என் மலர்
இந்தியா

பீகார் சட்டமன்ற தேர்தல்: 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பிரசாந்த் கிஷோர் கட்சி
- 243 தொகுதிகளிலும் பிரசாந்த் கிஷோர் கட்சி போட்டியிடுகிறது.
- 116 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட போதிலும், பிரசாந்த் கிஷோர் பெயர் இடம் பெறவில்லை.
அரசியல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், பீகார் மாநிலத்தில் ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். அவரது கட்சி பீகார் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது.
முதற்கட்ட தேர்தல் அடுத்த மாதம் 6ஆம் தேதியும், 2ஆம் கட்ட தேர்தல் நவம்பர் 11ஆம் தேதியும் நடக்கிறது. முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. 2ஆம் ஆட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.
பிரசாந்த் கிஷோர் கட்சி 243 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இதற்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டிருந்த நிலையில், இன்று 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இன்றைய பட்டியலில் 65 வேட்பாளர்கள் இடம் பிடித்துள்ளனர். மொத்தம் 116 வேட்பாளர்கள் இடம் பிடித்துள்ளனர். ஆனால் இரண்டு கட்ட பட்டியலிலும் பிரசாந்த் கிஷோர் பெயர் இடம் பெறவில்லை.
தேஜஸ்வியை எதிர்த்து ரகோபூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக பிரசாந்த் கிஷோர் சூசகமாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






