என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    3வது போட்டியில் வெற்றி: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது வங்கதேசம்
    X

    3வது போட்டியில் வெற்றி: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது வங்கதேசம்

    • முதலில் பேட் செய்த வங்கதேசம் 50 ஓவரில் 296 ரன்களைக் குவித்தது.
    • அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 117 ரன்களில் ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.

    டாக்கா:

    வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி முதலில் இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடந்து வருகிறது.

    முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசமும், 2வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்று ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேசம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சவுமியா சர்க்கார் 91 ரன்னும், சையிப் ஹசன் 80 ரன்னும், ஷாண்டோ 44 ரன்னும் எடுத்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அகேல் ஹோசைன் 4 விக்கெட்டும், அலிக் அதனேஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. வங்கதேச அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சிக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 30.1 ஓவரில் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 179 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது.

    Next Story
    ×