என் மலர்
தலைப்புச்செய்திகள்
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. மேலும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கரூர் அரியலூர், திருச்சி, திண்டுக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
தடைகள் அகல தைரியமாக முடிவெடுக்கும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் சகபணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரிஷபம்
இடமாற்ற சிந்தனை மேலோங்கும் நாள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் உங்கள் முன்னேற்றம் பற்றி சொல்ல வேண்டாம்.
மிதுனம்
எதிரிகள் விலகும் நாள். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய தகவல் தருவர். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரலாம். வீடு வாங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும்.
கடகம்
ஏக்கங்கள் தீர்ந்து இனிய பலன் கிடைக்கும் நாள். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தை கொடுக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு உண்டு.
சிம்மம்
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். பம்பரமாக சுழன்று பணிபுரிந்து பாராட்டுகளையும் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
கன்னி
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வரவு திருப்தி தரும். ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும்.
துலாம்
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். உத்தியோகத்தில் இடமாற்றம், இலாகா மாற்றங்கள் ஏற்படலாம். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர்.
விருச்சிகம்
வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வரும் நாள். விரும்பிய காரியம் விரும்பியபடியே நடைபெறும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளால் பெருமையுண்டு.
தனுசு
கூடயிருப்பவர்களின் கோபத்திற்கு ஆளாகும் நாள். மறதி அதிகரிக்கும். மனக்கசப்பு தரும் தகவல் வரலாம். ஒரு வேலையை முடிக்க ஒன்றுக்கு இரண்டு முறை அலைய நேரிடலாம்.
மகரம்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். உடன்பிறப்புகள் உங்கள் கருத்துகளுக்கு மதிப்புக் கொடுப்பர். அயல்நாட்டிலிருந்து நல்ல தகவல் வரலாம்.
கும்பம்
வளர்ச்சி கூடும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும்.
மீனம்
கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் வளர்ச்சிக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
- தமிழகம் முழுவதும் இடி, மின்னலுடன் இன்று மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது.
- ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை சராசரியாக 44 செ.மீ. மழை பதிவாகும்.
சென்னை:
இந்தியாவில் ஜூன் 1-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை பெய்யும் மழை தென்மேற்கு பருவ மழையாகவும், அக்டோபர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை பெய்யும் மழை வடகிழக்கு பருவ மழையாகவும் பதிவு செய்யப்படுகிறது.
இந்தியாவே தென்மேற்கு பருவமழையை நம்பி இருந்தாலும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைதான் அதிகமாக பெய்யும்.
இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை நாளை (வியாழக்கிழமை) முதல் பெய்யத்தொடங்கும் என சென்னையில் உள்ள தென்மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் இடி, மின்னலுடன் இன்று மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யலாம். மேலும் தென்மேற்கு பருவ மழை இன்று முதல் நாடு முழுவதும் விலகி, வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் அன்றைய தினம் கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 17 மாவட்டங்களிலும் மற்றும் காரைக்காலிலும் கனமழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் வருகிற 18-ந் தேதி வரை குமரிக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் 55 கி.மீ. வரை வீசும். எனவே மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்குவது குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தலைவர் அமுதா, நிருபரிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, தென் கர்நாடகா, தென் கடலோர ஆந்திரா, ராயலசீமா ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அன்றைய தினமே மழை கொட்டி தீர்க்கும் என்று சொல்லமுடியாது. இருந்தாலும் எங்களை பொறுத்தவரை 50 இடங்களில் மழை பதிவானால் கூட, அது வடகிழக்கு பருவ மழையின் தொடக்கம்தான்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை சராசரியாக 44 செ.மீ. மழை பதிவாகும். ஆனால் இந்த முறை இது 50 செ.மீ.க்கும் அதிகமாக மழை பதிவாகும் என கணிக்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் 14-ந் தேதி (அதாவது நேற்று) வரை 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இது சராசரியை விட 2 செ.மீ. அதிகம் ஆகும்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை காலத்தில் சராசரி மழையளவு 33 செ.மீ. பதிவாகி உள்ளது. அதாவது இந்த பருவமழை கூடுதலாகவும், குறைவாகவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
- பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-29 (புதன்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : நவமி பிற்பகல் 3.24 மணி வரை பிறகு தசமி
நட்சத்திரம் : பூசம் மாலை 5.11 மணி வரை பிறகு ஆயில்யம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருக்குற்றாலம் ஸ்ரீ குற்றாலநாதர் வீதியுலா. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டபம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் திருமஞ்சன சேவை.
விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம், அலங்காரம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளியங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அபிஷேகம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-உவகை
மிதுனம்-ஈகை
கடகம்-செலவு
சிம்மம்-நற்செயல்
கன்னி-அமைதி
துலாம்- மாற்றம்
விருச்சிகம்-புகழ்
தனுசு- உதவி
மகரம்-வெற்றி
கும்பம்-சுகம்
மீனம்-ஆதரவு
- பால்கெரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் கணிப்புகள் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளன.
- பணம் மற்றும் டிஜிட்டல் நாணயங்களின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடையும்.
2025 ஆம் ஆண்டு உலகம் பல இயற்கை பேரிடர்கள், விபத்துகள், வர்த்தக போட்டிகள், போர்களால் நிறைந்துள்ளது. 2025 முடிவடைய இன்னும் இரண்டரை மாதங்களே உள்ள நிலையில், 2026-ல் நிலைமை மேம்படும் என்று பலர் நம்புகிறார்கள்.
ஆனால், பால்கெரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் கணிப்புகள் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளன.
பாபா வாங்கா சொன்ன பல விஷயங்கள் நிஜமாகியிருப்பதாகக் கூறப்படும் நிலையில் 2026 குறித்த அவரின் கணிப்பு விவாதப்போருளாகி வருகிறது.
பாபா வாங்கா கணிப்புப்படி, 2026 ஆம் ஆண்டு நடப்பு ஆண்டை விட மிகவும் மோசமாக இருக்கலாம்.
உலகப் பொருளாதாரம் சரிவடையும் அபாயம் உள்ளது. சர்வதேச சந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பொருளாதார மந்தநிலை ஏற்படும்.
பணம் மற்றும் டிஜிட்டல் நாணயங்களின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடையும். ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் நாடுகளுக்கு இந்த நிலைமை மேலும் கடினமானதாக மாறலாம்.
இதன் உச்சமாக 2026-ல் உலக நாடுகளுக்கு இடையே ஒரு போர் நடக்கும் என்று பாபா வாங்கா எச்சரித்துள்ளார். அவர் கூறிய இந்தப் போரே மூன்றாம் உலகப் போராக மாறக்கூடும் என்று பலர் அஞ்சுகின்றனர்.
- மலையாள நாட்டுப்புற தொன்ம காதாபாத்திரமான 'கள்ளியங்காடு நீலி' ஐ இன்ஸ்பிரேஷனாக கொண்டுள்ளது.
- சாண்டியின் வில்லத்தனம் படத்திற்கு ஒரு புதிய சாயலை கொடுத்துள்ளது.
மலையாள நாட்டுப்புற தொன்ம காதாபாத்திரமான 'கள்ளியங்காடு நீலி' ஐ இன்ஸ்பிரேஷனாக கொண்டு டொமினிக் அருண் ஃபேன்டசி-ஆக்ஷன் ஜானரில் இயக்கிய திரைப்படம் லோகா. இதுவே இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படம் என்று கருதப்படுகிறது.
இந்த படத்தின் கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நஸ்லேன், சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். சாண்டியின் வில்லத்தனம் படத்திற்கு ஒரு புதிய சாயலை கொடுத்துள்ளது.

ஓணம் பண்டிகையை ஒட்டி வெளியான இப்படம் உலகலவில் ரூ.300 கோடி வசூலை தாண்டி மலையாளத்தின் அதிக வசூல் படமாக மாறியது. இந்த படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- அந்தக் கும்பலில் இருந்த மூவர் எங்களைத் துரத்தி வந்து, என்னைப் பிடித்துக் காட்டிற்குள் இழுத்துச் சென்றனர்.
- பெண்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு வீட்டில் உட்கார வேண்டுமா? மேற்கு வங்கம் அவுரங்கசீப் ஆட்சியில் இருப்பது போல் உள்ளது.
மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒடிசாவை சேர்ந்த 23 வயது பெண் எம்பிபிஎஸ் பயின்று வந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஆண் நண்பருடன் இரவு உணவருந்த வெளியே செல்ல முற்படும்போது வழிமறித்த கும்பல் ஒன்று மருத்துவமனை வளாகத்தின் அருகே உள்ள காட்டுகப்பகுதியில் மாணவியை இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அந்த மாணவி, அந்த இரவில் நடந்த பயங்கரமான சம்பவங்கள் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.
மாணவி கூறுகையில், "அவர்கள் தங்கள் வாகனத்தை விட்டுவிட்டு எங்கள் நோக்கி வருவதை நாங்கள் கவனித்தோம். உடனே நாங்கள் காட்டுப் பகுதி நோக்கி ஓட ஆரம்பித்தோம். அந்தக் கும்பலில் இருந்த மூவர் எங்களைத் துரத்தி வந்து, என்னைப் பிடித்துக் காட்டிற்குள் இழுத்துச் சென்றனர்.
அவர்கள் எனது தொலைபேசியைப் பறித்துக்கொண்டு, எனது நண்பரைத் திரும்ப வருமாறு அழைக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினர். அவர் வராதபோது, என்னைத் தரையில் படுக்கச் சொல்லி வற்புறுத்தினர். நான் கத்தி கூச்சலிட்டபோது, நான் சத்தம் போட்டால் மேலும் பலரை அழைத்து வந்து இதையே செய்ய வைப்போம் என்று மிரட்டினர்" என்று தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் இந்தச் சம்பவம் தொடர்பாகத் ஐந்து பேரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் பாதுகாவலர், மருத்துவமனை ஊழியர் ஒருவர், உள்ளாட்சி அமைப்பில் பணிபுரியும் தற்காலிக ஊழியர் ஒருவர் மற்றும் ஒரு இளைஞர் அடங்குவர்.
மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்பவங்களின் வரிசையைச் சரிபார்க்க, சந்தேகப்படும் அனைத்துக் குற்றவாளிகளையும் கல்லூரிக்கு அருகிலுள்ள சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று குற்றச் சம்பவத்தை மீண்டும் உருவாக்கிப் பார்க்கவுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில், இரவு நேரத்தில் மாணவிகள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறிய கருத்து விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
இதற்கு பதிலளித்த பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை, "அவர் (மம்தா பானர்ஜி) ஒரு பெண்மணி. அப்படியிருக்கையில், எப்படி இவ்வளவு பொறுப்பற்ற கருத்தைத் தெரிவிக்க முடியும்? பெண்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு வீட்டில் உட்கார வேண்டுமா? மேற்கு வங்கம் அவுரங்கசீப் ஆட்சியில் இருப்பது போல் உள்ளது.
என் மகளை ஒடிசாவிற்குத் திரும்ப அழைத்துச் செல்ல விரும்புகிறேன். எங்களுக்கு அவளது உயிர்தான் முக்கியம். தொழில் அதற்குப் பிறகுதான்" என்று கூறியுள்ளார்.
- தொழிலதிபரை திருமணம் செய்ததில் இருந்து காம்னா படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
- 2015 இல் சந்திரிகா என்ற படத்திற்கு பிறகு மகள்களை வளர்க்க வேண்டி அவரின் திரை வாழ்க்கை நின்றுபோனது.
சுமார் 10 வருடங்களை ரீவைட் செய்து பார்த்தால் நடிகை காம்னா ஜேத்மாலினியை தமிழ், கன்னடம், தெலுங்கில் வெளிவந்த படங்களில் காணலாம்.
குறிப்பாக ஜெயம் ரவியின் இதயத்திருடன் படத்தின் ஹீரோயினாக ஜேத்மாலினியை தமிழ் ரசிகர்கள் அடையாளம் காணக்கூடும்.
கடந்த 2014 இல் தொழிலதிபரை திருமணம் செய்ததில் இருந்து காம்னா படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
2015 இல் சந்திரிகா என்ற படத்திற்கு பிறகு மகள்களை வளர்க்க வேண்டி அவரின் திரை வாழ்க்கை நின்றுபோனது.
இந்நிலையில் 10 வருடங்கள் கழித்து 2025 இல் தெலுங்கு படம் மூலம் காம்னா மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்
தெலுங்கில் உருவாகி உள்ள "கேராம்ப்" படத்தில் காம்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வருகிற 18-ந்தேதி படம் திரைக்கு வர இருக்கிறது.
- அருகில் இருந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சிரித்துக்கொண்டே குறுக்கிட்டு, "அது அசாத்தியம்!" என்று நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்தார்.
- இந்த பழக்கத்தை நீங்கள் கண்டிப்பாக நிறுத்த வேண்டும்" என்று கூறினார்.
காசாவில் போர் நிறுத்தம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட நேற்று உலக தலைவர்கள் எகிப்தில் கூடினர். அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் எகிப்து இணைந்து தலைமை தாங்கிய இந்த மாநாட்டில் பாகிஸ்தான், துருக்கி, கத்தார் மற்றும் இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் புகைப்பிடிக்கும் பழக்கத்தைப் பற்றி துருக்கி அதிபர் எர்டோகான் கிண்டலாகப் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
மாநாட்டில் மெலோனியிடம் பேசிய எர்டோகான், "நீங்கள் விமானத்தில் இருந்து இறங்கியபோது பார்த்தேன். நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். ஆனால், உங்கள் கையில் உள்ள சிகரெட் இருந்தது. இந்த பழக்கத்தை நீங்கள் கண்டிப்பாக நிறுத்த வேண்டும்" என்று கூறினார்.
எர்டோகானின் பேச்சைக் கேட்ட அருகில் இருந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சிரித்துக்கொண்டே குறுக்கிட்டு, "அது அசாத்தியம்!" என்று நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்தார்.
இதற்கு மெலோனியும் அதேபோல வேடிக்கையாகப் பதிலளித்தார். அதாவது, "எனக்குத் தெரியும். ஆனால், நான் புகைப்பிடிப்பதை நிறுத்தினால், எனக்கு எரிச்சல் அதிகமாகி, யாரையாவது ஏதாவது சொல்லிவிடுவேனோ!" என்று அஞ்சுவதாக கூறி சிரித்தார். இதுதொடர்பாக வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
துருக்கியை புகைப்பழக்கம் இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்குடன் எர்டோகான் அடிக்கடி கூறி வருகிறார்.
மறுபுறம், வெளிநாட்டுத் தலைவர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள தனது புகைப்பழக்கம் உதவியதாக மெலோனி முன்பு ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- பவன் கல்யாணுடன் பிரியங்கா அருள் மோகன் மற்றும் எம்ரான் ஹம்ஷி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
- வயலன்ஸ் காட்சிகள் அதிகம் உள்ளதால் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தை தொடர்ந்து பவன் கல்யாண் ஓஜி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சாகோ மற்றும் ரன் ராஜா ரன் ஆகிய படங்களை இயக்கிய சுஜித் இப்படத்தை இயக்கியுள்ளார்.
பவன் கல்யாணுடன் பிரியங்கா அருள் மோகன் மற்றும் எம்ரான் ஹம்ஷி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவான OG படம் செப்டம்பர் 25 திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முன்பதிவிலேயே ரூ.100 கோடி வசூலித்து ஓஜி சாதனை படைத்திருந்தது.
இப்படம் உலகளவில் ரூ. 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பவன் கல்யாண் நடித்த திரைப்படங்களிலேயே அதிகம் வசூலித்த திரைப்படம் ஓஜிதான்.
விமர்சனங்கள் இருந்தபோதிலும் பவன் கல்யாண் ரசிகர்களுக்கு படம் மிகவும் திருப்தியளிக்கக்கூடியதாக உள்ளது.
வயலன்ஸ் காட்சிகள் அதிகம் உள்ளதால் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது.
படத்தின் இசையை தமன் மேற்கொள்கிறார். ஒளிப்பதிவை ரவி கே சந்திரன் மற்றும் மனோஜ் பரமஹம்சா இணைந்து செய்துள்ளனர்.
இந்நிலையில் 'ஓஜி' படம் வருகிற 23ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 'அஞ்சான்' படத்தில் சூர்யாவுடன், வித்யூத் ஜாம்வால், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
- விஜயின் 'சச்சின்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள்.
ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜயின் 'சச்சின்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.
இந்த நிலையில், நடிகர் சூர்யா- இயக்குநர் லிங்குசாமி கூட்டணியில் வெளியான 'அஞ்சான்' திரைப்படம் மீண்டும் வெளியாக உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு வெளியான 'அஞ்சான்' படத்தில் சூர்யாவுடன், வித்யூத் ஜாம்வால், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் மனோஜ் பாஜ்பாய் வில்லனாக நடித்திருந்தார்.
'அஞ்சான்' படத்தின் இந்தி மொழிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இப்படத்தை ரீ-எடிட் செய்து விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஹமாஸ் தாக்குதலுக்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் ஜோஷி நேபாளத்திலிருந்து இஸ்ரேலுக்கு சென்றிருந்தார்.
- சடலத்தை அவரது சொந்த நாட்டிற்கு அனுப்புவதற்கு முன் இஸ்ரேல் அரசு முறைப்படி இறுதி சடங்குகளை நடத்தும்.
காசா போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த நிலையில் இஸ்ரேல் பணய கைதிகள் 20 பேரை ஹமாஸ் நேற்று முன்தினம் விடுவித்தது.
இதற்கிடையே ஹமாஸ் அமைப்பால் பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்தவர்களில் நேபாளத்தைச் சேர்ந்த பிபின் ஜோஷி உட்பட நான்கு பேரின் சடலங்களை இஸ்ரேலிய அதிகாரிகளிடம் ஹமாஸ் ஒப்படைத்தது.
பிபின் ஜோஷியின் சடலம் நேற்று முன் தினம் நள்ளிரவு டெல் அவிவ் விமான நிலையத்தை அடைந்தது என்று இஸ்ரேலுக்கான நேபாள தூதர் தனபிரசாத் பண்டிட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஜோஷியின் அடையாளத்தை உறுதிப்படுத்த இஸ்ரேலிய அதிகாரிகள் மரபணு (DNA) பரிசோதனை செய்ய உள்ளனர். அதன்பிறகு, நேபாள தூதரகத்துடன் ஒருங்கிணைந்து, சடலத்தை அவரது சொந்த நாட்டிற்கு அனுப்புவதற்கு முன் இஸ்ரேல் அரசு முறைப்படி இறுதி சடங்குகளை நடத்தும் என்று தூதர் பண்டிட் கூறினார்.
அக்டோபர் 7 , 2023, இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலுக்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் ஜோஷி நேபாளத்திலிருந்து இஸ்ரேலுக்கு சென்றிருந்தார்.
ஸ்டுடென்ட் எக்ஸ்சேஞ்ச் திட்டத்தின் கீழ், காசா எல்லைக்கு அருகிலுள்ள கிப்புட்ஸ் அலிமிம் என்ற இடத்தில் விவசாயம் குறித்து ஆராய்ச்சி படிப்புக்காக சென்ற 17 நேபாள மாணவர்களில் ஜோஷியும் ஒருவர் ஆவார்.
ஹமாஸ் தாக்குதல் நடந்த நாளில், துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வெடிப்புச் சத்தங்களுக்கு மத்தியில் சைரன் ஒலித்தபோது, அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் உடனடியாக வெடிபொருள் தாக்குதலில் இருந்து தப்பிக்கப் பாதுகாப்பான இடத்தில் பதுங்கினர்.
ஆனால், அவர்கள் மறைந்திருந்த இடத்திற்குள் ஹமாஸ் போராளிகள் வெடிகுண்டு ஒன்றை வீசினர். இதனால் பலர் காயமடைந்தனர். உடனே சுதாரித்துக்கொண்ட பிபின் ஜோஷி, இரண்டாவதாக வீசப்பட்ட வெடிகுண்டைப் லாவகமாகப் பிடித்து, மீண்டும் வெளியே வீசினார்.
ஜோஷியின் இந்தத் துரிதச் செயலால் அங்கிருந்த பலரது உயிர்கள் காப்பாற்றப்பட்டன. இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் ஜோஷியை ஹமாஸ் படையினர் பிடித்து இழுத்துச் சென்றனர்.
இஸ்ரேலியர்கள் அல்லாத பிணைக்கைதிகளில் கஸாவில் உயிருடன் இருப்பதாக நம்பப்பட்ட ஒரே நபர் இவர்தான்.
2023 இல் கடத்தப்பட்டதில் இருந்து ஜோஷியைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லாமல் இருந்தது. சமீபத்தில் இஸ்ரேலிய இராணுவம் கஸாவில் இருந்து ஜோஷி உயிருடன் இருந்ததைக் காட்டும் ஒரு வீடியோவை மீட்டது. இருப்பினும் அவர் தற்போது சடலமாக திரும்பியுள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.






