என் மலர்
இந்தியா

ககன்யான் திட்டம் - வீரர்களை பாதுகாப்பாக தரையிறக்கும் பாராசூட் சோதனை வெற்றி
- மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச்செல்லும் ககன்யான் திட்டம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கனவு திட்டமாகும்.
- சோதனை விண்வெளி வீரர்கள் பூமிக்கு பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்துள்ளது.
மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச்செல்லும் ககன்யான் திட்டம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) கனவு திட்டமாகும்.
இதன் ஒரு பகுதியாக, இந்திய விமானப்படையைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 குரூப் கேப்டன்கள் விண்வெளி வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இதற்காக பல்வேறுகட்ட சோதனைகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் சண்டிகாரில் செயல்பட்டு வரும் டெரிமினல் பாலிஸ்டிக் ஆராய்ச்சி ஆய்வகத்தின் ரெயில் டிராக் ராக்கெட் ஸ்லெட் என்ற பகுதியில் விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக பூமிக்கு தரை இறக்கும் பாராசூட்டை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இது ககன்யான் திட்டத்தின் முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.
இந்த சோதனை விண்வெளி வீரர்கள் பூமிக்கு பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்துள்ளது.






