என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • மதுரைக்கு ஏன் மெட்ரோ ரயில் திட்டம் தரவில்லை? என பிரதமர் மோடியிடம் கேளுங்க.
    • மத்திய அரசிடம் கேள்வி கேட்க வேண்டிய இபிஎஸ், கோரிக்கை கூட வைப்பதில்லை.

    மதுரையில் நடந்த திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அடுத்த 2 மாதங்களுக்கு நமக்கு ஓய்வே கிடையாது. அடுத்த 2 மாதங்களுக்கு உங்களுக்கும் சரி எனக்கும் சரி No Rest. வாக்குபதிவு அன்று பூத்துக்கு வந்து வாக்காளர்கள் நமக்கு வாக்கு செலுத்தும் வரை ஓய்வே இருக்க கூடாது!

    மதுரைக்கு ஏன் மெட்ரோ ரயில் திட்டம் தரவில்லை? என பிரதமர் மோடியிடம் கேளுங்க.

    மார்ச் 1ம் தேதி வருகை தரவுள்ள பிரதமரிடம், மதுரைக்கு ஏன் மெட்ரோ ரெயில் திட்டம் தரவில்லை? என மக்கள் கேட்க வேண்டும்.

    மத்திய அரசிடம் கேள்வி கேட்க வேண்டிய இபிஎஸ், கோரிக்கை கூட வைப்பதில்லை. கோரிக்கை வைக்க கூட முடியாத துணிச்சல் இல்லாத துரோகி இபிஎஸ்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரையில் தென் மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு தொடங்கியுள்ளது.
    • கடந்த 2 மாதங்களில் மட்டும் பல்வேறு மாநாடுகளை திமுக நடத்தி இருக்கிறது.

    தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளததை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக ஆளும் கட்சி யான தி.மு.க. மற்ற கட்சிகளை முந்திக்கொண்டு மாநாடுகள், தேர்தல் சந்திப்பு கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.

    தி.மு.க. சார்பில் தொடர்ந்து தஞ்சையில் மகளிர் அணி மாநாடு, தாம்பரம், திருப்பத்தூரில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கூட்டங்கள், விருதுநகரில் தென் மண்டல இளைஞரணி மாநாடு என நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த கூட்டங்களில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி கட்சியினரை உற்சாகப்படுத்தி வருகிறார்.

    அதன் தொடர்ச்சியாக மதுரையில் இன்று மாலை 5 மணிக்கு தென் மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு தொடங்கியுள்ளது.

    மாநாட்டிற்கு திறந்தவெளி வாகனத்தில் வருகை தந்த முதலமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், மாநாட்டில் முதலமைச்சர் உரையாற்றியதாவது:-

    வீரம் என்றால் மதுரை, பாசம் என்றால் மதுரை, கோவில் என்றால் மதுரை, சாப்பாடு என்றால் மதுரை, இங்கு எல்லாமே பேமஸ் தான் சித்திரைத்திருவிழா போல கூடியிருக்கும் கூட்டத்தை பார்த்து உற்சாகம் அடைகிறேன், இனி நாமதான், எப்போதுமே நாமதான்!

    கடந்த 2 மாதங்களில் மட்டும் பல்வேறு மாநாடுகளை திமுக நடத்தி இருக்கிறது. இந்த மாநாடுகள் எல்லாம் "வெறும் ட்ரெய்லர்தான்; மெயின் பிக்சர் திருச்சியில் இருக்கிறது".

    அடுத்த 2 மாதங்களுக்கு நமக்கு ஓய்வே கிடையாது. "ஒன்றிய அரசிடம் கேள்வி கேட்க வேண்டிய இபிஎஸ், கோரிக்கை கூட வைப்பதில்லை. கோரிக்கை வைக்க கூட முடியாத துணிச்சல் இல்லாத துரோகி இபிஎஸ்!"

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இ.பி.எஸ்.காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார்
    • அதிமுக வெற்றிபெற்றால் RSS தான் நாட்டை ஆளும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.

    சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழக அரசியல் தலைவர்களும் தமிழ் மொழிக்கு வாழ்த்து தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி காவி நிறத்திலான உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதற்கு திமுக எம்.பி. கனிமொழி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில், காவி உடையில் திருவள்ளுவர் இருக்கும் படத்தை இபிஎஸ் பதிவிட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "அதிமுக காவி மயமாகி வருகிறது, பாஜக பிடியில் சென்றுவிட்டது என்பதை பிரதிபலிக்கும் செயல் இது. அதிமுக வெற்றிபெற்றால் RSS தான் நாட்டை ஆளும்" என்று தெரிவித்தார்.

    • சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.
    • மாநாட்டுதிடலின் முகப்பு அனைவரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    தமிழக சட்டசபை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலை சந்திக்க தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

    இந்தநிலையில் தி.மு.க. இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு கோவை கருமத்தம்பட்டி கணியூர் டோல்கேட் அருகில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

    மாநாட்டில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி உரையாற்றுகிறார். துணை பொதுச்செயலாளர்கள் ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி வரவேற்கிறார். அமைச்சர்கள் முத்துசாமி, சக்கரபாணி, மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் மற்றும் மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள், மாவட்ட, மாநகர செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இளைஞர் அணி துணை செயலாளர் பிரகாஷ் நன்றி கூறுகிறார்.

    மாநாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டம் , கிளை மற்றும் வாக்குச்சாவடி அளவிலான இளைஞர் அணி நிர்வாகிகள் வெண்சீருடை அணிந்து கலந்து கொள்ள உள்ளனர். சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.

    இதையொட்டி கணியூர் டோல்கேட் அருகில் மாநாட்டு பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாநாட்டுதிடலின் முகப்பு அனைவரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் மேடை பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த பணிகளை மேற்கு மண்டல தி.மு.க. பொறுப்பாளர் செந்தில்பாலாஜிநேரில் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார். அவரது வழிகாட்டுதலின்பேரில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதிமுருகேசன் மாநாட்டு பந்தலில் நடைபெறும் பணிகளை உடனிருந்து கவனித்து வருகிறார்.

    மேற்கு மண்டல தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் 39 சட்டசபை தொகுதிகளில் இருந்து சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.

    மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பங்கேற்க வரும் தொண்டர்களுக்கு மாநாட்டு பந்தலிலேயே உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

    • மணமகள் செல்வி வேலைக்காக ஜப்பான் சென்றபோது ஷூன்யா யாஷிமாக் உடன் காதல் ஏற்பட்டுள்ளது.
    • சென்னை பெரியார் திடலில் சுயமரியாதை திருமணம் செய்துகொண்டனர்.

    சென்னையில் உள்ள பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் ஜப்பான் மாப்பிள்ளைக்கும் தமிழ்ப் பெண்ணுக்கும் நடைபெற்ற சுயமரியாதை திருமணம் நடைபெற்றுள்ளது.

    மணமகள் செல்வி வேலைக்காக ஜப்பான் சென்றபோது ஷூன்யா யாஷிமாக் உடன் காதல் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து இருவரும் மதங்களைக் கடந்து சென்னை பெரியார் திடலில் சுயமரியாதை திருமணம் செய்துகொண்டனர்.

    • சென்னை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • முடிவுற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் கொண்டு வரப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் முடிவுற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் கொண்டு வரப்பட்டு வருகிறது. அவ்வாறாக அடையாறு மண்டலத்தில் சாஸ்திரி நகரில் மாநகராட்சியின் மூலதன நிதியில் நவீன உடற்பயிற்சி உபகரணங்களால் ரூ.33.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ள நவீன உடற்பயிற்சிக் கூடத்தினை மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்து, உடற்பயிற்சி மேற்கொண்டார்.

    முன்னதாக, இக்கட்டிடத்தின் தரைத் தளத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மையத்தினை திறந்து வைத்து, பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் மகேஷ்குமார், மண்டல அலுவலர் செந்தில் குமரன், கண்காணிப்பு பொறியாளர் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    • நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நேற்று பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக இன்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் உருவாகியுள்ளது. இது காலை 08.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும்.

    இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

    நாளை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

    23ந்தேதி முதல் 25-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

    26 மற்றும் 27-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    இதனிடையே நேற்று முதல் 25-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று மற்றும் நாளை மன்னார் வளைகுடா அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பேசி உள்ளார்.
    • அந்தந்த பகுதிகளை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    அந்த வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தேர்தலை சந்திப்பதற்கு ஆயத்தமாகி உள்ளார். தமிழகம் முழுவதும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணம் செய்து வரும் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பேசி உள்ளார்.

    இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று முதல் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்ய உள்ளார்.

    திருவள்ளூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவடி, அம்பத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு சேர்த்து அம்பத்தூரில் இன்று மாலை 5 மணியளவில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.

    திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாதவரத்தில் நாளை (22-ந்தேதி) மாலை 4 மணியளவில் பிரசாரம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி மாலை 5 மணி அளவில் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் பேசுகிறார்.

    அதன்பிறகு வருகிற 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் திருவள்ளூர் மத்திய மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

    25-ந்தேதி (புதன்கிழமை) மதுரவாயல், பூந்தமல்லி ஆகிய தொகுதிகளுக்கும் சேர்த்து மதுரவாயல் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டப வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

    26-ந்தேதி (வியாழக்கிழமை) அன்று செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தாம்பரம், பல்லாவரம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் மாலை 4.30 மணியளவில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இப்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 8 சட்டமன்ற தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்வதையடுத்து மேற்கண்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. அந்தந்த பகுதிகளை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    • திருவள்ளுவர் எந்த ஒரு மதத்திற்கும், சாதிக்கும், அரசியல் கோட்பாட்டிற்கும் கட்டுப்பட்டவர் அல்ல.
    • திருவள்ளுவர் மனிதர்களுக்குள் சமத்துவத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்தியவர்.

    சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழக அரசியல் தலைவர்களும் தமிழ் மொழிக்கு வாழ்த்து தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி காவி நிறத்திலான உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    உயர்ந்த சிந்தனைகளை உலகிற்கு அளித்த திருவள்ளுவரை ஒரு குறிப்பிட்ட மதத்துடன் இணைக்கும் வகையில் காவி உடை அணிவித்து எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்ததற்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.வுடன் இணைந்தவுடன் அவரின் சிந்தனை காவி மயமாகி விட்டது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும். திருவள்ளுவர் எந்த ஒரு மதத்திற்கும், சாதிக்கும், அரசியல் கோட்பாட்டிற்கும் கட்டுப்பட்டவர் அல்ல. அவர் மனிதர்களுக்குள் சமத்துவத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்தியவர். திருவள்ளுவரின் உருவப் படத்திற்கு ஒரு குறிப்பிட்ட சாயலை ஏற்படுத்துவது தமிழர் பண்பாட்டு மரபுக்கு எதிரான செயல் ஆகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ.3.50 கோடி செலவில் அமைக்கப்பட்டிருந்த அங்கூரான் நவீன அறிவியல் மையத்தையும் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
    • மருது சகோதரர்களின் சிலைகளை காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    மதுரை:

    மதுரையில் பல்வேறு அரசு விழாக்கள், தி.மு.க. தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் பங்கேற்க இன்று காலை விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு விமான நிலையத்திலிருந்து வடபழஞ்சியில் உள்ள எல்காட் தொழில்நுட்ப பூங்காவிற்கு மு.க.ஸ்டாலின் காரில் வந்தார்.

    அங்கு சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்காட் வளாகத்தில் பினாகிள் இன்போடெக் நிறுவனத்தின் விரிவுப்படுத்தப்பட்ட புதிய உலகளாவிய சிறப்புப் பொறியியல் மையக்கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும் புதிய கட்டிடத்திற்கும் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து எச்.சி.எல். நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. மேலும் அங்கு ரூ.3.50 கோடி செலவில் அமைக்கப்பட்டிருந்த அங்கூரான் நவீன அறிவியல் மையத்தையும் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    பின்னர் மதுரை தமுக்கத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரையில் ரூ.213.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலத்தை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்பணித்தார். இதே நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்டம் சூரக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மருது சகோதரர்களின் சிலைகளை காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    தொடர்ந்து மதுரை அரசு மீனாட்சி கல்லூரிக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள எச்.பி. கணினி திறன் மேம்பாட்டு மையத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் ரூ.50 கோடி செலவில் மறு சீரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்ட வண்டியூர் பூங்காவை முதலமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார். இங்கு நடந்த விழாவில் ரூ.1.67 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகக் கட்டிடம் மற்றும் ரூ.1536.31 கோடி செலவிலான 867 ஊரகக் குடியிருப்புகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தையும் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இதில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார், மாநகராட்சி கமிஷனர் சித்ராவிஜயன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • விசாரணை நடத்துவதற்காக திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு டெல்லி அழைத்து செல்ல போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
    • முறைகேடாக தங்கியிருக்கும் வங்காளதேச தொழிலாளர்களை கண்டறிய உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பூர்:

    சமூக வலைதளங்களில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சிலர் கருத்துக்கள் பதிவிட்டு வந்ததை டெல்லி கியூ பிராஞ்ச் போலீசார் கண்டறிந்தனர்.

    அந்த நபர்கள் யாரென்று ஆய்வு செய்த போது திருப்பூரில் இருந்து பதிவிட்டு வந்தது தெரிய வந்தது. அவர்களை மடக்கி பிடிக்க டெல்லி கியூ பிராஞ்ச் போலீசார் திருப்பூர் வந்தனர். பின்னர் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் உதவியுடன் 2 நாட்களாக முகாமிட்டு விசாரணையை மேற்கொண்டனர்.

    அப்போது பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் திருப்பூர் ஊத்துக்குளி, பல்லடம், திருமுருகன்பூண்டி பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து இன்று அதிகாலை ஊத்துக்குளி பகுதியில் பதுங்கியிருந்த 2பேர், பல்லடத்தில் 3பேர், திருமுருகன்பூண்டியில் ஒருவர் என 6பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் 6 பேரும் வங்காளதேசத்தை சேர்ந்த மிஜனூர் ரஹ்மான் (33), முகமது ஷபாத், உமர், முகமது லிட்டன், முகமது ஜாஹித், முகமது உஜ்ஜால் (29) என்பது தெரியவந்தது. தொழிலாளர்கள் போர்வையில் திருப்பூருக்கு வந்த அவர்கள் பனியன் நிறுவனங்களில் வேலை பார்த்துக்கொண்டு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளனர்.

    அவர்கள் எதற்காக திருப்பூர் வந்தனர், சதி திட்டங்களை தீட்டுவதற்காக வந்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று 6 பேரிடமும் டெல்லி போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 8 செல்போன்கள், 16 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் விசாரணை நடத்துவதற்காக திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு டெல்லி அழைத்து செல்ல போலீசார் திட்டமிட்டுள்ளனர். அங்கு அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் பயங்கரவாத அமைப்புகளுடனான தொடர்பு குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

    வங்காளதேசத்தை சேர்ந்த சிலர் தொழிலாளர்கள் போர்வையில் போலி ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் திருப்பூருக்கு வந்து பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

    திருப்பூர் போலீசார் தொடர்ந்து அதிரடி ஆய்வு நடத்தி போலி ஆவணங்களுடன் தங்கியிருக்கும் வங்காளதேசத்தினரை கைது செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் 6பேர் திருப்பூரில் தங்கியிருந்து பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே முறைகேடாக தங்கியிருக்கும் வங்காளதேச தொழிலாளர்களை கண்டறிய உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பாஜக மீதான விசுவாசம் எடப்பாடி பழனிசாமி அவர்களை முழு சங்பரிவார் சேவகராகவே மாற்றிவிட்டிருக்கிறது.
    • இப்போது அவர்களைப் போலவே திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசவும் தொடங்கிவிட்டார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி காவி உடை தரித்த வள்ளுவர் படத்துடன் வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதற்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    பாஜக மீதான விசுவாசம் எடப்பாடி பழனிசாமி அவர்களை முழு சங்பரிவார் சேவகராகவே மாற்றிவிட்டிருக்கிறது. இப்போது அவர்களைப் போலவே திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசவும் தொடங்கிவிட்டார் என்று கூறியுள்ளார்.



    ×