என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adyar"

    • அடையாறில் ஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
    • அரசு பேருந்து தீ விபத்து குறித்த காரணம் இதுவரை தெரியவில்லை.

    சென்னை அடையாறில் ஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

    பிராட்வே முதல் கேளம்பாக்கம் சிறுசேரி வரை செல்லும் 109 சி அரசு பேருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    முதற்கட்ட தகவலாக சாலையில் சென்று கொண்டிருந்த போது பேருந்தில் இருந்து புகை வந்ததையடுத்து அதில் பயணித்து கொண்டிருந்தவர்கள் பேருந்தை விட்டு இறங்கி இருக்கின்றனர். சற்று நிமிடங்களில் அரசு பேருந்தானது எரிய தொடங்கி உள்ளது.

    இதையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். புகை ஏற்பட்டதையடுத்து பயணிகள் வெளியேறியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

    அரசு பேருந்து தீ விபத்து குறித்த காரணம் இதுவரை தெரியவில்லை.

    ×