என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    துலீப் டிராபி பைனல்: ரஜத் படிதார் சதம் விளாசினார்..!
    X

    துலீப் டிராபி பைனல்: ரஜத் படிதார் சதம் விளாசினார்..!

    • முதலில் விளையாடிய தெற்கு மண்டலம் 149 ரன்னில் சுருண்டது.
    • ரஜத் படிதார் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    துலீப் கிரிக்கெட் இறுதிப் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. தெற்கு மண்டலம்- மத்திய மண்டலம் அணிகள் மோதும் இந்த போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற மத்திய மண்டலம் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களம் இறங்கிய தெற்கு மண்டலம், 149 ரன்னில் சுருண்டது. தொடக்க வீரர் தன்மே அகர்வால் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். மத்திய மண்டலம் சார்பில் சரண்ஸ் ஜெயின் 5 விக்கெட்டும், குமார் கார்த்திகேயா 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் மத்திய மண்டலம் முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. டேனிஷ் மாலேவார் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷுபம் சர்மா 6 ரன்னிலும், அக்ஷேய் வட்கார் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த கேப்டன் ரஜத் படிதார் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 115 பந்தில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 12 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும். யாஷ் ரதோட் 76 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

    72 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்து மத்திய மண்டலம் தொடர்ந்து பேட்டிங் செய்து வருகிறது.

    Next Story
    ×