சென்னையில் புறநகர் ரெயில் சேவை பாதிப்பு- பயணிகள் கடும் அவதி

ரெயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை மார்க்கத்தில் புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் புறநகர் ரெயில் சேவை பாதிப்பு- பயணிகள் கடும் அவதி
Published on

சென்னை எண்ணூர் ரெயில் நிலையத்தில் மின் வயர் அறுந்து விழுந்ததால் புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் எதிரொலியால், ரெயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.

இதனால், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை மார்க்கத்தில் புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com