என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • கரன்பீர் சிங் இந்த ஆண்டில் 32 ஆட்டத்தில் ஆடி 2 சதம், 13 அரைசதம் உள்பட 1,488 ரன்கள் சேர்த்துள்ளார்.
    • ஓராண்டில் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்து உலக சாதனை படைத்தார்.

    வியன்னா:

    ஆஸ்திரியா அணி ருமேனியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடந்த 4வது டி20 போட்டியில் ஆஸ்திரியா வெற்றி பெற்றதுடன், 3-1 என தொடரைக் கைப்பற்றியது.

    இதில் முதலாவது ஆட்டத்தில் 57 ரன் எடுத்த ஆஸ்திரிய தொடக்க ஆட்டக்காரர் கரன்பீர் சிங் 2-வது ஆட்டத்தில், 90 ரன்னும், 3-வது ஆட்டத்தில் 74 ரன்னும், கடைசி ஆட்டத்தில் 27 ரன்னும் எடுத்து அசத்தினார்.

    இந்நிலையில், கரன்பீர் சிங் இந்த ஆண்டில் இதுவரை 32 ஆட்டத்தில் ஆடி 2 சதம், 13 அரைசதம் உள்பட 1,488 ரன்கள் சேர்த்துள்ளார்.

    இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓராண்டில் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்து உலக சாதனை

    படைத்துள்ளார்.

    முதல் இரு இடத்தில் இருந்த பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் (2021-ம் ஆண்டில் 1,326 ரன்), இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் (2022-ம் ஆண்டில் 1,164 ரன்) ஆகியோரின் சாதனைகளை முறியடித்தார்.

    • 3 போட்டிகளில் மழையால் ரத்து செய்யப்பட்டன.
    • 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

    மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டிகள் மட்டும் கொழும்பில் நடைபெற்றன.

    ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். அதன்படி 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் 7 போட்டிகளில் விளையாடும். முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

    பாகிஸ்தான் அணி இன்று இலங்கையை எதிர்கொண்டது. முதலில் பாகிஸ்தான் பேட்டிங் செய்தது. மழை குறுக்கீடு செய்ததால், ஆட்டம் 34 ஓவராக குறைக்கப்பட்டது. 4.2 ஓவரில் 18 ரன்கள் எடுத்திருக்கும்போது, மீண்டும் மழை குறுக்கீட்டது. இதனால் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டு, கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

    பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் 7 லீக் போட்டிகளிலும் விளையாடிவிட்டன. இலங்கை 7 போட்டிகளில் ஒன்றில் வெற்றி, 3 போட்டிகளில் முடிவு இல்லை ஆகிவற்றின்மூலம் 5 புள்ளிகள் பெற்றுள்ளது.

    பாகிஸ்தான் ஒரு போட்டிகளில் கூட வெற்றி பெறவில்லை. 3 போட்டிகளில் முடிவு இல்லை என்பதன் மூலம் 3 புள்ளிகள் பெற்றுள்ளது.

    இன்றைய போட்டியுடன் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான பாகிஸ்தான் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    • இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக அமையவில்லை.
    • விராட் கோலி 2 போட்டியிலும் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனதால் நெருக்கடியில் உள்ளார்.

    சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இதில் பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், அடிலெய்டில் நடந்த 2-வது போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை சிட்னியில் நடக்கிறது. இந்த ஆட்டம் நாளை காலை 9 மணிக்கு தொடங்குகிறது. ஏற்கனவே தொடரை இழந்துவிட்ட இந்திய அணி, ஆறுதல் வெற்றி பெற போராடும். மேலும் தொடரை முழுமையாக இழப்பதை தவிர்க்க முயற்சிக்கும்.

    இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக அமையவில்லை. எனவே அதில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம். விராட் கோலி 2 போட்டியிலும் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனதால் நெருக்கடியில் உள்ளார். அதேபோல் கேப்டன் சுப்மன்கில்லும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ரோகித் சர்மா, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்-ரவுண்டர்கள் வரிசையில் அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர் உள்ளனர்.

    கடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு இந்திய பந்து வீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தாலும் அது வெற்றிக்கு உதவவில்லை. இதனால் பந்துவீச்சு துறையிலும் மற்றும் பீல்டிங்கிலும் முன்னேற்றம் காண வேண்டும்.

    மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அந்த அணி பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட், மேத்யூ ஷார்ட், மெட் ரென்ஷா ஆகியோர் உள்ளனர். பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க், ஹேசல் வுட், ஆடம் ஜம்பா, பார்ட் லெட் ஆகியோர் உள்ளனர்.

    • சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பையை இந்தியா வென்றது.
    • பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோசின் நக்வியிடமிருந்து ஆசிய கோப்பையைப் பெற இந்தியா மறுத்தது.

    சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. அப்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மோசின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற இந்தியா மறுத்தது.

    இதையடுத்து, அந்தக் கோப்பையை மோசின் நக்வி கொண்டு சென்றார். இந்திய அணியினர் கோப்பை இல்லாமலேயே வெற்றியைக் கொண்டாடினர். இவ்விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தக் கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பிசிசிஐயும் வலியுறுத்தியது.

    அதற்குப் பதிலளித்த நக்வி, கோப்பையை தாம்தான் வழங்குவேன் எனவும் வரும் நவம்பர் 10-ம் தேதி துபாயில் இந்திய அணிக்கு ஆசியக் கோப்பையை வழங்கும் நிகழ்ச்சியை வைத்திருப்பதாகவும், இதில் தவறாமல் இந்திய அணி வீரர்களும் கேப்டன் சூர்யகுமார் யாதவும் கலந்துகொள்ள வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில், ஆசியக் கோப்பை தொடர்பாக அன்றைய இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட திலக் வர்மா, தற்போது அதுகுறித்த புதிய விவரங்களை வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நாங்கள் உண்மையில் ஒரு மணிநேரம் மைதானத்தில் காத்திருந்தோம். டிவி காட்சிகளைப் பார்த்தால், நான் தரையில் படுத்திருப்பதை நீங்கள் காண்பீர்கள். மீதமுள்ளவர்களும் தரையில் படுத்திருந்தனர். அர்ஷ்தீப் சிங் ரீல்ஸ் செய்வதில் மும்முரமாக இருந்தார். நாங்கள் காத்திருந்தோம், 'கோப்பை எப்போது வேண்டுமானாலும் வரும்' என்று நினைத்துக் கொண்டிருந்தோம்.

    ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. நாங்கள் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் கோப்பை வரவில்லை. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, கோப்பையைப் பெறப் போவதில்லை என்பதை அறிந்ததும், அர்ஷ்தீப் சிங்தான் ஒரு ஐடியா கொடுத்தார்.

    கோப்பையை தவிர்த்து கொண்டாட வேண்டும் என்று அவர் கூறினார். அபிஷேக் சர்மா உள்ளிட்ட நாங்கள், மேலும் 5-6 பேருடன் சேர்ந்து, அதற்கு ஒப்புதல் அளித்தோம். பின்னர் அதையே செய்து காட்டினோம்.

    என திலக் வர்மா கூறினார்.

    • வருகிற 29-ந் தேதி இரு அணிகளுக்கு இடையே டி20 தொடர் நடைபெற உள்ளது.
    • ஹசில்வுட் முதல் 2 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்.

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் நாளை கடைசி போட்டி நடைபெற உள்ளது.

    இதனையடுத்து வருகிற 29-ந் தேதி இரு அணிகளுக்கு இடையே டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றடைந்தது.

    இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

    அடுத்த மாதம் இறுதியில் ஆஷஸ் தொடர் தொடங்க இருப்பதால் சீனியர் வீரர்களான ஹசில்வுட், லெபுசென் ஆகியோர் அதற்கு தயாராகும் வகையில் கழற்றி விடப்பட்டுள்ளனர். அதன்படி ஹசில்வுட் முதல் 2 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார். லெபுசென் கடைசி ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடரில் இடம் பெறவில்லை.

    மேலும் ஜோஷ் பிலிப் அனைத்து டி20 போட்டிகளிலும் விளையாடுவார். டுவார்ஷுயிஸ் 4,5 போட்டிகளிலும், மஹ்லி பியர்ட்மேன் 3,4,5 டி20 போட்டிகளிலும் சீன் அபோட் முதல் 3 டி20 போட்டிகளிலும் மட்டுமே விளையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
    • இந்த தொடர் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது.

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கவுள்ளது.

    அதனை தொடர்ந்து இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டி20 தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடர் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் டி20 தொடரில் பங்கேற்பதற்காக இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. அந்த அணியில் இடம் பெற்ற துருவ் ஜூரல், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங் ஆகியோர் ஆஸ்திரேலியாவை சென்றடைந்துள்ளனர். அங்கு அவர்கள் 3 பேரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

    • ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கவிருக்கிறது.
    • இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது.

    இந்தியா ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் நடந்த போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது.

    இதனையடுத்து நாளை கடைசி ஒருநாள் போட்டி நடக்கவிருக்கிறது. இதனை தொடர்ந்து இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் அதிரடி ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் இணைந்துள்ளார். காயத்தில் இருந்து மீண்டு வந்த அவர், முதல் 2 டி20 போட்டிகளில் விளையாடவில்லை. கடைசி 3 போடிகளில் மட்டுமே விளையாட உள்ளார்.

    இது இந்தியாவுக்கு சோக செய்தியாக அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. எனென்றால் அவர் இந்தியாவுக்கு எதிராக மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 340 ரன்கள் குவித்தது.

    மும்பை:

    13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    நவி மும்பையில் இன்று நடைபெற்ற 24-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 49 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனைகளான பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா ஆகியோர் சதமடித்து அசத்தினர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 76 ரன்கள் குவித்தார்.

    இதையடுத்து, 341 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. மழை காரணமாக 44 ஓவரில் 325 ரன்கள் இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

    அந்த அணியின் புருக் ஹாலிடே தனியாளாகப் போராடி 81 ரன்கள் எடுத்து அவுட்டானார். மற்றொரு வீராங்கனை இசபெல்லா கடைசி வரை போராடி 65 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், நியூசிலாந்து 45 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 271 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 53 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தது.

    • முதலில் பேட் செய்த வங்கதேசம் 50 ஓவரில் 296 ரன்களைக் குவித்தது.
    • அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 117 ரன்களில் ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.

    டாக்கா:

    வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி முதலில் இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடந்து வருகிறது.

    முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசமும், 2வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்று ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேசம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சவுமியா சர்க்கார் 91 ரன்னும், சையிப் ஹசன் 80 ரன்னும், ஷாண்டோ 44 ரன்னும் எடுத்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அகேல் ஹோசைன் 4 விக்கெட்டும், அலிக் அதனேஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. வங்கதேச அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சிக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 30.1 ஓவரில் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 179 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது.

    • நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் மந்தனா 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • பிரதிகா ராவல் 134 பந்துகளில் 122 ரங்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    மகளிர் ஒருநாள் உலக கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து- இந்தியா அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்திய அணி தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா - பிரதிகா ராவல் களமிறங்கினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் அடித்து அசத்தினார்.

    95 பந்தில் 109 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்மிருதி மந்தனா ஆட்டமிழந்தார். பிரதிகா ராவல் 134 பந்துகளில் 122 ரங்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் - ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி அரைசதம் அடித்தார்.

    இதற்கிடையே மழையால் ஆட்டம் பாதிக்கப்பட போட்டி 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இறுதியில் 49 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் குவித்தது.

    • நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் மந்தனா 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • மகளிர் ஒருநாள் போட்டியில் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் மந்தனா 2-வது இடத்திற்கு முன்னேறினார்.

    மகளிர் ஒருநாள் உலக கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து- இந்தியா அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்திய அணி தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா - பிரதிகா ராவல் களமிறங்கினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் அடித்து அசத்தினார்.

    95 பந்தில் 109 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்மிருதி மந்தனா ஆட்டமிழந்தார். மந்தனா சதம் அடித்ததன் மூலம் மகளிர் ஒருநாள் போட்டியில் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் 2-வது இடத்திற்கு மந்தனா (14) முன்னேறினார். ஆஸ்திரேலியாவின் மெக் லேனிங் 15 சதத்துடன் முதலிடத்தில் தொடர்கிறார்.

    மேலும் இந்த ஆண்டில் தனது ஐந்தாவது சதத்தை மந்தனா அடித்துள்ளார். இதன் மூலம் ஒரு ஆண்டில் அதிக சதங்கள் அடித்த தென் ஆப்பிரிக்க வீராங்கனை டாஸ்மின் பிரிட்ஸின் சாதனையை மந்தனா சமன் செய்துள்ளார்.

    • ஆஸ்திரேலியா தரப்பில் மேத்யூ ஷார்ட் 74 ரன்கள் குவித்தார்.
    • இந்திய தரப்பில் ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்று வருகிறது. அடிலெய்ட் மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 73 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ்- டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். மார்ஷ் 11 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த மேத்யூ ஷார்ட் ஹெட்டுடன் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    40 சந்தித்த நிலையில் ஹெட் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து ஷார்ட்- ரென்ஷா ஜோடி இந்திய அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டு ஆடினார். ஷார்ட்சுக்கு 2 கேட்சுகளை இந்திய அணியினர் மிஸ் செய்தனர். இதனால் அவர் அரை சதம் கடந்ததுடன் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த அலெக்ஸ் ஹேரி 9 ரன்னில் வெளியேறினார். சிறிது நேரத்தில் ரென்ஷா 30 ரன்னில் அவுட் ஆனார்.

    அதனை தொடர்ந்து கானலி- மிட்செல் ஓவன் ஜோடி சேர்ந்து இந்திய அணியின் பந்து வீச்சை பறக்க விட்டனர். ஒரு முனையில் சிறப்பாக விளையாடிய கானலி அரை சதம் அடித்து அசத்தினார். ஓவன் 23 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சேவியர் பார்ட்லெட் 3, ஸ்டார்க் 4 ரன்னில் வெளியேறினர்.

    இறுதியில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இந்த வெற்றி மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி அடிலெய்டு மைதானத்தில் தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×