என் மலர்
உலகம்
- கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது நேற்று இரவு ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
- இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து வளைகுடா நாடுகள் தங்கள் வான்வழியை மூடியுள்ளன.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், கத்தாரில் தோஹாவில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானப்படை தளம் மீது நேற்று இரவு ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக வளைகுடா நாடுகள் தங்கள் வான்வழியை மூடியுள்ளன.
இந்நிலையில், கத்தாரில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரானின் தாக்குதல் எதிரொலியாக கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் பதிவில், "கத்தாரில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், வீட்டிலேயே இருக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. கத்தார் அதிகாரிகளிடமிருந்து வரும் உள்ளூர் செய்திகள், அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள்" என்று தெரிவித்துள்ளது.
- ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
- அமெரிக்காவின் தலையீடு 2 நாடுகளுக்கும் இடையே போர் பதற்றத்தை மேலும் மோசமாக்கியது.
கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது நேற்று இரவு ஈரான் பல ஏவுகணைகளை ஏவி தாக்கியுள்ளது.
அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இருப்பினும் ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக கத்தாரும், அமெரிக்காவும் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நடந்து வந்தது.
அமெரிக்காவின் தலையீடு நிலைமையை மேலும் மோசமாக்கியது. இந்நிலையில் ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில், போர்நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் அறிவிப்பை ஈரான் மறுத்துள்ளது.
இது தொடர்பாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி தனது எக்ஸ் பதிவில், "இஸ்ரேல் தான் ஈரான் மீது போரை தொடங்கியது. நாங்கள் போரை தொடங்கவில்லை.
தற்போது வரை, போர் நிறுத்தம் அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த 'உடன்பாடும்' எட்டப்படவில்லை.
இருப்பினும், இஸ்ரேலிய ஆட்சி ஈரானிய மக்களுக்கு எதிரான சட்டவிரோத ஆக்கிரமிப்பை தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் நிறுத்தினால், அதன் பிறகு எங்கள் பதிலடியைத் தொடர எங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை.
எங்கள் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
- அதை "12 நாள் போர்" என்று அழைக்க வேண்டும்.
- முழு மத்திய கிழக்கையும் அழித்திருக்கக்கூடிய ஒரு போர், ஆனால் அது நடக்கவில்லை.
கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது நேற்று (திங்கள்கிழமை) இரவு ஈரான் பல ஏவுகணைகளை ஏவி தாக்கியுள்ளது.
அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இருப்பினும் ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக கத்தாரும், அமெரிக்காவும் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நடந்து வந்தது.
அமெரிக்காவின் தலையீடு நிலைமையை மேலும் மோசமாக்கியது. இந்நிலையில் ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது ட்ரூத் சோஷியல் பதிவில் டிரம்ப் கூறியதாவது, "அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே முழுமையான போர் நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் 6 மணி நேரத்தில், இஸ்ரேலும் ஈரானும் தங்கள் இறுதிப் பணிகளை முடித்த பிறகு 12 மணிநேர போர் நிறுத்தம் தொடங்கும். அப்போது போர் முடிந்ததாக கருதப்படும். அந்த 12 மணிநேர போர் நிறுத்தத்தின் பின், ஈரான், இஸ்ரேல் தங்கள் போர் நிறுத்த்தை நீட்டிக்கும், 24வது மணி நேரத்தில், 12வது நாள் போரின் அதிகாரப்பூர்வ முடிவை உலகமே வரவேற்கும்.
ஒவ்வொரு போர் நிறுத்தத்தின் போதும், மறுபக்கம் அமைதியாகவும் மரியாதையுடனும் இருக்கும். இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் முடிவுக்கு வருவதற்கான சகிப்புத்தன்மை, தைரியம் பெற்றதற்கு நான் வாழ்த்த விரும்புகிறேன். அதை "12 நாள் போர்" என்று அழைக்க வேண்டும்.
இது பல வருடங்களாக நீடித்து, முழு மத்திய கிழக்கையும் அழித்திருக்கக்கூடிய ஒரு போர், ஆனால் அது நடக்கவில்லை, மத்திய கிழக்கு ஒருபோதும் அழியாது!. கடவுள் இஸ்ரேலை ஆசீர்வதிப்பாராக, கடவுள் ஈரானை ஆசீர்வதிப்பாராக, கடவுள் மத்திய கிழக்கை ஆசீர்வதிப்பாராக, கடவுள் அமெரிக்காவை ஆசீர்வதிப்பாராக, கடவுள் உலகை ஆசீர்வதிப்பாராக!" என்று பதிவிட்டுள்ளார்.
- கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தை ஈரான் தாக்கியது.
- சர்வதேச விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், கத்தாரில் தோஹாவில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானப்படை தளம் மீது நேற்று இரவு ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக வளைகுடா நாடுகள் தங்கள் வான்வழியை மூடியுள்ளன. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கத்தாரைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளும் தங்கள் வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளன.
நேற்று (திங்கள்கிழமை முதல்) தனது வான்வெளியை மறு அறிவிப்பு வரும் வரை மூடியுள்ளதாக குவைத் அறிவித்தது. குவைத் ஏர்வேஸ் அனைத்து விமான சேவைகளையும் நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது கப்பற்படைப் பிரிவு அமைந்துள்ள பஹ்ரைன் நாடு, பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக வான்வெளி மூடலை அறிவித்தது.
அதிகரிக்கும் பதட்டங்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி கத்தாரும் தனது வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகமும் தனது வான்வெளியை மூடியதாக FlightRadar24 தெரிவித்துள்ளது.
வளைகுடா நாடுகளில் வான்வெளி மூடப்பட்டதால், சர்வதேச விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரான், ஈராக், சிரியா மற்றும் இஸ்ரேல் வான்வெளிகள் பெரும்பாலும் காலியாக இருப்பதாக FlightRadar24 தரவுகள் தெரிவிக்கின்றன.
"சேஃப் ஏர்ஸ்பேஸ்" என்ற உலகளாவிய விமானப் பாதுகாப்பு அமைப்பு, ஏவுகணை மற்றும் ட்ரோன் செயல்பாடுகள் வர்த்தக விமானங்களுக்கு, குறிப்பாக அமெரிக்க விமான நிறுவனங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக எச்சரித்துள்ளது.
- நாடு இராணுவ ரீதியாக தயாராக உள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதில் உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ இல்லை என்று கத்தார் தெரிவித்துள்ளது.
கத்தாரின் தோஹாவின் தென்மேற்கே உள்ள இரண்டு இராணுவ தளங்களில் அல் உதெய்த் விமானத் தளமும் ஒன்றாகும், இது அபு நக்லா விமான நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது.
இது கத்தார் அமீரக விமானப்படை, அமெரிக்க விமானப்படை, ராயல் விமானப்படை மற்றும் பிற வெளிநாட்டுப் படைகளைக் கொண்டுள்ளது. இந்த தளத்தை குறிவைத்து நேற்று இரவு ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
கத்தார் நேரப்படி திங்கள்கிழமை இரவு 7:30 மணிக்கு ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதலை நடத்தியது.
கத்தாரின் அல் உதெய்தில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தை மூன்று ஏவுகணைகள் தாக்கியதாக கத்தார் ஊடகங்களை மேற்கோள் காட்டி அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் அல் உதெய்த் விமானத் தளத்தின் மீதான தாக்குதலைக் கண்டித்து கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜீத் அல் அன்சாரி எக்ஸ் பதிவில், "இது கத்தார் அரசின் இறையாண்மை, அதன் வான்வெளி, சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் அப்பட்டமான மீறல்" என்று கூறினார்.
"இந்த வெட்கக்கேடான ஆக்கிரமிப்பின் தன்மை மற்றும் அளவிற்கு சமமான முறையில் நேரடியாக பதிலளிக்கும் உரிமையை கத்தார் கொண்டுள்ளது" என்று தெரிவித்தார்.
கத்தார் வான் பாதுகாப்பு வெற்றிகரமாக தாக்குதலை முறியடித்தது மற்றும் ஈரானிய ஏவுகணைகளை இடைமறித்தது, காயங்கள் அல்லது மனித உயிரிழப்புகள் எதுவும் இல்லை என அல் அன்சாரி பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.
- பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் இஸ்ரேல் விமானப்படைத் தலைவர் மேஜர் ஜெனரல் டோமர் பார் தெரிவித்தார்.
- 50 விமானப்படை போர் விமானங்களை இந்த தாக்குதலில் இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது.
ஃபோர்டோ உட்பட மூன்று ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ஈரானின் அணுசக்தி கனவைத் தகர்த்ததாக அமெரிக்கா கூறிய போதிலும், குறிப்பிடத்தக்கச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று ஈரான் கூறுகிறது.
மறுநாள் (நேற்று) இஸ்ரேல், அமெரிக்கா தாக்கிய அதே ஃபோர்டோஅணுசக்தி தளத்தை தாக்கியது. இதனுடன் துணை ராணுவப் புரட்சிகர காவல்படை தலைமையகம், பாலஸ்தீன சதுக்கம், துணை ராணுவப் பசிஜ் தன்னார்வப் படை கட்டிடம் மற்றும் எவின் சிறைச்சாலையையும் தாக்கியதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தாக்குதலை உறுதிப்படுத்திய ஈரான், ஃபோர்டோவில் எவ்வளவு சேதம் ஏற்பட்டது என்பது தெளிவாக குறிப்பிடவில்லை.
புஷேர், அஹ்வாஸ், யாஸ்த் மற்றும் இஸ்ஃபஹானில் உள்ள ஏவுகணை சேமிப்பு வசதிகள், ஏவுகணை ஏவுதளங்கள், ட்ரோன் சேமிப்பு வசதிகள் மற்றும் வான் பாதுகாப்பு உபகரண உற்பத்தி வசதி ஆகியவற்றைத் தாக்கியதாகவும், இதனால் பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் இஸ்ரேல் விமானப்படைத் தலைவர் மேஜர் ஜெனரல் டோமர் பார் தெரிவித்தார்.
யாஸ்டில் உள்ள இமாம் ஹுசைன் ஏவுகணை தளத்தைத் தாக்கி கோர்ராம்ஷஹர் ஏவுகணைகளை அழித்ததாகவும் அவர் கூறினார். 50 விமானப்படை போர் விமானங்களை இந்த தாக்குதலில் இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி, பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாக ஈரானிய வட்டாரங்கள் தெரிவித்தன.
டெல் அவிவ் மற்றும் ஹைஃபா நகரங்களைத் தவிர, இஸ்ரேலின் பிற நகரங்களையும் ஏவுகணைகள் தாக்கியுள்ளன.
இதற்கிடையே கத்தாரில் உள்ள அமெரிக்காவின் விமானப்படைத் தளத்தின் மீதும் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
- அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு ஈரானிய ஆயுதப் படைகளின் வலிமையான மற்றும் வெற்றிகரமான பதில் என்று தெரிவித்தது.
- ஈரானின் இந்த ஏவுகணைத் தாக்குதல் "அன்னன்சியேஷன் ஆஃப் விக்டரி" என்று பெயரிடப்பட்டுள்ளது.
கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது நேற்று (திங்கள்கிழமை) இரவு ஈரான் பல ஏவுகணைகளை ஏவி தாக்கியுள்ளது.
அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
கத்தார் தனது வான்வெளியை முன்னெச்சரிக்கையாக மூடிய சில நிமிடங்களில், தோஹா மற்றும் லுசைல் முழுவதும் பலத்த வெடிச் சத்தங்கள் கேட்டதாகவும், வானத்தில் ஏவுகணைகள் சீறிப் பாய்ந்ததாகவும் நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
ஈரானின் அரசு தொலைக்காட்சி, இத்தாக்குதலை "அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு ஈரானிய ஆயுதப் படைகளின் வலிமையான மற்றும் வெற்றிகரமான பதில்" என்று தெரிவித்தது.
ஈரானின் இந்த ஏவுகணைத் தாக்குதல் "அன்னன்சியேஷன் ஆஃப் விக்டரி" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்கள் ஈராக்கில் உள்ள அமெரிக்கத் தளங்களையும் இலக்கு வைக்கட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், கத்தார் வெளியுறவு அமைச்சகம் தாக்குதலை உறுதிசெய்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பு நிலைமை சீராக இருப்பதாக உறுதியளித்ததுடன், பதற்றத்தைக் குறைக்க பிராந்திய மற்றும் சர்வதேசப் பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் கூறியது.
- கத்தார் வான்வெளியைப் பயன்படுத்தும் பிற விமானங்களையும் பாதிக்கும்.
- அமெரிக்காவை பழிவாங்க ஈரான் இங்கு தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்து வருவதால், கத்தார் தனது சர்வதேச வான்வெளியை மூடியுள்ளது.
கத்தார் வெளியுறவு அமைச்சகம் இன்று (திங்கள்கிழமை) மாலை அதன் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தில், தங்கள் வான்வெளியை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்தது.
இது ஹமாத் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் அனைத்து விமானங்களையும், கத்தார் வான்வெளியைப் பயன்படுத்தும் பிற விமானங்களையும் பாதிக்கும்.
இதற்கிடையில் தற்போது கத்தாருக்குச் செல்லும் விமானங்களை வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விட உத்தரவிடப்பட்டுள்ளதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
அமெரிக்காவின் முக்கிய விமான படைத்தளமான அல் உதெய்த் கத்தாரில் உள்ளது. மேலும் கத்தாரில் முக்கிய விமான நிறுவனமான கத்தார் ஏர்வேஸுவும் இங்கு செயல்படுகிறது.
எனவே தங்கள் அணுசக்தி தளங்களை தாக்கிய அமெரிக்காவை பழிவாங்க ஈரான் இங்கு தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில் கத்தார் தனது வான்வெளியை மூடியதாக தெரிகிறது.
- ஈரானிய வெளியுறவு அமைச்சர் மாஸ்கோவிற்கு வந்திருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
- ஃபோர்டோ உட்பட ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களை ரஷிய அதிபர் புதின் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
திங்களன்று மாஸ்கோவில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் நடந்த சந்திப்பிற்குப் பிறகு புதினின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.
"எந்த தூண்டுதலும் அடிப்படையும் இல்லாமல் ஈரான் மீதான தாக்குதலை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றும் புதின் கூறினார். மேலும் ஈரானுடனான மோதலில் மத்திய கிழக்குக்கு வெளியே உள்ள சக்திகளின் ஈடுபாடு உலகை ஒரு பெரிய ஆபத்தை நோக்கி இட்டுச் செல்கிறது" புதின் எச்சரித்தார்.
மேலும், "ஈரானிய மக்களுக்கு உதவ ரஷ்யாவின் முயற்சிகள் தொடரும். ஈரானிய வெளியுறவு அமைச்சர் மாஸ்கோவிற்கு வந்திருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது தற்போதைய சூழ்நிலையைப் பற்றி விவாதிக்கவும், பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து ஆலோசனைகளை நடத்தவும் ஒரு வாய்ப்பை வழங்கும்" என்று புதின் தெரிவித்தார்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், சர்வதேச நெறிமுறைகளை மீறி, ஃபோர்டோ உட்பட ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ஈரானின் அணுசக்தி கனவைத் தகர்த்ததாக அமெரிக்கா கூறிய போதிலும், குறிப்பிடத்தக்க சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று ஈரான் கூறுகிறது.
- இந்தியாவுக்கு இரண்டு ஆப்சன் உள்ளது. ஒன்று நியாயமாக தண்ணீரை பகிர்வது.
- அல்லது நாங்கள் அனைத்து ஆறுகளில் இருந்தும் தண்ணீரை திறந்து விடுவோம்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதற்கும் இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. 4 நாட்களாக நீடித்த சண்டை போராக மாறும் சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், பேச்சுவார்த்தை மூலம் சண்டை நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்கும் சிந்து நதிநீர் (Indus Waters Treaty) ஒப்பந்தத்தை சஸ்பெண்ட் செய்தது இந்திய அரசு. சமீபத்தில் இந்திய உள்ளதுறை அமைச்சர் அமித் ஷா, சிந்து நீதி நீர் ஒப்பந்தம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது திரும்பப்பெற மாட்டாது எனத் தெரிவித்தார். இதற்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான பிலாவல் பூட்டோ சர்தாரி, இந்தியா தண்ணீர் திறந்து விடவில்லை என்றால், பாகிஸ்தான் போரில் ஈடுபடும் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிலாவல் பூட்டோ-சர்தாரி, "இந்தியாவுக்கு இரண்டு ஆப்சன் உள்ளது. ஒன்று நியாயமாக தண்ணீரை பகிர்வது. அல்லது நாங்கள் அனைத்து ஆறுகளில் (சிந்து நிதிப் படுகையில் உள்ள 5 ஆறுகள்) இருந்தும் தண்ணீரை திறந்து விடுவோம். சஸ்பெண்ட் முடிவை பின்பற்றுவோம் என இந்தியா மிரட்ட முடிவு செய்தால், நாங்கள் மீண்டும் போரை நடத்த வேண்டியிருக்கும். இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்த மறுத்தால், பயங்கரவாதம் குறித்து ஒருங்கிணைப்பு இல்லாவிட்டால், இரு நாடுகளிலும் வன்முறை தீவிரமடையும்" எனத் தெரிவித்துள்ளார்.
- இந்தியா- பாகிஸ்தான் சண்டையை நிறுத்த முக்கிய காரணமாக டிரம்ப் திகழந்ததாக பாகிஸ்தான் பாராட்டு.
- அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் அரசு பரிந்துரை கடிதம்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் பாகிஸ்தான் இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. எல்லைப் பகுதியில் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கும் இந்தியா பதிலடி கொடுத்தது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
அப்போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளனர் என அறிவித்தார்.
இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு டொனால்டு டிரம்பின் "தீர்க்கமான இராஜதந்திர தலையீடு மற்றும் முக்கிய தலைமை" காரணம் என பாகிஸ்தான் பாராட்டியதோடு, அமைதிக்கான நோபல் பரிசு டிரம்பிற்கு வழங்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் அரசு நோபல் பரிசு வழங்கும் கமிட்டிக்கு பரிந்துரை செய்து கடிதம் எழுதியிருந்தது. அந்தக் கடிதத்தில் பாகிஸ்தான் துணை பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் பரிந்துரை கடிதத்தில் கையெழுத்திட்டிருந்தார்.
இதற்கிடையே இஸ்ரேல்- ஈரான் இடையிலான சண்டையில் ஈரான் அணுஉலை நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் அரசு வெளிப்படையாக அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அரசியல் கட்சித் தலைவர்கள், டொனால்டு டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என பரிந்துரை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் அரசை கேட்டுக்கொண்டுள்ளனர்.
டிரம்ப்பிடம் நோபல் பரிசு பற்றி கேட்கப்பட்டபோது, "இந்தியா மற்றும் பாகிஸ்தான் விவகாரத்தில் தனது பணி, மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கும் ருவாண்டாவுக்கும் இடையிலான பகைமைகளை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு ஒப்பந்தத்தை திங்கள்கிழமை கையெழுத்திட ஏற்பாடு செய்தது உட்பட பல காரணங்களுக்காக தனக்கு அது வழங்கப்பட வேண்டும்.
நான் நான்கு அல்லது ஐந்து முறை அதைப் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் எனக்கு நோபல் அமைதிப் பரிசு கொடுக்க மாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் அதை தாராளவாதிகளுக்கு மட்டுமே கொடுக்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.
- நேற்றிரவு முதல் இன்று காலை வரை டிரோன் மற்றும் ஏவுகணை மூலம் தாக்குதல்.
- குடியிருப்பு கட்டிடங்கள், மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் குற்றச்சாட்டு.
உக்ரைன் தலைநகர் கீவ் மீது நேற்றிரவு முதல் இன்று காலை வரை ரஷியா டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. குடியிருப்பு இடங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
குடியிருப்பு கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அந்த கட்டிடம் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. இடிபாடுகளில் மக்கள் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. இதனால் மீட்புப்படையினர் மற்றும் தீயணைப்புப்படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கீவ் நகரை தவிர்த்து செர்னிஹிவ் பிராந்தியத்தில் குறுகிய தூரம் சென்று தாக்கும் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 3 குழந்தைகள் உள்பட பலர் காயம் அடைந்துள்ளனர்.
பிலா டிசெர்க்வாவில் உள்ள நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 8 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த நகர் கீவில் இருந்து தெற்மேற்கில் 85 கி.மீ. தூரத்தில் உள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை கீவ் மீது ரஷியா கடுமையான தாக்குதல் நடத்தியது. இதில் 28 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 23 பேர் குடியிருப்பு கட்டிடத்தில் வசித்து வந்தவர்கள். கடந்த 4 வருடமாக நடைபெற்று வரும் போரில் இது மிகவும் கொடூரமான தாக்குதல் என் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.
கீவ் மீது கடுமையான தாக்குதல் நடத்தி ஒருவாரம் கூட முடியவடையாக நிலையில், தற்போது புதிய தாக்குதலை ரஷியா நடத்தியுள்ளது.






