என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • 11 வயதாக இருக்கும்போது 23 வயதிற்கு உட்பட்டோருக்கான வேகப்பந்து வீச்சு முகாமுக்கு சென்றேன்.
    • 7ஆவது அல்லது 8ஆவது இடத்தில் களம் இறங்கி 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தேன்.

    இந்திய டெஸ்ட் அணி கேப்டன், ஒருநாள் மற்றும் டி20 அணி துணைக் கேப்டனாக சுப்மன் கில் இருந்து வருகிறார். 2019ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான நிலையில், 6 வருடத்திற்குள் மூன்று விடிவிலான கிரிக்கெட்டிலும் கேப்டன் பதவிக்கு உயர்ந்துள்ளார்.

    சுப்மன் கில், தன்னுடைய சிறுவயது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து நினைவு கூர்ந்துள்ளார். தன்னுடைய 11 வயதில், கிரிக்கெட்டுதான் தன்னுடைய தொழிலாக இருக்கப்போகிறது என உணர்ந்தேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சுப்மன் கில் கூறியதாவது:-

    நேர்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், எனக்கு 11 வயது இருக்கும்போது, கிரிக்கெட்டுதான் தன்னுடைய தொழிலாக இருக்கப் போகிறது என உணர்ந்தேன். 23 வயதுக்கு உட்பட்ட வேகப்பந்து வீச்சாளர்களுக்கான முகாம் நடைபெற்றது. அப்போது எனக்கு 11 வயதுதான். அங்கிருந்த மற்ற வீரர்களில் பெரும்பாலானோர் என்னைக் காட்டிலும் இரண்டு மடங்கு வயது அதிகம் கொண்டவர்களாக இருந்தனர். அதேவேளையில் பேட்ஸ்மேன்கள் சற்று குறைவாக இருந்தனர்.

    நான் என்னுடைய சிறந்த நண்பர் மற்றும் நெருங்கிய நண்பருமான குஷ்ப்ரீத் உடன் பயிற்சி மேற்கொண்டேன். குர்ஷ்பீரித் வேகப்பந்து வீச்சாளர். அவர் பயிற்சியாளரிடம் சென்று, நம்மிடம் பேட்ஸ்மேன்கள் குறைவு. அதனால் என்னை களம் இறக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். பயிற்சியாளர் என்னையும், எனது நண்பரையும் களம் இறக்கினார்.

    நான் 7 அல்லது 8ஆவது வரிசையில் பேட்டிங் செய்ய இறங்கினேன். அணியின் முன்கள வீரர்கள் நான்கு அல்லது ஐந்து ஓவரில் ஆட்டமிழந்தனர். அதன்பின் நான் பேட்டிங் செய்ய களம் இறங்கினேன். 90 ரன்கள் அடித்து நாட்அவுட்டாக இருந்தேன். அந்த தருணம், அந்த இன்னிங்ஸ், பயிற்சி போட்டியாக இருந்தாலும் கூட எனக்கு நம்பிக்கை கொடுத்தது. இந்த தருணம்தான் இனிமேல் கிரிக்கெட்டுதான் தொழில் என்பதை உணர வைத்தது.

    இவ்வாறு சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

    • முதலில் விளையாடிய தெற்கு மண்டலம் 149 ரன்னில் சுருண்டது.
    • ரஜத் படிதார் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    துலீப் கிரிக்கெட் இறுதிப் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. தெற்கு மண்டலம்- மத்திய மண்டலம் அணிகள் மோதும் இந்த போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற மத்திய மண்டலம் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களம் இறங்கிய தெற்கு மண்டலம், 149 ரன்னில் சுருண்டது. தொடக்க வீரர் தன்மே அகர்வால் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். மத்திய மண்டலம் சார்பில் சரண்ஸ் ஜெயின் 5 விக்கெட்டும், குமார் கார்த்திகேயா 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் மத்திய மண்டலம் முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. டேனிஷ் மாலேவார் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷுபம் சர்மா 6 ரன்னிலும், அக்ஷேய் வட்கார் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த கேப்டன் ரஜத் படிதார் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 115 பந்தில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 12 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும். யாஷ் ரதோட் 76 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

    72 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்து மத்திய மண்டலம் தொடர்ந்து பேட்டிங் செய்து வருகிறது.

    • தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தென்மேற்கு பருவமழை வட தமிழக கடலோர மாவட்டங்களில் தீவிரமாக இருந்தது.

    வடதமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பதிவாகியுள்ளது.

    நேற்று தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று காலை வடக்கு ஆந்திர தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் அடுத்த இரு தினங்களில் கடந்து செல்லக்கூடும்.

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    வரும் 15-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது.
    • வன்னியர் சங்க அலுவலகத்துக்கு டாக்டர் ராமதாஸ் ஆதரவாளர்கள் பூட்டு போட்டனர்.

    திண்டிவனத்தில் ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. பா.ம.க. செயல் தலைவர் பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினரில் இருந்தும் டாக்டர் அன்புமணியை நீக்கி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டார்.

    ஆனால், அன்புமணியை நீக்க ராமதாசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என அன்புமணி தரப்பை சேர்ந்த வக்கீல் பாலு கூறியுள்ளார். இதனால் ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது.

    விழுப்புரம்- திண்டிவனம் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே வன்னியர் சங்க அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் வருகிற 17-ந் தேதி வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் டாக்டர் அன்புமணி கலந்து கொள்வதாகவும் இருந்தது.

    இதைத்தொடர்ந்து வன்னியர் சங்க அலுவலகத்துக்கு டாக்டர் ராமதாஸ் ஆதரவாளர்கள் பூட்டு போட்டனர்.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் அன்புமணி ஆதரவாளர்கள் அங்கு திரண்டனர். அவர்கள், வன்னியர் சங்க அலுவலகத்தை திறக்க கூறினர்.

    இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது.

    இது பற்றிய தகவல் கிடைத்ததும் திண்டிவனம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் இருதரப்பை சேர்ந்தவர்களையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அங்கு மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க வன்னியர் சங்க அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • இந்த இரு மாடல்கள் ஃபீச்சர் போன் வகைக்குள் 4ஜி கனெக்டிவிட்டி வழங்குகின்றன.
    • ஸ்மார்ட்போனுடன் கூடுதலாக, HMD இரண்டு புதிய ஃபீச்சர் போன்களை ஹெச்எம்டி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

    ஹெச்எம்டி (HMD) நிறுவனம் இந்திய சந்தையில் மூன்று புதிய சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை ஹெச்எம்டி வைப் 5ஜி, ஹெச்எம்டி 101 4ஜி, மற்றும் ஹெச்எம்டி 102 4ஜி என அழைக்கப்படுகின்றன.

    5ஜி கனெக்டிவிட்டியை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு ஹெச்எம்டி வைப் 5ஜி மலிவு விலையில் கிடைக்கும் சிறந்த ஆப்ஷனாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனம் அடுத்த தலைமுறை மொபைல் நெட்வொர்க் வேகங்களை அணுகுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    ஸ்மார்ட்போனுடன் கூடுதலாக, HMD இரண்டு புதிய ஃபீச்சர் போன்களை ஹெச்எம்டி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஹெச்எம்டி 101 4ஜி மற்றும் ஹெச்எம்டி 102 4ஜி மாடல்கள் கச்சிதமான மற்றும் நம்பகமானதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த இரு மாடல்கள் ஃபீச்சர் போன் வகைக்குள் 4ஜி கனெக்டிவிட்டி வழங்குகின்றன.

    புதிய ஹெச்எம்டி 102 4ஜி மாடல் ஃபிளாஷ் கொண்ட QVGA கேமரா, ஸ்டைலான வடிவமைப்பு பொருந்தக்கூடிய வண்ண விசைப்பலகை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

    ஹெச்எம்டி வைப் 5ஜி அம்சங்கள்:

    6.67-இன்ச் (720×1604 பிக்சல்கள்) HD+ 90Hz LCD ஸ்கிரீன்

    ஆக்டா-கோர் 6nm UNISOC T760 பிராசஸர்

    மாலி-G57 MC4 GPU

    4ஜிபி LPDDR4x ரேம்

    128ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    டூயல் சிம்

    ஆண்ட்ராய்டு 15

    50MP பிரைமரி கேமரா

    2MP டெப்த் சென்சார், LED ஃபிளாஷ்

    8MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    5ஜி, டூயல் 4ஜி VoLTE, வைபை, ப்ளூடூத் 5.2, GPS + GLONASS

    யுஎஸ்பி டைப்-சி

    5000mAh பேட்டரி

    18W ஃபாஸ்ட் சார்ஜிங்



    ஹெச்எம்டி 101 4ஜி மற்றும் 102 4ஜி அம்சங்கள்

    2-இன்ச் 240x320 பிக்சல் QQVGA டிஸ்ப்ளே

    UNISOC 8910 FF-S பிராசஸர்

    16MB மெமரி

    32GB வரை மெமரியை நீட்டிக்கும் வசதி

    எஸ்30+ ஓஎஸ்

    ஃபிளாஷ் கொண்ட QVGA கேமரா (ஹெச்எம்டி 102 4ஜி மட்டும்)

    எஃப்.எம். ரேடியோ (வயர்டு/வயர்லெஸ்), MP3 பிளேயர், கிளவுட் ஆப்ஸ்

    உள்ளூர் மொழி ஆதரவு

    டூயல் சிம், ப்ளூடூத் 5.0

    யுஎஸ்பி டைப்-சி போர்ட்

    3.5மிமீ ஆடியோ ஹெட்ஃபோன் ஜாக்

    IP52 தரச்சான்று பெற்ற வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட்

    1000mAh பேட்டரி

    விலை விவரங்கள்:

    ஹெச்எம்டி வைப் 5ஜி பிளாக் மற்றும் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8,999 ஆகும்.

    ஹெச்எம்டி 101 4ஜி டார்க் புளூ, ரெட் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,899 ஆகும்.

    ஹெச்எம்டி 102 4ஜி டார்க் புளூ, ரெட் மற்றும் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2,199 ஆகும்.

    • ஆபரேசன் சிந்தூருக்குப் பிறகு கிரிக்கெட், வணிகம் நடைபெறக் கூடாது எனச் சொல்கிறார்கள்.
    • இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேம்படும்வரை, கிரிக்கெட் மற்றும் வணிகமும் நடைபெறக் கூடாது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை (நாளைமறுதினம்) துபாயில் நடைபெற இருக்கிறது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் நடைபெற்ற நிலையில் இரு நாடுகளும் பரஸ்பர தடைகளை விதித்துள்ளது. இந்த நிலையில் கிரிக்கெட் போட்டி நடத்த வேண்டுமா? என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது. போட்டிக்கு தடைவிதிக்கக் கோரி நீதிமன்றத்தில் பொதுநல மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி நடத்தப்பட வேண்டுமா? என்று ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வான ஹர்பஜன் சிங் கூறியதாவது:-

    இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி எப்போதும் மிகப்பெரிய அளவில் பேசப்படும் போட்டியாக இருக்கும். ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, எல்லோரும் கிரிக்கெட் மற்றும் வர்த்தகம் இரு நாடுகளுக்கு இடையில் நடைபெறக்கூடாது எனச் சொல்கிறார்கள். நாம் லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடினோம். அப்போது பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடாமல் புறக்கணித்தோம்.

    ஒவ்வொருவருக்கும் அவரவர் சிந்தனை மற்றும் புரிதல் முறை உள்ளது. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேம்படும்வரை, கிரிக்கெட் மற்றும் வணிகமும் நடைபெறக் கூடாது என்று நான் நினைக்கிறேன். அதுதான் என் கருத்து. அரசாங்கம் போட்டி நடக்கலாம் என்று சொன்னால், அது நடக்க வேண்டும். ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் சிறப்பாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

    • முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    • ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்றார்.

    எங்கள் அணியில் முகமது நவாஸ் இடம் பிடித்துள்ளார். தற்போதைய நிலையில் டி20 -யில் உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் முகமது நவாஸ்தான். அவர் அணிக்கு திரும்பியதில் இருந்து கடந்த 6 மாதங்களில் சிறந்த தரவரிசையை பெற்றுள்ளார் என பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் தெரிவித்துள்ளார்.

    முகமது நவாஸ் தற்போது ஐசிசி தரவரிசையில் 30ஆவது இடத்தில் உள்ளார். நாளைமறுதினம் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் துபாய் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இந்த போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு முகமது நவாஸ் முக்கிய துருப்பு சீட்டாக இருக்கார்.

    31 வயதான முகமது நவாஸ் 71 டி20 போட்டிகளில் விளையாடி 70 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 2016ஆம் ஆண்டு பாகிஸ்தானில் அணியில் அறிமுகம் ஆனார். யுஏஇ-யில் நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 4 ஓவரில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் சாய்த்தார். இந்த தொடரில் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்றார். 5 போட்டிகளில் 10 விக்கெட்டுகள் வீ்ழ்த்தினார்.

    • இந்தப் பாட்டி டைம் இதழில் இடம்பெற்ற அதே வலிமையான இந்தியப் பெண்மணி. அவர் இப்போது ரூ.100க்குக் கிடைக்கிறார்.
    • நீங்கள் உங்கள் கருத்தில் மசாலாவை சேர்த்துளீர்கள்

    2021 ஆம் ஆண்டு விவசாயிகள் போராட்டத்தில் பெண்கள் சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டதற்காக நடிகையும் பாஜக எம்.பியுமான கங்கனா ரனாவத் மீதான கிரிமினல் அவதூறு வழக்கை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

    2021 ஆம் ஆண்டு விவசாயிகள் போராட்ட வீடியோவை ரீட்வீட் செய்த கங்கனா ரனாவத், மூத்த போராட்டக்காரரான மஹிந்தர் கவுருக்கு எதிராக, "இந்தப் பாட்டி டைம் இதழில் இடம்பெற்ற அதே வலிமையான இந்தியப் பெண்மணி. அவர் இப்போது ரூ.100க்குக் கிடைக்கிறார்" என்று கிண்டல் செய்யும் கருத்தைத் தெரிவித்திருந்தார்.

    இந்த அறிக்கைக்கு எதிராக மஹிந்தர் கவுர் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கங்கனா உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் நீதிபதி சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது பேசிய நீதிபதிகள், "உங்கள் அறிக்கைகள் குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? இது வெறும் ரீ ட்வீட் அல்ல. நீங்கள் உங்கள் சொந்த கருத்துக்களை சேர்த்துள்ளீர்கள். நீங்கள் உங்கள் கருத்தில் மசாலாவை சேர்த்துளீர்கள்" என்று கூறி கங்கனாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

    • திருப்பூரில் தொழிலாளர்கள் தங்குவதற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.
    • நிதிச்சுமையை தீர்த்து கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்.

    திருப்பூர்:

    'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருப்பூரில் இன்று பனியன் உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள், விவசாயிகள் , பாத்திர உற்பத்தியாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்துறையினருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பல்வேறு தொழில் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் மனுக்கள் அளித்தனர்.

    அதனைப்பெற்றுக்கொண்ட அவர் தொழில்துறையினர் மத்தியில் பேசியதாவது:-

    டாலர்சிட்டியான திருப்பூர் தற்போது பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திருப்பூரின் நிலைமை எனக்கு கவலைஅளிக்கிறது. தமிழக அரசின் மின்கட்டணம், மாநகராட்சி வரி உயர்வால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டுமென மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கிறேன்.

    யாருக்கும் இழப்பு இல்லாமல் ஆட்சி நடத்தினோம். 27 சங்கங்களை சேர்ந்த தொழில் அமைப்பினர் என்னிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கி உள்ளனர். அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் திருப்பூர் தொழில்துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பூரில் தொழிலாளர்கள் தங்குவதற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும். எல்லாவற்றிற்கும் நிதி தேவை. இப்போதைய தி.மு.க. அரசு இதுவரை ரூ.4 லட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கி உள்ளது. இன்னும் 1 லட்சம் கோடி வாங்குவார்கள். இதன் மூலம் ரூ.5 லட்சம் கோடியாக உயரும். அதற்கு வட்டி கட்ட வேண்டும். நிதிச்சுமையை தீர்த்து கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம். தொழிலும் வளர வேண்டும். விவசாயமும் செழிக்க வேண்டும். உள்கட்டமைப்பு வசதிகள் இருந்தால் தொழில் தானாக வந்து விடும். வெளிமாநில முதலமைச்சர்கள் திருப்பூர் வந்து சலுகைகள் வழங்குவதாக கூறி தொழில் துறையினரை அவர்களது மாநிலத்திற்கு அழைப்பு விடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த நிலைமை ஏற்படாதவாறு பார்த்து கொள்வோம்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    அனுபமா பரமேஷ்வரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது பரதா திரைப்படம்.

    ப்ரவீன் இயக்கத்தில் அனுபமா பரமேஷ்வரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது பரதா திரைப்படம்.

    ப்ரவீன் இதற்கு முன் சினிமா பண்டி மற்றும் சுபம் திரைப்படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது. பரதா திரைப்படம் தெலுங்கு மற்றும் மலையாள மொழியில் வெளியானது. திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் திரைப்படம் வெளியாகி முன்று வார இறுதியில் திரைப்படம் தற்பொழுது பிரைம் வீடியோ ஓடிடியில் தெலுங்கு மற்றும் மலையாளம் மொழியில் வெளியாகியுள்ளது.

    பரதா கட்டாயமாக அணியும் வழக்கத்தை வைத்திருக்கும் கிராமத்தில் இருந்து அனுபமா வருகிறார், அவர் ஒரு பயணத்தில் மற்ற பெண்களை மற்றும் உலகை புரிந்துக் கொள்ளும் காட்சிகளாக கதைக்களம் அமைந்துள்ளது.

    படத்தின் இசையை கோபி சுந்தர் மேற்கொண்டுள்ளார். இவர்களுடன் தர்ஷனா ராஜேந்திரன், கவுதம் மேனன் மற்றும் ராஜேந்திர பிரசாத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • புறநகர் ரெயில்களில் ஒழுங்கீன செயல்களை தவிர்க்குமாறு பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
    • ரெயில்களில் உள்ள இருக்கைகள் ‘முதலில் வருபவருக்கே முன்னுரிமை’ என்ற அடிப்படையில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

    சென்னை:

    சென்னையில் புறநகர் மின்சார ரெயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். ஆனால் ரெயில் பயணத்தின் போது சிலர் செய்யும் அநாகரீகமான செயல்கள் மற்றவர்களுக்கு ஆபத்தையும், மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளதாக தெற்கு ரெயில்வே கூறி உள்ளது. மேலும் புறநகர் ரெயில்களில் ஒழுங்கீன செயல்களை தவிர்க்குமாறு பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ரெயில் பயணத்தின்போது பயணிகள் தங்கள் எதிரே உள்ள இருக்கைகளில் கால்களை வைப்பதால், அந்த இருக்கைகள் அசுத்தமாவதுடன், மற்றவர்களுக்கு அசவுகரியத்தையும் ஏற்படுத்துகிறது.

    ரெயிலில் பயணிக்கும் ஒருவர் தனது நண்பர் மற்றும் உறவினர்களுக்காக இருக்கைகளை பிடித்து வைக்கும் சம்பவங்கள் அதிகளவில் நடக்கிறது. இதனால், முதலில் வரும் மற்ற பயணிகளுக்கு இருக்கை கிடைப்பதில்லை.

    ஒரு சில பயணிகள் ரெயிலில் ஏறியவுடன் இருக்கைகள் காலியாக இருந்தாலும் அதில் அமராமல் ரெயில் பெட்டிகளின் நுழைவாயிலில் அமர்ந்து, மற்ற பயணிகள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் இடையூறு ஏற்படுத்துகின்றனர்.

    ரெயில் நிலையங்களில் ரெயில் நிற்பதற்கு முன்பே இருக்கைகளை பிடிப்பதற்காக ஓடும் ரெயிலில் ஏறுவதும், இறங்குவோருக்கு இடையூறு செய்வதும் விபத்துகளுக்கு வழிவகுப்பதுடன் அவர்களுக்கும் அது ஆபத்தாக முடிய சாத்தியமுள்ளது.

    எனவே ரெயில்களில் உள்ள இருக்கைகள் 'முதலில் வருபவருக்கே முன்னுரிமை' என்ற அடிப்படையில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். மற்றவர்களுக்காக இடம் பிடிப்பதும், காலியாக உள்ள இருக்கைகள் மீது கால்களை வைப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

    ரெயில் பெட்டியின் வாசல்களில் அமர்வதும், மற்ற பயணிகள் ஏறவும், இறங்கவும், வழியை மறிப்பதும் பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • பயணிகளின் மொபைல் போன்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடித்தனர்.
    • நேபாள ராணுவம் அவர்களை மீட்டது.

    கலவரத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் இந்தியர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    காவல்துறையினரின் கூற்றுப்படி, பேருந்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் ஆவர். நேற்று பசுபதிநாத் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து பேருந்தில் திரும்பிகொண்டிருந்த அவர்களை சோனாலி அருகே கும்பல் ஒன்று வழிமறித்தது.

    முதலில் மர்ம நபர்கள் பேருந்தின் மீது கற்களை வீசி, பின்னர் பயணிகளின் மொபைல் போன்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடித்தனர். இதில் 8 பேர் காயமடைந்தனர்.

    சிறிது நேரத்திற்குப் பிறகு நேபாள ராணுவம் அவர்களை மீட்டு, இந்திய தூதரகத்துக்கு தகவல் தெரிவித்தது.

    இந்திய அதிகாரிகள் அனைவரையும் காத்மாண்டுவிலிருந்து டெல்லிக்கு விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.

    ×