் பயங்கர மின்தடை ஏற்பட்டது. தலைவர்கள், வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகள் பாதிக்கப்பட்டன.

    மின்சாரம் வழங்கும் நெட்வொர்க்கில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மின்சார தடை ஏற்பட்டதாக போர்ச்சுக்கல் தெரிவித்துள்ளது.

    போர்ச்சக்கலில் நீதிமன்ற பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஏடிம் மற்றும் மின்னணு கட்டணம் சேவைககள் பாதிக்கப்பட்டன.

    • 72 மணி நேர போர்நிறுத்தம் மே 8 ஆம் தேதி தொடக்கத்தில் இருந்து மே 10 ஆம் தேதி இறுதி வரை நீடிக்கும்
    • நிகழ்ச்சியில் பங்கேறக் பிரதமர் மோடி உட்பட உலக தலைவர்கள் பலருக்கு ரஷியா அழைப்பு விடுத்தது.

    இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் வெற்றியின் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அடுத்த மாதம் உக்ரைனுடனான போரில் மூன்று நாள் போர் நிறுத்தத்தை ரஷிய அதிபர் புதின் இன்று அறிவித்தார்.

    4 ஆண்டுகளாக நடந்து வரும் உக்ரைன் போரில் முதல் முறையாக கடந்த ஈஸ்டர் ஞாயிறு அன்று ரஷியா தற்காலிக போர்  நிறுத்தம் அறிவித்திருந்ததது. இந்நிலையில் இரண்டாவது முறையாக புதிய போர் நிறுத்த அறிவிப்பு வந்துள்ளது. 

    72 மணி நேர போர்நிறுத்தம் மே 8 ஆம் தேதி தொடக்கத்தில் இருந்து மே 10 ஆம் தேதி இறுதி வரை நீடிக்கும் என ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த போர் நிறுத்தத்தை ஏற்கும்படி உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    எனினும் உக்ரைன் தரப்பில் அத்துமீறல்கள் ஏற்பட்டால், ரஷிய  ஆயுதப் படைகள் பதிலடி அளிக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக மே 9 ஆம் தேதி நடக்கும் வெற்றி அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேறக் பிரதமர் மோடி உட்பட உலக தலைவர்கள் பலருக்கு ரஷியா அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.  

    • சீன அதிபர் ஷி ஜின்பிங் தன்னை போனில் அழைத்தார் என்று தெரிவித்திருந்தார்.
    • பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அமெரிக்கா கூறுவது, தவறாக வழிநடத்தும் செயல்.

    வரி விதிப்புகளுக்குப் பிறகு, அதைப் பற்றி பேச சீன அதிபர் தன்னை அழைத்ததாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அமெரிக்காவிடம் வரிகள் தொடர்பாக எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என சீனா மறுத்துள்ளது.

    இந்த மாத தொடக்கத்தில் பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பரஸ்பர வரிவிதிப்பை அறிவித்தார். சீனா இதற்கு பதிலடியாக எதிர் வரிவிதிப்பை அறிவித்தது. இரு நாடுகளும் மாறி மாறி வரி விதித்துக்கொண்ட நிலையில் சீன இறக்குமதிகளுக்கான வரி 245 ஆக அதிகரிக்கப்பட்டது.

    இதற்கு பதிலடியாக அமெரிக்காவுக்கு அரிய வகை கனிமங்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியை சீனா நிறுத்தியது. இரு நாடுகளுக்கிடையேயும் வர்த்தக போர் வலுவடைந்து வரும் சூழ்நிலையில், சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங் தன்னை போனில் அழைத்தார் என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என சீன வர்த்தக அமைச்சகம் மறுத்துள்ளது. மேலும் வரிகள் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த ஆலோசனையோ, பேச்சுவார்த்தையோ நடைபெறவில்லை என்று அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

    பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அமெரிக்கா கூறுவது, தவறாக வழிநடத்தும் செயல் என்றும், வரிப் போரை தொடங்கியது அமெரிக்கா தான், அதை உண்மையிலேயே சரி செய்ய விரும்பினால், முதலில் அவர்கள் தங்கள் தவறுகளை சரி செய்ய வேண்டும்.

    அடுத்தவர்களை மிரட்டுவதையும், அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதையும் நிறுத்திவிட்டு, சீனாவிற்கு விதித்த வரிகள் அனைத்தையும் முழுமையாக நீக்க வேண்டும் என்றும் சீன தூதரகம் வலியுறுத்தியுள்ளது. 

    • ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
    • ரஷிய மக்கள் வட கொரிய சிறப்புப் படைகளின் வீரத்தை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

    உக்ரைன் நாட்டின் மீது கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வரும் ரஷியா அந்நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றி தங்கள் வசம் கொண்டு வந்துள்ளது.

    அவர்களுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் போர் இன்னும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்த சண்டையில் ரஷியா, வடகொரியா வீரர்களை வைத்து உக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி புகார் கூறினார்.

    இந்த நிலையில் ரஷியாவுக்கு ஆதரவாக வடகொரியா படை வீரர்களும் களம் இறங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக ரஷிய தலைமை ராணுவ கண்காணிப்பாளர் வலேரி ஜெராசிமோஸ் கூறியதாவது,

    வடகொரிய வீரர்கள் மிகுந்த தைரியம், திறமை மற்றும் வீரத்துடன் உக்ரைன் படைகளை எதிர்த்து போரிட்டனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷிய அதிபர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையே கையெழுத்தான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்திற்குப் பின்னர் இந்த உதவி வழங்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் போரில் ரஷியாவுக்கு உதவிக்கரம் நீட்டியதற்காக வட கொரியாவுக்கு அதிபர் புதின் நன்றி தெரிவித்துள்ளார். ரஷிய வீரர்களுடன் தோளோடு தோள் நின்று போராடிய வட கொரிய வீரர்களின் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பை புதின் பாராட்டியுள்ளார்.

    அதிபர் மாளிகையான கிரெம்ளின் வெளியிட்ட அறிக்கையில், "ரஷிய மக்கள் வட கொரிய சிறப்புப் படைகளின் வீரத்தை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

    ரஷியாவிற்காக, நமது பொதுவான சுதந்திரத்திற்காக, தங்கள் ரஷிய சகோதரர்களுடன் ஆயுதமேந்திய நிலையில் போராடி தங்கள் உயிரைக் கொடுத்த மாவீரர்களை நாங்கள் எப்போதும் கௌரவிப்போம்" என்று புதின் கூறினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்திய அரசாங்கம் பாகிஸ்தானுக்கு எதிராக சில கடுமையான முடிவுகளை எடுத்து வருகிறது.
    • அதிரடியாக ராணுவத்தைவிட்டு 1200 பாகிஸ்தான் வீரர்கள் வெளியேறியுள்ளனர்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு நாடும் முழுவரும் இருந்து கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசாங்கம் பாகிஸ்தானுக்கு எதிராக சில கடுமையான முடிவுகளை எடுத்து வருகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் ராணுவத்தில் இருந்து அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர்.

    அதிரடியாக ராணுவத்தைவிட்டு 1200 பாகிஸ்தான் வீரர்கள் வெளியேறியுள்ளனர்.

    இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளால் அச்சத்தில் பாகிஸ்தான் வீரர்கள் ராணுவத்தைவிட்டு வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், பாகிஸ்தான் ராணுவத்தின் உட்பூசல், நிதி தட்டுப்பாடு மற்றும் இதர பிரச்சனைகள் காரணமாக ராஜினாமா எனவும் கூறப்படுகிறது.

    • பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் சீனா வெளியுறவு அமைச்சர் வாங் யி பேசியுள்ளார்.
    • பாகிஸ்தானின் உறுதியான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு சீனா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.

    26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. தங்கள் சொந்த பாதுகாப்பு தோல்விகளுக்காக இந்தியா பாகிஸ்தான் மீது பழிபோடுவதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

    மேலும் பஹல்காம் விவகாரத்தில் பாரபட்சமற்ற சர்வதேச விசாரணை வேண்டும் என பாகிஸ்தான் தெரிவித்தது.

    இந்நிலையில் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் சீனா வெளியுறவு அமைச்சர் வாங் யி பேசியுள்ளார்.

    தொலைபேசி வாயிலாக இந்த உரையாடல் நடைபெற்றுள்ளது. அப்போது பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில், பாரபட்சமற்ற விசாரணைக்கு சீனா ஆதரவு அளிக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் இருதரப்புமே பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.

    பதட்டங்களை தணிக்க இரு தரப்பும் பணியாற்ற வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது அனைத்து நாடுகளின் பொறுப்பாகும். பாகிஸ்தானின் உறுதியான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு சீனா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.

    இந்த மோதல் இந்தியாவிற்கோ அல்லது பாகிஸ்தானிற்கோ அடிப்படை நலன்களுக்கு உகந்ததல்ல, தெற்காசியாவின் ஸ்திரத்தன்மைக்கும் நன்மை பயக்கக் கூடியது அல்ல.

    இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடித்து நிலைமையை அமைதிப்படுத்த ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வாங் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது.

    • ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ராணுவ வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
    • ரஷிய ராணுவத்துடன் இணைந்து சில நாடுகளை சேர்ந்த வீரர்களும் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

    மாஸ்கோ:

    உக்ரைன் நாட்டின் மீது கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வரும் ரஷியா அந்நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றி தங்கள் வசம் கொண்டு வந்துள்ளது.

    அவர்களுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ராணுவ வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் போர் இன்னும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்த சண்டையில் ரஷிய ராணுவத்துடன் இணைந்து சில நாடுகளை சேர்ந்த வீரர்களும் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. ரஷியா வடகொரியா வீரர்களை வைத்து உக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி புகார் கூறினார்.


    இந்த நிலையில் ரஷியாவுக்கு ஆதரவாக வடகொரியா படை வீரர்களும் களம் இறங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ரஷிய தலைமை ராணுவ கண்காணிப்பாளர் வலேரி ஜெராசிமோஸ் கூறியதாவது:-

    வடகொரிய வீரர்கள் மிகுந்த தைரியம், திறமை மற்றும் வீரத்துடன் உக்ரைன் படைகளை எதிர்த்து போரிட்டனர்.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷிய அதிபர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையே கையெழுத்தான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு பின்னர் இந்த உதவி வழங்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆனால் இந்த போரில் வடகொரியா வீரர்கள் எத்தனை பேர் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் உயிர் இழந்தவர்கள் விவரம் குறித்து எந்தவித தகவலும் தெரிவிக்க வில்லை.

    ஆனால் ஆயிரக்கணக்கான வீரர்கள் ரஷிய படையுடன் இணைந்து போரிட்டு வருவதாக தென் கொரியா உளவுத்துறை தெரிவித்து இருந்தது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் போரில் வெளிநாட்டு தலையீடு இருப்பதாக கூறி இருந்தார். தற்போது இது நிரூபணம் ஆகி உள்ளது.

    • ஈரானின் மிகவும் பரபரப்பான மற்றும் மிகப்பெரிய துறைமுகம் பந்தர் அப்பாஸ்.
    • பந்தர் அப்பாஸ் துறைமுகம் பாரசீக வளைகுடாவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது.

    டெஹ்ரான்:

    ஈரானின் மிகவும் பரபரப்பான மற்றும் மிகப்பெரிய துறைமுகமான பந்தர் அப்பாஸ், பாரசீக வளைகுடாவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த துறைமுகம் ஈரானின் முக்கிய வர்த்தக மையமாகும். எண்ணெய் ஏற்றுமதிக்கும் மிகவும் முக்கியமானது.

    இங்கிருந்து பல்வேறு பொருட்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்படுகின்றன. இது ஈரானிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மட்டுமல்லாமல், பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியலிலும் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளது.

    இதற்கிடையே, நேற்று முன்தினம் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் நின்ற ஒரு கன்டெய்னர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதி முழுதும் போர்க்களம் போல காட்சி அளித்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 400 பேர் வரை படுகாயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் மேலும் பலர் இறந்ததால் பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

    இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், ஏவுகணை உந்துசக்தியை உருவாக்கப் பயன்படுத்தும் ரசாயனம் வெடித்தது தெரிய வந்துள்ளது.

    • டைட்டானிக் உலகின் மிகப்பிரமாண்டமான சொகுசு கப்பலாகும்.
    • உலகையே உலுக்கிய இந்த விபத்து ஹாலிவுட் படமாகவும் வெளிவந்துள்ளது.

    லண்டன்:

    உலகப் புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் 1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்துக்குப் புறப்பட்டது.

    அந்தக் காலத்தில் உலகின் மிகப்பிரமாண்டமான சொகுசு கப்பல் இதுவாகும். ஆனால், தனது முதல் பயணத்திலேயே அந்தக் கப்பல் அட்லாண்டிக் பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இதில் 1,500-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

    உலகையே உலுக்கிய இந்த விபத்து ஹாலிவுட் படமாகவும் வெளிவந்துள்ளது. அந்த கப்பலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் அவ்வப்போது ஏலம் விடப்படுவது வழக்கம்.

    இந்நிலையில், டைட்டானிக் கப்பலில் இருந்து கர்னல் ஆர்ச் சிபால்ட் கிரேசி என்பவர் எழுதிய ஒரு கடிதம் லண்டனில் ஏலத்துக்கு விடப்பட்டது. அதனை ஹென்றி ஆல்ட்ரிட்ஜ் என்பவர் சுமார் மூன்றரை கோடி ரூபாய்க்கு வாங்கினார்.

    அந்தக் கடிதத்தில் பயணம் நிறைவு செய்த பிறகே சிறந்த கப்பல் என தீர்ப்பு வழங்க முடியும் என எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 24 மணி நேரத்தில் பதிவான 51 உயிரிழப்புகளையும் சேர்த்து பலி எண்ணிக்கை 52,243 ஆக உள்ளது.
    • பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற ஐநாவின் அறிக்கை மேற்கொள் காட்டுகிறது.

    காசா:

    கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தியதில் இருந்து இஸ்ரேல், காசா, ராஃபா உள்ளிட்ட நகரங்கள் மீது இடைவிடாது தாக்குதல் நடத்தி வருகிறது.

    இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் கடந்த மார்ச் 1-ம் தேதி முடிவுக்கு வந்ததை அடுத்து மீண்டும் போர் தொடங்கியுள்ளது.

    காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், லெபனானிலும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், கடந்த 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்தைக் கடந்துள்ளது என காசா சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

    கடந்த 24 மணிநேரத்தில் பதிவான 51 உயிரிழப்புகளையும் சேர்த்து தற்போது மொத்த பலி எண்ணிக்கை 52,243 ஆக உள்ளது. மேலும் அதன் அறிக்கையில் இதுவரை 1,17,600 க்கும் மேற்பட்டோர் போரில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஐ.நா.சபையின் அறிக்கை தெரிவிக்கிறது.

    • கனடாவில் பிலிப்பைன்ஸ் பண்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சி இடையே வேகமாக வந்த கார் ஒன்று கூட்டத்திற்குள் புகுந்தது.

    ஒட்டாவா:

    கனடாவின் வென்கவுர் நகரில் பிலிப்பைன்ஸ் பண்பாட்டு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கனடாவாழ் பிலிப்பைன்ஸ் நாட்டினர், உள்ளூர் மக்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என பலர் கலந்துகொண்டனர்.

    இந்நிகழ்ச்சி சாலையோரம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வேகமாக வந்த கார் ஒன்று கூட்டத்திற்குள் புகுந்தது. கூட்டத்தில் இருந்த பலர் மீது கார் மோதியது. இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    காரை ஓட்டிவந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர். 30 வயதுடைய அவர் வென்கவுர் பகுதியில் வசித்து வந்தவர் என தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில், கூட்டத்தில் கார் புகுந்து மோதியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அப்போது அவரது வீட்டு அலமாரியில், எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
    • வேலை முடிந்து திரும்பியபோது தனது 86 வயதான தந்தை வீட்டில் இறந்து கிடந்தார்.

    ஜப்பானில்  இறுதி சடங்கு செய்ய பணம் இல்லாததால் தந்தையின் சடலத்தை 2 ஆண்டுகளாக வீட்டு அலமாரியில் ஒளித்து வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவை சேர்ந்த 56 வயதான நோபுஹிகோ சுசுகி என்ற நபர், உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த ஒரு வாரமாக உணவகம்  திறக்கப்படாமல் இருந்ததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நோபுஹிகோ சுசுகி  வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டு அலமாரியில், எலும்புக்கூடு ஒன்று இருந்துள்ளது.

    இதுதொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், வேலை முடிந்து திரும்பியபோது தனது 86 வயதான தந்தை வீட்டில் இறந்து கிடந்தார், ஆனால் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்வதற்கு அதிகளவு செலவாகும் என்பதால், அதை தவிர்க்க தந்தையின் உடலை அலமாரியில் மறைத்து வைத்ததாக சுசுகி தெரிவித்தார்.

    எனினும் தந்தையின் ஓய்வூதியத்தை 2 ஆண்டுகளாக பெற்று வந்ததால், சந்தேகத்தின் அடிப்படையில் அவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஜப்பானில், இறுதிச்சடங்கு செய்வதற்கு 1.3 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் ரூ.7.60 லட்சம்) ஆகும் என மதிப்பிடப்படுகிறது.  

    ×