என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச்செல்லும் ககன்யான் திட்டம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கனவு திட்டமாகும்.
    • சோதனை விண்வெளி வீரர்கள் பூமிக்கு பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்துள்ளது.

    மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச்செல்லும் ககன்யான் திட்டம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) கனவு திட்டமாகும்.

    இதன் ஒரு பகுதியாக, இந்திய விமானப்படையைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 குரூப் கேப்டன்கள் விண்வெளி வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இதற்காக பல்வேறுகட்ட சோதனைகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.

    அந்த வகையில் சண்டிகாரில் செயல்பட்டு வரும் டெரிமினல் பாலிஸ்டிக் ஆராய்ச்சி ஆய்வகத்தின் ரெயில் டிராக் ராக்கெட் ஸ்லெட் என்ற பகுதியில் விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக பூமிக்கு தரை இறக்கும் பாராசூட்டை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இது ககன்யான் திட்டத்தின் முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.

    இந்த சோதனை விண்வெளி வீரர்கள் பூமிக்கு பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்துள்ளது.

    • தனக்கு பிரசவம் நடந்த 2 நாட்களிலேயே கைக்குழந்தையுடன் தேர்வு எழுதியுள்ளார்.
    • வறுமை காரணமாக கல்வியை இடையில் நிறுத்தி இருந்தார்.

    மும்பை:

    ஆண் கல்வியறிவு பெற்றால் ஒரு தனிநபர் பயன் பெறுவார், ஆனால் ஒரு பெண் கல்வியறிவு பெற்றால் ஒரு தலைமுறையே பயன்பெறும் என்பது பெண் கல்வியின் மகத்துவத்தை போற்றும் பொன்மொழியாகும்.

    அந்தவகையில் கல்வியை பிரதானமாக கருதிய பெண் ஒருவர், தனக்கு பிரசவம் நடந்த 2 நாட்களிலேயே கைக்குழந்தையுடன் தேர்வு அறைக்கு வந்து 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி மற்ற பெண்களுக்கு ஆகச்சிறந்த முன்உதாரணமாக திகழ்ந்துள்ளார்.

    மராட்டிய மாநிலம் நாந்தெட்டை சேர்ந்தவர் சீத்தல்(வயது21). வறுமை காரணமாக கல்வியை இடையில் நிறுத்தி இருந்தார். கல்வியின் முக்கியத் துவத்தை அறிந்து பின்னர் கல்வியை தொடர்ந்தார். 2 ஆண்டுகளுக்கு முன் அவர் மணமாலை சூடினார். திருமணத்துக்கு பிறகும் கல்வியை கைவிட அவரது மனது சம்மதிக்கவில்லை. அங்குள்ள ஸ்ரீபாசவேஷ்வர் ஜூனியர் கல்லூரியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இல்லற வாழ்க்கை காரணமாக 10 நாட்களுக்கு முன் அவருக்கு குழந்தை பிறந்தது. பொதுத்தேர்வு சமயத்தில் குழந்தை பிறந்தாலும், அது பரீட்சை எழுத அவருக்கு தடையாக அமையவில்லை. அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்ளலாம் என்று காத்திருக்காமல் பொதுத்தேர்வை எழுதியே ஆக வேண்டும் என்று தீர்க்கமான முடிவை எடுத்தார்.

    தனக்கு குழந்தை பிறந்த 2 நாட்களில், அதாவது கடந்த 10-ந்தேதி நடந்த ஆங்கில தேர்வை அவர் தனது சகோதரியுடன் வந்து எழுதி அனைவரை யும் வியக்க வைத்தார். நேற்றுமுன்தினம் அரசியல் அறிவியல் தேர்வை எழுதினார்.

    பச்சிளம் குழந்தையுடன் தேர்வு எழுத வந்த மாணவிக்கு தேவையான வசதிகளை தேர்வு மைய அதிகாரிகள் செய்தனர். தேர்வு மையத்தில் குழந்தையை தூங்க வைப்பதற்கான தொட்டில் உள்ளிட்ட உதவிகளை செய்து கொடுத்தனர். கல்வியை தனது இரு கண்களாக கருதிய பெண் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையுடன் வந்து 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய சம்பவம் மராட்டியத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • சுபமுகூர்த்த தினம்.
    • திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளிவாகன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு மாசி-8 (வெள்ளிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : திருதியை பிற்பகல் 3.53 வரை பிறரு சதுர்த்தி

    நட்சத்திரம் : உத்திரட்டாதி இரவு 9.19 வரை பிறகு ரேவதி

    யோகம் : சித்த/அமிர்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளிவாகன சேவை

    சுபமுகூர்த்த தினம். மதுரை ஸ்ரீ கூடலழகர் உற்சவம் ஆரம்பம். அன்ன வாகனத்தில் இராஜாங்க சேவை. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். இராமேஸ்வரம் ஸ்ரீ பர்வத வர்த்தினியம்மன் நவசக்தி மண்டம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.

    லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம், அலங்காரம். கரூர் தான் தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளிவாகன சேவை. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-செலவு

    ரிஷபம்-சுபம்

    மிதுனம்-வரவு

    கடகம்-சுகம்

    சிம்மம்-பாராட்டு

    கன்னி-உயர்வு

    துலாம்- கடமை

    விருச்சிகம்-தெளிவு

    தனுசு- முயற்சி

    மகரம்-ஆக்கம்

    கும்பம்-உழைப்பு

    மீனம்-பக்தி

    • கோரக்பூரில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.
    • அதில் 30 பேருக்கு கண்புரை ஆபரேஷன் செய்யப்பட்டது.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. அதில் 30 பேருக்கு கண்புரை ஆபரேஷன் செய்யப்பட்டது. பலர் மத்திய அரசின் 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின்கீழ் ஆபரேஷன் செய்து கொண்டனர்.

    ஆபரேஷனுக்கு பிறகு அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் மறுநாள் அவர்களில் பலருக்கு ஆபரேஷன் செய்த கண்ணில் கடுமையான வலி ஏற்பட்டது. ரத்தம் வழிந்தது.

    அதிர்ச்சி அடைந்த அவர்கள், அந்த ஆஸ்பத்திரிக்கு சென்று கேட்டனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர்களது கண்ணில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.

    அவர்கள் மேல்சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மற்றும் லக்னோ. வாரணாசி ஆகிய ஊர்களில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொற்று மேலும் பரவுவதை தடுப்பதற்காக, 9 பேருக்கு ஒரு கண் அகற்றப்பட்டது. மேலும் 9 பேருக்கு பார்வை பறிபோனது. ஒரு நோயாளி மட்டும் பார்வையை திரும்பப் பெற்றார்.

    இதைத்தொடர்ந்து, அந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு 'சீல்' வைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர் தீபக் மீனா தெரிவித்தார். விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். தவறு செய்தவர்களின் பதிவு ரத்து செய்யப்படும் என்று அவர் கூறினார்.

    விசாரணை அறிக்கை அடிப்படையில், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை மருத்துவ அதிகாரி ராஜேஷ் ஜா கூறினார்.

    • தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ள பிரேமலதா விஜயகாந்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
    • விஜயகாந்த் அரசியலில் நேர்மை, நாணயம், பெண்களுக்கு பாதுகாப்பு. தன் ரசிகர்களுக்கு, மக்களுக்கு பாதுகாப்பு என பேசி வந்தார்.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நேற்று பா.ஜனதா மூத்த தலைவரும், தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ள பிரேமலதா விஜயகாந்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் மூழ்கும் கப்பலுக்கு சென்றுள்ளார். விஜயகாந்த் அரசியலில் நேர்மை, நாணயம், பெண்களுக்கு பாதுகாப்பு. தன் ரசிகர்களுக்கு, மக்களுக்கு பாதுகாப்பு என பேசி வந்தார். அவருடைய கட்சி இந்த முடிவை எடுத்திருப்பது வருந்தத்தக்கது.

    தொண்டர்களின் விருப்பம் என பிரேமலதா சொல்கிறார். தமிழக அரசியலில் கேப்டன் என தலை நிமிர்ந்து சொல்லிக் கொண்டிருந்த ஒரு கட்சி மூழ்கும் கப்பலில் கேப்டனாக போனால் எப்படி இருக்குமோ அப்படி உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி மிக வலிமையாக உள்ளது. நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம்.

    27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. கிராமங்களுக்கான அதிகார பகிர்வை கொடுக்காமல் அவர்கள் எப்படி மாநில உ மைகள் பற்றி பேசுகிறார்கள். தோல்வி பயத்தால் இன்று மாநில சுயாட்சியை கையில் எடுத்திருக்கிறார்கள்.

    தமிழக அரசு ரூ.5 ஆயிரம் வழங்கி உள்ளது. பெண்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் 28 மாதங்கள் கொடுக்காமல் இப்போது கொடுக்கிறார்கள் என்றால் ஓட்டுக்காகத்தான்.

    த.வெ.க. தலைவர் விஜய் வேலூர் வருகை தர இருப்பது குறித்து கேட்டதற்கு, அவர் வரட்டும். பாதுகாப்பாக இருக்க வேண்டும். எந்த உயிரும் போகக்கூடாது. உயிர் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். வேலூருக்கு பிரதமர் மோடி வருகிறார். அது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தி.மு.க. கூட்டணிக்கு ஒரு கட்சி வந்து விட்டதால் தேசிய ஜனநாயக கூட டணிக்கு பெரிய இழப்பு என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அங்குள்ள காங்கிரஸ் அங்கேயே இருப்பார்களா? அல்லது விசிலிடம் போவார்களா? என தெரியவில்லை என கூறினார்.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    லட்சியங்கள் நிறைவேறும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் நன்மை உண்டு.

    ரிஷபம்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். பயணங்களால் பலன் கிடைக்கும். பக்கபலமாக இருப்பவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு செய்வர்.

    மிதுனம்

    திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். உத்தியோகத்தில் வி.ஆர்.எஸ். பெறுவது பற்றி சிந்திப்பீர்கள்.

    கடகம்

    சேமிப்பு கரையும் நாள். செய்தொழிலில் மாற்றம் செய்யலாமா என்று நினைப்பீர்கள். பூமி பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும்.

    சிம்மம்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். மறைமுக எதிர்ப்புகளால் கலக்கம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களைக் கையாள்வதில் கவனம் தேவை.

    கன்னி

    தீட்டிய திட்டங்கள் திசைமாறிச் செல்லும் நாள். கூட்டாளிகள் விலகலாம். கூடுதல் முயற்சி செய்தாலும் காரியங்கள் முடிவடைவதில் தாமதம் ஏற்படும்.

    துலாம்

    செய்தொழிலில் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும் நாள். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சியில் பலன் கிட்டும்.

    விருச்சிகம்

    செல்வாக்கு உயரும் நாள். செய்தொழிலில் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக லாபம் கிடைக்கும். திட்டமிட்டபடியே பயணங்களை மேற்கொள்வீர்கள்.

    தனுசு

    புதிய நண்பர்களின் சந்திப்பால் இதயம் மகிழும் நாள். லாபம் வரும் வழியைக் கண்டுகொள்வீர்கள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.

    மகரம்

    சுபச்செலவுகள் ஏற்படும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உதவி செய்ய முன்வருவர். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    கும்பம்

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இலாகா மாற்றங்கள் ஏற்படலாம்.

    மீனம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். உடன் இருப்பவர்கள் எதிரியாகலாம். கொடுக்கல், வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவை. காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடும்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
    • காலிறுதி சுற்றில் ஸ்பெயினின் அல்காரஸ் வெற்றி பெற்றார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷியாவின் கரன் கச்சனாவ் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய கச்சனாவ் முதல் செட்டை 7-6 (7-3) என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

    இன்று நடைபெறும் அரையிறுதியில் அல்காரஸ், ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் உடன் மோதுகிறார்.

    • திடீரென மைதானத்தில் நுழைந்த தேனீக்கள் கூட்டம் வீரர்கள், நடுவர்களை தாக்கியது.
    • தேனீக்களிடம் இருந்து தப்பிப்பதற்காக அவர்கள் மறைவிடம் நோக்கி ஓடினர்.

    லக்னோ:

    உத்தர பிரதேசம் மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தின் சுக்லகஞ்ச் பகுதியில் உள்ள ராகுல் சப்ரு மைதானத்தில் இளையோருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன.

    நேற்று முன்தினம் நடந்த போட்டியின்போது கான்பூரைச் சேர்ந்த மாணிக் குப்தா (65), நடுவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, தேனீக்கள் கூட்டம் திடீரென மைதானத்தில் நுழைந்து வீரர்கள், நடுவர்களை தாக்கியது. தேனீக்களிடம் இருந்து தப்பிக்க அவர்கள் மறைவிடம் நோக்கி ஓடினர்.

    இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாணிக் குப்தா மைதானத்திலேயே மயக்கம் போட்டு விழுந்தார். அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின், மேல் சிகிச்சைக்காக கான்பூர் லாலா லஜ்பத் ராய் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இந்தச் சம்பவத்தை உறுதி செய்த கான்பூர் கிரிக்கெட் சங்கத் தலைவர், வீரர்களும் காயமடைந்துள்ளனர் என தெரிவித்தார்.

    மைதானத்தில் தேனீக்கள் கொட்டியதில் அம்பயர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.
    • இந்தக் கூட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

    சென்னை :

    தி.மு.க. பொதுச் செயலாளர் துரை.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக தி.மு.க. மாவட்டச் செயலாளர் கூட்டம் 20.02.26 (இன்று) மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.

    இந்தக் கூட்டத்தில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற தலைப்பில் வீடு வீடாக மேற்கொள்ளும் பிரசார ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    இதில் மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தொகுதிப் பார்வையாளர்கள் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
    • காலிறுதி சுற்றில் இத்தாலி வீரர் சின்னர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், செக் குடியரசின் ஜாகுப் மென்சிக் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய மென்சிக் முதல் செட்டை 7-6 (7-3) என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட சின்னர் 2வது செட்டை 6-2 என எளிதில் வென்றார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை மென்சிக் 6-3 என போராடி வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார். இதன்மூலம் சின்னர் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்தது.
    • விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு பாகிஸ்தான் அதிபர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சியில் நேற்று அதிகாலை உணவு தயாரிக்கும் பணியில் மக்கள் ஈடுபட்டிருந்தனர். ரமலான் நோன்புக்காக அவர்கள் உணவு சமைக்கும் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென அங்குள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடத்தில் சிலிண்டர் வெடித்தது. இதில் அந்த குடியிருப்புக் கட்டடம் இடிந்து சரிந்தது. கட்டிட இடிபாடுகளுக்குள் ஏராளமான மக்கள் சிக்கினர்.

    இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.

    விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    ரமலான் நோன்பு தொடங்கிய முதல் நாளிலேயே கியாஸ் சிலிண்டர் வெடித்து 16 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • டெல்லியின் பாரத் மண்டபத்தில் ஏ.ஐ. உச்சி மாநாடு கடந்த 16-ம் தேதி முதல் நடந்து வருகிறது.
    • இந்த மாநாட்டில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியின் பாரத் மண்டபத்தில் ஏ.ஐ. உச்சி மாநாடு கடந்த 16-ம் தேதி முதல் நடந்து வருகிறது. இன்றுடன் நிறைவடையும் இந்த மாநாட்டில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.

    இந்த மாநாட்டில் பிரான்ஸ், பிரேசில், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, இலங்கை, நெதர்லாந்து, பின்லாந்து, குரோசியா, எஸ்டோனியா, சொ்பியா, சுலோவாகியா, மொரீஷியஸ், பூடான், கஜகஸ்தான், கிரீஸ், சீஷெல்ஸ், பொலிவியா, கயானா, அபுதாபி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார்.

    தொழில் அதிபர் முகேஷ் அம்பானி, கூகுள் மற்றும் ஆல்பா பெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், சுவிட்சர்லாந்து அதிபர் கெய் பார்மலின் மாநாட்டில் பேசுகையில், அடுத்த ஆண்டு ஏ.ஐ. உச்சி மாநாடு ஜெனீவாவில் நடைபெறும் என அறிவித்தார்.

    ×