என் மலர்tooltip icon

    உலகம்

    • ஐஸ்பேஸ் நிறுவன அதிகாரிகள், விண்கலத்தின் லேசர் கருவியின் செயலிழப்பே விபத்துக்குக் காரணம் என்று கூறி உள்ளனர்.
    • நாசாவுடன் இணைந்து 4-வது முயற்சிக்கான திட்டம் ஒப்பந்தமாகி உள்ளது.

    டோக்கியோ:

    ஜப்பானின் விண்வெளி ஆய்வு மையமான ஜாஸா ஏற்கனவே நிலவில் விண்கலத்தை தரையிறக்கி உள்ளது. அங்குள்ள தனியார் நிறுவனமான ஐஸ்பேஸ் நிறுவனம், ரெசிலியன்ஸ் என்ற விண்கலத்தை கடந்த ஜனவரி மாதம் நிலவுக்கு அனுப்பியது. நிலவின் வடக்கில் அமைந்துள்ள உறை கடல் எனப்படும் மார் பிரிகோரிசில் தரையிறங்கும் இலக்குடன் அந்த விண்கலம் அனுப்பப்பட்டது. அந்த விண்கலம் இந்த மாத தொடக்கத்தில் நிலவின் தரையில் மோதி செயல் இழந்தது.

    ரெசிலியன்ஸ் விண்கலம் மற்றும் அதன் உலவு கருவி ஆகியவை விழுந்து நொறுங்கி கிடக்கும் இடத்தை நாசாவின் லூனார் விண்கலம் கடந்தவாரம் புகைப்படங்கள் எடுத்து அனுப்பியது.

    ஐஸ்பேஸ் நிறுவன அதிகாரிகள், விண்கலத்தின் லேசர் கருவியின் செயலிழப்பே விபத்துக்குக் காரணம் என்று கூறி உள்ளனர். லேசர் கருவி நிலவின் மேற்பரப்பு தூரத்தை துல்லியமாக அளவிட்டு கொடுக்காததால், வேகமாக சென்ற விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி விபத்துக்கு உள்ளானதாக கூறி உள்ளனர்.

    மென்பொருள் செயலிழப்பால் கடந்த 2023-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் முதல் நிலவு விண்கலம் தரையிறங்க முடியாமல் விபத்துக்கு உள்ளானது. தற்போது அடுத்த 2 ஆண்டுகளுக்குள்ளாக அதன் 2-வது முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது. அந்த நிறுவனம் தனது 3-வது முயற்சியை 2027-ல் செய்ய உள்ளது. நாசாவுடன் இணைந்து 4-வது முயற்சிக்கான திட்டமும் ஒப்பந்தமாகி உள்ளது.

    சமீபத்திய ஆண்டுகளில் தனியார் அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட 7 நிலவில் தரையிறங்கும் முயற்சிகளில், ஒன்று மட்டுமே முழுமையான வெற்றி பெற்றுள்ளது. பயர்பிளை ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனம் மார்ச் மாதத்தில் அதன் புளூ கோஸ்ட் லேண்டரை நிலவில் தரையிறக்கியது குறிப்பிடத்தக்கது.

    • டைப்-88 குறுகிய தூர தரையிலிருந்து கப்பல் வரையிலான ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளது.
    • அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் தங்கள் ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது.

    ஜப்பான் தனது முதல் ஏவுகணை சோதனையை அதன் மண்ணில் நடத்தியுள்ளதாக ஜப்பானிய இராணுவம் தெரிவித்துள்ளது.

    இந்த சோதனை நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள ஹொக்கைடோ தீவில் நடத்தப்பட்டது. டைப்-88 குறுகிய தூர தரையிலிருந்து கப்பல் வரையிலான ஏவுகணை (Tyne-88 surface-to-shin short range missile) சோதனை செய்யப்பட்டுள்ளது.

    சமீபத்தில் சீனாவில் போர் கப்பல் ஜப்பான் அருகில் உள்ள கடற்பரப்பில் காணப்பட்டதாக ஜப்பன் கவலை தெரிவித்திருந்தது. எனவே அதிகரித்து வரும் சீன அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் ஜப்பான் தனது பாதுகாப்புத் திறன்களை அதிகரித்து வருகிறது. 

    புதிய ஏவுகணை சோதனை வெற்றிகரமாக இருந்ததா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

    ஜப்பான் இதற்கு முன்பு அதன் நட்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் தங்கள் ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. தங்கள் சொந்த மண்ணில் ஜப்பான் ஏவுகணை சோதனை நடத்துவது இதுவே முதல் முறை ஆகும்.

    • சுமி பகுதியில் நடந்த டிரோன் தாக்குதலில் ஐந்து வயது குழந்தை உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
    • நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் மேற்கத்திய நாடுகளின் தலைவர்களை ஜெலென்ஸ்கி சந்திக்க உள்ளார்.

    உக்ரைனில் ரஷிய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

    செவ்வாய்க்கிழமை பிற்பகல் ரஷிய தாக்குதலில் டினிப்ரோவில் ஏழு பேரும், சமரில் இரண்டு பேரும் கொல்லப்பட்டனர். வடகிழக்கு உக்ரைனின் சுமி பகுதியில் நடந்த டிரோன் தாக்குதலில் ஐந்து வயது குழந்தை உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

    முன்னெச்சரிக்கையாக மாஸ்கோவின் இரண்டு முக்கிய விமான நிலையங்களான வுனுகோவோ மற்றும் ஷெரெமெட்டியோவில் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷியாவின் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

    இதற்கிடையே உக்ரைனில் இருந்து வந்த 20 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷிய விண்வெளி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ரஷியாவின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மேற்கத்திய நாடுகளின் இராணுவ உதவியை மேலும் நாடியுள்ளார்.

    நெதர்லாந்தின் ஹேக்கில் நடைபெறும் நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் மேற்கத்திய நாடுகளின் தலைவர்களை ஜெலென்ஸ்கி சந்திக்க உள்ளார்.  

    • ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
    • எதிர்காலத்தில் மீண்டும் அணுஆயுதம் தாயரிக்க ஈரான் முயற்சிக்க கூடாது.

    இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானிய அணு விஞ்ஞானி முகமது ரெசா செடிகி சபர் கொல்லப்பட்டார்.

    போர் நிறுத்தம் அமலுக்கு வருவதற்கு முன்பு, வடக்கு ஈரானின் அஸ்தானா அஷ்ரஃபியாவில் உள்ள அவரது பெற்றோரின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

    சில நாட்களுக்கு முன்பு தெஹ்ரானில் உள்ள அவரது வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவரது 17 வயது மகன் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே ஈரானின் அணுசக்தி தளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும், எதிர்காலத்தில் மீண்டும் அணுஆயுதம் தாயரிக்க ஈரான் முயற்சிக்க கூடாது என்றும் அமெரிக்க துணை அதிபர் ஜெ.டி.வான்ஸ் எச்சரித்துள்ளார். 

    • 146 பேரில் 62 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • இஸ்ரேலிய ராணுவத்தினர், டிரோன்கள், மற்றும் பீரங்கிகள் இணைந்து கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    காசாவில் உதவிப் பொருட்களை பெற உதவி மையத்தில் திரண்ட மக்கள் கூட்டத்தின் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 25 பேர் கொல்லப்பட்டனர்.

    காசாவில் வாடி பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, சலா அல்-தின் சாலையில் உதவிப்பொருட்களுடன் வரும் லாரிகளுக்காக காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேலிய ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் கொல்லப்பட்டனர். 146 பேர் படுகாயமடைந்தனர்.

    லாரிகளை நெருங்க மக்கள் ஓடியபோது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். படுகாயமடைந்த 146 பேரில் 62 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும், நுஷ்ரைத் அகதி முகாமில் உள்ள அவ்தா மருத்துவமனை தெரிவித்துள்ளது.

    இஸ்ரேலிய ராணுவத்தினர், டிரோன்கள், மற்றும் பீரங்கிகள் இணைந்து கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் விவரிக்கின்றனர்.

    இந்த உயிரிழப்புகள் மூலம் காசாவில் கடந்த அக்டோபர் 2023 முதல் இஸ்ரேலிய ராணுவ தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 56,000 த்தை கடந்துள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு செயலாளர்கள் மாநாடு சீனாவில் நடந்து வருகிறது.
    • இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றுள்ளார்.

    பீஜிங்:

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு செயலாளர்கள் மாநாடு சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், சீனா சென்றுள்ள அஜித் தோவல் இன்று அந்நாட்டு துணை அதிபர் ஹன் யங்கை சந்தித்தார்.

    இந்தச் சந்திப்பின்போது பயங்கரவாதத்திற்கு எதிராக செயல்பட்டு பிராந்திய அமைதிக்கு நிலைநாட்டுவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

    • டொனால்டு டிரம்ப் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதாக அறிவித்தார்.
    • அறிவித்த பிறகு ஈரான் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது.

    இஸ்ரேல்- ஈரான் இடையில் கடந்த 12 நாட்களாக சண்டை நடைபெற்று வருகிறது. இந்த சண்டையில் அமெரிக்கா தலையீடு செய்தால், சரி செய்ய முடியாத அளவிற்கு விளைவுகளை சந்திக்கும் என ஈரான் எச்சரிக்கை விடுத்தது.

    ஈரான் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக இரண்டு வாரங்களில் முடிவு எடுக்கப்படும் என அமெரிக்க தெரிவித்த நிலையில், நேற்று முன்தினம் ஈரானில் உள்ள அணுஆயுத திட்டங்களை செயல்படுத்தும் இடங்களில் பயங்கர தாக்குதல் நடத்தியது.

    பின்னர் ஈரான் இஸ்ரேல் மீதும், கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில்தான் நேற்றிரவு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இஸ்ரேல்- ஈரான் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டதாக அறிவித்தார்.

    டிரம்பின் போர் நிறுத்தம் அறிவிப்புக்கு முன், இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம் எனக்கூறி, இன்று காலை இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதலுக்குப்பின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதாக ஈரான் தெரிவித்தது. அதேவேளையில், போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவித்த பின் ஈரான், சுமார் இரண்டரை மணி நேரம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    ஒருவேளை இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், ஈரானும் பதில் தாக்குதல் நடத்தும். இதனால் போர் நிறுத்தம் ஒப்பந்தம் எடுபடாமல் போகிவிடும். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், போர் நிறுத்தத்திற்கு முயற்சி மேற்கொண்டு வரும்போது இஸ்ரேலால் அதற்கு குந்தகம் ஏற்படும் என நினைக்கிறார்.

    இந்த நிலையில், விமானிகளை உடனடியாக சொந்த நாட்டிற்கு திரும்ப அழைக்கும்படி இஸ்ரேலுக்கு டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • ஈரான்- இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதாக டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.
    • டிரம்ப் அறிவித்த பின்னரும் ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

    இஸ்ரேல்- ஈரான் இடையில் கடந்த 12 நாட்களாக சண்டை நடைபெற்று வருகிறது. இந்த சண்டையில் அமெரிக்கா தலையீடு செய்தால், சரி செய்ய முடியாத அளவிற்கு விளைவுகளை சந்திக்கும் என ஈரான் எச்சரிக்கை விடுத்தது.

    ஈரான் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக இரண்டு வாரங்களில் முடிவு எடுக்கப்படும் என அமெரிக்க தெரிவித்த நிலையில், நேற்று முன்தினம் ஈரானில் உள்ள அணுஆயுத திட்டங்களை செயல்படுத்தும் இடத்தில் பயங்கர தாக்குதல் நடத்தியது.

    பின்னர் ஈரான் இஸ்ரேல் மீதும், கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில்தான் நேற்றிரவு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இஸ்ரேல்- ஈரான் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டதாக அறிவித்தார்.

    டிரம்பின் போர் நிறுத்தம் அறிவிப்புக்கு முன், இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம் எனக் கூறி, இன்று காலை இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதலுக்குப் பின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதாக ஈரான் தெரிவித்தது. அதேவேளையில், போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவித்த பின் ஈரான், சுமார் இரண்டரை மணி நேரம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    ஒருவேளை இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், ஈரானும் பதில் தாக்குதல் நடத்தும். இதனால் போர் நிறுத்தம் நீடிக்குமா? என்பது இஸ்ரேலில் நடவடிக்கையின் மூலம்தான் தெரியவரும்.

    ஈரானை பொறுத்த வரையில், எந்தவொரு தாக்குதலுக்கும் தக்க பதில் தாக்குதல் நடத்தப்படும் உறுதியாக தெரிவித்துள்ளது.

    • இஸ்ரேல் உடனான சண்டையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்தது.
    • அமெரிக்காவின் தாக்குதல்கள் ஈரானின் அணு ஆயுதத்தை உருவாக்கும் முயற்சிகளை தாமதப்படுத்தியுள்ளன.

    கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது நேற்று இரவு ஈரான் பல ஏவுகணைகளை ஏவி தாக்கியது.

    அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது.

    கடந்த ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நடந்து வந்தது.

    இந்நிலையில் ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார்.

    இதனையடுத்து, இஸ்ரேல் உடனான சண்டையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் அறிவித்தது. முதலில் போர் நிறுத்தம் இல்லை என்று கூறிய ஈரான் தற்போது போர் நிறுத்தத்தை அறிவித்தது.

    இந்நிலையில், அணு ஆயுதத்தை தயாரிக்க ஈரான் மீண்டும் முயற்சிக்க கூடாது அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜே.டி. வான்ஸ், "ஈரானின் அணு நிலையங்கள் மீதான எங்களது தாக்குதல், யுரேனியத்தை புதைப்பதை இலக்காக கொண்டு இருந்தது. யுரேனியம் புதைக்கப்பட்டுவிட்டது என்று நான் நினைக்கிறேன். ஈரானின் யுரேனியம் கையிருப்பை அகற்றவும், செறிவூட்டப்பட்ட எரி பொருளை அணு ஆயுதமாக மாற்றும் ஈரானின் திறனை அழிக்கவும் அமெரிக்கா விரும்பியது.

    அதன்படி அமெரிக்கா தாக்கிய 3 செறிவூட்டல் நிலையங்களுக்கு அடியில் ஈரானின் யுரேனியம் கையிருப்பு புதைந்து போயிருக்கலாம். நாங்கள் ஈரானுடன் போரில் ஈடுபடவில்லை. ஈரானின் அணுசக்தி திட்டத்துடன் போரில் ஈடுபட்டுள்ளோம்.

    அமெரிக்காவின் தாக்குதல்கள் ஈரானின் அணு ஆயுதத்தை உருவாக்கும் முயற்சிகளை கணிசமாக தாமதப்படுத்தியுள்ளன. அதுதான் தாக்குதலின் குறிக்கோளாக இருந்தது. அதை நிறைவேற்றி உள்ளோம். ஈரான் எதிர்காலத்தில் அணு ஆயுதத்தை உருவாக்க விரும்பினால் அவர்கள் மீண்டும் மிகவும் சக்திவாய்ந்த அமெரிக்க ராணுவத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என்று தெரிவித்தார்.

    • நிலநடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
    • சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட வில்லை.

    பிலிப்பைன்சில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள டாவோ தீவின் கிழக்கே சுமார் 374 கிலோமீட்டர் (232 மைல்) தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.3-ஆக பதிவானது.

    நிலநடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட வில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல்கள் வெளியாகவில்லை.

    • ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது
    • அமெரிக்காவின் தலையீடு 2 நாடுகளுக்கும் இடையே போர் பதற்றத்தை மேலும் மோசமாக்கியது.

    கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது நேற்று இரவு ஈரான் பல ஏவுகணைகளை ஏவி தாக்கியுள்ளது.

    அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

    இருப்பினும் ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக கத்தாரும், அமெரிக்காவும் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நடந்து வந்தது.

    அமெரிக்காவின் தலையீடு நிலைமையை மேலும் மோசமாக்கியது. இந்நிலையில் ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார்.

    இதனையடுத்து, இஸ்ரேல் உடனான சண்டையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முதலில் போர் நிறுத்தம் இல்லை என்று கூறிய ஈரான் தற்போது போர் நிறுத்தத்தை அறிவித்தது.

    இந்நிலையில், இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில், " போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இரு நாடுகளும் போர் ஒப்பந்தத்தை மீற வேண்டாம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • ஆக்சியம்-4 திட்டம், விண்வெளி ஆய்வுத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
    • தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலை ஆகியவை காரணமாக 6 முறை ஒத்தி வைக்கப்பட்டது.

    அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, இந்திய விண்வெளி கழகமான இஸ்ரோ ஆகியவை இணைந்து ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப உள்ளது.

    இந்தத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படை விமானியான சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு செல்கிறார். அவருடன் 3 விண்வெளி வீரர்கள் செல்ல உள்ளனர்.

    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் அவர்கள் செல்ல இருந்த பயணம், தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலை ஆகியவை காரணமாக 6 முறை ஒத்தி வைக்கப்பட்டது. கடைசியாக 19-ம் தேதி ராக்கெட் ஏவப்பட இருந்த நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்தது.

    இந்நிலையில், ஆக்சியம் 4 திட்டம் நாளை (ஜூன் 25) செயல்படுத்தப்படும் என நாசா அறிவித்துள்ளது.

    இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் நாளை (ஜூன் 25) விண்வெளி பயணம் மேற்கொள்கின்றனர். புளோரிடாவில் இருந்து பால்கன் 9 மூலம் டிராகன் விண்கலத்தில் நால்வரும் செல்கின்றனர்

    ×