என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • சத்தம் காரணமாக அதிர்வும் ஏற்பட்டதால் வீட்டைவிட்டு மக்கள் வௌியேறினர்.
    • மன்னார்குடி, கமலபுரம், வடபாதி மங்கலம் பகுதியில் சத்தம் உணரப்பட்டது.

    திருவாரூரில் வானில் திடீரென ஒலித்த பலத்த சத்தத்தால் மக்கள் பீதியமடைந்துள்ளனர். சத்தம் காரணமாக அதிர்வும் ஏற்பட்டதால் வீட்டைவிட்டு மக்கள் வௌியேறினர்.

    மன்னார்குடி, கமலபுரம், வடபாதி மங்கலம் பகுதியில் சத்தம் உணரப்பட்டது. சத்தம் கேட்ட அதே நேரத்தில் விமானமும் சென்றதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இந்திய விமானப்படை வீரர்கள் மேற்கொண்ட பயிற்சி காரணமாக சத்தம் எழுந்ததாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரனம் விளக்கம் அளித்துள்ளார்.

    மேலும், "பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரை இந்திய விமானப்படை பயிற்சியில் ஈடுபட்டனர்" என்றார்.

    • நந்தினி ப்ளூ பால் பாக்கெட் தற்போது 44 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து 4 ரூபாய் உயர்த்தப்பட்டு 48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.

    கர்நாடகாவில் வருகிற 1-ஆம் தேதியில் இருந்து பால் விலை பாக்கெட்டுக்கு (1050 மி.லி.) 4 ரூபாய் உயர்த்தப்பட இருக்கிறது. கூட்டமைப்புகள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தல் காரணமாக விலை உயர்த்தப்பட இருக்கிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கூட்டுறவு அமைச்சர் கே.என். ரஞ்சனா கூறியதாவது:-

    பால் கூட்டமைப்பு லிட்டருக்கு ஐந்து ரூபாய் அதிகரித்து தரும்படி கேட்டது. இதனால் பால் விலையை உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிகரிக்கப்படும் 4 ரூபாயும், விவசாயிகளுக்குச் செல்லும்" என்றார்.

    கர்நாடகாவில் பேருந்து கட்டணம், மேட்ரோ ரெயில் கட்டணம், மின்சார கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது பால் விலை உயர்த்தப்பட இருக்கிறது.

    முன்னதாக, கர்நாடக மாநில பால் கூட்டமைப்பு தலைவர் பீமா நாயக், பால் விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

    கடந்த வரும் ஒரு லிட்டர் பாக்கெட்டில் 50 மி.லி. பால் அதிகரிக்கப்பட்டு, 2 ரூபாய் விலை உயர்த்தப்பட்டது. தற்போது 1050 மி.லி. கொள்ளளவு கொண்ட நந்தினி ப்ளூ பால் பாக்கெட் 44 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • வருடாந்திர மத்திய ஒப்பந்த பட்டியலில் ரோகித், கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் தற்போது A+ பிரிவில் உள்ளனர்.
    • கடந்த ஆண்டு ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்கிய ஷ்ரேயாஸ் இந்த முறை இடம் பிடிப்பார்.

    இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான புதிய ஒப்பந்த பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில் 'ஏ' கிரேடில் உள்ள வீராங்கனைகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சமும், 'பி' பிரிவுக்கு ரூ.30 லட்சமும், 'சி' பிரிவுக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படும்.

    இந்நிலையில் இந்திய ஆண்கள் அணிக்கான வருடாந்திர மத்திய ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருகிறது. கடைசியாக அறிவித்தபோது, உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்ற வாரியத்தின் கோரிக்கையை நிறைவேற்றாததற்காக, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷானை நீக்கியது. மேலும் ஐயர் மற்றும் கிஷானை மத்திய ஒப்பந்தங்களில் இருந்து நீக்குவதில் வாரியம் எந்த தயக்கமும் காட்டவில்லை .

    இந்த முறை அவர்கள் பெயர் பட்டியலில் இடம் பிடித்தாலும் அதே அளவில் எதிர்பார்க்கலாம். ஷ்ரேயாஸ் ஒப்பந்தப் பட்டியலில் இடம் பிடித்தாலும் இஷான் கிஷான் இடம் பெறுவது உறுதிப்படுத்த முடியாது நிலையில் உள்ளது.

    இந்நிலையில் வருடாந்திர மத்திய ஒப்பந்த பட்டியலில் ரோகித், கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் தற்போது A+ பிரிவில் உள்ளனர். இது அனைத்து வடிவங்களிலும் விளையாடும் வீரர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட மிக உயர்ந்த மற்றும் பொதுவான வகையாகும்.

    இப்போது கோலி, ரோகித் மற்றும் ஜடேஜா ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், அவர்களை A வகைக்கு மாற்ற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பட்டியலில் இளம் வீரர்களான நிதிஷ் ரெட்டி மற்றும் அபிஷேக் சர்மா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • ஒரே நாளில் நடந்த தொடர் நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • போலீசாரின் என்கவுண்டரில் கைது செய்யப்பட்ட ஜாஃபர் உயிரிழந்தார்.

    சென்னையில் ஒரே நேரத்தில் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சென்னையில் ஒரே நாளில் நடந்த தொடர் நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக விமான நிலையத்தில் வைத்து சூரஜ், ஜாஃபர் என்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் ரெயில் மூலம் தப்ப முயன்ற சல்மானை, ஆந்திராவில் போலீசார் கைது செய்தனர்.

    போலீசாரின் என்கவுண்டரில் ஜாஃபர் உயிரிழந்த நிலையில், தொடர் நகைப்பறிப்பு சம்பவத்தில் கைதான சல்மான், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில், சல்மானுக்கு ஏப்ரல் 9ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

    • விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் நடித்துள்ள திரைப்படம் ஒன்ஸ் மோர்.
    • பிரபல இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ஒன்ஸ் மோர்.

    அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்கிறார். ராஜ் கமல் கலை இயக்கத்தை கவனிக்க, நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

    மலையாள பிரபல இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் இசையமைக்கும் முதல் தமிழ் திரைப்படம் இதுவாகும்.

    இவர் இதற்கு முன் ஹருதயம், இனி உதரம், சேஷம் மைக்-இல் ஃபாதிமா, குஷி, ஹை நானா போன்ற பல வெற்றிப் படங்களை இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் சில பாடல்கள் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் அடுத்த பாடலான எதிரா புதிரா பாடலை படக்குழு நாளை மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளது என வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

    • அன்புத் தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
    • உற்சாகத்தோடும், துணிவுடனும் தன்னம்பிக்கையோடும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளுங்கள் வெற்றி நிச்சயம்.

    தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு மார்ச் 3-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தன. பிளஸ்-1 தேர்வு 5-ந் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்தது.

    இதைத் தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (28-ந் தேதி) தொடங்குகிறது. இந்த தேர்வை 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத உள்ளனர். ஏப்ரல் 15-ந் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.

    இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள அன்புத் தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

    மேலும், உற்சாகத்தோடும், துணிவுடனும் தன்னம்பிக்கையோடும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளுங்கள் வெற்றி நிச்சயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வக்பு வாரிய மசோதா அரசியலமைப்பிற்கு எதிரானது.
    • பீகார் மற்றும் நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை பிரச்சனையை தீர்க்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவிற்கு பீகார் மாநில ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

    இந்த நிலையில் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-

    நான் மதம், சாதி பிரிவினையை நம்பவில்லை. நான் கிறிஸ்தவ குடும்பத்தில் திருமணம் செய்துள்ளேன். என்னுடைய மதசாரபற்ற நிலைக்கு இதுவே சான்று.

    வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவில் மத்திய அரசு 44 பரிந்துரைகளை முன்வைத்தது. இறுதியாக பாராளுமன்ற நிலைக்குழு அதை 23 ஆக குறைந்தது. கடந்த மாதம் மத்திய அமைச்சரவை 14 பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

    வக்பு வாரிய மசோதா அரசியலமைப்பிற்கு எதிரானது. இது மைனாரிட்டி சமூகத்தினருக்கு எதிராக குறிவைக்கப்படுகிறது. பீகார் மற்றும் நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை பிரச்சனையை தீர்க்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்குப் பதிலாக அவர் சமூகத்தை பிளவுப்படுத்தும் வேலை செய்து கொண்டிருக்கிறார்.

    அவர்கள் எப்போதும் சமூகத்தை பிளவுப்படுத்தும் நோக்கத்தில் சட்டத்தை கொண்டு வருகிறார்கள். ஆனால் பீகார் மக்கள் புத்திசாலிகள். அவர்கள் இதை புரிந்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

    • விளையாட்டுக் கொள்கையின் கீழ் வழங்கப்படும் சலுகைகள் வினேஷ் போகத்துக்கும் வழங்கப்படும்
    • என்ன சலுகைகளைப் பெற விரும்புகிறார் என்று வினேஷ் போகத்திடம் கேட்க அரசாங்கம் முடிவு

    இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனையாக இருந்தவர் வினேஷ் போகத். பாரீஸ் ஒலிம்பிக்கின் இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவரது ஒலிம்பிக் பதக்க வாய்ப்பு பறிபோனது.

    இதைத் தொடர்ந்து மல்யுத்த போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்து சட்டமன்ற உறுப்பினர்கா தேர்வானார்.

    இந்நிலையில், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கு மாநில அரசின் விளையாட்டுக் கொள்கையின் கீழ் வழங்கப்படும் சலுகைகள் வினேஷ் போகத்துக்கும் வழங்கப்படும் என்று அரியானா மாநில அரசு தெரிவித்துள்ளது.

    ரூ.4 கோடி ரொக்கப் பரிசு அல்லது ஹரியானா ஷாஹ்ரி விகாஸ் பிரதிகரன் (HSVP) கீழ் ஒரு நிலம் ஒதுக்கீடு அல்லது 'குரூப் A' வேலை ஆகிய மூன்றில் எதாவது ஒன்றை வினேஷ் போகத் தேர்வு செய்யலாம் என்று ஹரியானா அரசு தெரிவித்துள்ளது.

    ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    அமைச்சரவை கூட்டத்திற்கு பின்பு பேசிய பேசிய நயாப் சிங் சைனி , "வினேஷ் போகட் இந்த பிரச்சினையை சட்டமன்றத்தில் எழுப்பினார். இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அவரது பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டு விளையாட்டுக் கொள்கையின் கீழ் சலுகைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வினேஷ் போகத் இப்போது ஒரு எம்.எல்.ஏ.வாக இருப்பதால், அவர் என்ன சலுகைகளைப் பெற விரும்புகிறார் என்று அவரிடம் கேட்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது" எனறு தெரிவித்தார்.

    • நடிகர் அஜித் குமார் மற்றும் இக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி.
    • மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    நடிகர் அஜித் குமார் மற்றும் இக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் அஜித் குமாருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

    திரைப்படத்தின் இசை அப்டேட்டை தற்பொழுது ஜி.வி பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார். அதன்படி படத்தின் பின்னணி முடிவடைந்துள்ளதாகவும். படத்தின் வெளியீட்டிற்காக ஆயுத்தமாகி கொண்டு இருப்பதாக அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    • இங்கிலாந்துடன் 5 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது.
    • இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 20-ந் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது.

    ஐபிஎல் தொடர் கடந்த 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் மே மாதம் 25-ந் தேதி முடிவடைகிறது. இதனை தொடர்ந்து இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடர் ஜூன் 20-ந் தேதி தொடங்கி ஜூலை 31-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவே தொடர பிசிசிஐ அனுமதி அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியதையடுத்து அவர் டெஸ்ட் கேப்டன் பதவியில் நீடிக்கமாட்டார் என கூறப்பட்டு வந்த நிலையில் அவர் மீண்டும் கேப்டனாக களமிறங்க உள்ளார்.

    • ரெயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.
    • கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை மார்க்கத்தில் புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னை எண்ணூர் ரெயில் நிலையத்தில் மின் வயர் அறுந்து விழுந்ததால் புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    இதன் எதிரொலியால், ரெயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.

    இதனால், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை மார்க்கத்தில் புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

    • இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
    • இந்த தொடருக்கு முன்னதாக இந்திய ஏ அணி நான்கு நாள் ஆட்டம் கொண்ட 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

    ஐபிஎல் தொடர் கடந்த 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் மே மாதம் 25-ந் தேதி முடிவடைகிறது. இதனை தொடர்ந்து இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடர் ஜூன் 20-ந் தேதி தொடங்கி ஜூலை 31-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்த தொடருக்கு முன்னதாக இந்திய ஏ அணி, இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் நான்கு நாள் ஆட்டம் கொண்ட 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான இந்திய ஏ அணியில் கருண் நாயர் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் கருண் நாயர் இந்திய ஏ அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர் நடந்து முடிந்த சையத் முஸ்தாக் அலி டிராபி தொடரில் அதிக ரன்கள் குவித்தார்.

    இதனை தொடர்ந்து நடைபெற்ற ரஞ்சி டிராபியில் 54 சராசரியுடன் 863 ரன்கள் குவித்தார். இதில் 4 சதம், 2 அரைசதம் அடங்கும்.

    ×