என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய ஆடவர் அணி டாஸை இழந்தது.
    • மகளிர் உலக கோப்பையின் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக மகளிர் அணி டாஸை இழந்தது.

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் டாஸை இழந்ததன் மூலம் இந்திய அணி கடைசியாக விளையாடிய 17 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் ஒருமுறை கூட டாஸ் ஜெயிக்கவில்லை.

    கடைசியாக நடந்த 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றிருந்தது.

    இதேபோல மராட்டியத்தின் நவி மும்பை நகரில் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில், இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியிலும் டாஸை இந்திய அணி தோற்றதன் மூலம் உலக கோப்பை தொடரில் 6 போட்டியிலும் டாஸை இழந்துள்ளது.

    ஆடவர் அணியை தொடர்ந்து இந்திய மகளிர் அணி தொடர்ச்சியாக 6 முறை டாஸை இழந்துள்ளது பேசும் பொருளாக மாறியுள்ளது.

    • முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
    • 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி பதிலடி கொடுத்தது தென் ஆப்பிரிக்கா.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் ராவல்பிண்டியில் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இதில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 333 ரன்னில் (113.4 ஓவர்) ஆல்அவுட் ஆனது. கேப்டன் ஷான் மசூத் 87 ரன்னும், சவுத் சகீல் 66 ரன்னும், அப்துல்லா ஷபிக் 57 ரன்னும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீரர் கேசவ் மகாராஜ் 7 விக்கெட் வீழ்த்தினார்.

    இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 404 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக முத்துசாமி 89, ஸ்டப்ஸ் 76, ரபாடா 71 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஆஷிப் அப்ரிடி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. 16 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. பாபர் அசாம் மட்டும் நிலைத்து ஆடி அரை சதம் கடந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி 138 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு 72 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 73 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

    2-வது டெஸ்ட்டில் வெற்றி பெற்றதன் மூலம் 18 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக பாகிஸ்தான் மண்ணில் முதல் வெற்றியை தென் ஆப்பிரிக்கா அணி பதிவு செய்து வராலாற்று சாதனை படைத்துள்ளது.

    • இந்திய தரப்பில் ரோகித் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • 73 ரன்கள் குவித்ததன் மூலம் 4 சாதனைகளை ரோகித் படைத்துள்ளார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்று வருகிறது. அடிலெய்ட் மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. 7 ஓவரில் 17 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை (சுப்மன் கில் 9, கோலி 0) இழந்து இந்தியா திணறியது.

    இதனையடுத்து ரோகித்- ஷ்ரேயாஸ் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். அவ்வபோது பவுண்டரியும் சிக்சர்களையும் பறக்கவிட்ட இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 73 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டியில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். இதுவரை 21 இன்னிங்ஸ்களில் 56.36 சராசரியுடன் 1071 ரன்கள் எடுத்துள்ளார். இதில் நான்கு சதங்கள் மற்றும் மூன்று அரைசதங்கள் அடங்கும். அதிகபட்ச ஸ்கோர் 171* ஆகும்.

    ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டியில் 1000 ரன்களை கடந்த முதல் 4 இடங்களில் விவ் ரிச்சர்ட்ஸ், டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ், குமார் சங்கக்கரா மற்றும் ஜெயவர்தனே ஆகியோர் உள்ளனர். 5-வது வீரராக ரோகித் உள்ளார்.

    மேலும் தொடக்க வீரராக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் கில்கிறிஸ்ட், கங்குலி சாதனையை முறியடித்து 4-வது இடத்தை ரோகித் பிடித்துள்ளார்.

    அந்த பட்டியலில் சச்சின் 15310 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். அதனை தொடர்ந்து ஜெய சூர்யா (12740), கிறிஸ் கெய்ல் (10179), ரோகித் சர்மா (9219), ஆடம் கில்கிறிஸ்ட் (9200), சவுரவ் கங்குலி (9146) ஆகியோர் உள்ளனர்.

    இந்த சாதனையை தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சவுரவ் கங்குலி சாதனையை ரோகித் முறியடித்துள்ளார்.

    இந்த பட்டியலில் சச்சின் 18,426 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் விராட் கோலி (14181) உள்ளார். 3-வது இடத்தில் ரோகித் சர்மா (11225) உள்ளார். அதற்கு அடுத்த இடங்களில் கங்குலி (11221), ராகுல் டிராவிட் (10768) உள்ளனர்.

    இந்த போட்டியில் 2 சிக்சர்ஸ் விளாசியதன் மூலம் அதிலும் ரோகித் சாதனை படைத்துள்ளார். அதன்படி SENA நாடுகளில் அதிக சிக்சர்கள் விளாசிய முதல் வீரர் ரோகித் சர்மா. அவர் 156 போட்டிகளில் 151 சிக்சர் விளாசி உள்ளார்.

    அதற்கு அடுத்த இடங்களில் ஜெயசூர்யா (113), அப்ரிடி (105), தோனி, விராட் கோலி (83) சிக்சர்களுடன் அதற்கு அடுத்த இடத்தில் உள்ளனர்.

    • இந்திய தரப்பில் ரோகித்- ஷ்ரேயாஸ் அரை சதம் அடித்தனர்.
    • ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்று வருகிறது. அடிலெய்ட் மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. 7 ஓவரில் சுப்மன் கில் 9 ரன்னிலும் கோலி டக் அவுட் ஆகியும் வெளியேறினர். இதனால் 17 ரன்களுக்கு 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறியது.

    இந்நிலையில் ரோகித்- ஷ்ரேயாஸ் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். அவ்வபோது பவுண்டரியும் சிக்சர்களையும் பறக்கவிட்ட இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 73 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் குவித்தது.

    சிறிது நேரத்தில் ஷ்ரேயாஸ் ஐயரும் 61 ரன்னில் வெளியேறினார். அதனை தொடர்ந்து கேஎல் ராகுல் 11, வாஷிங்டன் சுந்தர் 12, நிதிஷ் ரெட்டி 8 என அடுத்தடுத்து வெளியேறினர். ஒரு முனையில் சிறப்பாக ஆடிய அக்ஷர் படேல் 44 ரன்னில் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 226 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது.

    இறுதியில் ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங் ஜோடி அதிரடியாக விளையாடினர். இதனால் 50 ஓவர் முடிவில் இந்திய அணி, 9 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • 2009-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணி வென்றது.
    • அந்த அணியில் ரோகித் சர்மா ஆல் ரவுண்டராக விளையாடினார்.

    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டுவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

    முன்னதாக பாக்ஸ் கிரிக்கெட் வர்ணனையாளராக ஆடம் கில்கிறிஸ்ட் பணியாற்றி வருகிறார். அதற்காக களத்தில் நின்று பணிகளை மேற்கொண்ட போது, அருகிலேயே ரோகித் சர்மா பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அப்போது இருவரும் சந்தித்துக் கொண்டு நீண்ட நேரமாக உரையாடி கொண்டிருந்தனர்.

    அதன்பிறகு இருவரும் செல்பி வீடியோ ஒன்றை எடுத்துக் கொண்டனர். அதில் ரோகித் ரசிகர்களே இவர் யார் தெரியுமா? டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் kepke என கில்கிறிஸ்ட் கூறினார்.

    இதனை ரசிகர்கள் டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் ரீயூனியன் என சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    2009-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணி வென்றது. அப்போது ரோகித் சர்மா பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அசத்தி கொண்டிருந்தார். அந்த அணியில் இருந்துதான் ரோகித் சர்மா உருவாகினர்.

    அதுமட்டுமல்லாமல் ரோகித் சர்மாவுக்கு அப்போதே கில்கிறிஸ்ட் துணைக் கேப்டன் பதவி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுப்மன் கில் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • விராட் கோலி டக் அவுட் ஆகி வெளியேறினார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்று வருகிறது. அடிலெய்ட் மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. 7 ஓவரில் சுப்மன் கில் 9 ரன்னிலும் கோலி டக் அவுட் ஆகியும் வெளியேறினர். இதனால் 17 ரன்களுக்கு 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறியது.

    இந்நிலையில் ரோகித்- ஷ்ரேயாஸ் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். அவ்வபோது பவுண்டரியும் சிக்சர்களையும் பறக்கவிட்ட இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 73 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் குவித்தது.

    தற்போது வரை இந்தியா 30 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

    • முதல் போட்டியிலும் விராட் கோலி டக் அவுட் ஆனார்.
    • இந்திய அணி 7 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்தது.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்று வருகிறது. அடிலெய்ட் மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 7 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்துள்ளது. சுப்மன் கில் 9 ரன்னிலும் கோலி டக் அவுட் ஆகியும் வெளியேறினர்.

    முதல் போட்டியிலும் டக் அவுட் ஆன விராட் கோலி இந்த போட்டியிலும் டக் அவுட் ஆனதால் சோகத்துடன் மைதானத்தில் இருந்து வெளியேறினார். இதனை பார்த்த ரசிகர்கள் எத்தனையோ போட்டி எங்களை ரசிக்க வைத்திருக்கிறாய் இது பரவாயில்லை என்பது போல அவருக்கு கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

    இதனால் நெகிழ்ந்து போன கோலி ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கையை மேலே தூக்கி காட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இந்திய அணி இதுவரை 15 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 9-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டம் சமனில் முடிந்தது.
    • ஆஸ்திரேலியாவுடன் மோதியுள்ள 6 ஆட்டங்களில் 2-ல் மட்டுமே வெற்றி கண்டிருக்கிறது.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மழையால் பாதிக்கப்பட்ட தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. அடிலெய்ட் மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேட்பன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 7 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்த மைதானத்தில் இந்திய அணி இதுவரை 15 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 9-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டம் சமனில் முடிந்தது. இதில் ஆஸ்திரேலியாவுடன் மோதியுள்ள 6 ஆட்டங்களில் 2-ல் மட்டுமே வெற்றி கண்டிருக்கிறது.

    3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1 போட்டியில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில், இந்த போட்டியை வென்று இந்தியா தொடரை கைப்பற்றுமா என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். 

    • இந்திய அணி தனது முதல் இரு ஆட்டங்களில் இலங்கை, பாகிஸ்தானை பந்தாடியது.
    • ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து அணியே வெகுவாக ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

    13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    இந்த தொடரில் இதுவரை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதியை உறுதி செய்து விட்டன. வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. எஞ்சிய ஒரு அரையிறுதி இடத்துக்கு இந்தியா, நியூசிலாந்து, இலங்கை அணிகள் இடையே குடுமிபிடி நிலவுகிறது.

    இந்த நிலையில் நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மல்லுகட்டுகின்றன.

    இந்திய அணி தனது முதல் இரு ஆட்டங்களில் இலங்கை, பாகிஸ்தானை பந்தாடியது. அதன் பிறகு தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளிடம் அடுத்தடுத்து தோற்றது. இந்த 3 ஆட்டங்களிலும் வெற்றி வாய்ப்பில் இருந்து முக்கியமான கட்டத்தில் சறுக்கியது. 5 ஆட்டங்களில் ஆடி 4 புள்ளிகள் பெற்றுள்ள இந்தியா ரன்-ரேட் முன்னிலை அடிப்படையில் 4-வது இடத்தில் உள்ளது.

    இந்திய அணிக்கு இன்றைய ஆட்டம் மிகவும் முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற்றால் சிக்கலின்றி அரையிறுதிக்கு முன்னேறி விடும். மாறாக இந்திய அணி தோல்வியை சந்தித்தால், அடுத்த அணியை சார்ந்து இருக்க வேண்டி இருக்கும். அதாவது நியூசிலாந்து அணி தனது கடைசி லீக்கில் இங்கிலாந்திடம் பணிய வேண்டும். அத்துடன் இந்திய அணி இறுதி லீக்கில் வங்காளதேசத்தை வெல்ல வேண்டும். இது போன்ற நிலைமை வராமல் இன்றைய ஆட்டத்திலேயே வெற்றிக்கனியை பறித்து விட வேண்டும் என இந்திய வீராங்கனைகள் தீவிரம் காட்டுகிறார்கள்.

    பேட்டிங்கில் ஸ்மிர்தி மந்தனா (2 அரைசதத்துடன் 222 ரன்), பிரதிகா ராவல், ரிச்சா கோஷ், ஹர்லீன் தியோலும், பந்து வீச்சில் தீப்தி ஷர்மா, ஸ்ரீ சரனி, சினே ராணாவும் நம்பிக்கை அளிக்கிறார்கள். ஆனால் வேகப்பந்து வீச்சாளர் கிரந்தி கவுட் கடந்த இரு ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காதது பின்னடைவாகும். அவர் பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமாகும். நெருக்கடியை கையாள்வதில் தகிடுதத்தம் போடும் இந்திய அணி முந்தைய தவறுகளை களைந்து தனது முழு திறமையை வெளிப்படுத்தினால், வெற்றிப்பாதைக்கு திரும்பலாம்.

    முன்னாள் சாம்பியனான நியூசிலாந்து அணி தனது முதல் இரு ஆட்டங்களில் முறையே ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவிடம் உதை வாங்கியது. 3-வது ஆட்டத்தில் வங்காளதேசத்தை வென்றது. கொழும்பில் நடந்த இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 4 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணிக்கு இந்த ஆட்டம் வாழ்வா-சாவா? மோதலாகும். இந்த ஆட்டத்தில் தோற்றால் நியூசிலாந்து அணியின் அரையிறுதி கனவு பறிபோய்விடும். நியூசிலாந்து அணி தனது கடைசி இரு ஆட்டங்களிலும் (இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக) வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி சுற்றை எட்ட முடியும்.

    நியூசிலாந்து அணி பேட்டிங்கில் கேப்டன் சோபி டிவைனைத் தான் (ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 260 ரன்) அதிகம் நம்பி இருக்கிறது. புரூக் ஹேலிடே பக்கபலமாக இருக்கிறார். தொடக்க வீராங்கனைகள் சுசி பேட்ஸ், ஜார்ஜியாவின் பேட்டிங் மெச்சும்படி இல்லை. பந்து வீச்சில் லியா தஹூஹூ, ஜெஸ் கெர் வலு சேர்க்கிறார்கள்.

    ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து அணியே வெகுவாக ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதனால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். இவ்விரு அணிகளும் இதுவரை 57 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 34-ல் நியூசிலாந்தும், 22-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் 'டை' (சமன்) ஆனது. உலகக் கோப்பையில் 13 முறை மோதியதில் 10-ல் நியூசிலாந்தும், 2-ல் இந்தியாவும் வென்றது. ஒரு ஆட்டம் 'டை' ஆனதும் இதில் அடங்கும்.

    அரையிறுதி வாய்ப்புக்காக இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவிருக்காது.

    மும்பை புறநகரான நவிமும்பையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலையில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒரு வேளை ஆட்டம் மழையால் ரத்தானால் அது இந்தியாவுக்கு சாதகமான முடிவாக இருக்கும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ஸ்மிர்தி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ரிச்சா கோஷ், அமன்ஜோத் கவுர், சினே ராணா, தீப்தி ஷர்மா, ரேணுகா சிங் அல்லது ஜெமிமா ரோட்ரிக்ஸ், கிரந்தி கவுட், ஸ்ரீ சரனி.

    நியூசிலாந்து: சுசி பேட்ஸ், ஜார்ஜியா பிலிமெர், அமெலி கெர், சோபி டிவைன் (கேப்டன்), புரூக் ஹேலிடே, மேடி கிரீன், இசபெல்லா கேஸ், ஜெஸ் கெர், ரோஸ்மேரி மைர், ஈடன் கார்சன், லியா தஹூஹூ.

    பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து 244 ரன்கள் எடுத்தது.

    இந்தூர்:

    13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    இந்தூரில் இன்று நடைபெற்ற 23வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்தது. டாமி பியூமாண்ட் பொறுப்புடன் ஆடி அரைசதம் கடந்து 78 ரன்களில் அவுட் ஆனார். அலைஸ் காப்சி 38 ரன்கள் எடுத்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் அன்னபெல் சதர்லேண்ட் 3 விக்கெட்டும், ஆஷ்லே கார்ட்னர், சோபி மொலினுக்ஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. முன்னணி வீராங்கனைகள் விரைவில் வெளியேறினர். இதனால் 64 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.

    5வது விக்கெட்டுக்கு களமிறங்கிய அன்னபெல் சதர்லேண்ட், ஆஷ்லே கார்ட்னர் ஜோடி அதிரடியாக ஆடியது. ஆஷ்லே கார்ட்னர் சதமடித்து அசத்தினார். அவர் 73 பந்தில் 104 ரன்கள் குவித்தார்.

    சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அன்னபெல் சதர்லேண்ட் 98 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், ஆஸ்திரேலியா அணி 40.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 248 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன், புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது.

    • ரிஷப் பண்ட் தலைமையில் இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • முகமது சிராஜ், கலீல் அகமது உள்ளிட்டோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் சர்பராஸ் கான். 28 வயதான இவர் முதல்தர போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், அதிக உடல் எடையுடன் காணப்பட்டதால் இளம் வயதில் வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

    ஆனால், தன்னுடைய தொடர் முயற்சியால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி ராஜ்கோட்டில் தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அறிமுகம் ஆனார். அதன்பின் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடினார். பிப்ரிவரி முதல் நவம்பர் வரை 6 போட்டிகளில் 11 இன்னிங்சில் பேட்டிங் செய்து 1 சதம், 3 அரைசதங்களுடன் 371 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 37.10 ஆகும்.

    அதன்பின் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சில தினங்களுக்கு முன் ரிஷப் பண்ட் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா ஏ அணிக்கெதிரான இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டது. இதில் சர்பராஸ் கானுக்கு இடம் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பெண் செய்தி தொடர்பாளரான ஷமா முகமது, "சர்பராஸ் கான் அவருடைய குடும்ப பெயரால், இந்தியா ஏ கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இந்த விசயத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரின் நிலைப்பாடு எங்கே என்பது எங்களுக்குத் தெரியும்" எனத் தெரிவித்திருந்தார்.

     இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டில் அரசியலை கலப்பதாக பாஜக தலைவர்கள் கடுமையான வகையில் பதிலடி கொடுத்துள்ளனர்.

    பாஜக தலைவர் பூனவல்லா ஷமா முகமதுவுக்கு பதில் கொடுக்கும் வகையில் "இந்தப் பெண்மணியும் அவருடைய கட்சியினரும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். ரோகித் சர்மாவை உருவக் கேலி பிறகு, அவரும் அவருடைய கட்சியினரும் நமது கிரிக்கெட் அணியை வகுப்புவாத அடிப்படையில் பிரிக்க விரும்புகிறார்களா? நாட்டைப் பிரித்த பிறகும் அவர்கள் திருப்தி அடையவில்லையா?).

    இதே அணியில் முகமது சிராஜ் மற்றும் கலீல் அகமதுவும் விளையாடுவார்கள். இந்தியாவை வகுப்புவாத, சாதி அடிப்படையில் பிரிப்பதை நிறுத்துங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

    இதே ஷமா மொகமதுதான் ரோகித் சர்மா பருத்த உடல் கொண்டு விளையாட்டு வீரர் எனக் கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தனது பதவியை நீக்கினார்.

    • ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • சிஎஸ்கே அணிக்காக ஆடி வந்த அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ளார்.

    மும்பை:

    ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து அணிகளும் தங்கள் வீரர்களை தக்கவைப்பது மற்றும் விடுவிப்பது குறித்த தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் சிஎஸ்கே அணியும் ஆலோசனை நடத்தி வருகிறது.

    சிஎஸ்கே அணி மெகா ஏலத்தின் போது அஸ்வின், தீபக் ஹூடா, ராகுல் திரிப்பாட்டி உள்ளிட்ட சீனியர் வீரர்களில் முதலீடு செய்தது. ஆனால் எந்த வீரரும் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் அவர்களுக்கு பதிலாக வேறு வீரர்களை எடுக்க சிஎஸ்கே முயற்சி செய்து வருகிறது.

    அதன்படி குஜராத் அணிக்காக விளையாடி வரும் வாஷிங்டன் சுந்தரை டிரேட் முறையில் வாங்க சிஎஸ்கே அணி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சிஎஸ்கே அணிக்காக ஆடி வந்த அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், அவரின் இடத்தை வாஷிங்டன் சுந்தர் மூலமாக நிரப்ப முயற்சிகள் நடந்து வருகிறது.

    அதற்கு குஜராத் அணியும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், சிஎஸ்கே அணியிடம் பெரிய டிமாண்ட் எதுவும் முன் வைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. வாஷிங்டன் சுந்தர் மட்டும் சிஎஸ்கே அணிக்கு கொண்டு வரப்பட்டால், அது சேப்பாக்கம் பிட்சில் மிகப்பெரிய ஜாக்பாட்டாக அமையும். 

    ×