என் மலர்
உலகம்
- தங்கள் இளைஞர்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டால் மத வாழ்க்கையில் இருந்து விலகிவிடுவார்கள் என்றும் அஞ்சுகின்றனர்.
- இஸ்ரேலிய பாராளுமன்றமான நெசெட்டில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் ஷாஸ் கட்சி புதன்கிழமை விலகுவதாக அறிவித்துள்ளது.
மதக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கட்டாய இராணுவச் சேவையில் இருந்து விலக்கு அளிக்கும் சட்டத்தை இயற்றத் தவறியதே இதற்கு முக்கிய காரணம் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
21 மாதங்களாக காசா உடனான போர் நடந்து வரும் சூழலில் இராணுவச் சேவை விலக்கு தொடர்பான இந்த விவாதம் இஸ்ரேலில் விவாதமாக மாறியுள்ளது.
கடந்த ஆண்டு இஸ்ரேல் உச்ச நீதிமன்றம், அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் மாணவர்களுக்கான இராணுவ விலக்கை முடிவுக்குக் கொண்டுவர உத்தரவிட்டது. புதிய இராணுவச் சேவை மசோதாவை உருவாக்க நாடாளுமன்றம் முயற்சி செய்து வருகிறது
அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் மத குருக்கள், புனித நூல்களை முழுநேரம் கற்பது புனிதமானது என்றும், தங்கள் இளைஞர்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டால் மத வாழ்க்கையில் இருந்து விலகிவிடுவார்கள் என்றும் அஞ்சுகின்றனர்.
ஷேஸ் கட்சி விலகுவதற்கு ஒரு நாள் முன்னதாக, மற்றொரு அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் கட்சியான யுனைடெட் தோரா ஜூடாயிசம் (UTJ) கட்சியும் இதே காரணத்திற்காக அரசாங்கத்திலிருந்து விலகியது.
இந்த இரண்டு முக்கிய கட்சிகளின் விலகல், நேதன்யாகு அரசாங்கத்தை பெரும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது.
இஸ்ரேலிய நளுமன்றமான நெசெட்டில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன. நெசெட்டில் 11 இடங்களைக் கொண்டுள்ளது. யுனைடெட் தோரா ஜூடாயிசம் (UTJ) நெசெட்டில் 7 இடங்களைக் கொண்டுள்ளது.
இந்த இரு கட்சிகளின் விலகலுக்குப் பிறகு, நெதன்யாகுவின் கூட்டணிக்கு தற்போது 50 இடங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் பெரும்பான்மைக்கு 61 இடங்கள் தேவை. எனவே நேதன்யாகுவின் கூட்டணி பெரும்பான்மையை இழந்து சிறுபான்மை அரசாங்கமாக மாறியுள்ளது.
- செல்ல நாய் போல இருப்பதாகவும், அதன் உத்தரவுகளின்படி விளையாடுவதாகவும் அவர் விமர்சித்தார்.
- இஸ்ரேலின் செயல்களுக்கு அமெரிக்கா முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமெனி மீண்டும் இஸ்ரேலை கடுமையாக சாடியுள்ளார். இஸ்ரேல் அதன் வேர்களிலிருந்து அழிக்கப்பட வேண்டிய புற்றுநோய் கட்டி போன்றது என்று காமேனி கூறினார்.
இஸ்ரேல் அமெரிக்காவின் செல்ல நாய் போல இருப்பதாகவும், அதன் உத்தரவுகளின்படி விளையாடுவதாகவும் அவர் விமர்சித்தார்.
மேலும், "ஈரானில் ஸ்திரமின்மையை ஏற்படுத்துவதே இஸ்ரேலின் குறிக்கோள். போர் நிறுத்த ஒப்பந்தம் இருந்தபோதிலும் இஸ்ரேலை நம்ப முடியாது. எந்த நேரத்திலும் ஈரான் தாக்கப்படலாம். அவ்வாறு நடந்தால், கடந்த மாதத்தை போல கடுமையாக பதிலடி கொடுப்போம்.
அமெரிக்காவும் அதன் செல்லப்பிராணி இஸ்ரேலும் சண்டைக்கு வந்தாலும், ஈரானுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அவர்கள் ஒரு அடி பின்வாங்க வேண்டும்.
பாலஸ்தீனியர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடர்ந்தால், இஸ்ரேல் இன்னும் கடுமையான அடிகளைச் சந்திக்கும். மத்திய கிழக்கில் அமெரிக்கா இஸ்ரேலை ஊக்குவித்து வருகிறது. இஸ்ரேலின் செயல்களுக்கு அமெரிக்கா முழுப் பொறுப்பேற்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
கடந்த மாதம், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 12 நாட்கள் கடுமையான மோதல் நிகழ்ந்தது. ஈரானில் அணு விஞ்ஞானிகளையும் ஈரானில் நூற்றுக்கணக்கான மக்களையும் இஸ்ரேல் குண்டுவீசி கொன்றது. பதிலுக்கு ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிலும் கடும் சேதங்கள் ஏற்பட்டன.
இடையில் அமெரிக்காவும் ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களை தாக்கியது. இதன் பாதிப்புகள் இன்னும் மதிப்பிடப்படவில்லை. இருப்பினும் அணுசக்தி நிலையங்களை முற்றிலும் அழித்ததாக அமெரிக்கா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
- சுமார் 700 முதல் 1000 மீட்டர் அகலமுள்ள பிளவு வழியாக தென்கிழக்கு நோக்கிப் பாய்ந்து வருகிறது.
- சுமார் 800 ஆண்டுகளாக செயலற்று இருந்தது.
ஐரோப்பாவில் அமைந்துள்ள ஐஸ்லாந்து நாட்டில் 100க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. இந்நிலையில் தலைநகர் ரெய்காவிக்கில் இருந்து தென்மேற்கே அமைந்துள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் நேற்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணியளவில் எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியது.
தீவிர நில அதிர்வுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக ஐஸ்லாந்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் மக்களும் சுற்றுலா பயணிகளும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
எரிமலையில் இருந்து வெளியேறும் லாவா குழம்பு சுமார் 700 முதல் 1000 மீட்டர் அகலமுள்ள பிளவு வழியாக தென்கிழக்கு நோக்கிப் பாய்ந்து வருகிறது.
சுமார் 800 ஆண்டுகளாக செயலற்று இருந்த இந்த எரிமலைப் பகுதி கடந்த 2023 நவம்பர் முதல் மீண்டும் செய்யப்படத் தொடங்கியது குறிப்பிடத்க்கது.
- உலகில் சுமார் ஒரு மில்லியன் ட்ரூஸ் மக்கள் உள்ளனர்
- டமாஸ்கஸுக்கு எச்சரிக்கைகள் முடிந்துவிட்டன. இப்போது பிரார்த்தனை செய்ய வேண்டிய நேரம்.
சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
தெற்கு சிரியாவின் ஸ்வீடா பகுதியில் சிறுபான்மை ஷியா பழங்குடியினரான ட்ரூஸ் போராளிகளுக்கும், சன்னி பெடோயின் பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆயுத மோதல்கள் தொடங்கின.
உலகில் சுமார் ஒரு மில்லியன் ட்ரூஸ் மக்கள் உள்ளனர், அவர்களில் பாதி பேர் சிரியாவில் உள்ளனர். இந்நிலையில் சிரியாவில் உள்ள ட்ரூஸ் மக்களைப் பாதுகாப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
"டமாஸ்கஸுக்கு எச்சரிக்கைகள் முடிந்துவிட்டன. இப்போது பிரார்த்தனை செய்ய வேண்டிய நேரம் " என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஒரு சமூக ஊடகப் பதிவில் தெரிவித்தார். ஸ்வீடா பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் தனது கடுமையான தாக்குதல்களைத் தொடரும் என்று அவர் எச்சரித்தார்.
பாதுகாப்பு அமைச்சராக நானும் பிரதமர் நெதன்யாகுவும் இதற்கு உறுதிபூண்டுள்ளோம் என்று காட்ஸ் கூறினார்.
இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் அரசு தொலைக்காட்சி கட்டிடத்தின் மீது ஒரு குண்டு விழுந்து வெடித்தது. இதனால் நேரடி ஒளிபரப்பில் இருந்த ஒரு தொகுப்பாளர் நிகழ்ச்சியை நடுவில் விட்டுவிட்டு ஓடினார். இதன் வீடியோவை காட்ஸ் பகிர்ந்துள்ளார்.
- சமீப நாட்களாக நான் சிறையில் மோசமான நடவடிக்கையை மிகத் தீவிரமாக எதிர்கொண்டு வருகிறேன்.
- சிறைக் கைதிகளுக்கான அடிப்படை உரிமைகள் கூட எனக்கும், எனது மனைவிக்கும் மறுக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டில் இருந்து சிறையில் இருக்கும் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சித் தலைவர் இம்ரான் கான் சிறையில் உள்ளார். பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு வழக்கில் விடுதலை பெற்றாலும் மற்றொரு வழக்கில் கைது என்ற அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை விடுவிக்கும் வகையில் பிடிஐ கட்சி தொண்டர்கள் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவ தளபதி அசிம் முனீருக்கு எதிராக ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் மிகப்பெரிய இயக்கத்தை தொடங்க இருக்கிறார்கள்.
இந்த நிலையில் சிறையில் இருக்கும் எனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு ராணுவ தளபதி அசிம் முனீர்தான் பொறுப்பு என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இம்ரான் கான் தெரிவித்திருப்பதாவது:-
சமீப நாட்களாக நான் சிறையில் மோசமான நடவடிக்கையை மிகத் தீவிரமாக எதிர்கொண்டு வருகிறேன். எனது மனைவி புஷ்ரா பிபியும் அதேபோன்ற நடவடிக்கையை எதிர்கொண்டு வருகிறார். அவருடைய அறையில் டி.வி. கூட ஆஃப் செய்யப்பட்டுள்ளது. சிறைக் கைதிகளுக்கான அடிப்படை உரிமைகள் கூட இருவருக்கும் மறுக்கப்பட்டுள்ளது.
எனது கட்சிக்கு தெளிவான தகவலை கொடுத்துள்ளேன். சிறையில் எனக்கு ஏதாவது நடந்தால், அதற்கு அசிம் முனீர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். எனது வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க தயாராகிவிட்டேன். ஆனால் கொடுங்கோன்மை மற்றும் அடக்குமுறைக்கு முன் தலைவணங்குவது என்ற கேள்விக்கே இடமில்லை. எந்த சூழ்நிலையிலும் இந்த அடக்குமுறை அமைப்புக்கு ஒருபோதும் அடிபணிய வேண்டாம் என்பதுதான் பாகிஸ்தான் மக்களுக்கான எனது செய்தி.
இவ்வாறு இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
- கராச்சியில் இருந்து குவெட்டா சென்ற பேருந்து மீது துப்பாக்கிச்சூடு.
- பாதுகாப்புப்படை வீரர்கள் அப்பகுதியை சுற்றி வளைத்து, துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை தேடிவருகின்றனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் பயணிகள் பேருந்து மீது நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். 7 பேர் காயம் அடைந்தனர்.
கராச்சியில் இருந்து பலுசிஸ்தான் மாகாணம் தலைநகர் குவெட்டாவுக்கு பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, கலாட் என்ற பகுதியில் வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு எந்த குரூப்பும் பொறுப்பேற்கவில்லை.
சூழ்நிலையை சமாளிக்க பாதுகாப்பு ஏஜென்சிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மீட்பு குழுக்கள் உடனடியாக சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்துள்ளனர். பாதுகாப்புப்படை வீரர்கள் அப்பகுதியை சுற்றி வளைத்து, துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை தேடிவருகின்றனர்.
- பாகிஸ்தான் குடியரசுக் கட்சி, சாதாரண குடிமகனுக்கான குரலாகவும் செயல்படும்.
- பாகிஸ்தானில் இன்னும் சுத்தமான குடிநீர் மற்றும் அடிப்படை சுகாதார வசதி இல்லை.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிக்க கோரி கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இம்ரான்கானின் முன்னாள் மனைவி ரெஹாம் கான், பாகிஸ்தான் குடியரசு கட்சி என்ற புதிய கட்சியை தொடங்குவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- நான் இதற்கு முன்பு ஒருபோதும் அரசியல் பதவிகளை ஏற்றுக்கொண்டதில்லை. ஒரு நபருக்காக ஒரு முறை ஒரு கட்சியில் சேர்ந்தேன். ஆனால் இன்று நான் எனது சொந்த கருத்துக்களில் நிற்கிறேன்.
பாகிஸ்தான் குடியரசுக் கட்சி, சாதாரண குடிமகனுக்கான குரலாகவும் செயல்படும். இது வெறும் கட்சி அல்ல, பாகிஸ்தானின் அரசியலை உண்மையான பொது சேவையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட மக்கள் சக்தி வாய்ந்த இயக்கம் ஆகும். அனைத்து பெரிய அரசியல்வாதிகளை மாற்ற நான் வந்துள்ளேன். 2012 முதல் தற்போது வரை, நான் கண்ட பாகிஸ்தானில் இன்னும் சுத்தமான குடிநீர் மற்றும் அடிப்படை சுகாதார வசதி இல்லை. அது இனி ஏற்றுக்கொள்ள முடியாதது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் 3 மடங்கிற்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மகாத்மா காந்தி தன் வாழ்நாளில் ஓவியருக்கு போஸ் கொடுத்தது இந்த நிகழ்வு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
மகாத்மா காந்தி கடந்த 1931-ஆம் ஆண்டு 2-வது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ள இங்கிலாந்தின் லண்டனுக்குச் சென்ற போது அவரை பிரிட்டிஷ் கலைஞர் கிளேர் லெய்டன் சந்தித்தார். அப்போது அவர் ஓவியம் வரைவதற்காக காந்தி போஸ் கொடுத்தார். இந்த ஓவியம் 1974 -ஆம் ஆண்டு பொதுக் காட்சிக்கு வைக்கப்பட்டது.
இந்த நிலையில் மகாத்மா காந்தியின் ஓவியம் ஏலம் விடப்பட்டது. போன்ஹாம்ஸில் நடந்த ஆன்லைன் ஏலத்தில் காந்தி ஓவியம் ரூ.1.7 கோடிக்கு விற்பனை ஆனது. நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் 3 மடங்கிற்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தன் வாழ்நாளில் ஓவியருக்கு போஸ் கொடுத்தது இந்த நிகழ்வு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
- ரஷியாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவதைத் தொடர்ந்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
- புதினிடம் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக இருக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. இந்த போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா, நேட்டோ அமைப்பு உதவி வருகின்றன. அதேவேளையில் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.
இந்த நிலையில் ரஷியாவுடன் வர்த்தகம் செய்து வரும் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு நேட்டோ அமைப்பு தலைவர் மார்க் ருட்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை ரஷியா தீவிரமாக எடுக்க மறுக்கிறது. நீங்கள் சீனாவின் அதிபராகவோ, இந்தியப் பிரதமராகவோ அல்லது பிரேசிலின் அதிபராகவோ இருந்து, ரஷியாவுடன் வர்த்தகம் செய்து அவர்களின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குவதைத் தொடர்ந்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
ரஷியாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் கடுமையான தடைகள் விதிக்கப்படும். 100 சதவீத பொருளாதார தடைகள் விதிக்கப்படும். எனவே இந்த 3 தலைவர்களும் புதினுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து, அவர் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக இருக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். இல்லையென்றால் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கனவே ரஷியாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிக்கும் மசோதா அமெரிக்காவில் முன்மொழியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு இந்தோனேசியா எந்த வரியும் விதிக்காது.
- இந்தியாவுடனான ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்த வரி விதிப்பை தடுக்க பல நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதில் சில நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டது. வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளாத நாடுகள் மீது டிரம்ப் சமீபத்தில் வரி விதிப்பை அறிவித்து வருகிறார்.
இந்த நிலையில் அமெரிக்கா - இந்தோனேசியா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக டிரம்ப் கூறியதா வது:-
நாங்கள் இந்தோனேசியாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளோம். இது குறித்து அந்த நாட்டின் அதிபருடன் நான் பேசினேன். இதற்கு முன்பு இந்தோனேசியா சந்தையை நம்மால் அணுக முடியாத சூழல் இருந்தது. பல கட்டுப்பாடுகள் இருந்தன. இப்போது அது நீக்கப்பட்டுள்ளது. இதுவே இந்த ஒப்பந்தத்தில் மிகவும் முக்கியமானது.
அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு இந்தோனேசியா எந்த வரியும் விதிக்காது. அதேவேளையில் இந்தோனேசிய ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா 19 சதவீத வரி விதிக்கும். இந்தோனேசியாவுக்கு விதிக்கப்பட்ட வரி 19 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க - இந்தோனேசிய வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்கா ஆசிய நாட்டின் சந்தைகளுக்கு முழு அணுகலைப் பெறும்.
இதே வழியில் இந்தியாவுடனான ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. நாங்கள் இந்தியாவை அணுகப் போகிறோம். இந்த நாடுகளில் எதற்கும் எங்களுக்கு அணுகல் இல்லை. எங்கள் மக்களால் உள்ளே சென்று வர்த்தகம் செய்ய முடியவில்லை. தற்போது நாங்கள் வரிகளுடன் என்ன செய்கிறோம் என்பதன் காரணமாக அங்கு அணுகலைப் பெற உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறி னார்.
அமெரிக்கா உடனான வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக இந்திய அதி காரிகள் அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில் டிரம்ப் இந்த கருத்துகளை தெரிவித்து உள்ளார். இந்தியாவின் வர்த்தக அமைச்சக அதிகாரிகள் குழு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளுக்காகப் பல வாரங்களாக அமெரிக்காவில் தங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
- ஏராளமான பொட்டலங்கள் பிரித்து பார்க்கப்படாமலே உள்ளது.
- பிரிக்கப்படாத பொருட்களை வைப்பதற்காக மற்றொரு வீட்டையும் வாடகைக்கு எடுத்து, வாங்கிய பொருட்களை குவித்து வைத்திருக்கிறார்.
இன்றைய இளையதலைமுறையினர், கடைக்கு சென்று பொருட்களை வாங்குவதைவிட ஆன்லைனில் விதவிதமான பொருட்களை வாங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இளம்பெண்கள், சிறுவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை காட்டியிருக்கிறது ஒரு சீன பாட்டியின் ஆன்லைன் ஷாப்பிங் பட்டியல். அவர் ஒரே ஆண்டில் ரூ.2.4 கோடிக்கு ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்கிக் குவித்து உள்ளது அனைவரையும் வியக்க வைத்து உள்ளது.
சீனாவின் ஜியாடிங் பகுதியை சேர்ந்த வாங் என்ற 66 வயது பாட்டி தனியாக வசித்து வருகிறார். அவர் ஆன்லைனில் ஷாப்பிங் செய்து தனது பொழுதை கழிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். வீட்டில் எங்கு பார்த்தாலும் ஆன்லைனில் வாங்கப்பட்ட பொட்டலங்கள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. ஏராளமான பொட்டலங்கள் பிரித்து பார்க்கப்படாமலே உள்ளது.
அப்படி பிரிக்கப்படாத பொருட்களை வைப்பதற்காக மற்றொரு வீட்டையும் வாடகைக்கு எடுத்து, வாங்கிய பொருட்களை குவித்து வைத்திருக்கிறார். பொட்டலங்கள் அடைத்து வைத்திருப்பதால் தங்கள் வீடுகளில் பூச்சித் தொல்லைகள் அதிகரித்து இருப்பதாகவும், சில பொருட்களில் இருந்து கெட்ட வாசனை வீசுவதாகவும் புகார்கள் தெரிவித்து வருகிறார்கள் அண்டை வீட்டார். இருந்தபோதிலும் பாட்டி பொருட்களை வாங்கிக் குவிப்பதை நிறுத்தவில்லை. பாட்டி குறித்த தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
- "மாஸ்கோவைத் தாக்க முடியுமா? செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கைத் தாக்க முடியுமா?"
- நாங்கள் பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்புவோம்
ரஷியா-உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் பல லட்சம் பேர் கொல்லப்பட்டு உள்ளனா்.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். அடுத்த 50 நாட்களில் போரை நிறுத்தவில்லை என்றால் ரஷியா மீது 100 சதவீதம் பொருளதார தடைகளை விதிப்பேன் என டிரம்ப் எச்சரித்தார். ஆனால் டிரம்ப் எச்சரிக்கையை பொருட்படுத்தவில்லை என ரஷியா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் டிரம்ப்பின் தொலைபேசி உரையாடல் கவனம் பெற்று வருகிறது.
அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி, தொலைபேசியில், டிரம்ப் ஜெலன்ஸ்கியிடம், "மாஸ்கோவைத் தாக்க முடியுமா? செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கைத் தாக்க முடியுமா?" என்று கேட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு "நிச்சயமாக. நீங்கள் எங்களுக்கு ஆயுதம் வழங்கினால், நாங்கள் அதைச் செய்வோம்" என்று ஜெலென்ஸ்கி பதிலளித்துள்ளாராம்.
முன்னதாக உக்ரைன் தங்கள் நாட்டைப் பாதுகாக்க வேண்டும். நாங்கள் பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்புவோம் என்று டிரம்ப் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. ரஷியாவை மோசமாக உணர வைத்து பேச்சுவார்த்தைக்கு வர வைப்பதே தனது யோசனை என்று டிரம்ப் கூறியுள்ளார்.






