என் மலர்
தலைப்புச்செய்திகள்
- டெல்லி டெஸ்டில் குல்தீப் யாதவ் 55.5 ஓவர்கள் வீசி 8 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
- ஜடேஜா 52 ஓவர்கள் வீசி 4 விக்கெட் வீழ்த்தினார்.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமான வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் இரண்டு அணிகளிலும் சேர்த்து நான்கு சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.
முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீசை இந்திய அணி பந்து வீச்சாளர்கள் எளிதாக அவுட்டாக்கிவிட்டனர். ஆனால், 2ஆவது இன்னிங்சில் கடுமையான வகையில் பந்து வீச வேண்டியிருந்தது.
இந்திய பந்து வீச்சாளர்கள் 118.5 ஓவர்கள் வீசினர். சுழற்பந்து வீச்சாள்கள் 95 ஓவர்கள் வீசி 5 விக்கெட் வீழ்த்தினர். பும்ரா, சிராஜ் ஆகியோர் முறையே 3, 2 என 5 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
முதல் இன்னிங்சில் 8 விக்கெட் வீழ்த்திய நிலையில், 2ஆவது இன்னிங்சிலா் 5 விக்கெட்டுதான் கிடைத்தது.
குல்தீப் யாதவ் 55.5 ஓவரில் 186 ஓவர்கள் வீசி 8 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 36 ஓவர்கள் வீசி 1 விக்கெட்டும், ஜடேஜா 52 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
சுழற்பந்து வீச்சுக்கு சவாலான இந்த ஆடுகளத்தில், குல்தீப் யாதவ் ரிஸ்ட் ஸ்பின்னர் என்பதால் கூடுதலாக விக்கெட் வீழ்த்தினார் என்று வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வாஷிங்டன் சுந்தர் கூறியதாவது:-
குல்தீப் யாதவ் உண்மையிலேயே நன்றாக பந்து வீசினார் என்று நினைக்கிறேன். அவர் மிகவும் சிறப்பான சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்தார். அவர் ரிஸ்ட் ஸ்பின்னர் என்பதால், இங்கே சற்று கூடுதலாக அறுவடை செய்துள்ளார். இங்கு உண்மையிலேயே உதவியதாக இருந்தது.
எல்லா பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசினார்கள். வேகப்பந்து வீச்சாளர்கள் கூட தைரியமாக வீசினார். ஆகவே, இந்த ஆடுகளத்தில் 20 விக்கெட் வீழ்த்தியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நஸ்ரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு, முழுமையாக நிறைவடைந்துள்ளது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்கிறார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றியுள்ளார்.
"டூரிஸ்ட் ஃபேமிலி" படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் இந்த புதிய படம் அறிவிக்கப்பட்டபோதே, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் ஒரே கட்டமாக, வெறும் 35 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களைக் கவரும், அருமையான காதல் கதையாக உருவாகும் இப்படத்தை, "லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி" படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய, மதன் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக, மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான அனஸ்வரா ராஜன் நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப் படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனம், குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தைத் தயாரிக்கிறது.
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் புரடக்க்ஷன் பணிகள் படக்குழு துவங்கவுள்ளது. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், சிங்கிள் பற்றிய அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.
படம் வெளியாவதற்கு இன்றும் 4 நாட்களே உள்ள நிலையில் இன்று 6 மணிக்கு படத்தின் டிரெய்லர் வெளியாகும் என இயக்குநர் மாரிசெல்வராஜ் போஸ்டரை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த 10-ந் தேதி வெளியாகும் என தெரிவித்திருந்த நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகவில்லை. அதற்கு பதிலாக அமீர், துருவ் விக்ரம் மற்றும் லால் ஆகியோர் இருக்கும் புதிய போஸ்டரை வெளியிட்டு டிரெய்லர் 13- ந் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்தது.
இன்று மாலை 6 மணிக்கு டிரெய்லர் வெளியாகும் என போஸ்டர் வெளியிடப்பட்டது. பின்னர் 7 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் வெளியானது.
இந்நிலையில், பைசன் படத்தின் டிரெய்லர் (தெலுங்கு) இன்று இரவு 8 மணிக்கு நடிகர் ராணா தகுபதி வெளியிட உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- இஸ்ரேல்- காசா ஒப்பந்தத்தால் ஹமாஸிடம் இருந்து பிணைக்கைதிகள் விடுவிப்பு.
- டிரம்பின் உண்மையான முயற்சிக்கு ஆதரிப்பதாக பிரதமர் மோடி பதிவு.
இஸ்ரேல்- காசா இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு, உயிரோடு இருந்த 20 பிணைக்கைதிகளையும் ஹமாஸ் இன்று விடுவித்தது.
இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறைபிடிக்கப்பட்ட அனைத்து பணயக்கைதிகளின் விடுதலையையும் நாங்கள் வரவேற்கிறோம். அவர்களின் விடுதலை அவர்களின் குடும்பங்களின் தைரியத்திற்கும், அமெரிக்க அதிபர் டிரம்பின் அசைக்க முடியாத அமைதி முயற்சிகளுக்கும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் உறுதியான உறுதிக்குமான காணிக்கை.
பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டு வருவதற்கான ஜனாதிபதி டிரம்பின் உண்மையான முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம்.
இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
- இஸ்ரேல்- காசா இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
- பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில், டிரம்ப் இஸ்ரேல் சென்றிருந்தார்.
இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், அமைதி உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எகிப்து செல்ல இருக்கிறார்.
அதற்கு முன்னதாக இன்று இஸ்ரேல் சென்றார். அவருக்கு இஸ்ரேலில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் உறுப்பினர் உலகிற்கு அதிக டிரம்ப்கள் தேவை என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று புகழாரம் சூட்டினர்.
அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென இரண்டு உறுப்பினர்கள் டிரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். இதனால் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் இருவரும் அவை பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்டனர். பின்னர் டிரம்ப் தொடர்ந்து உரையாற்றினார்.
ஐமென் ஓடே மற்றும் ஓஃபர் காசிஃப் அகிய இரண்டு உறுப்பினர்கள்தான் கோஷம் எழுப்பினர். அதில் ஒருவர் இனப்படுகொலை என எழுதப்பட்டிருந்த பதாகையை தூக்கிபிடித்திருந்தார்.
- அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணைய விசாரணை அமைக்கப்பட்டுள்ளது.
- அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.
கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இது தொடர்பான மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டனர்.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், நீதிபதிகளின் உத்தரவு முழு விவரம் வெளியாகியுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவில் "சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதால், சிறப்பு புலன் விசாரணைக்குழு அல்லது ஒருநபர் ஆணைய விசாரணை நியமனம் செய்யப்பட்டிருந்தா், அது நிறுத்தி வைக்கப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணைய விசாரணை குழுவை அமைத்துள்ளது.
அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, இந்த குழு விசாரணை நடத்தி வந்தது.
- 8 மாதங்களில் 8 போரை நிறுத்தும்போது, போர்களை விரும்பவில்லை என்பதுதான் உண்மையான அர்த்தம்.
- நான் மிகவும் கொடூரமாக சென்று கொண்டிருக்கிறேன் என எல்லோரும் நினைத்தனர்.
இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், அமைதி உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எகிப்து செல்ல இருக்கிறார்.
அதற்கு முன்னதாக இன்று இஸ்ரேல் சென்றார். அவருக்கு இஸ்ரேலில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இஸ்ரேல் பாராளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உரையாற்றினார்.
அப்போது டிரம்ப் பேசியதாவது:-
இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையிலான ஒப்பந்தம் மூலம் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது போர் முடிவு மட்டுமல்ல. இது புதிய மத்திய கிழக்கின் வரலாற்று விடியல். அமெரிக்காவை போன்று, இஸ்ரேலுக்கு பொற்காலம் ஏற்படும்.
பல வருட இடைவிடாத போர் மற்றும் முடிவில்லா ஆபத்துக்குப் பிறகு, இன்று வானம் அமைதியாக இருக்கிறது, துப்பாக்கிகள் அமைதியாக இருக்கின்றன, சைரன்கள் அமைதியாக இருக்கின்றன. இறுதியாக அமைதியான ஒரு புனித பூமியில் சூரியன் உதிக்கிறது.
அமைதி ஒப்பந்தம் மூலமாக நம்முடைய நேரத்தை நாம் வீணடிப்பதாக ஏராளமானோர் தெரிவித்தனர். ஆனால், நாம் இந்த சாதனையை எட்டியதற்காக பல சிறந்த அமெரிக்க தேசப்பற்றாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
8 மாதங்களில் 8 போரை நிறுத்தும்போது, போர்களை விரும்பவில்லை என்பதுதான் உண்மையான அர்த்தம். நான் மிகவும் கொடூரமாக சென்று கொண்டிருக்கிறேன் என எல்லோரும் நினைத்தனர்.
நான் எல்லோருடன் போருக்கு சென்று கொண்டிருப்பதாகவும், நான் போருக்கு செல்லும் ஆளுமை கொண்டவராகவும் இருப்பதாக ஹிலாரி கிளிண்டன் கூறியதை நினைவூட்டுகிறேன் ஆனால், என்னுடைய ஆளுமை போரை நிறுத்தவது பற்றியது என நினைக்கிறேன்.
இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.
- ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்று தவெக தரப்பு வலியுறுத்தியது.
- உச்ச நீதிமன்றம், கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
கரூர் சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி, விசாரணை குழு அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. இந்த மனு, நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக போலீசை மட்டும் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்று தவெக தரப்பு வலியுறுத்தியது.
இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில், "நீதி வெல்லும்!" என பதிவிட்டுள்ளார்.
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் இதுவாகும்.
இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
இயக்குனர்கள் அட்லி, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் ஆகியோர் ஜனநாயக்ன் படத்தில் கேமியோ ரோலில் ஒரு காட்சியில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
முன்னதாக ஜனநாயகன் திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆன்ந்த் நடித்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், பூஜா ஹெக்டேவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஜனநாயகன் படத்தில் நடிக்கும் அவரது கதாப்பாத்திர பெயரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
அதன்படி, 'ஜனநாயகன்' படத்தில் கயல் என்ற கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே நடிக்கிறார். இதுதொடர்பாக படக்குழு சிறப்புப் போஸ்டரை பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

- இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) போர் நிறுத்தம் ஏற்பட முயற்சி மேற்கொண்டார் டிரம்ப்.
- காசா அமைதி உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் நிலையில், இஸ்ரேலுக்கு சென்றார்.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. ஹமாஸ் 20 பணயக்கைதிகளை விடுவித்துள்ளது. அதற்கு இணையான இஸ்ரேல், சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்துள்ளது.
இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையிலான அமைதி அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்யும் காசா அமைதி உச்சி மாநாடு நடக்கிறது எகிப்தில் நடைபெறுகிறது. இதில் டொனால்டு டிரம்ப் கலந்து கொள்கிறார்.
இதற்கான அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட அவர், இஸ்ரேல் நாட்டிற்கு சென்றுள்ளார். இஸ்ரேல் நாட்டில் அவருக்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இஸ்ரேல் சென்ற டொனால்டு டிரம்ப், அந்நாட்டின் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்காக சென்றார். அப்போது இஸ்ரேல் பாராளுமன்ற உறுப்பினர் எழுந்து நின்று, உலகிற்கு அதிக டிரம்ப்கள் தேவை" என உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- சந்திர பகவானை மனதார நினைத்து 'ஓம் ஸ்ரீ சந்திராய நமஹ' எனும் மந்திரத்தை உச்சரித்து அன்றைய நாளை தொடங்கலாம்.
- திடீர் முடிவுகளை எடுப்பதையும், அவற்றைப் பற்றி வெளியே சொல்வதையும் தவிர்த்துவிட வேண்டும்.
உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம் தான் சந்திராஷ்டம காலம். பொதுவாக சந்திராஷ்டம நாள் தோஷமான நாளாகத்தான் கருதப்படுகிறது. பெரும்பாலானவர்கள் இந்த நாட்களில் பயணம் செய்ய மாட்டார்கள், தேவையில்லாமல் எந்த காரியத்தையும் செய்ய மாட்டார்கள், அதிலும் சிலர் வாயைத் திறந்து பேசக் கூட மாட்டார்கள்.
ஏனென்றால் இந்த நாட்களில் தேவையில்லாமல் மனம் அலைபாயும், நினைத்த காரியங்கள் கைகூடாமல் போகும், அதனால் மன உளைச்சல் கூட ஏற்படலாம் என நம்புகின்றனர். அதனால் இந்த நாட்களில் அமைதியாக இருப்பதே நல்லது என நினைத்து அதிகம் பேசாமலேயே இருந்துவிடுகின்றனர்.
அதிலும் செவ்வாய்கிழமையில் சந்திராஷ்டமம் வந்துவிட்டால் அவ்வளவு தான். சிலர் அந்த நாளில் எந்தவொரு முக்கியமான வேலையையும் தொடங்க மாட்டார்கள். இப்படி ஒவ்வொரு சாந்திராஷ்டம நாளிலும் பார்த்து பார்த்து அந்த நாளை கடக்க வேண்டும் என்றில்லை. பின்வருபவற்றை பின்பற்றினாலே போதும். அன்றைய நாளில் மன அமைதியாய் நிறைவாய் இருக்கலாம்.
* சந்திராஷ்டம நாளில் காலை எழுந்தவுடன் சந்திர பகவானை மனதார நினைத்து 'ஓம் ஸ்ரீ சந்திராய நமஹ' எனும் மந்திரத்தை உச்சரித்து அன்றைய நாளை தொடங்கலாம்.
* சந்திராஷ்டம நாட்களில் தங்களால் முடிந்தவர்கள் குல தெய்வத்தை நேரில் சென்று வணங்கலாம். முடியாதவர்கள் மனதார நினைத்துக்கொள்ளலாம்.
* உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள அம்மன் கோவில் அல்லது விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யலாம்.

* தங்களால் முடிந்தவர்கள் விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்யலாம்.
* தெய்வ வழிபாடு செய்யும்போதே முன்னோர் வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு முதலானவற்றை மனதார செய்துவிட்டு அன்றைய தினத்தைத் தொடங்கலாம்.
* முக்கியமாக அன்றைய தினம் தேவையில்லாமல் மற்றவர்களைப் பற்றி புறம்பேசுதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
* தேவையில்லாமல் யாரிடமும் வாக்குவாதமும் செய்யக்கூடாது.
* திடீர் முடிவுகளை எடுப்பதையும், அவற்றைப் பற்றி வெளியே சொல்வதையும் தவிர்த்துவிட வேண்டும்.
* எந்தவொரு முடிவையும் அவசரப்பட்டு எடுக்காமல் நிதானமாக யோசித்து எடுக்க வேண்டும்.
இன்று சந்திராஷ்டம நாள் விபரீதமாக ஏதாவது நடந்துவிடுமோ என்று எப்போதும் எதிர்மறையாக யோசித்துக்கொண்டே இருக்காமல் இறைவுணர்வோடு, நேர்மறை எண்ணங்களோடு அன்றைய நாளை கடக்க வேண்டும்.
- 243 தொகுதிகளிலும் பிரசாந்த் கிஷோர் கட்சி போட்டியிடுகிறது.
- 116 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட போதிலும், பிரசாந்த் கிஷோர் பெயர் இடம் பெறவில்லை.
அரசியல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், பீகார் மாநிலத்தில் ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். அவரது கட்சி பீகார் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது.
முதற்கட்ட தேர்தல் அடுத்த மாதம் 6ஆம் தேதியும், 2ஆம் கட்ட தேர்தல் நவம்பர் 11ஆம் தேதியும் நடக்கிறது. முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. 2ஆம் ஆட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.
பிரசாந்த் கிஷோர் கட்சி 243 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இதற்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டிருந்த நிலையில், இன்று 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இன்றைய பட்டியலில் 65 வேட்பாளர்கள் இடம் பிடித்துள்ளனர். மொத்தம் 116 வேட்பாளர்கள் இடம் பிடித்துள்ளனர். ஆனால் இரண்டு கட்ட பட்டியலிலும் பிரசாந்த் கிஷோர் பெயர் இடம் பெறவில்லை.
தேஜஸ்வியை எதிர்த்து ரகோபூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக பிரசாந்த் கிஷோர் சூசகமாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






